வின் ஆம்பே உன்னை மறந்தோம்- ஒரு இணைய இசை சாதனத்தின் வரலாறு!

wசிறுவர்களுக்கான பாடப்புத்தக கதையை துவங்குவது போலவே, முன்பொரு காலத்தில்… என இந்த கட்டுரையை துவங்கலாம். ஆம், முன்பொரு காலத்தில் வின் ஆம்ப் எனும் சேவை பிரபலமாக இருந்தது. முன்பொரு  காலம் என்பது இங்கே 1990 களை குறிக்கிறது.

வலை அறிமுகமாகி இணையம் மெல்ல வளரத்துவங்கிய பொற்காலம் அது. இணையத்தின் அடையாளமாக கருதப்படும் முன்னோடி இணையதளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகி கொண்டிருந்தன. இந்த வரிசையில் தான் வின் ஆம்ப் சேவையும் அறிமுகமானது.

90 களின் இணையத்தை அறிந்தவர்கள், வின் ஆம்ப் பெயரைக்கேட்டதுமே, இசையமயமான நினைவலைகளில் மூழ்கலாம்.

ஆம், இணையம் மூலம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பாடல்களை கேட்டு ரசிக்க வழிச்செய்த இந்த எம்பி-3 பிளேயரை எப்படி மறக்க முடியும்? எம்பி-3 கோப்பு வடிவில் பாடல்களை கேட்க வழி செய்த எளிமை ஒரு பக்கம் என்றால்,  இசையை காட்சி வடிவிலும் உணர வைத்த அதன் இடைமுகத்தை அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த இடைமுகம் தான் விஷயம். ஒலிக்கும் பாடலின் தாள லயம் உள்ளிட்ட இசைக்குறிப்புகளை, வரைகலையாக உணர்த்துவது போல இந்த இடைமுகத்தோற்றம் அமைந்திருக்கும். ஒலிக்கும் பாடலின் தன்மைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் வரைகலையின் துடிப்பான தன்மை கேட்கும் பாடலை பார்வையாலும் உணரச்செய்யும்.

வின் ஆம்ப் பிளேயரை பயன்படுத்தியவர்களுக்கு, அதன் இடைமுகத்தோற்றம் மிகவும் பரிட்சியமாக இருக்கும். வின் ஆம்ப் பிளேயரை அறியாதவர்கள் இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தால், அதன் இடைமுகத்தோற்றத்தின் அற்புதத்தை உணரலாம்.

ஒருவிதத்தில் இது பழைய கதை. வின் ஆம்ப் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு, ஆப்பிளின் ஐபாடு அறிமுகமானது. பின்னர் ஸ்பாட்டிபை போன்ற  சேவைகள் அறிகமாகி ஸ்டிரீமிங் முறையை இசையை கேட்க வழிச்செய்கின்றன.

ஸ்டிரீமிங்மயமாகி இருக்கும் உலகில், வின் ஆம்ப் போன்ற பழைய சேவையை நினைவில் வைத்திருக்க பெரும்பாலனோருக்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை.

ஆனால், வின் ஆம்ப் இசை சேவை மட்டும் அல்லவே, அது இணைய வரலாற்றின் மைல்கல்லாகவும் அல்லவா இருக்கிறது. டேப் இல்லாமல், சிடி இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே இணையம் மூலம் இசையை எம்பி-3 கோப்பு வடிவில் கேட்க வழி செய்த சாதனமாக அதன் பங்களிப்பு புறக்கணிக்க முடியாதது அல்லவா!

இணையத்தில் இசை புரட்சி அரங்கேறியிருக்கிறது என்றால் அதில் வின் ஆம்ப் பங்கும் முக்கியமானது என்பதை உணர வேண்டாமா?

ஆனால், எல்லோரும் கால வெள்ளத்துடன் நகர்ந்து பழைய மைல்கல் சேவைகளை மறந்து விடுவதில்லை. வரலாற்றை மறக்கலாகாது என நினைப்பவர்கள், இத்தகைய இணைய சேவைகளை அவற்றின் ஆதார தன்மையும் பாதுகாத்து வருவதுடன், ஆவணப்படுத்தியும் வருகின்றனர்.

இந்த வகையில் தான், வின் ஆம்பிற்காக  அமைக்கப்பட்டிருக்கும் புதிய இணைய அருங்காட்சியகம் கொண்டாடக்கூடியதாக இருக்கிறது. ஸ்கின்ஸ்வின் ஆம்ப் (https://skins.webamp.org/) எனும் பெயரில் அமைந்துள்ள இந்த இணைய அருங்காட்சியகம், வின் ஆம்ப் வரலாற்றில் ஆர்வம் கொண்ட எவரையும் உற்சாகத்தில் ஆழ்த்திவிடக்கூடியது.

இந்த அருங்காட்சியகம் பற்றி பார்ப்பதற்கு முன், முதலில் வின் ஆம்ப் ஸ்கின்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். துவக்கத்தில் நாம் பார்த்த, வின் ஆம்ப் இடைமுகத்தோற்றம் தான் வின் ஆம்ப் ஸ்கின் என குறிப்பிடப்படுகிறது.

கம்ப்யூட்டரில் விரும்பிய வால்பேப்பரை திரைத்தோற்றமாக வைத்துக்கொள்வது போல, வின் ஆம்ப் பயனாளிகள், அதன் இடைமுகத்தோற்றத்தையும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப புதுப்புது இடைமுகத்தோற்றமும் உருவாக்கப்பட்டு பதிவேற்றப்பட்டன.

அது மட்டும் அல்ல, பயனாளிகளும், வின் ஆம்பிற்கான இடைமுகத்தோற்றத்தை உருவாக்கி சமர்பிக்க வழி செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான இசை ஆர்வலர்கள், தங்களுக்கு பிடித்தமான வகையில் இடைமுகத்தோற்றத்தை உருவாக்கி சமர்பித்தனர். சக உறுப்பினர்கள் அவற்றை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

இந்த காட்சிகளை இப்போது திரும்பி பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கும். இணைய இசை கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே இந்த வின் ஆம்ப் ஸ்கின்கள் அமைந்திருந்தன.

இணையத்திலும், அதன் இசை வரலாற்றிலும் ஆர்வம் கொண்ட எவரும், இந்த இடைமுகச்சித்திரங்களை ரசிக்கும் வகையில், ஜோர்டன் எல்டேஜ் (Jordan Eldredge-  @captbaritone) எனும் மென்பொருளாலர் வின் ஆம்ப் ஸ்கின்களுக்கான இணைய அருங்காட்சியகத்தை  https://skins.webamp.org/ எனும் பெயரில் உருவாக்கியுள்ளார்.

இந்த இணையதளத்தில் நுழைந்தால், வின் ஆம்ப் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான இடைமுகத்தோற்றங்களை பார்க்கலாம். உண்மையில், 65,000 க்கும் மேற்பட்ட வின் ஆம்ப் இடைமுகத்தோற்றங்கள் இந்த தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வின் ஆம்ப் இடைமுகத்திற்கு என ஒரு பொது குணம் இருந்தாலும், அந்த வரையறைக்குள் எத்தனை விதமான தோற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பதை பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இவற்றை ஒவ்வொருன்றாக பார்த்துக்கொண்டிருப்பதிலேயே மணிக்கணக்கில் நேரத்தை செலவிடலாம்.

இந்த தோற்றங்களின் பன்முகத்தன்மை கவர்வதோடு, அவை உருவாக்கப்பட்ட காலத்தில் வரலாற்று தனமையும் இவற்றில் பிரதிபலிப்பதை அறியலாம். உதாரணமாக, கம்யூனிச கட்சியின் கதிர் அரிவால் சின்ன பின்னணியில் ஒரு இடைமுகத்தோற்றம் அமைந்துள்ளது. மேலும் பல தோற்றங்களில், பிரபல பாப் நட்சத்திரங்களின் உருவங்களை பின்னணியில் பார்க்கலாம்.

இடைமுகத்தோற்றத்தை வரிசையாக பார்த்து ரசிப்பதோடு, தேவையானதை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை இணைய வரலாற்று பொக்கிஷம் என்று வர்ணிக்கலாம்.

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் எல்ட்ரிட்ஜ் ஆர்வம் காரணமாக பகுதி நேர பணியாக இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார்.

இதில் இடம்பெறும் வின் ஆம்ப் இடைமுகத்தோற்றங்கள் எல்லாமே இணைய தளங்களை ஆவணப்படுத்தும் ஆர்கேவ் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றாலும், அவற்றி எளிதாக அணுக கூடிய வகையில் அமைந்த்திருப்பதை எல்ட்ரிஜின் பங்களிப்பு எனலாம்.

வின் ஆம்ப் அனுபவத்தை எல்லோரும் பெறும் வகையில் எல்ட்ரிட்ஜ்,

வெம் ஆம்ப்.ஆர்க் (https://webamp.org/)  எனும் தளத்தையும் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் வெப் ஆம்ப் பிளேயரில் பாடல் கேட்கும் அனுபவத்தை பெறலாம்.

இணைய வரலாற்றை காப்பத்தன் அவசியத்தை உணர்த்துவதோடு, அதற்கான வழியை உணர்த்துவதாகவும் எல்ட்ரிட்ஜின் இந்த முயற்சி அமைந்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *