கூகுளையா சிறந்த தேடியந்திரம் என்கிறீர்கள்?

google-forgets-duckduckgo-notகூகுள் சிறந்த தேடியந்திரமா?

இந்த கேள்விக்கு பெரும்பலானோர், ஆம் அதிலென்ன சந்தேகம், கூகுள் தான் சிறந்த தேடியந்திரம் என பதில் அளிக்கலாம். ஒருவிதத்தில், இந்த பதிலும் சரியானது தான். கூகுள் சிறந்த தேடல் அனுபவத்தை தருகிறது. இணையத்தில் எதை தேடினாலும் உடனடியாக பொருத்தமான பதிலை அளிக்கிறது.

உண்மையிலேயே கூகுள் எதை தேடினாலும், அதற்கான பதிலை அளிகிறதா? தேடல் சேவையாக கூகுள் பயனளிக்காத தருணங்கள் பல இருக்கின்றன. இவற்றை நாம் உணர்வதில்லை. கூகுளில் கிடைக்கவில்லையா? எனில் இணையத்தில் இல்லை என தீர்மானித்து விடுகிறோம்.

ஆனால், இணையத்தில் இருக்கும் எண்ணற்ற விஷயங்களை கூகுள் தேடலில் சுட்டிக்காட்டுவதில்லை. வேண்டுமானால், பழைய இணையதளங்கள் தொடர்பாக கூகுளில் தேடிபாருங்கள். உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக, முன்னோடி இணையதளமான பேபால் தளம் அறிமுகமான போது அந்த சேவை எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதை புரிந்து கொள்ள உதவக்கூடிய கட்டுரை இணைப்புகளை கூகுள் தேடல் முடிவுகளில் பார்க்க முடியாது.

இதே போலவே, அமேசான் மற்றும் யாஹு போன்ற தளங்கள் அறிமுகமான போது எழுதப்பட்ட செய்தி கட்டுரைகளை கூகுளில் கண்டுபிடிப்பதும் கடினம் தான்.

பிரச்சனை என்னவெனில், சில நேரங்களில் அந்த காலத்தில் வெளியான கட்டுரைகளின் முழுத்தலைப்பும் இருந்தால் கூட கூகுளில் அதை தேட முடிவதில்லை. இந்த சிக்கலுக்குத்தீர்வாக இணைய காப்பகமான வேபேக்மிஷினுக்குச்சென்று அதில் உள்ள இணைய பக்கங்களின் சேமிப்பை பார்க்க வேண்டும்.

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இந்த நிலையில் தான், கூகுள் காண்பிக்காத பழைய இணையதளங்களை கண்டுபிடிப்பது எப்பட்? எனும் பெயரில் லைப்ஹேக்கர் இணையதளத்தில் வெளியான இணைப்பை பார்க்கா நேர்ந்தது: (https://lifehacker.com/how-to-find-old-websites-that-google-won-t-show-1833912593 )

கூகுள் முழு வலையையும் பட்டியலிடுவதை நிறுத்துக்கொண்டு விட்டது எனும் முக்கிய தகவலை இந்த கட்டுரை முன்வைக்கிறது. பிரபலமான இரண்டு வலைப்பதிவாளர்கள் டிம் பிரே மற்றும் மார்கோ பியோரெட்டி (Tim Bray and Marco Fioretti) தங்கள் அனுபவத்தில் இதை உணர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதன் விளைவாக, சில பழைய தளங்கள், பெரும்பாலும் பத்தாண்டுகளுக்கு மேலானவை கூகுள் தேடல் பட்டியலில் தோன்றுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிம் பிரே, 2006 ல் தான் எழுதிய கட்டுரை மற்றும் தான் தேடும் இன்னொரு கட்டுரை, அதே தலைப்பில் கூகுளில் தேடியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். கூகுளின் நினைவு இழப்பு எனும் தலைப்பிலான இந்த பதிவில், இதற்கான காரணங்களையும் அவர் அலசியுள்ளார்.

மொத்த வலையையும் பட்டியலிடுவது சாத்தியம் இல்லாதது என்பதால், வர்த்தக நோக்கில், விளம்பரங்களை சுட்டிக்காட்ட வாய்ப்பில்லாத பழைய இணைப்புகளை கூகுள் கண்டு கொள்வதில்லை என்று அவர் கூறுகிறார். கூகுள் சில சிக்கலான கேள்விகளுக்கு கச்சிதமாக பதில் அளித்தாலும், இணையத்தின் எல்லா பக்கங்களையும், ஒரு போதும் முழு வலையையும் பட்டியலிடுவதாக கூகுள் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டு விட்டு, ஒரு நூலகம் போல மொத்த வலையையும் பட்டியலிட வேண்டும் எனும் என் எண்ணத்தை கூகுள் கொண்டிருக்கவில்லை என்கிறார்.

ஆக, மொத்த வலையையும் கூகுள் பட்டியலிடாத போது, அதில் பழைய கட்டுரைகளை கண்டறிய முடியாத போது அதை எப்படி சிறந்த தேடியந்திரம் என கூற முடியும்?

இந்த விஷயம் தொடர்பான போயிங்போயிங் தளத்தின் பதிவு, கூகுள் பட்டியலிடாத இந்த இணைப்புகளை பிங் மற்றும் டக்டக்கோ தேடியந்திரங்களில் கண்டறிய முடிவதாக தெரிவிக்கிறது. மார்கோவும், சிறு மாறுதலோடு இந்த கருத்தை ஆமோதிக்கிறார். கூகுள் பத்தாண்டு கால அளவுக்கு மேலான முடிவுகளை கண்டு கொள்வதில்லை என அவர் கூறுகிறார்.- http://stop.zona-m.net/2018/01/indeed-it-seems-that-google-is-forgetting-the-old-web/

நிற்க, வெப்ரிங்ஸ் எனும் பழைய இணையதளம் தொடர்பான தேடலிலும், கூகுளின் இந்த போதாமையை உணர முடிகிறது. வலையின் ஆரம்ப காலத்தில், மோதிரம் போல இணைக்கப்பட்ட சங்கிலி வளைய வடிவில் புதிய இணையதளங்களை கண்டறிய வழி செய்த, வெப்ரிங்ஸ் சேவை பற்றி கூகுளில் தேடினால், அதன் வரலாற்றை முழுமையாக அறியக்கூடிய முடிவுகள் இல்லை.

சரி என உத்தேசமாக, அந்த காலத்தில் பிரபலமாக இருந்த இன்போவேர்ல்டு தளத்தில் வெப்ரிங்ஸ் பற்றிய கட்டுரை இருக்கிறதா என தேடினால், தேடியந்திரங்களுக்கு மாற்று என வெப்ரிங்சை அறிமுகம் செய்யும் கட்டுரை இணைப்பு கிடைத்தது. அருமையான் இந்த கட்டுரையில் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ள, வெப்ரிங்ஸ் தொடர்பான மூலக்கட்டுரையை அதே தலைப்பில் தேடினாலும் கூகுளில் கிடைக்கவில்லை. – https://crln.acrl.org/index.php/crlnews/article/view/22105/28059

எனில், கூகுளை எப்படி சிறந்த தேடியந்திரம் என சொல்வது?

லைப்ஹேக்கர் கட்டுரை, பழைய கால இணையதளங்களை தேட உதவும் பைபை.மீ எனும் புதிய தேடியந்திரத்தை அடையாளம் காட்டுகிறது.

டிம் பிரே தனது பதிவில், இப்போது கூகுளில் தேடினால் குறிப்பிட்ட பழைய கட்டுரை கிடைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதால் இப்படி நிகழ்ந்திருக்கலாம் என்கிறார். இந்த பதிவின் பின்னூட்ட விவாதத்தில், பலரும் கூகுளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவாதம் தேடல் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது. ; https://www.tbray.org/ongoing/When/201x/2018/01/15/Google-is-losing-its-memory

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.