உங்கள் தரவுகளை அறிய ஒரு இணையதளம்

Screenshot_2021-02-03 Just Get My Data - A directory of direct links for you to obtain your data from web servicesபிரைவசி பிரச்சனையில் நிறுவனங்களை விமர்சிப்பதோடு நின்று விடாமல், பயனாளிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த வகையில் பயனாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளமாக ’ஜஸ்ட் கெட் மை டேட்டா’ (https://justgetmydata.com/) தளம் அமைகிறது.

இணைய நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்கும் தங்களைப் பற்றிய தரவுகளை பயனாளிகள் டவுண்லோடு செய்து கொள்ள இந்த தளம் வழிகாட்டுகிறது.

அடிப்படையில் பார்த்தால், இந்த தளத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இது ஒரு திரட்டி. அதாவது, தொகுத்தளிக்கும் சேவை.

கூகுள், ஆப்பிள், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், ரெட்டிட் உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்து, அவை சேகரித்து வைத்திருக்கும் பயனாளிகள் தரவுகளை எப்படி தரவிறக்கம் செய்வது என அடையாளம் காட்டுகிறது இந்த தளம்.

இந்த தகவலையும் எளிதாக கண்டறியும் முறையில் பட்டியலிட்டுள்ளது. உங்களுக்கு தேவையான நிறுவன பெயர் மீது கிளிக் செய்தால், அந்நிறுவன இணையதளத்தில் இருந்து, உங்கள் தகவல்களை எப்படி தரவிறக்கம் செய்வது என வழிகாட்டப்படும்.

குறிப்பிட்ட அந்த தளத்திலேயே, இந்த தகவலை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், நிறுவனங்களும் இதை பளிச் என பார்வையில் தென்படும் வகையில் வைப்பதில்லை: பயனாளிகளும் இதை தேடி அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தான், இந்த தேடலை பயனாளிகள் சார்பில் மேற்கொண்டு, ஒவ்வொரு நிறுவனத்தின் தளத்திலும், தரவுகளை எப்படி தரவிறக்கம் செய்வது என கண்டறிந்து பட்டியலிடும் பணியை இந்த தளம் செய்கிறது.

தகவல்களை திரட்டி தருவதோடு நின்று விடாமல் குறிப்பிட்ட இணையதளங்களில், தரவுகளை பெறுவது எத்தனை கடினமானது அல்லது எளிதானது என்பதை உணர்த்தும் வகையில், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் அந்த தகவலை சுட்டிக்காட்டுகிறது. பச்சை நிறம் எனில், தகவல்களை எளிதாக பெறலாம் என பொருள். சிவப்பு எனில் மிகவும் கடினம் என பொருள்.

கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மீது பயனாளிகள் தகவல்களை திரட்டி அவற்றை விளம்பர நோக்கில் பயன்படுத்துவது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால் இந்நிறுவனங்கள், இப்படி திரட்டப்படும் தகவல்கள் குறித்து பயனாளிகள் அறிந்து கொள்ளவும் இந்நிறுவனங்கள் வழி செய்கின்றன. இந்த தகவல் சேகரிப்பை ஓரளவு கட்டுப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கின்றன.

ஆனால் எத்தனை இணையவாசிகள் இந்த வாய்ப்புகளை அறிந்திருக்கின்றனர்?  அவர்களில் எத்தனை பேர் இதை பயன்படுத்துகின்றனர்? எனவே தான் பயனாளிகள் தரப்பில் இது தொடர்பாக விழிப்புணர்வு தேவை. இந்த தளம் அதற்கான துவக்கப்புள்ளியாக இருக்கும்.

இணைய மலர் மின்மடலில் எழுதியது. புதிய இணையதளங்களை அறிந்து கொள்ள இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்; https://cybersimman.substack.com/p/–c7c

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.