இந்தியாவின் ஆகச்சிறந்த தேர்தல் இணையதளம் எது?

Screenshot_2021-03-25 IndiaVotes India's largest election databaseஒரு இணையதளம் முதல் பார்வையில் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி, அதன் பிறகு, மேலதிக தகவல் தேடலில் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினால் எப்படி இருக்கும்? இந்தியாவோட்ஸ் (https://www.indiavotes.com/ ) இணையதளம் இந்த அனுபவத்தை தான் அளிக்கிறது.

இப்படி ஏமாற்றம் தரும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை மறந்து வேறு வேலை பார்க்கச்சென்று விடலாம் என்றாலும், இந்தியாவோட்ஸ் தளத்தை அவ்வாறு கடந்து செல்ல முடியாமல் அதன் நிலை குறித்து நிறுத்தி, நிதானாமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவோட்ஸ் ஏன் ஏமாற்றம் அளிக்கிறது என்பது மட்டும் அல்லாமல், அந்த தளம் தொடர்பாக மேலும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றில் முக்கியமான கேள்வி, இந்தியாவோட்ஸ் தளத்திற்கு என்ன ஆனது? என்பது தான்.

இந்த இடத்தில் இந்தியாவோட்ஸ் தளத்தை சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.

துவக்கத்தில் குறிப்பிட்டது போல, முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளம் தான் இந்தியாவோட்ஸ். அதிலும் தேர்தல் காலத்தில் இந்த தளத்தின் அருமையையும், தேவையையும் நன்றாக உணரலாம். ஏனெனில் இந்திய தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளிவிவரங்களை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் இணையதளமாக இது உருவாக்கப்பட்டது தான்.

இந்தியாவோட்ஸ் தளத்தின் முகப்பு பக்கமும், இந்த நோக்கத்தை அழகாக பிரதிபலிக்கிறது. இந்திய தேர்தல்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அட்டவனைகளாகவும், வரைபடங்களாகவும் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கும் தோற்றத்தை தருவதோடு, எளிய புரிதலுக்காக, குறிப்பிட்ட மற்றும் அண்மை தேர்தல் தொடர்பான ஆண்டுகள் அடிப்படையிலும் முன்னிறுத்தப்பட்டுள்ளன. இவைத்தவிர, தேர்தல் புள்ளிவிவரங்கள் சார்ந்த இந்திய வரைபடங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆக, இந்திய தேர்தல் தொடர்பாக எந்த வகையான புள்ளிவிவரம் வேண்டுமானாலும் சரி இந்த தளத்தில் கிடைக்கும் எனும் எண்ணம் ஏற்படுவதால் தேர்தல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் உற்சாகம் கொள்வது நிச்சயம்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவு தொடர்பான கணிப்பிற்காக, கடந்த தேர்தகல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய விரும்பினால், இந்த தளம் உதவும் என்ற எண்ணம் உண்டாகும்.

அடிப்படையில் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளிவிவரங்களை தொகுத்தளிக்கும் தளம் என்பதால், சட்டமன்ற தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விவரங்களை இதில் தேடலாம். இதற்கேற்ப பல்வேறு விதமாக விவரங்களை தேடும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிறது. முகப்பு பக்கத்திலேயே தேர்தல் தரவுகள் எனும் தலைப்பின் கீழ், நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கான தேடலில் ஈடுபடலாம். ஆண்டு அடிப்படையிலும், கட்சிகள் அடிப்படையிலும் தேடும் வசதி இருக்கிறது.

எனவே, தேர்தல் ஆய்வாளர்களின் சொர்கம் என இந்த தளத்தை வர்ணிக்கலாம்.

சுருக்கமாக சொல்வது என்றால், இந்திய தேர்தல்கள் தொடர்பாக அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இணையதளம் என வர்ணிக்கலாம்.

Screenshot_2021-03-25 IndiaVotes India's largest election database(1)ஆனால், இந்த அறிமுகத்தை படித்துவிட்டு, இந்தியாவோட்ஸ் இணையதளத்தை ஆர்வத்துடன் பயன்படுத்திப்பார்க்கும் எவரும், உடனடியாக குழப்பத்திற்கு உள்ளாகி, அதன் பிறகு ஏமாற்றம் அடைவார்கள்.

ஏனெனில், இந்தியாவோட்ஸ் இணையதளம் தொடர்ந்து புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்ட தளமாக இருப்பது தான். இந்த தளம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் இதன் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி பார்க்க முற்படும் போது, இதை சட்டென உணர முடிகிறது.

முதல் விஷயம், தளத்தில் நடப்பு தேர்தல் தொடர்பான எந்த தகவலும் இல்லை. முந்தைய தேர்தல் தொடர்பான தர்வுகள், 2014 நாடாளுமன்ற தேர்தல் வரை தான் இடம்பெற்றுள்ளன. தளத்தில் உள்ள வலைப்பதிவு பிரிவிலும் அண்மை தேர்தல் தொடர்பான குறிப்பு இல்லை என்பதோடு முந்தைய பதிவுகளும் செயல்படவில்லை.

மாநில தேர்தல் முடிவுகளை தொகுத்தளிக்கும் அட்டவணையும் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.

இந்த கட்டத்தில் தான் அடடா, இந்திய தேரதல் தொடர்பான அருமையான இந்த தளம் இப்படி கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறதே என்ற ஏமாற்றம் ஏற்படுகிறது.

இந்த தளம் மட்டும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, அப்டேட்டாக இருந்தால் தற்போதைய சட்டமன்ற தேர்தல் சூழலில், கட்சிகளின் கடந்த கால செயல்பாடு, நிகழ்கால வெற்றி வாய்ப்பு தொடர்பான ஆய்வை தரவுகள் அடிப்படையில் மேற்கொள்வதற்கான தளமாக இருக்குமே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது.

இத்தனைக்கும் இந்த தளம், தேர்தல் புள்ளிவிவரங்களை திரட்டுவதற்கு தனியே எதையும் செய்யவில்லை. ஏற்கனவே பொதுவெளியில் உள்ள தரவுகளை தொகுத்தளிக்கிறது. ஆனால் பல இடங்களில் சிதறிக்கிடக்கும் தரவுகளை ஒரே இடத்தில் தொகுத்தளிப்பதோடு,. அவற்றை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பகுத்தளிப்பதே இதன் சிறப்பாக இருக்கிறது. இந்த காரணத்திற்காகவே இதை இந்திய தேர்தல் தொடர்பான ஆகச்சிறந்த தளங்களில் ஒன்று என வர்ணிக்கலாம்.

ஆனால், இத்தகைய ஒரு தளம் துடிப்பாக செயல்படும் தளமாக இல்லாமல் போனது ஏன்?

ஜனநாயக நாட்டில்; தேர்தல் தொடர்பாக பேசவும், எழுதவும் தரவுகள் அவசியம் எனும் போது அந்த தரவுகளை எளிதாக கிடைக்கச்செய்ய வழி செய்த ஒரு இணையதளத்தின் இந்த கதியை எப்படி புரிந்து கொள்வது?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.