ஒரு இணையதளத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

lkiலவுடிட்.ஆர்க்’ எனும் இணையதளம் தொடர்பான அறிமுகத்தை இன்றைய இணைய மலர் மின்மடலில் எழுதியிருக்கிறேன்.

அறிமுக தகவல்கள் தவிர, இந்த இணையதளம் தொடர்பான பொதுவான சில தகவல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு இணையதளம் தொடர்பாக கவனிக்க வேண்டிய விஷயங்களாக இவற்றை கருதுகிறேன்.

எந்த ஒரு இணையதளத்தையும் மேலோட்டமாக அறிமுகம் செய்து கொள்ளக்கூடாது என்பது முதல் விஷயம். ஒவ்வொரு இணையதளத்தையும் இயன்றவரை முழுவதுமாக உள்வாங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்காக இணைய ஆய்வை மேற்கொள்வது அவசியம்.

இணைய ஆய்வு

இணைய ஆய்வு என்றவுடன் மிரண்டு விட வேண்டும். இணையதளம் தொடர்பான அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்வதில் இருந்து இதை துவக்கலாம்.

இணையதளம் தொடர்பான அடிப்படை அம்சங்களில் முதன்மையானது, குறிப்பிட்ட தளம் நம்பகமானதா என்பதை அறிவது. இதற்கு குறிப்பிட்ட அந்த தளம் எந்த அளவுக்கு அதிகாரப்பூர்வமானது என்பதை பார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வமானது எனில், இணையதளத்தின் பின்னே இருக்கும் நபர் அல்லது அமைப்பு அல்லது நிறுவனம் யார் என்பதை தெரிந்து கொள்வது. இந்த விவரம் இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பொதுவாக, இந்த தகவலை, இணையதள அறிமுக பக்கத்தில் காணலாம். எங்களைப்பற்றி (About) எனும் விதமாக அமையும் இந்த பக்கத்தில் இணையதளத்தின் தன்மை அதன் நோக்கம் உள்ளிட்டவற்றை அறியலாம். இந்த விவரங்கள் போதுமானதாக இல்லை அல்லது தகவல்களே இல்லை எனில், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.

இணையதளத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு, அந்த நோக்கத்திற்கு தளத்தின் உள்ளடக்கம் பொருத்தமாக இருந்தால், அதுவே தளத்தின் நம்பகத்தன்மைக்கான சான்றிதழாகும்.

இணையதளங்களை அறிமுகம் செய்யும் கட்டுரைகளுக்கும் இது பொருந்தும்.

இணையதளம் பற்றி எழுதும் போது, அறிமுகம் செய்யும் இணையதளம் தொடர்பான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டு எழுத வேண்டும்.

லவுடிட்

இப்போது ’லவுட்டிட்’ இணையதளம் தொடர்பான தகவலுக்கு வருவோம்.

காப்புரிமை விடுபட்டு பொதுவெளியில் இருக்கும் ஆங்கில புத்தகங்களை மின்னூலாகவும், ஒலி நூலாகவும் வாசிக்க வழி செய்கிறது இந்த தளம். அதாவது புத்தகங்களை வாசிக்கவும் செய்யலாம், செவி வழியே கேட்கவும் செய்யலாம்.

அருமையான இணையதளம் தான். இணைய தொழில்நுட்ப செய்தி இணையதளங்களில் ஒன்றான லைப் வயர் தளத்தின் மூலம் தான் இந்த தளத்தை அறிமுகம் செய்து கொள்ள நேர்ந்தது. பொதுவெளியில் உள்ள புத்தகங்களை கண்டறிவது எப்படி? எனும் தலைப்பிலான கட்டுரையில் லவுடிட் உள்ளிட்ட 13 தளங்களை இந்த கட்டுரை அறிமுகம் செய்கிறது.

லிப்ரிவாக்ஸ் போலவே, பொதுவெளியில் இருக்கும் மகத்தான இலக்கியங்களை லவுடிட், தரமான ஆடியோ பதிவுகளுடன் இணைக்கிறது, இரண்டையும் பிசி அல்லது – ரீடரில் தரவிறக்கம் செய்யலாம் என அறிமுகம் செய்யப்படுகிறது.

சுருக்கமான எளிய அறிமுகத்தை படித்து விட்டு லவுடிட் தளத்திற்கு சென்று பார்த்தால், இந்த தளம் அதன் எளிமையை மீறி வியக்க வைக்கிறது. பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்கள் சொற்பமாகவே இருந்தாலும், ஒரே இடத்தில் ஒரு புத்தகத்தின் மின்னூல் மற்றும் ஒலி நூல் வடிவங்களை அணுக முடிவது சிறப்பானது தானே.

இந்த வியப்புடம், தளம் தொடர்பாக மேற்கொண்டு தகவல் அறிய அதன் அறிமுக பக்கத்திற்கு சென்றால், இது மூல தளம் அல்ல, தொகுத்தளுக்கும் தளம் எனத்தெரிகிறது. இந்த தளம் பிராஜெக்ட் குடென்பர்க் மற்றும் லைப்ரிவாக்ஸ் தளங்களில் இருந்து மின்னூல் மற்றும் ஒலிப்புத்தகங்களை எடுத்து தருகிறது.

பொதுவெளி தளங்கள்

LoudLit-5ad426f73de4230037e616d1இரண்டுமே பொதுவெளியில் உள்ள நூல்களை அளிக்கும் பொது நோக்கிலான தளங்கள் என்பதால் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், விஷயம் என்னவெனில், லைப் வயர் கட்டுரை அறிமுகத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பவில்லை. இது பெரிய தவறு இல்லை தான். சின்ன விடுபடல் என கொள்ளலாம்.

ஆனால் இந்த தகவலையும் குறிப்பிட்டிருந்தால் சரியான வழிகாட்டலாக இருந்திருக்கும். மேலும் இதே கட்டுரையில் பிராஜெட்க்ட் குடென்பர்க் மற்றும் லைப்ரிவாக்ஸ் பற்றிய சுருக்கமான அறிமுகமும் இடம்பெற்றுள்ளன. எனில், லவுடிட் தள அறிமுகத்தில், இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் தகவல் இடம்பெறுவதே பொருத்தமாக இருக்கும்.

லைப்ரிவாக்ஸ் போன்ற தளம் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, லைப்ரிவாக்ஸ் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தளம் என குறிப்பிடப்பவில்லை. இந்த தொடர்பு தளம் பற்றிய புரிதலை அளித்திருக்கும். கட்டுரையில், குடென்பர்க் மற்றும், லைப்ரிவாக்ஸ் இரண்டு தளங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெறும் நிலையில், இவற்றுடன் தொடர்பு கொண்ட மூன்றாவது தளம் குறித்த அறிமுகத்தில், இந்த தொடர்பு கண்டறியப்பட்டு குறிப்பிடப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ( இதே போலவே, பொதுவெளியில் உள்ள மின்னூல்களை வாசிக்க வழி செய்யும் மெனிபுக்ஸ் தளம், குடென்பர்க் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இந்த தளம் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருந்தாலும், இந்த குறிப்பு இல்லை).

வாசகர்கள் பொறுப்பு

இந்த இடத்தில் தான் வாசகர்களின் பொறுப்பு முக்கியமாகிறது. இணையதளங்களை பயன்படுத்தும் போது, இத்தகைய அடிப்படையான விஷயங்களை கவனிக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தும் தளங்களை அதிகம் நாட வேண்டும். அதற்காக லைப் வயர் தளத்தை குறைத்து சொல்வதற்கில்லை. அறிமுக நோக்கில் இணைய தகவல்களை அளிக்கும் சிறந்த தளம் தான் அது.

ஆனால், இந்த கட்டுரையில் மேலோட்டமான அறிமுகத்துடன் நிறுத்தியிருக்கிறது. இதே போல வேறு சில கட்டுரைகளிலும் நிகழ்ந்திருக்கலாம். தளத்தின் தன்மையை மட்டும் அறிமுகம் செய்வது நோக்கமாக இருக்கலாம்.

ஆனால், உள்ளட்டக்க பண்ணை (content farms) என குறிப்பிடப்படும் எண்ணற்ற இணையதளங்கள், விளம்பர வருவாய்க்காக சும்மா அவசர கோலத்தில் தகவல்களை அள்ளித்தெளித்து செயல்பட்டு வருகின்றன. இந்த தளங்களை கூகுளும் தேடல் பட்டியலில் அடையாளம் காட்டலாம். இத்தகைய இணையதளங்களை அடையாளம் காண வேண்டும் எனில் மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களை நுட்பமாக கவனிக்க வேண்டும். இணையத்தில் தகவல்களை தேடும் போது சிறிது கவனம் தேவை.

லவுடிட் தளம் பற்றிய இணைய மலர் மின்மடல் அறிமுகம்:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.