சாட்ஜிபிடி மென்பொருளை பயன்படுத்துவது எப்படி?

சாட்ஜிபிடிமென்பொருள் பற்றி தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஓபன் ஏஐ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அரட்டை மென்பொருள் மனிதர்களுடன் மனிதர்கள் போலவே இணைய உரையாடல் மேற்கொண்டு வியக்க வைத்து வருகிறது.

சாட்ஜிபிடியை பயன்படுத்தியவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களை பார்த்து உங்களுக்கும் இந்த ஏஐ மென்பொருளுடன் உரையாடும் விருப்பம் ஏற்பட்டிருந்தால், அதற்கான வழிகாட்டி இதோ:

சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி?

சாட்ஜிபிடிஅதன் ஆற்றலால் வியக்கவும், மிரளவும் வைத்தாலும் அதை பயன்படுத்துவது எளிது. சேட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, பயனாளிகள் கேள்வி வடிவில் தங்கள் கோரிக்கையை சமர்பிக்க வேண்டும். அதற்கு முதலில், ஓபன்.ஏஐ இணையதளத்தில் கணக்கு துவக்க வேண்டும்.

முதல் கட்டம்

முதல் படியாக, ஓபன் ஏ.ஐ இணையதளத்தில் நுழைந்து, சேட் ஜிபிடியை பயன்படுத்த பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதோ இணைய முகவரி:

https://chat.openai.com/auth/login.

இணைய பக்கம்

ஓபன் ஏ.ஐ இணையதளத்தில் பதிவு செய்வதற்கான பக்கத்தில், உள் நுழைய அல்லது, பதிவு செய்ய எனும் வாய்ப்புகள் இருக்கும். புதிய கணக்கு எனில் பதிவு செய்ய வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். அதிக பயனாளிகள் முற்றுகை இடுவதால்,காத்திருக்கும் தேவை ஏற்படலாம்.

அடுத்த கட்டம்

சாட்ஜிபிடிக்கான கணக்கை துவக்கிய பின், உங்கள் கணக்கை உறுதி செய்ய வேண்டும். இமெயில் மூலம் பதிவு செய்திருந்தால் இதற்கான அழைப்பு இமெயில் உள்பெட்டியில் வந்திருக்கும். மொபைல் இணைப்பு மூலமும் உறுதி செய்யலாம். இங்கு கேட்கப்படும் விவரங்களை அளிக்கவும்.

பயன்பாடு

பதிவு செய்து கொண்ட பிம், சாட்ஜிபிடியிடம் நீங்கள் கேள்வி கேட்கத்துவங்கலாம். அதன் தேடல் கட்டத்தில் கேள்விகளை கேட்கவும்.

என்னவிதமான கேள்விகள் கேட்கலாம் என்பதற்கு ஊக்கம் தேவை எனில், சாட்ஜிபிடிபயனாளிகள் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவங்களை பார்க்கவும். மொபைல் போனிலும் செயலி வடிவில் பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை பயன்படுத்துவது இப்போதைக்கு இலவசமானது. ஆனால் எதிர்காலத்தில் கட்டணம் அறிமுகம் ஆகலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.