கூகுளுக்கு குட்பை சொல்ல வைக்குமா சாட் ஜிபிடி?

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது.

ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் பெற்றிருப்பதால், இனி வருங்காலத்தில் கூகுளில் தேடுவதற்கு பதில் சாட் ஜிபிடியில் தேடிக்கொள்ளலாம் என பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். பலரும் என்பது இங்கு இணைய மற்றும் ஏ.ஐ வல்லுனர்களை குறிக்கும்.

இந்த பின்னணியில், பால் பவுக்கெய்ட் (Paul Buccheit) எனும் வல்லுனர், கூகுளின் கதை முடிந்தது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார். கூகுள் கதை முடியும் என்று அவர் சொல்லாவிட்டாலும், ஒரு தேடியந்திரமாக கூகுள் தலைகீழ் மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், இதன் காரணமாக கூகுள் தளத்தில் தேடல் முடிவுகளே இல்லாமல் போகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

என்னது கூகுளில் தேடல் பக்கமே இல்லாமல் போகுமா? என்று பெரும் அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால், பெக்கெய்ட் அப்படி தான் நம்புகிறார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்டுள்ள டிவிட்டர் தொடர் பதிவுகளில், ஏ.ஐ, தேடல் முடிவுகள் பக்கத்தையே இல்லாமல் செய்துவிடும் என்று கூறியுள்ளார்.

இதன் பொருள் தேடியந்திரமே இல்லாமல் போகும் என்பதல்ல. தேடியந்திரம் இருக்கும், ஆனால், அதில் தேடல் கட்டம் இருக்காது, தேடல் முடிவுகளும் இருக்காது. தேட வேண்டிய தகவலை நேரடியாக ஏ.ஐ-யிடம் கேட்டால் கச்சிதமான பதிலை அது முன்வைக்கும்.

அதாவது, தேடியந்திர நுட்பங்களை நம் சார்பில் ஏ.ஐ பயன்படுத்தி, பொருத்தமான பதிலை, ஒற்றை இணைப்பாக அல்லது தகவலாக அளிக்கும். பழைய முறைப்படி, தேடல் பட்டியலில் பொருத்தமான இணைய பக்கத்தை தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.

இப்படி தான் பெக்கெய்ட் விவரித்துள்ளார்.

யோசித்துப்பாருங்கள், கூகுளின் முகப்பு பக்கம் அதன் எளிமைக்காக பெயர் பெற்றது. ஆனால் அதில் தேடும் போது தோன்றும் தேடல் பக்கமும் இதே எளிமையோடு இருந்தால் எப்படி இருக்கும். வருங்கால தேடல் இப்படி தான் இருக்கும் என்கிறார் பெக்கெய்ட்.

அவர் கூறும் மற்றொரு முக்கியமான விஷயம், கூகுளுக்கு சவாலாக அமையப்போவது சாட் ஜிபிடி அல்ல, மாறாக அதன் பின்னே உள்ள ஏ.ஐ நுட்பம் என்கிறார். கூகுளும் ஏ.ஐ ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் இந்த மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் என்றாலும், அதற்குள்ள முக்கிய பிரச்சனை,தேடல் முடிவுகள் பட்டியலுக்கு பதில் ஏஐ நுட்பத்திற்கு இடம் கொடுத்தால், தேடல் முடிவுகளை வைத்துக்கொண்டு விளம்பர வருவாய் ஈட்டுவது இனி சாத்தியம் இல்லாமல் போகும் என்பது தான்.

இதை தான், கூகுள் எப்படி யெல்லோ பேஜஸ் புத்தகங்களை வழ்க்கொழிந்து போகச்செய்ததோ அதே போல ஏஐ, கூகுள் முன் வைக்கும் தேடல் பக்கங்களுக்கு முடிவு கட்டும் என்கிறார்.

பெக்கெய்ட், கூகுளின் இமெயில் சேவையான ஜிமெயிலை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் அவரது டிவிட்டர் சரடு:   

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.