கொரோனா லாக்டவுனில் பலரும் தவறவிடுவதாக உணரும் விஷயங்களில் அலுவலக சூழலும் ஒன்று. அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டோமா என்று ஏங்கியதற்கு மாறாக, இப்போது பலரும் எப்போது மீண்டும் அலுவலகம் செல்லத்துவங்குவோம் என ஏங்கத்துவங்கி விட்டனர்.
அலுவலகம் செல்லத்துவங்க லாக்டவுன் முடிய காத்திருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்றாலும், வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை செய்து கொண்டிருப்பவர்கள், அலுவலக சூழலை தவறவிடுவதாக உணர்ந்தால், அதற்கு ஒரு நிவாரணம் இருக்கிறது. ஐமிஸ்திஆபிஸ் (https://imisstheoffice.eu/) எனும் இணையதளம், வீட்டிலேயே அலுவலக சூழலை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
வீட்டில் அலுவலக சத்தம் கேட்கச்செய்வதன் மூலம், அலுவலக சூழலை வீட்டிலேயே உருவாக்கித்தருகிறது.
மிக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளம், கண்களை மூடிக்கொண்டு, உங்கள் அலுவலகத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் என்கிறது. அதற்கேற்ப, இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, அலுவலக வரைபடத்தில் உள்ள பர்னீச்சர்கள், பிரிண்டர்கள் போன்றவற்றை கிளிக் செய்தால், அலுவலகத்தில் கேட்கும் ஒலிகளை கம்ப்யூட்டரில் கேட்கலாம்.
அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கையையும் அதிகமாக்கி கொள்ளும் வசதி இருக்கிறது.
இப்படி பின்னணியில் அலுவலக ஒலி, கேட்டுக்கொண்டிருக்க, வீட்டில் இருந்தபடியே அலுவலக பணியை மேற்கொள்ளலாம்.
–