லாக்டவுனில் மொழி கற்கலாம் வாங்க!

loகொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன் லாங்குவேஜ் (lockdownlanguage.org) இணையதளம் அமைந்துள்ளது.

இந்த தளத்தின் மூலம், நீங்கள் புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். எந்த மொழியையும் கற்க சிறந்த வழி, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவருடன் உரையாடி பார்ப்பது தானே! அதை தான் இந்த தளமும் சாத்தியமாக்குகிறது.

நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுடன் இந்த தளம் மூலம் வீடியோ உரையாடலை மேற்கொண்டு, அந்த மொழியில் பயிற்சி பெறலாம்.

கொரோனா பாதிப்பால் பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், இந்த தளம், இரட்டிப்பு பலன் கொண்டதாக அமைகிறது. முதல் விஷயம், வீட்டிலேயே இருப்பவர்கள், இந்த காலத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள விரும்பினால், தாங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியில் பேசி பயிற்சி பெறலாம்.

ஆனால், ஒன்று இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே இந்த தளத்தின் இரண்டாவது பயனாக அமைகிறது.

கொரோனா பாதிப்பால் வீட்டிலேயே இருக்கும் பலர் வேலைவாய்ப்பை இழந்திருக்கலாம் அல்லது வருமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் இந்த தளம் மூலம், தங்கள் மொழியை கற்றுத்தந்து, வீட்டில் இருக்கும் நாட்களில் கொஞ்சம் பணம் சம்பாதிக்க விரும்பினால், அதற்கு கற்பவர்கள் உதவியதாகவும் அமையும்.

நல்ல நோக்கத்துடன், பொழுதையும் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல மொழி பேசுபவர்கள் இந்த தளத்தில் தங்களை பட்டியலிட்டுள்ளனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.