நாற்காலி செய்ய வாருங்கள்!அழைக்கும் இணையதளம்.

கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம்.புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது.அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

மனிதர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தாங்களே உருவாக்கி கொள்வதில் இருந்து விலகியது எப்படி உழைப்பிலிருந்து மனிதர்களை அந்நியமாக்கியது என்று காரல் மார்க்ஸ் ஆத‌ங்கத்தோடு விளக்கியிருக்கிறார்.இப்படி உழைப்பின் அந்நியமாதல் நுகர்வு சந்தையையும் சுரண்டலையும் கொண்டு வந்தது என்பது மார்க்சின் கருத்து.

இன்று ஈடுப்பாட்டையும் சுய திருப்தியையும் தரக்கூடிய உஐப்பிலிருந்து தொலை தூரத்தில் வந்து விட்டோம்.

இயற்கைக்கு திரும்புதல் என்று சொல்வது போல உடல் உழைப்பின் பரவ‌சத்தை தரக்கூடிய அனுபவத்தை மீண்டும் பெற விரும்பினாலும் கைத்தொழிலை பயிலலாம்.அதிலும் குறிப்பாக மேஜைகளையும் நாற்காலிகளையும் உருவாக்கி கொள்ளகூடிய தச்சுத்தொழில்.

தச்சு வேலை நுட்பமானது.இவ்வள‌வு ஏன் சுந்தர ராமசாமி எழுதிய ஜே ஜே சில குறிப்புகள் நாவலின் நாயகன் ஜே ஜே வே ஆரம்பத்தில் ஒரு தச்சன் தானே.

ஜே ஜே வும்,’மர வேலை எனக்கு பிடிக்கும்.மனதை பரவ‌சப்படுத்தும் நிமிஷங்கள் கொண்டது தான்.படைப்புத்திற்னுக்கும் அழகின் வேலைப்பாட்டிற்கும் இடந்தரகூடியது தான்’என்று தச்சு வேலை பற்றி குறிப்பிடுகிறார்.

தச்சு வேலையில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் மனதும் இருந்தால் நமது தேவைகேற்ற மேஜை நாற்காலி போன்றவற்றை நாமே உருவாக்கி கொள்ளலாம்.

எல்லாம் சரி ,தச்சு வேலையை எங்கே போய் கற்றுக்கொள்வது என்று கேட்டால் கவலையே வேண்டாம் அதற்காக என்றே எளிமையான இணையதளம் இருக்கிறது.

பர்னிச்சர் டிசைன் பேங்க் என்பது தான் அந்த தலத்தின் முகவரி.

விதவிதமான மேஜை நாற்காலிகளை செய்ய கற்றுத்தரும் இணையதளம் என்று ஒற்றை வரியில் இந்த தளத்தை அறிமுகம் செய்துவிடலாம் தான்.ஆனால் அந்த ஒற்றை வரி இந்த தளம் தரக்கூடிய அனுபவத்திற்கு நியாயம் செய்வதாகாது.புதியதாக முயன்று பார்க்க தயாராக இருப்பவர்களை இந்த தளம் ஆனந்தத்தில் ஆழ்த்திவிடக்கூடியது.

முக்காலிகள்,நாற்காலிகள்,மேஜைகள்,பெஞ்சுகள் என மரத்தால் செய்யக்கூடிய பொருட்களின் செய‌ல் முறையை எளிமையான வரைபடத்தோடு அழகாக விளக்குகிற‌து இந்த தள‌ம்.

அதோடு விதவிதமான ஸ்டூல்கள் ,புத்தக அலமாரிகளும் இடம் பெற்றுள்ளன.ஸ்டூல்களில் மட்டும் எத்தனை வகை இருக்கின்றன தெரியுமா?அதே போல நாற்காலிகளில் ப‌ல ர‌கங்கள்.முதலில் இவற்றை நோட்டம் விட்டு விட்டு பின்னர் நமக்கு தேவையான பொருளை கிளிக் செய்தால் அதற்கான தனிப்பக்கம் வந்து நிற்கிறது.

தச்சு வேலை செய்பவர் தனக்கு தானே போட்டு கொள்ளகூடிய வரை பட குறிப்புகளோடு அவற்றிக்கான செய்குரை குறிப்புகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.எல்லா குறிப்புகளுமே மிக விளக்கமாக விரிவாக அமைந்துள்ளன.அவற்றை பார்க்கும் போதே முக்காலிகளையும் நாற்காலிகளையும் செய்து பார்க்க தோன்றும்.

இந்த தள‌த்தை உருவாக்கியவர் வடிவமைப்பில் கில்லாடி போலும் .அவர் உர்வாக்கிய எண்ணற்ற வடிவமைப்பு மாதிரிகள் எல்லாவற்றையும் அவராலேயே உருவாக்கிட முடியாது என்பதால் மற்றவர்களின் உபயோயக்கத்திற்கு பகிர்ந்து கொள்வதற்காக இந்த தளத்தை நடத்தி வருகிறார்.த‌ச்சுத்தொழிலின் பார‌ம்பரியதன்மை மற்றும் தற்காலத்தின் நவீனத்தன்மை இரண்டும் கலந்தவை இந்த வடிவமைப்புகள் என்கிறார் இதன் நிறுவ‌னர்.

அவரது கூற்றுப்படி சில வடிவமைப்புகள் எளிதானவை.சில சிக்கலானவை.ஆர்வம் உள்ளவர்கள் முயன்று பார்க்கலாம்.

இணையதள முகவ‌ரி;http://www.dickreynoldsdesign.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *