Written by: "CyberSimman"

இடம் பொருள் வலைப்பின்னல்

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது. பிளேஸ்கனெக்ட் என்னும் அந்த தளத்தின் இடம் சார்ந்த வலைப்பின்னல் சேவை என்று கூறலாம். இண்டெர்நெட்டில் இப்போது வலைப்பின்னல் சேவை தளங்களுக்கு குறைவில்லை என்றாலும் பிளேஸ்கனெக்ட் சற்றே வித்தியாசமானது. இங்கு இடம் தான் எல்லாமும். உங்களுக்கு பிடித்த அல்லது உங்களை பாதித்த இடங்களை இந்த தளத்தி வழியே பகிர்ந்து கொள்ளலாம். […]

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம்...

Read More »

மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணையதளத்தை மகளிருக்கு மிகவும் ஏற்ற இணையதளம் என்று சொல்லலாம். தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது. வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் […]

பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணைய...

Read More »

ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலி

மார்ட்டின் புரூக்சை அருமையான தந்தை என்றே சொல்ல வேண்டும்.  உலகில் வேறு எந்த தந்தையும் தனது மகளுக்கு செய்யாததை அவர் செய்திருக்கிறார். புரூக்ஸ் தனது ஆசை மகளுக்காக ஒரு ஐபோன் செயலியை உருவாக்கி அந்த அற்புத குழந்தைக்கு புதிய வாசலை திறந்து விட்டிருக்கிறார். அதோடு தனது மகளை போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கும் புதிய வழி காட்டியிருக்கிறார். புரூக்ஸ் உருவாக்கிய செயலியை இதுவரை உருவாக்கப்பட்ட ஐபோன் செயலிகளில் எல்லாம் மிகவும் விசேஷமானது என்றே சொல்ல வேண்டும். பாசத்தின் அடையாளமாக […]

மார்ட்டின் புரூக்சை அருமையான தந்தை என்றே சொல்ல வேண்டும்.  உலகில் வேறு எந்த தந்தையும் தனது மகளுக்கு செய்யாததை அவர் செய்தி...

Read More »

குழந்தை பெயர்களுக்கான சுவாரஸ்யமான இணையதளம்

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்க இருக்கும் தருவாயில் எல்லா இளம் பெற்றோர்கள் மனதிலும் ஆர்வாத்தோடு எழும் கேள்வி தான் இது? சில பெற்றோர்கள் இந்த கேள்விக்கு விடை காண பெயராய்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.தங்கள் குழந்தைக்கு வைக்ககூடிய பெயர் புதுமையானதாக,அழைக்க எளிதானதாக,பேஷன் மிக்கதாக இருக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பொருத்தமான பெயரை தேடும் படலத்தில் இளம் அப்பாக்களும் அம்மாக்களும் ஈடுபடுவதை பார்க்கலாம். ஒரு சில மிகுந்த உற்சாகத்தோடு நண்பர்களையும் இந்த தேடலில் […]

என்ன பெயர் வைக்கலாம்? குழந்தை பிறந்தவுடன் அல்லது பிறக்க இருக்கும் தருவாயில் எல்லா இளம் பெற்றோர்கள் மனதிலும் ஆர்வாத்தோடு...

Read More »

மாணவர்களுக்கான தேடிய‌ந்திரம்

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை என்றால் தேடலுக்கு என்று தனி தொழில்நுட்பத்தை நாடாமல் கூகுல் தேடலை பயன்படுத்திக்கொண்டு அத‌ன‌டிப்ப‌டையில் புதிய‌ தேட‌ல் வ‌ச‌தியை அளிக்க‌ முய‌லும் தேடிய‌ந்திர‌ங்க‌ள் என்று பொருள். உதாரண‌த்திற்கு சில தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை தேடித்த‌ருவதாக பெருமைபட்டுக்கொள்ளும்.ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது பார்த்தால் கீழே எங்காவது கூகுலுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டிருக்கும்.கூகுலிலேயே பிடிஎப் கோப்புகளை தேடலாம்.இந்த தேடிய‌ந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை மட்டும் […]

கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய‌ தேடிய‌ந்திர‌ங்களை சுலபமாக இர‌ண்டு வ‌கையாக பிரித்து விடலாம். கூகுல் சார்ந்த‌வை...

Read More »