Tag Archives: இண்டெர்நெட்

கூகுலில் நீங்கள் தேடப்படுகிறீர்கள் உஷார்..

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.காரணம் பெரும்பாலானோர் தங்களுக்கென தனியே இணையதளம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக சொல்ல முடியாது.

வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும் பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர்.மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை.

அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.

மற்றவர்களை விடுங்கள் சாமன்யர்களில் பலரும் கூட எதற்காக சொந்த இணையதளம் என்றே நினக்ககூடும்.நம்மை பற்றி இணையதளம் அமைத்து உலகிற்கு தெரிவிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்றும் கூட சுய இளக்காரம் கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது .அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.

ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை.மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர்.

வேலைக்காக விண்ணப்பித்தவ‌ர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான்.

இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.

கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவ‌லாகி வருகிறது.

இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும்.பேஸ்புக்கில் பகிர்ந்தவை,வலைப்பதிவில் உள்ளவை,வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை ,இனைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.

அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம்,பாதகமானவையும் இருக்கலாம்.உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம்.

இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் படசத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும்.உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரகூடும்.அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.

எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம்.

அட சரி தான்,ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைதாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிற‌து.

இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது.இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.

அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்கலைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம்.
விஸிபிலிட்டி கூகுலுக்கான என்னை தேடு (சர்ச் மீ)பட்டனை தருவதாக சொல்கிறது.ஒருவருடைய பெயர் கூகுலில் தேடப்படும் போது இந்த பட்டன் முதலில் வரும் என்றும் உறுதி அளிக்கிறது.இதனை கிளிக் செய்தால் தேடப்ப‌ட்டவரின் விவரம் அவர் விரும்பிய வண்ணமே தோன்றும்.இதை தான் விஸிபிலிட்டி உங்கள் தேடல் விவரங்க‌ளை நீங்களே கட்டுப்படுத்தி கொள்ள உதவுவதாக கூறுகிறது.

விஸிபிலிட்டியில் என்னை தேடு பட்டனை உருவாக்கி கொள்ள முதலில் எப்யர் மற்றும் ப‌ணியிடம் போன்ற விவரங்க‌ளை சமர்பிக்க வேண்டும்.அதன் பிறகு பயனாளி தன்னை தீர்மானிக்கும் குறிச்சொற்களை சமர்பிக்கலாம்.தேவைப்பட்டால் இந்த விவரங்களை மாற்றி அமைத்து மேம்படுத்தி கொள்ளலாம். விவரங்களில் திருப்தியான பிறகு இந்த பக்கத்தை சம‌ர்பித்து கூகுல் தேடல் பட்டனை பெற்று கொள்ளலாம்.

எல்லாம் சரி இந்த பக்கம் தான் கூகுலில் முதலில் வந்து நிற்கும் என்பதற்கு என்ன நிச்சயம் என்று கேட்கலாம்.

அந்த சந்தேகமே வேண்டாம்,கூகுலில் முன்னிலை பெறக்கூடிய வகையில் பிரத்யேக தேடல் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பதாக விஸிபிலிட்டி சொல்கிறது.முன் தேடல் என்று இதனை குறிப்பிடுகிற‌து.கூகுலில் தேடப்படும் போது முன்னிலை பெறும் வகையில் தேடலுக்கான விவரங்களை முன்கூட்டியே தேர்வு செய்ய வழி செய்யும் இந்த உத்தியை நீண்ட ஆய்வுக்கு பின் உருவாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இந்த தேடு பட்டனை வலைப்பதிவு மற்றும் பேச்புக் போன்றவ‌ற்றிலும் இடம் பெற வைக்கலாம்.தனி நபர்கள் மட்டும் அல்ல நிறுவன‌ங்களும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.

இணையதள முகவரி;http://vizibility.com/

புதிய தேடியந்திரம் கிவீல்

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற்படலாம்.ஆனால் இதன் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் தெளிவாகவே உள்ளது.

புதியவர்களுக்கான தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தேடுவது போலவே தேடலாம்.செய்திகள்,புகைபப்டங்கள்,வீடியோ,சமூக வலைப்பின்னல் தளங்கள்,ஷாப்பிங் என பல்வேறு வகையான தகவல்களை குறிப்பிட்டு தேடலாம்.

மேலும் தேடல் உலகில் பிரப்லாமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய பட்டியலும் இடம் பெறுவதால் அத்னையும் தேடல் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம்.

இரண்டாம் அலை தேடியந்திரம் என கூறப்படும் இந்த தேடியந்திரம் பிங்கின் தேடல் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.

தேடியந்திர முகவரி;http://www.keewl.com/

கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் கிடைத்த‌ வேலை

கூகுலின் விள‌ம்ப‌ர‌ சேவையான‌ ஆட்வேர்ட்சை இத‌ற்கு முன்ன‌ர் த‌னிந‌ப‌ர்க‌ள் இத்த‌னை அழ‌காக‌ ப‌ய‌ன‌ப்டுத்திக்கொன்டிருக்கின்ற‌ன‌ரா என்று தெரிய‌வில்லை.உண்மையில் ஆட்வேட்ஸ் சேவையை த‌னிந‌ப‌ர்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ள‌ன‌ரா என்றும் தெரிய‌வில்லை. பொதுவாக‌ வ‌ர்த்த‌நிறுவ‌ன‌ங்க‌ளே இந்த‌ சேவையை அதிக‌ம் ப‌யன்ப‌டுத்துகின்ற‌ன‌.அதோடு சிறிய‌ அள‌விலான‌ நிறுவ‌ங்க‌ல் ம‌ற்றும் இணைய‌ தொழில் முனைவோர் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

இதில் விய‌ப்ப‌த‌ற்கு ஒன்றுமில்லை.

ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ சேவையான‌து அத‌ன் இய‌ல்பு ப‌டியே நிறுவன‌ங்க‌ளுக்கான‌து தான்.

எல்லாவிதமான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளிலும் ஆட்வேர்ட்ஸ் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை பார்க்க‌லாம். நோட்டு புத‌த‌க‌த்தில் ப‌க்க‌வாட்டில் குறிப்பெழுதுவ‌து போல‌ இணைய‌ப‌க்க‌ங்க‌ளின் ஓர‌த்தில் கூகுல் விள‌ம‌ப‌ர‌ங்க‌ள் என்னும் குறிப்போடு குட்டி குட்டியாக‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ங்கள் இட‌ம்பெற்றிருக்கும்.

ஒரு வ‌ரி த‌லைப்பின் கீழ் ஒரிரு வ‌ரி அறிமுக‌த்தோடு விள‌ம்ப‌ர‌ம் த‌ரும் இணைய‌த‌ள‌த்திற்கான‌ இணைப்பு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.ம‌ற்ற‌ விளம்ப‌ரங்க‌ளுக்கும் கூகுல் விளம்ப‌ர‌த்துக்கும் உள்ள‌ முக்கிய‌ வித்தியாச‌ம் பெரும்பாமும் இவை பொருத்த‌மான‌தாக‌ இருக்கும்.அதாவ‌து ஒருவ‌ர் ப‌டித்திக்கொண்டிருக்கும் இணைய‌ ப‌க்க‌த்தில் உள்ள‌ விஷ‌ய‌த்திற்கு தொட‌ர்புடைய‌தாக‌வே இவை இருக்கும்.

இத‌ன் கார‌ண‌மாக‌ இந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கிளிக் செய்ய்ப்ப‌டும் வாய்ப்பு கூடுத‌லாக‌ இருப்ப‌தோடு ம‌ற்ற‌ விள‌ம்ப‌ர‌ம் போல‌ எரிச்சல் உண‌ர்வை தாராம‌ல் இருக்கும்.

அதே போல‌ கூகுல் விளம்ப‌ர‌த்துக்கு க‌ச‌ட்டு மேனிக்கு க‌ட்ட‌ண‌ம் கேட்காம‌ல் கிளிக்கிற்கி இத்தனை காசு என்ற‌ க‌ண‌க்கிலேயே க‌ட்ட‌ண‌ம் வ‌சுலிக்கிற‌து.அதாவ‌து ஒவ்வொரு கிளீக்கிற்கும் காசு வாசுலிக்க‌ப்ப‌டுமே த‌விர‌ மொத்த‌மாக‌ எந்த‌ க‌ட்ட‌ண‌மும் கிடையாது.இத‌னால் விள‌ம்ப‌ரம் த‌ருப‌வ‌ருக்கும் அதிக‌ செல‌வு கிடையாது.’

அது ம‌ட்டுமல்ல‌ கிளிக்கிற்கு எவ்வ‌ள‌வு காசு த‌ர‌ த‌யாராக இருக்கிறோம் என்ப‌தையும் நிறுவ‌ங்க‌ள் தெரிவிக்க‌ முடியும். கீவேர்டு அடிப்ப‌டையிலேயே விள‌ம்ப‌ர‌ங்க‌ல் இட‌ம்பெற‌ச்செய்யப்ப‌டும் என்ப‌தால் பொருத்த‌மான‌ கீவேர்டுக்கு ஏலத்தின் அடிப்ப‌டையில் கூகுல் க‌ட்ட‌ன‌ம் வாங்குகிற‌து.

பொதுவாக‌ வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளே இந்த‌ ஏல‌த்தில் ப‌ங்கேற்கும்.பிர‌ப‌லாமான கீவேர்டு என்றால் போட்டியும் அதிக‌ம் இருக்கும். விலையும் அதிக‌மாக‌ இருக்கும்.எந்த‌ கீவேர்டு த‌ங்க‌ள் விள‌ம்ப‌ர‌த்துக்கு ஏற்ற‌தாக‌ இருக்குமோ அத‌னை நிறுவ‌ன‌ங்க‌ள் ஏல‌ம் எடுத்தால் அந்த‌ கீவேர்டு வ‌ரும் ப‌க்க‌ங்களில் எல்லாம் விள‌ம்ப‌ர‌த்தை கூகுல் இட‌ம்பெற‌ வைக்கும்.

ப‌ல‌ரும் இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌த்தை த‌ங்க‌ள் த‌ள‌ம் அல்ல‌து வ‌லைப்ப‌திவில் இட‌ம்பெற‌ச்செய்து சென்ட்க‌ளாக‌ அள்ளிக்குவிக்க‌ முய‌ல்கின்ற‌ன‌றே த‌விர‌ தாங்க‌ளும் இப்ப‌டி விள‌ம்ப‌ர‌ம் கொடுத்து பய‌ன்பெற‌ முடியும் என‌ யாரும் க‌ருதிய‌தில்லை.சொல்ல‌ப்போனால‌ வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ள் அறிந்த‌ ஒரே வ‌ருமான‌ம் ஈட்டும் வ‌ழி கூகுல் விள‌ம்ப‌ர‌மாக‌த‌தான் இருக்கும்.
கூகூல் விளம்பரத்தை பெறுவதற்கான வழிகளை தான் பலரும் தேடிக்கொண்டிருந்தனரே தவிர தாங்கள் கூகுல் விளம்பரம் கொடுக்கலாம் என்று தனிநபர்கள் முயன்றதாக தெரியவில்லை.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த அலெக் பிரவுன்ஸ்டியன் என்பவர் கூகுல் விளம்பரம் மூலம் தனக்கான புதிய வேலையை தேடிக்கொன்டிருக்கிறார்.

பொதுவாக வேலை தேடுபவ‌ர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை தானே நாடுவார்கள்.அதற்கு மாறாக இந்த வாலிபர் வேலைக்கு விளம்பரம் செய்து தான் விரும்பிய வேலையை பெற்றிருக்கிறார்.

வேலை தேடுவதற்காக கூகுலில் விளம்பரம் செய்யலாம் என்ற எண்ணம் அலெக்கிற்கு எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ள கூகுலிங் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இண்டெர்நெட்டில் தகவ‌ல்களை தேட கூகுல் தேடியந்திரத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருவது தெரிந்த‌தே.தேட‌ல் என்றால் கூகுல் என்று சொல்லும் அள‌வுக்கு தேட‌லில் கூகுல் செல்வாக்கு பெற்று விள‌ங்குகிற‌து.

த‌க‌வ‌ல்க‌லை தேட‌ ம‌ட்டும் அல்லாமல் கூகுலில் த‌ங்க‌ள் பெய‌ரை டைப் செய்து தேடினால் என்ன‌ வித‌மான‌ முடிவுகள் வருகின்றன என்று அறியும் ஆர‌வ‌ம் ப‌ல‌ரிட‌ம் உள்ள‌து.த‌ன் முனைப்புக்கு தீனி போடும் இந்த‌ ப‌ழ‌க்க‌ம் கூகுலிங் என்று அழைக்க‌ப்ப‌டுகிற‌து.யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரை கூகுலிங் செய்து பார்க்கலாம்.

இந்த‌ கூகுலிங் ப‌ழ‌க்க‌த்தை தான் அலெக் கூகுல் விள‌ம்ப‌ர‌த்தோடு புத்திசாலித்த‌னமாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டார்.

விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை பார்க்கும் அலெக் இந்த‌ துறையில் பெரிதும் ம‌திக்கும் புள்ளிக‌ள் சில‌ர் இருக்கின்ற‌ன‌ர்.பிர‌ப‌ல விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் கிரியேட்டிவ் ஹெட் ப‌த‌வியில் இருக்கும் இவ‌ர்க‌ளின் கீழ் ப‌ணியாற்ற‌ வேண்டும் என்ப‌து அலெக்கின் விருப்ப‌ம் ம‌ற்றும் க‌ண‌வாக‌ இருந்த‌து.

இந்த‌ நிபுண‌ர்க‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ தான் புதுமையான‌ வ‌ழியாக‌ கூகுல் விள‌ம்ப‌ர‌த்தை தேர்வு செய்தார்.

இங்கே க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் அலெக்கிற்கும் த‌ன‌து பெய‌ரை கூகுலிங் செய்யும் ப‌ழ‌க்க‌ம் உண்டு என்ப‌து தான்.

ஒரு முறை கூகுலிங் செய்து கொன்டிருந்த‌ போது த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும‌ அல்லாம‌ல் த‌ன்னுடைய‌ அபிமான‌ கிரியேட்டிவ் ஹெட்க‌ளின் பெய‌ர்க‌ளையும் கூகுலில் தேடிப்பார்த்தார்.அப்போது அவ‌ர்க‌ளுக்கான‌ தேட‌ல் முடிவுக‌ளூக்கு அருகே கூகுல் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் எதுவும் இல்லாத‌தை பார்த்தார்.இது கொஞ்ச‌ம் விய‌ப்பை அளித்த‌து என்றே சொல்ல‌ வேண்டும்.

விள‌ம்ப‌ர‌த்துறையின் மிக‌ப்பெரிய‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை யாருமே கீவேர்டாக‌ வாங்காம‌ல் இருக்கின்ற‌ன்றே என்று யோசித்துக்கொண்டே இருந்தார்.அந்த‌ நொடியில் இத‌னை நாம் ஏன் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ கூடாது என‌ ஒரு எண்ண‌ம் மின்ன‌ல் போல‌ தோன்றிய‌து.

உட‌னே த‌ன‌து அபிமான‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை கீவேர்டாக‌ வாங்க‌ கூகுலை அணுகினார்.அவ‌ற்றை ஏல‌ம் எடுக்க‌ போட்டிக்கு யாரும் இல்லாத்தால் மிக‌வும் ம‌லிவாக‌வே வாங்கி விட்டார்.

அடுத்த‌ வேலையாக‌ ஒரு இணைய‌ ப‌க்க‌த்தை உருவாகி அதில் த‌ன‌து ப‌யோ டேட்டா போன்ற‌வ‌ற்றை இட‌ம்பெற‌ வைத்தார். த‌ன‌து வேறு சில‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ளையும் போட்டு வைத்தார்.

இந்த‌ இணைய‌த‌ள‌த்திற்கான‌ இணைப்பை த‌ன‌து கூகுல் விள‌ம்ப‌ர‌த்தில் கொடுத்தார்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கிரியேட்டிவ் இய‌க்குன‌ர்க‌ள் எப்போதெல்லாம் த‌ங்க‌ள் பெய‌ர்க‌ளை கூகுலிங் செய்கின்ற‌ன‌ரோ அப்போதெல்லாம் இந்த விள‌ம்ப‌ர‌ம் வ‌ந்து நிற்கும்.அதை கிளிக் செய்தால் அவ‌ர்து இணைய‌த‌ள‌மும் ப‌யோ டேட்டாவும் எட்டிப்பார்க்கும். இத‌ன் மூல‌ம் த‌ன‌க்கு வேலை கிடைக்கும் என்ப‌து அவ‌ர‌து எதிர்பார்ப்பு.

இத‌ற்கு ஏற்ற‌ வ‌கையில் ,கூகுலிங் செய்வ‌து ம‌ட்டும‌ல்ல‌ சுவார‌ஸ்ய‌மான‌து என்னை வேலைக்கு அம‌ர்த்திக்கொள்வ‌தும் சுவார‌ஸ்ய‌மான‌து என்று குறிப்ப‌ட்டிருந்தார்.

அவ‌ர் எதிர‌பார்த்த‌து போல‌வே சில‌ நாட்க‌ளில் ஒரு கிரியேட்டிவ் இய‌க்குன‌ர் இந்த‌ இணைப்பை பார்த்து அட‌ என‌ விய‌ந்த‌வ‌ராய் அவ‌ரை அழைத்து த‌ன‌து நிறுவ‌ன‌த்தில் ந‌ல்ல‌ வேலை கொடுத்து விட்டார்.

வேலை கிடைத்த‌து ம‌ட்டுமல்ல‌ புதுமையான் வ‌ழியில் வேலை தேட‌ இண்டெர்நெட்டை மிக‌ நூத‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொன்ட‌த‌ற்காக‌ விருதுகளும் கிடைத்துள்ள‌ன‌.

வேலை தேட‌லில்  டிவிட்டர்  ம‌ற்றும் பேஸ்புக் போன்ற‌வ‌ற்றை ப‌ல‌ரும் ப‌ய‌ன்ப‌டுத்தியிருந்தாலும் கூகுல் விள‌ம்ப‌ர‌த்தை வேலைக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்ட‌ முத‌ல் ந‌ப‌ராக‌ அலெக் பாராட்ட‌ப்ப‌டுகிறார்.அப்ப‌டியே த‌ன‌க்கான‌ த‌னி முத்திரையையும் ப‌தித்திருக்கிறார்.

—————

http://alecbrownstein.com/

புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?

அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணைய‌த‌ள‌ம்.இந்த‌ தள‌த்தில் நுழைந்த‌துமே ஏதாவ‌து இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் க‌ண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.அவ‌ற்றில் உங்க‌ளுக்கு எது பிடித்திருக்கிற‌தோ அதில் கிளிக் செய்ய‌ வேண்டும். அத‌ன் பிற‌கு அடுத்த‌ ஜோடி புகைப்ப‌ட‌த்துக்கு சென்றுவிட‌லாம். முத‌லில் பார்க்கும் புகைப்ப‌ட‌ங்க‌ள் பிடிக்காவிட்டாலும் அடுத்த‌ ஜோடிக்கு போய்விட‌லாம்.ஒவ்வொரு புகைப்ப‌ட‌த்திற்கும் எத்த‌னை வாக்குக‌ள் என்ப‌து ஆர‌ம்ப‌த்திலேயே மின்னி ம‌றைந்துவிடுகிற‌து.புகைப்ப‌ட‌ங்க‌ள் எத‌ன் அடிப்ப‌டையில் தேர்வு செய்ய‌ப்ப‌ட்டு ஒப்பிட‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.ஆனால் வித‌வித‌மான‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்துக்கொண்டே இருக்க‌லாம்.சில உண்மையிலேயே அருமையாக‌ உள்ள‌ன்.புகைப்ப‌ட‌ங்க‌ளை நேசிப்ப‌வ‌ர்க‌ள் வ‌ரிசையாக‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்துக்கொண்டே இருக்க‌லாம்.முத‌ல் ப‌த்து இட‌ம் பிடித்த‌ புகைப்ப‌ட‌ங்க‌ளுக்கான‌ ப‌ட்டிய‌லும் உள்ள‌து. நீங்க‌ள் விரும்பினால் உங்க‌ள் ப‌ட‌ங்க‌ளையும் ச‌ம‌ர்பிக்க‌லாம். ஆனால் அத‌ற்கு முன்பாக‌ உறுப்பின‌ராக‌ வேண்டும்.இப்ப‌டு புகைப்ப‌ட‌ங்க‌ளை மோத‌விடுவத‌ன் நோக்க‌ம் என்ன‌வென்று தெரிய‌வில்லை.இத‌ன் ப‌ய‌ன் குறித்தும் ச‌ந்தேக‌மே எழுகிற‌து.ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌ த‌ள‌ம்.ஆனால் அருமையான புகைப்படங்களையும் அதன் மூலம் நல்ல புகைப்படக்கலைஞர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.சொல்ல‌ப்போனால் இத்த‌கைய‌ த‌ள‌ங்க‌ள் இண்டெர்நெட்டில் தொட‌ர்ந்து வேறு வேறு வ‌டிவில் முளைத்துக்கொண்டே தான் இருக்கின்ற‌ன‌.ஹாட் ஆர் நாட் இணைய‌த‌ள‌ம் துவ‌க்கி வைத்த‌ இணைய‌ மோக‌ம் என்று இத‌னை சொல்ல‌ வேண்டும்.இண்டெர்நெட்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் உத‌ய‌மான‌ இந்த‌ இணைய‌த‌ளம் இணைய‌வாசிக‌ள் த‌ங்க‌ள‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌திவேற்றி இணைய‌வாசிக‌ளின் புகைப்ப‌ட‌த்தோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ள‌ வ‌ழி செய்த‌து.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இவ‌ற்றுக்கு வாக்க‌ளீக்க‌லாம் என்ப‌து சுவார‌ஸ்ய‌மாக‌ அமைந்த‌து. இணைய‌வாசிக‌ளின் த‌ன்முனைப்பை கொம்பு சீவி கொள்ள‌ உத‌வும் இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் பிர‌ப‌லமாகி அத‌ன் பிற‌கு ம‌வுஸ் குறைந்து போனால
ும் இதே க‌ருத்தாக்க‌த்தில் புதிய‌ மாற்ற‌ங்க‌ளோடு புதிய‌ த‌ள‌ங்க‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌
.ச‌மீப‌த்திய‌ வ‌ர‌வு போட்டோபேட்டில்   

 

  .மீ

 

http://photobattle.me/

லஞ்சுக்கு முன் ஒரு கிளிக்

சாப்பிடுவது  என்பது பசியாறுவதற்கான செயலாக இருந்தாலும் சாப்பிட செல்வது என்பது ஒரு சமூக நிகழ்வுதான். உறவினர்கள் புடைசூழ விருந்து சாப்பிடுவது ஒருவகை மகிழ்ச்சி என்றால் நண்பர்கள் குழõமோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது மற்றொரு வகையான மகிழ்ச்சி. அதிலும் நகரத்து மாந்தர்களுக்கு வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒருமுறையேனும் நண்பர்களோடு சென்று மதிய உணவு சாப்பிடுவது என்பது மட்டற்ற மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கிறது.  இப்படி லஞ்சுக்கு செல்வதை ஒரு இனிமையான சமூக நிகழ்வு என்றும் சொல்லலாம்.
.
நட்பை பரிமாறிக் கொண்டு பசியாறுவதில் உள்ள சுகமே தனிதான்.  ஆனால் இப்படி லஞ்சுக்கு ஏற்பாடு செய்து நண்பர்களை திரட்டிச் செல்வதில் நடைமுறை சிக்கல் இல்லாமல் இல்லை.  நண்பர்களை தொலைபேசியில் தேடிப்பிடிக்க வேண்டும். சிக்காதவர்களுக்கு இமெயில் அல்லது எஸ்எம்எஸ்சில் தகவல் சொல்ல வேண்டும். அதன் பிறகு எல்லோருக்கும் பிடித்தமான ஓட்டலை தேர்வு செய்ய வேண்டும்.  அதன் பிறகுதான் லஞ்சுக்கு செல்ல முடியும்.

சரியாக திட்டமிடாவிட்டால் எல்லாமே பாழாகி விடும்.  குறித்த நேரத்துக்குள் எல்லோருக்கும் தகவல் சொல்லி அனைவரது ஒப்புதலையும் பெற்று சாப்பாட்டு படையெடுப்பை ஆரம்பிப்பதற்குள் சில நேரங்களில் போதும் போதும் என்றாகிவிடும்.
இதற்கு மாறாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒருசில கிளிக்குகளில் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும். லஞ்ச் வாலா டாட்காம் இணையதளம் இதைத்தான் செய்கிறது.

லஞ்சுக்கு என்ன என்னும் கேள்விக்கு விடையளிப்பதற்காக துவக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் நண்பர்களோடு சாப்பிட செல்லும் நிகழ்வை சுலபமாக்கி இனிமையாகவும்  மாற்றி தருகிறது.  ஒன்றாக சாப்பிட செல்லும் முன்  ஏற்படக்கூடிய கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் இந்த தளத்தின் மூலமே எளிதாக விடை கண்டுவிடலாம்.

சாப்பிடச் செல்லும் முன் எழக்கூடிய முதல் கேள்வி எந்த ஓட்டலுக்கு செல்வது? இந்த தளத்தில் ஒவ்வொரு நகரிலும் உள்ள ஓட்டல்கள், அவற்றின்  முகவரியோடு பட்டியலிடப்பட்டது. அந்த பட்டியலை பார்த்து விரும்பிய ஓட்டலை தேர்வு செய்யலாம்.
அந்த ஓட்டல் தொடர்பாக சக சாப்பாட்டு பிரியர்களின் விமர்சன குறிப்புகளும் இதற்கு கை கொடுக்கலாம். புதிய ஓட்டல் என்றால் அங்கு செல்வதற்கான வழியும் வரைபடம் போட்டு காட்டப்பட்டு விடுகிறது.  அடுத்த பிரச்சனை நண்பர்களை அழைப்பது தானே? இதற்காக போனுக்கு மேல் போன் செய்து விட்டு, அடுத்தடுத்து  இமெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எல்லாம்  இல்லை. யாரையெல்லாம் அழைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் ஒரே கிளிக்கில் அழைப்பை அனுப்பி வைக்கலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேரும் போது, வலைப்பின்னல் சேவையான பேஸ் புக் கணக்கை கொண்டு உள்ளே நுழைவதால் நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்புவது மிகவும் சுலபம்.

அழைப்பை பெற்றவர்கள்  அதனை ஏற்பதும், மறுப்பதும் இன்னும் சுலபமானது. சம்மதம் என்று கிளிக் செய்தால் அவர்கள் வருவதாக பொருள்.  இல்லை வர முடியாது என்றோ, வேறு  ஓட்டலுக்கு செல்லலாம் என்றோ அவர்கள் பரிந்துரைக்கலாம்.  இதனை வாக்களிக்கும் வசதி என்று லஞ்ச்வாலா குறிப்பிடுகிறது. இந்த வசதியின் மூலம் எல்லோருக்கும் ஏற்புடைய ஓட்டலை தேர்வு செய்து விருந்துண்ண செல்லலாம். ஆக ஒரு சில கிளிக்கிலேயே இன்று எந்த ஓட்டலுக்கு  செல்லலாம் என்பதை நண்பர்கள் அழகாக திட்டமிடும் வசதியை இந்த தளம் வழங்குகிறது.

இணைய ரிசர்வேஷனை வழங்கும் ஓபன் டேபிள் தளத்தோடு ஒப்பந்தம் இருப்பதால் இந்த தளத்தின் மூலமே கூடசாப்பிட செல்லும் ஓட்டலில் நமக்கான இடத்தைமுன்பதிவு செய்துகொள்ளலாம்.  அதோடு ஓட்டல்களில் வழங்கப்படும் சலுகை கூப்பன்களையும் இந்த தளத்தின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளத்தை உருவாக்கிய அமெரிக்க நண்பர்கள் மதிய உணவுக்கு சரியாக திட்டமிட தடுமாறிக் கொண்டிருந்த போது இந்தியாவின் மும்பையில் மதிய உணவு சேவையை மிக அழகாக வழங்கி கொண்டிருக்கும் டப்பா வாலாக்கள் பற்றி யோசித்து அதே போல ஒரு சேவையை இன்டர்நெட் மூலம் வழங்க முடியாதா என்று யோசித்து அதன் பயனாக, லஞ்சுவாலாவை உருவாக்கியுள்ளனராம்.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து நண்பர்களையும் உறுப்பினராக்கி கொண்டால் மதிய உணவுக்கான திட்டமிடலை சுலபமாகமேற்கொள்ளலாம். மதிய உணவு என்றில்லை. இந்த வசதியை வேறு எந்த சமூக நிகழ்வுகளை திட்டமிடவும் தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

 

http://www.lunchwalla.com/