Tag Archives: இன்டெர்நெட்

செல்போன் வாங்க ஆலோச‌னை சொல்லும் இணையதளம்.

எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பம் ஆடைகளில் மட்டுமல்ல,இப்போது புதிதாக செல்போன் வாங்கச்சென்றாலும் எந்த மாதிரியை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும்.அதிலும் பிரபல நிறுவனங்கள் புதுப்புது மாதிரியை அறிமுக செய்வது போதாது என்று புதுப்புது நிறுவன‌ங்கள் அறிமுகமாகி புதிய போன்களை சந்தையில் நிறைத்து வருகின்றன.

எனவே புதிதாக போன் வாங்கச்செல்லும் போது எந்த போனை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுவது நிச்சயம்.

இந்த குழப்பத்தில் இருந்து தெளிவு பெற பூர்விகாவோ யூனிவர்செலோ தேடி போவதற்கு முன் இண்டெர்நெட்டில் பல்வேறு போன்களை பார்த்து அவற்றின் விலை மற்றும் அமசங்களை அலசிப்பார்த்து கொள்ளலாம்.

இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி ஒன்று இருக்கிற‌து.அது நேராக‌ போன்க‌ரி இனிஅய‌த‌ள‌த்திற்கு செல்வ‌து தான்.இந்த‌ த‌ள‌ம் உங்களுக்கு ஏற்ற‌ புதிய‌ போன் எது என்று தேர்வு செய்து கொள்ள‌ வ‌ழி காட்டுகிற‌து.

இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்த‌தும் உங்க‌ள்: ப‌ட்ஜெட்டை குறிப்பிட்டு விட்டு,போனில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் அம்ச‌ங்க‌ள் எவை என்ப‌தை குறிப்பிட‌ வேண்டும்.எல்லாவ‌ற்றுக்கும் த‌னித்த‌னி க‌ட்ட‌ங்க‌ள் இருப்ப‌தால் அவ‌ற்றில் இருந்து தேர்வு செய்தாலே போதும்.

ட‌ச் ஸ்கிரீன் தேவையா,மீயூசிக் பிலேய‌ர் தேவையா,கீபோர்டு எப்ப‌டி இருக்க‌ வெண்டும் என்று குறிப்பிட்ட‌ பின் கிளிக் செய்தால் பொருத‌த‌மான‌ போனை அடையாள‌ம் காட்டும்.

அத‌ன் பிற‌கு அந்த‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ம் ப‌ற்றி ப‌டித்துவிட்டு அதே போன்ற‌ ம‌ற்ற‌ போன்க‌ளோடு அத‌ன் விலையையும் ஒப்பிட்டு பார்த்து எது திருப்ப்தி அளிக்கிற‌தோ அத‌னை தேர்வு செய்ய‌லாம்.

மிக‌வும் எளிமையான‌ நான்கே ப‌டிக‌ளில் பொருத்த‌மான‌ போனை தேர்வு செய்து விட‌லாம் என்று போன்க‌ரி உறுதி அளிக்கிற‌து.

ஜி எஸெம் போன்க‌ள் ம‌ட்டுமே இந்த‌ த‌ள‌த்தில் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. சிடிஎம் போன்க‌ள் இல்லை. அதே போல‌ இர‌ண்டு ஆண்டுக்கு மேல் ப‌ழ‌மையான‌ போன்க‌ள் இல்லை.
அந்த‌ போன்க‌ள் காலாவ‌தியாகி போய் க‌டைக‌ளில் இல்லாத‌ நிலையும் இருக்க‌லாம் என்ப‌தால் இப்ப‌டியாம்.

நேராக‌ குறிப்பிட்ட‌ ர‌க‌ போன் பெய‌ரை குறிப்பிட்டு அத‌னை ப‌ற்றியும் தெரிந்து கொள்ளூ வ‌ச‌தியும் உள்ள‌து.போன்க‌ளின் ப‌ட்டிய‌லை கிளீக் செய்து அவை பற்றியும் ஆர‌ய்ந்து பார்க்க‌லாம்.

இந்திய‌ நுக‌ர்வோருக்கு செல்போன் வாங்க‌ வ‌ழி காட்டும் நோக்கில் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ இந்த‌ த‌ள‌ம் த‌ன்னைப்ப‌ற்றி குறிபிடுகிற‌து.

ம‌ற்ற‌ போன் த‌ள‌ங்க‌ளை விட‌ எளிமையான‌து.சிற‌ந்த‌தும் கூட‌.

——

http://www.phonecurry.com/

நீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது.

கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு.

அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது.

3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.

முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர்.

இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.

இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது.

ஒட்டகச்சிவிங்கி வரைய வாருங்கள்

gஉங்களுக்கு ஒட்டகச்சிவிங்கி வரையத்தெரியுமா? அழ‌காக வரைய வேண்டும் என்றில்லை. ஒட்டகச்சிவிங்கிப்போல இருந்தால் போதுமானது.

வரையும் திறமையை விட ஆர்வம் இருந்தால் போதும்.அந்த‌ ஆர்வ‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ ஒரு ஒட்டகச்சிவிங்கியை வ‌ரையுங்க‌ள். வ‌ரைந்த‌தும் ஒன்மில்லியன் கிராபே என்னும் இணையதளத்திற்கு அனுப்பி வையுங்கள்.

காரணம் இந்த தள‌ம் இப்படி 10 லட்சம் ஒட்டகச்சிவிங்கி ஒவியங்களை சேகரிப்பதற்காக துவக்கப்பட்டுள்ளது.அந்த‌ ப‌த்து ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளில் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றாக‌ இருக்கும்.
எதற்கு இந்த வேலை என்று கேட்கலாம்.

இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் மிக‌வும் உய‌ர்வான‌து என்றோ ல‌ட்சிய‌ த‌ன்மை கொண்ட‌து என்றோ கூற‌ முடியாது.ஆனால் சுவார‌ஸ்ய‌மான‌து. இந்த‌ தள‌த்தை உருவாக்கிய‌ ந‌ப‌ருக்கு ஜோர்க‌ன் என்னும் பெய‌ரில் ஒரு ந‌ண்ப‌ர். இருவ‌ரும் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த‌ன‌ர்.அப்போது எப்ப‌டியோ ஒட்டகச்சிவிங்கி ப‌ற்றி பேச்சு வ‌ந்த‌து.ப‌த்து ல‌ட‌ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ள் ப‌ற்றியு பேசியிருக்கின்ற‌ன‌ர்.

ஜோர்க‌ன் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேக‌ரிப்ப‌து சாத்திய‌மில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ரோ இண்டெர்நெட் இருக்கும் போது எதுவும் முடியாத‌து இல்லை என்று ந‌ம்பினார். இண்டெர்நெட் மூல‌ம் இத‌னை சாதிப்ப‌து சாத்திய‌ம் என்றே நினைத்தார்.

உட‌னே ஒன்மில்லிய‌ன் கிராபே இணைய‌த‌ள‌த்தை அமைத்து ஒட்டகச்சிவிங்கிக‌ளை வரைந்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த‌ கோரிக்கையை ஏற்று அனுப்ப‌ப்ப‌டும் ஒட்டகச்சிவிங்கிக‌ள் த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் இட‌ம்பெற்று வ‌ருகிற‌து.அவ‌ற்றோடு ஒட்டகச்சிவிங்கிக‌ள் வ‌ந்த‌ க‌தையும் த‌னியே வ‌லைப்ப‌திவு ப‌குதியில் இட‌ம்பெற்றுள்ள‌து.

நீங‌க‌ளும் உங்க‌ள் ஒட்டகச்சிவிங்கியை அனுப்பி வைக்க‌லாம். ஆனால் அத‌ற்கு முன் அத‌ற‌கான‌ நிப‌ந்த‌னைக‌ளை தெரிந்துகொள்ளுங்க‌ள்.ஒட்டகச்சிவிங்கி எப்ப‌டி வேண்டுமானால் இருக்க‌லாம்.ஆனால் க‌ம்ப்யூட்ட‌ர் உத‌வியோடு உருவாக்க‌ப்ப‌ட‌க்கூடாது.கையால் வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும்.
இவாறாக‌ 2011 ம் ஆண்டுக்குள் 10 ல‌ட்ச‌ம் ஒட்டகச்சிவிங்கிக‌ளை சேர்க்க‌ இல‌க்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

அப்ப‌டி தான் ஜோர்க‌னிட‌ம் ச‌வால் விட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இன்டெர்நெட்டால் எதுவும் சாத்திய‌ம் என்று காட்டுவோம் வாருங்க‌ள் என‌ ஒட்டகச்சிவிங்கி த‌ள‌த்தை அமைத்த‌வ‌ர் அழைப்பு விடுக்கிறார்.ஏற்றுக்கொல்கிறிர்க‌ளா?
—-

link;
http://olahelland.net/giraffes/

உலகைவிட பெரியது இண்டெர்நெட்

indiaiஇண்டெர்நெட் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக இன்டெர்நெட் வளர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் இண்டெர்நெட் உண்மையில் எத்தனை பெரியது என எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா?

இண்டெர்நெட் நாம் நினைக்ககூடியதை எல்லாம்விட பெரியதாக இருக்கிறது.உலகைவிட பெரியது என வைத்துக்கொள்ளுங்க‌ளேன்.

எப்படி?

இண்டெர்நெட்டை அளவிடுவதற்கு உள்ள வழி இணையதளங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதாகும். அதற்கு தேடியந்திரங்கள் இருக்கவே இருக்கிறது.

தேடப்படும் தகவல்களை உடனே எடுத்து தருவதற்காக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் உருவாக்கப்படும் இணையதளங்களை எல்லாம் பட்டியலீடு வைத்துள்ளன.

கூலின் கணக்குபடி மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது.மைக்ரோசாப‌டின் பிங் க‌ண‌க்குப்ப‌டியும் இந்த‌ எண்ணிக்கை ஒரு ல‌ட்ச‌ம் கோடியை தாண்டிவிட்ட‌து.

உல‌கின் த‌ற்போதைய‌ ம‌க்க‌ள் தொகை 670 கோடியாகும். ஆக் உல‌கில் உள்ள‌ மனித‌ர்க‌ளை காடிலும் ப‌ன்ம‌ட‌ங்கு அதிக‌ அள‌வில் இணைய‌த‌ள‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.அதாவ‌து ஒவ்வொரு ம‌னித‌ருக்கும் 150 இணைய‌த‌ள‌ங்க‌ள் என்னும் அள‌வில் இருக்கின்ற்ன‌.

இத‌ன் பிர‌ம்மாண்ட‌த்தை புரிந்துகொள்ள‌ இந்த‌ க‌ன‌க்கை பாருங்க‌ள். ஒவ்வொரு இணைய‌ தள‌த்தையும் ஒரே ஒரு நிமிட‌ம் ப‌டித்து பார்க்க‌ வேண்டும் என்றால் ஒருவ‌ருக்கு 31 ஆயிர‌ம் ஆண்டுக‌ள் தேவைப்ப‌டும்.அவ‌ற்றில் உள்ள‌ த‌க‌வ‌ல்க‌ளை எல்லாம் ப‌டிக்க‌ வேண்டும் என்றால் ஒருவ‌ருக்கு தொட‌ர்ச்சியாக் 600 ஆயிரம் தாசாப்தங்கள் தேவை.

இப்போது புரிகிற‌தா? இண்டெர்நெட் எவ்வ‌ள்வு பெரிய‌தாக‌ உருவாகியுள்ள‌து என்று.

இது ஒரு புற‌ம் இருக்க‌ இண்டெர்நெட் ம‌க்க‌ள் தொகை க‌ட‌ந்த‌ ஆண்டைவிட‌ 16 ச‌த‌வீத‌ம் உய‌ர்ந்துள்ள‌து.இண்டெர்நெட்வேர்ல்டுஸ்டாட்ஸ் டாட் காம் த‌ல‌த்தின் கண‌க்குப்ப‌டி சீனாவிலேயே இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ம்.அமெரிக்க இரண்டாவ‌து இட‌த்திலும் இந்தியா மூன்றாவ‌து இட‌த்திலும் உள்ள‌ன‌. ஒரு க‌ண‌க்குப‌டி சீனாவின் இன்டெர்நெட் ப‌ய‌னாளிக‌ள் அமெரிக்க‌ ம‌க்க‌ள்தொகையைவிட‌ அதிக‌ம்.

விரைவில் இந்தியாவும் இதில் சேர்ந்துகொள்ள‌லாம்.

மேலும் வ‌ருங்கால‌த்தில் செல்போன் மூல‌ம் இண்டெர்நெட்டை அணுகுவ‌து அதிக‌ரிக்கும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

எல்ல‌ம் ச‌ரி உல‌கிலுள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னும் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் நாள் எப்போது வ‌ரும்? நிபுண‌ர்க‌ளுக்கே விடை தெரியாதா கேள்வி அது.
ஆனால் ஒன்று டிஜிட்ட‌ல் பிள‌வு என்று சொல்ல‌ப்ப‌டும் இந்த இடைவெளியை குறைக்க‌ நிபுண‌ர்க‌ள் ப‌ல‌ வித‌ங்க‌ளில் பாடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

பொதுவாக நாமெல்லாம் இண்டெர்நெட்டின் அளவு மற்றும் பரப்பு பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால் இண்டெர்நெட்வேர்ல்டுஸ்டாட்ஸ் டாட் காம் தளம் இதனை செய்து வருகிறது.உலக நாடுகளின் இண்டெர்நெட் பயன்பாடு தொடர்பான தகவல்கள்,புள்ளிவிவரங்கள் இந்த தலத்தில் இடம்பெற்றுள்ளன.

link;
http://www.internetworldstats.com/

இன்டெர்நெட் டைலர்.

ctop_picபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும்.

ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை.

இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ த‌ள‌த்தை இண்டெர்நெட் டைல‌ர் என்றும் சொல்ல‌லாம். இந்த‌ இணைய‌ டைல‌ரிட‌ம் உங்க‌ள் விருப்ப‌ம் போல் ச‌ட்டையை தைத்துக்கொள்ள‌லாம்.

இந்த‌ தள‌த்தின் மூல‌ம் ச‌ட்டை வ‌டிவ‌மைப்பை தேர்வு செய்வ‌து சுல‌ப‌மான‌து.ஆர்ட‌ர் செய்வ‌தும் சுல‌ப‌மான‌து.

டென்மார‌க் நாட்டைச்சேர்ந்த‌ வாலிபர்க‌ள் துவ‌ங்கியுள்ள‌ இந்த‌ த‌ல‌த்தை உல‌கின் எந்த‌ மூலையிலிருந்தும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். ச‌ட்டையை உங்க‌ள் இருப்பிட‌த்திற்கே அனுப்பிவைத்து விடுகின்ற‌ன‌ர். க‌ட்ட‌ண‌த்தை ம‌ட்டும் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

இனி ஒரே மாதிராயான‌ ச‌ட்டையை அணிய‌ விரும்பாத‌வ‌ர்க்ள் தாராள‌மாக‌ இந்த‌ இணைய‌ த‌ள‌த்திற்கு சென்று பார்க்க‌லாம்.

—-

link;
http://www.shirtsmyway.com/design_myshirt.php