Tag Archives: ஐபோன்

இந்தியா வருகிறது கூகுல் போன்

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது.

ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை.

இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சி என் பி சி டிவியை சேர்ந்த் அன்கிட் எனபவர் இது பற்றி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கூகுல் அதிகாரியோடு பேசிக்கொண்டிருந்த போது கூகுலின் இந்திய‌ போன் திட்ட‌ம் ப‌ற்றி அறிய‌ முடிந்த‌தாக‌ அவ‌ர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவில் அறிமுக‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ போன் போல் அல்லாம‌ல் இந்தியாவுக்கு என்று பிர‌த்யேக‌ மாற்ற‌ங்க‌ளோடு இந்த‌ போனை அறிமுக‌ம் செய்ய‌ கூகுல் திட்ட‌மிட்டுள்ள‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார்.

இத‌ன் பொருள் போனில் வ‌ச‌திக‌ள் குறைவாக‌ இருக்க‌லாம். அதே நேர‌த்தில் விலையும்குறைவாக‌ இருக்கால‌ம். அமெரிக்க‌ விலையிலேயே இந்தியாவிலும் ஐபோன‌ஒ அறிமுக‌ம் செய்து ஆப்பிள் செய்த‌ த‌வற்றை மகூகுல் செய்ய‌ விரும்ப‌வில்லை போலும்.

எப்ப‌டியோ கூகுல் போனே வ‌ருக‌.

———–

750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான்.

அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் ரூ 750 மற்றும் 1000 வரலாம்.

முதல் கட்டமாக இந்தியா ,துருக்கி மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளை மனதில் கொண்டு இவை விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த‌ய‌ ச‌ந்தையில் வோடோ 150 மாதிரி அறிமுக‌மானால் அநேக‌மாக‌ மிக‌ விலை குறைந்த‌ போனாக‌ இருக்கும். இந்த‌ மாநாட்டில் எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளும் ஸ்மார்ட் போன் ர‌க‌ போனில் க‌வ‌ன‌ம் செலுத்திய‌ போது வோடோஃபோன் ஓசைப்ப‌டாம‌ல் ம‌லிவு விலை போனை கொண்டு வ‌ந்து க‌ல‌க்கியுள்ள‌து.

 ஒரு ப‌க்க‌ம் ஐபோன் ர‌க‌ ச‌ந்தை வ‌ள‌ர்ந்து கொண்டே சென்றாலும் வ‌ள‌ரும் ம‌ற்ற‌ம் ஏழை நாடுக‌ளை பொருத்த‌வ‌ரை ம‌லிவு விலை போன்க‌ளே ஏற்ற‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

ஏழை நாடுக‌ளில் செல்போன் ம‌க்க‌ளின் வாழ்க்கையில் புர‌ட்சிக‌ர‌மான‌ மாற்ற‌ங்க‌ளை கொண்டு வ‌ந்துள்ள‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து. ப‌ல‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் செல்போன் சார்ந்த‌ வ‌ங்கிச்சேவை இது வ‌ரை வ‌ங்கி சேவை அமைப்புக்கு வெளியே உள்ள‌ ஏழை ம‌க்க‌ளுக்கு வ‌ங்கி சேவையை சாத்திய‌மாக்கியிள்ள‌து.

விவாசிக‌ளுக்கான‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌ழ‌ங்குவ‌து உட‌ப‌ட‌ செல்போன் ப‌ல‌வித‌ங்க‌ளில் ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ருகிற‌து. வ‌ல‌ர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்ட‌ங்க‌ளுக்கு செல்போனே ஏற்ற‌தாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து

. என‌வே விலை குறைந்த‌ செல்போன்க‌ள் இந்த‌ வ‌ள‌ர்ச்சியை மேலும் ஊக்குவிக்க‌ வ‌ல்ல‌து .

இந்நிலையில் தான் வோடோஃபோனின் அறிமுக‌ம் நிக‌ழ்ந்துள்ள‌து. வோடோ 150 ர‌க‌ போன் அழைப்பு ம‌ற்றும் எஸ் எம் எஸ் வ‌ச‌தியை கொண்ட‌து.வோடோ 250 ரேடியோ வ‌ச‌தியும் கொண்ட‌து.

இந்தியா போன்ற‌ நாடுக‌ளில் ஏழைக‌ளே அதிக‌ம் என்ப‌தால் ம‌லிவு விலை போன்க‌ளுக்கு ஜே.

————–

http://www.vodafone.com/start/media_relations/news/group_press_releases/2010/vodafone_adds_two.html

கூகுல் போன் புதிய தகவல்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .

இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.கூகுல் போன் செய்திக‌ளை தொட‌ர்ந்து பின் தொட‌ருவோம்.

இதுதாண்ட செயலி ;உள்ளங்கையில் ஒரு புகார் மணி

எல்லாவற்றுக்கும் ஒரு செயலி உண்டு என்று ஐபோனுக்கான செயலிகள் பற்றிய பாராட்டு புளித்துப்போகும் அளவுக்கு பழசாகிவிடாலும் கூட இந்த வாசகத்தை மெய்பிக்கும் புதிய செயலிகள் அறிமுகாகி கொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு செயலியும் ஒருவிதத்தில் மிகவும் பயனுள்ள‌தாக இருப்பதே சிறந்த விஷயம்.

இந்த பதிவை எழுத தூண்டிய செயலியை பற்றி கூற வேண்டும் என்றால் செய‌லிகளின் பயன்பாட்டை ஒருபடி மேலே எடுத்துச்சென்றுள்ள செயலி என்று சொல்லலாம்.அல்லது ஐபோனை வைத்திருப்பவர்களின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் செயலி என்று சொல்லலாம்.

ஐபோனுக்கான லட்சக்கணக்கில் செய‌லிகள் உருவாக்கப்படுள்ளன.எல்லாமே குறிப்பிட்ட‌ பயன்பாட்டை கொண்டவை. இந்த செயலியோ ப‌ய‌னாளியின் செல்போன் சேவை குறைபாடு தொட‌ர்பான‌ புகார்க‌ளை தெரிவிப்ப‌த‌ற்க்காக‌ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து எனப‌து தான் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ ச‌ங்க‌தி.

ஐபோனுக்கான‌ செல்போன் இணைப்பு சேவையை வ‌ழ‌ங்கி வ‌ரும் ஏ டி அண்டு டி நிறுவ‌ன‌மே இந்த‌ செய‌லியை அறிமுக‌ம் செய்துள்ள‌து என்ப‌து அதைவிட‌ முக்கிய‌மான‌து.

இந்த‌ செய‌லியை ட‌வுண்லோடு செய்து கொண்டால் செல்போன‌ இணைப்பு சேவை மோச‌மாகும் போது உட‌னே நிறுவ‌ன‌த்திற்கு தெரிவிக்க‌லாம்.அதாவ‌து டிராப்டு கால் என்னும் குறைபாடு ஏற்ப‌டும்போது அந்த‌ இட‌த்திலிருந்தே தெரிவிக்க‌லாம்.இதன் மூல‌ம் நெட்வொர்க்கில் உள்ள குறைபாட்டை நிறுவ‌ன‌ம் புரிந்து கொண்டு ச‌ரி செய்ய‌ இய‌லும்.

ந‌ம்மூரில் ஐபோனும் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌மாகிவில்லை. அத‌ன் செய‌லிக‌ளும் பிர‌ப‌ல‌மாக‌விலை.

ஆனால் இப்ப‌டி செல்போன் சேவை குறைபாடு தொட‌ர்பான‌ புகார்க‌ளை தெரிவிக்கும் வ‌ச‌து உள்ள‌ங்கையிலேயே இருந்தால் நன்றாக‌தானே இருக்கும்.

வருது வருது ,ஜீ..போன் வருது

கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை.

கூகுலின் திட்ட‌ங்க‌ளில் எது வ‌த‌ந்தி எது உண்மை என்று ப‌குத்த‌றிய‌ முடியாம‌ல் இருக்கும் .இப்போதைய‌ வ‌த‌ந்தி விர‌வில் கூகுல் போன் அறிமுக‌மா இருக்கிற‌து என்ப‌து தான்.ஜி போன் என்னும் பெய‌ரில் கூகுல் தானே சொந்த‌மாக‌ செல்போனை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ ஒரு பேச்சு இருந்து வ‌ருகிற‌து.

ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக‌ ஜி போன் அறிமுக‌மாக‌லாம் என்று எதிர்பார்க்கப்ப‌டுகிற‌து.கூகுல் இது ப‌ற்றி ம‌வுன‌ம் காத்தாலும் இந்த‌ செய்தி இணைய‌ உல‌கில் உலா வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் உள்ள‌து.இந்நிலையில் பிர‌ப‌ல‌ தொழில்நுட்ப‌ வ‌லைப்ப‌திவான‌ டெக்கிர‌ஞ்ச் கூகுலின் இந்த‌ திட்ட‌ம் உண்மையான‌து தான் அடுத்த‌ ஆண்டு ஜி போன் நிச்ச‌ய‌ம் வ‌ரும் அன‌ கூறியுள்ள‌து.டெக்கிர‌ஞ்ச் ந‌ம்ப‌க‌மான‌ த‌ள‌ம் என்ப‌தால‌ இத‌னை வெறும் வ‌த‌ந்தி என‌ கொள்வ‌த‌ற்கில்லை.

ஏற்க‌ன‌வே கூகுல் த‌ன‌க்கேன‌ பிர‌வுச‌ர் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் மாறி மாறி உலா வ‌ந்து குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்திய‌ நிலையில் இறுதியில் கூகுல் குரோம் வெளியாகி விய‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து.

ஜீ போன் விஷ‌ய‌த்திலும் இப்ப‌டியே நிக‌ழ‌லாம்.ஆனால் ஒன்று கூகுல் இது வ‌ரை சாப்ட்வேரைத்தாண்டி ஹார்டுவேர் ப‌க்க‌ம் வ‌ந்த‌தில்லை .என‌வே ஜி போன் சாத்திய‌மில்லை என்று ஒரு க‌ருத்து நில‌வுகிற‌து.கூகுல் தான் ஐபோன் போட்டியை ச‌மாளிக்க‌ ஸ்மார்ட் போன்க‌ளூக்கான‌ ஆப்ப‌ரேட்டிங் அமைப்பான‌ ஆன்டிராய்டை அறிமுக‌ம் செய்துள்ளதே என்று கூறுப‌வ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர்.

ஆனால் கூகுல் விஷயத்தில் என்ன் வேண்டுமானாலும் நடக்கலாம்.கூகுலின் அடுத்த‌ ந‌க‌ர்வு என்ப‌து புரியாத புதிர் அல்லவா?