Tag Archives: கம்ப்யூட்டர்

புதிய வைரஸ் நீக்கும் சேவை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.

தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த‌ வைர‌ஸ் நீக்க‌ சேவையின் பின்னெ உள்ள‌ இணைய‌தள‌ம் தேடிய‌ந்திர‌த்தில் முன்ன‌ணி பெறுவ‌த‌ற்கான‌ ம‌ற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த‌ சேவை உங்க‌ள் த‌ள‌த்தை தேட‌ல் ப‌ட்டிய‌லில் முன்ன்ணிக்கு கொண்டுவ‌ர‌ உத‌வும் என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.

த‌மிழ‌னின் பெருமையை உல‌க‌றிய‌ச்செய்யும் முய‌ற்சியாக‌ ந‌ன்ப‌ர்க‌ளோடு சேர்ந்து இதில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் தெரிவித்துள்ளார்.அவ‌ர‌து முயற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

வ‌ச‌க‌ர் என்ற‌ முறையில் நாக‌ம‌ணி விடுத்த‌ வேன்டுகோளை ஏற்றும் த‌மிழ‌ர்க‌ளின் இணைய‌ முய‌ற்சி வெற்றி பெற‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லிலும் இந்த‌ ப‌திவை எழுதியுள்ளேன்.இணைய‌வாசிக‌ள் இந்த‌ சேவையை பயன்ப‌டுத்திப்பார்த்து பய‌னுள்ள‌து எனில் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரைச் செய்ய‌லாம்.இந்த‌ தளத்திலும் த‌ங்க‌ள் க‌ருத்துக்க‌ளை தெரிவிக்க‌லாம்.

———-
link;
http://www.winmani.com/

கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாள்

1-sஅட, அற்புதமான யோசனையாக இருக்கிறதே. எளிமையான நாட் களுக்கு திரும்பி செல்ல இப்படி யொரு நாள் அவசியம்தான் என்று ஒருவர் சபாஷ் போட்டு சந்தோஷப் பட்டிருந்தார்..

அடுத்தவர் ஆஹா, ஒருநாள் முழுவதும் நான் ஷாப்பிங் செல்வேன்; புத்தகங்களை வாங்குவேன். பகல் எல்லாம் தூங்கி மகிழ்வேன் என்று ஆனந்தப்பட்டிருந்தார். இன்னொருவரோ குதிரை சவாரி மேற்கொள்வேன் என்றார்.

புத்தகம் படிப்பேன், ஜாக்கிங் செய்வேன், எனக்கு நானே சமைத்துக் கொள்வேன். எது செய்தாலும் என்னை சுற்றியே இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். இது வேறொருவருடைய எண்ணம்.

ஓவியம் வரைந்து கொண்டிருப்பேன் அல்லது பூங்காவில் நடை பயில்வேன் என்று ஒருவர் சொல்லியிருக்கிரார்.
ஒரேயொருவர் மட்டும் ஐயோ அது முடியாதே என்றார்.

இவையெல்லாம் என்னவென்று குழப்பமாக இருக்கிறதா?

கம்ப்யூட்டர் பயன் பாட்டை மையமாக வைத்து நடத்தப் பட்டு வரும் உலகம் தழுவிய பரிசோதனை முயற்சி அரிமுகமான போது அது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட‌ கருத்துக்கள்தான் இவை.

கம்ப்யூட்டர்கள் பிரபலமாக தொடங்கிய‌ காலத்தில், எங்கும் கம்ப் யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர் என்று சொல்வது வழக்கமாக இருந்தது. அந்த நிலையெல்லாம் தாண்டி கம்ப்யூட்டர் நமது வாழ்க்கையில் நீக்கமற நிறைந்து விட்டது.

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கொஞ்சம் பின்தங்கியிருக்கும் நம் நாட்டிலே இந்நிலை என்றால் 20, 25 வருடங் களுக்கு முன்னரே கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை ஆரத்தழுவிக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுக ளில் என்ன நிலை இருக்கும் என்று சொல்ல வேண்டிய தில்லை. சகலமும் கம்ப்யூட்டர் சார்ந்தே இயங்குகிறது.

தினசரி வாழ்க்கையில் கம்ப்யூட்டர் எப்படியெல்லாம் பயன்படுகிறது, என்ன மாற்றங்களையெல்லாம் கொண்டு வந்திருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்.
கம்ப்யூட்டருக்கு நாம் பழகி விட்டது உண்மைதான் என்றாலும், ஒரு விதத்தில் அதற்கு நாம் அடிமையாகி விட்டோம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதுதான், கம்ப்யூட்டர் இல்லாமல் ஒருநாளேனும் இருக்க முடியுமா என பரிசோதித்து பார்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒருநாள் முழுவதும்(ஒரே ஒரு நாள் தான்) கம்ப்யூட்டரை அணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக ஷட்டவுன் டே எனும் இணைய தளமும் அமைக்கப்பட்ட‌து.

2007 ல் சோதனை முயற்சியாக துவங்கிய இந்த பரிசோதனை இன்று உலகலாவிய இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.

கனடாவின் டென்னிஸ் பெஸ்ட்ராவ் என்னும் வாலிபர் தான் முதன் முதலில் இதற்கான தேவையை உணர்ந்தது.மான்டிரியேல் நகரில் வசிக்கும் கம்ப்யூட்டர் புரோகிராமரான இவர் தனது குடும்பத்திரை விட கம்ப்யூட்டரோடு அதிக நேரத்தை செலவிடுவதாக உணர்ந்த போது குடும்பத்தோடு ஒரு நாளையேனும் செலவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டானது.

இந்த ஆசை ஒரு நாள் முழுவதும் கம்ப்யூட்டர் பக்கம் செல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.இதை அவர் மட்டுமே செயல்படுத்தியிருக்கலாம். ஆனால் ம்ற்றவர்கள் நிலையும் இது தானே என யோசித்து பார்த்திருக்க வேன்டும்.

இந்த எண்ணம் தொடர்பாக தனது லண்டன் நண்பர் மைக்கேல் டெய்லர் மற்றும் இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் வசிக்கும் திரைப்பட கலைஞரான டேவிட் ப்ரிட்டில் ஆகியோரோடு பேசிப்பார்த்தார்.

மூவருமாக சேர்ந்து மற்றவர்களையும் சேர்த்துக்கொள்வது என தீர்மானித்தனர்.

ஒரு நாள் கம்ப்யூட்டர் இல்லாமலே இருப்பது நல்லது மற்றும் அவசியமானது என நினைத்தாலும் இது சாத்தியமா என தெரிந்து கொள்ள விரும்பினர். உடனே , உங்களால் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்பினர்.முடியும் என்றால் அதற்கான உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகோளும் விடுத்தனர்.

இதற்காக ஷட்டவுன் டே என்னும் இணையதளத்தையும் அமைத்தனர். இந்த தள‌த்தின் மூலம் கேட்கப்பட்ட எளிமையான கேள்விக்கு பலவிதமான பதிலகள கிடைத்ததோடு வரவேற்பு பலமாகவே இருந்தது. உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோர் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

2007 ,மார்ச் 24 ம் தேதி 65 ஆயிரம் பேர் த‌ங்கள் கம்புயுட்டர்களை மூடிவைத்தனர்.

யூடியூப்பில் வெளியிடப்பட்ட விளக்க படம் 11 லட்சம் முறை பார்க்கப்பட்டது. இண்டெர்நெட் முழுவதும் இந்த கருத்து காட்டுதீ போல பற்றிக்கொண்டது.

இதனையடுத்து இக்கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் உத்தேசத்தோடு அஷுடொஷ் ரஜேகர் என்னும் இந்திய நண்பரோடு பேசினார். அவரும் கம்பியூட்டரே கதி என இருப்பவர்.அதன் பாதிப்பை அறிந்தவர். இருவரும் இந்த கருத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல தீர்மானித்து கனடாவில் இதனை ஒரு தன்னார்வ அமைப்பாக பதிவு செய்து கொண்டனர்.

இன்று அளவுக்கு அதிகமான கம்ப்யுட்டர் பயன்பாடு குறித்த விழிப்புண‌ர்வை ஏற்படுத்து நோக்கத்தோடு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பிற அமைப்புகளோடு இணைந்து விழிப்புண‌ர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு நாள் கம்ப்யூட்டரை மூடிவிட்டு உங்கள் குடும்பத்தோடு சிரித்து மகிழுங்கள் என, தனது இணையதள‌த்தின் மூலம் அறைகூவல் விடுக்கும் இந்த அமைப்பு கம்ப்யூட்டர் மானிட்டருக்கு வெளியேவும் உலகம் இருப்பதை நினைவு படுத்துகிறது.

இந்த சமுக பரிசோதனையில் வரும் மே 2 ம் தேதி நிங்களும் பங்கேற்கலாம். ஆம் அன்று தான் இந்த ஆண்டுக்கான கம்ப்யூட்டர் இல்லா நாள்.

————-

linjk;
http://www.shutdownday.org/

இணையதளங்களுக்கு புதிய பாதை

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா?
.
இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு அமைப்பில் குறைகள் உண்டா?அப்படியாயின் அதனை களைய முடியுமா?

இந்த கேள்விகள் அபத்தமாக, விதண்டாவாதமாக தோன்றலாம். நிச்சயம் அப்படியில்லை. தற்போதுள்ள வழியைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? என்பதை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. மறு சிந்தனை இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் வழியையும் கூட மேம் படுத்தி மேலும் சிறப்பானதாக்கலாம்.

அதன் மூலம் நம்முடைய வாழ்க்கையையே கூட மேம்படுத்திக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் உலகம் தரும் சிந்தனை இது. தொழில்நுட்ப நிபுணர்களில் தீர்க்க தரிசிகள் பட்டியலில் இடம்பெறக்கூடியவர்கள் கம்ப்யூட்டருக்கும், நமக்குமான வழியை இன்னும் சிறந்ததாக ஆக்க முடியுமா என ஓயாமல் சிந்தித்து வருகின்றனர்.

தற்போது கம்ப்யூட்டரோடு தொடர்புகொள்ள நாம் பயன்படுத்தும் அமைப்பு, இடைமுகம் அதாவது இன்டர்பேஸ் என்று அழைக்கப் படுகிறது. ஐகான்கள் மற்றும் மவுஸ் கிளிக்குகள் இதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கர்சரை பிடித்தபடி மேலும் கீழும் இழுப்பதன் மூலமோ பக்க வாட்டில் நகர்த்துவதன் மூலமோ கம்ப்யூட்டரை நம்மால் இயக்க முடிகிறது.

இணையதளங்களில் உலாவும் போதும், இதே இலக்கணம்தான் கை கொடுக்கிறது. ஆனால் கம்ப்யூட்ட ரோடு தொடர்புகொள்ள இதுமட்டும் தான் சிறந்த வழியா? என்று நிபுணர்கள் யோசித்து வருகின்றனர்.

இந்த முறையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை களையக் கூடிய ஆகச்சிறந்த வழி ஒன்றை உருவாக்கும் ஆய்விலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சிந்தனை ஏற்புடையதாக இருந்தால், பிளேயஸ் (playce) தளமும் உங்களை வெகுவாக கவரும்.
அலிபாபா குகையைப்போன்றது இந்த தளம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உள்ளடக்கத்தில் உன்னதமானது என்று சொல்வதற் கில்லை. ஆனால் இந்த தளத்தில் நுழைந்து அதில் உள்ள தகவல்களை தேடிப்போவது மிகவும் சுவையான அனுபவம்.

மாமுலான தளத்தைப்போல இதில் எடுத்த எடுப்பிலேயே முகப்பு பக்கத்தில் அதில் உள்ள விவரங்கள் அறிமுகமாகிவிடாது. மாறாக, முகப்பு பக்கத்தில் எளிமையான வீடியோ கேம் ஒன்று நம்மை வரவேற்கும்.

நான்கு வடிவம் கொண்ட அந்த கேமில் எதாவது ஒன்றை தேர்வு செய்து விளையாடத் துவங்க வேண்டும். அதன்பிறகு கேமில் ஒவ்வொரு கட்டமாக முன்னேற முன்னேற தளத்தில் உள்ள விவரங்கள் அடுத்தடுத்து வெளிவரத்துவங்கும்.

தடைகளைத் தாண்டி முன்னேறிச் செல்வது போன்ற விளையாட்டு அல்லது எதிராளிகளை அழித்து வெற்றிபெறும் விளையாட்டில் பங்கேற்றபடி இருந்தால் ஒவ்வொரு கட்டத்திலும் தளத்தில் உள்ள விவரங்கள் திரையில் தோன்றிக்கொண்டே இருக்கும்.

புகழ்பெற்ற வீடியோ கேம் வடிவமைப்பாளரான ஸ்டீபன் வால்ஸ் என்னும் இளைஞர் இந்த இணைய தளத்தை வடிவமைத்திருக்கிறார். கம்ப்யூட்டரை பயன்படுத்த தற்போதுள்ள இடை முகம் போதுமானதுதானா என்னும் சிந்தனை யைப்போலவே இணையதளங்களில் உலாவ இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் வடிவமைப்பு ஏற்றதுதானா என்னும் கேள்வியை எழுப்புவதற்காக இந்த இணையதளத்தை அவர் வடிவமைத்திருக்கிறார். ஒரு சோதனை முயற்சி என்று இதனைக்கொள்ளலாம்.

இன்டெர்நெட் தொழில்நுட்ப யுகத்தின் குழந்தையாக இருக்கலாம். ஆனால் அதில் தளங்களை உருவாக்க நாம் கற்காலத்து வடிவமைப்பு முறைகளைத்தான் கையாண்டு கொண்டிருக்கிறோம்.

அதனை மாற்றி இன்டெர்நெட்டுக்கு ஏற்றதொரு உலாவும் முறையை கண்டு பிடித்து அதற்கேற்ப தளங்களை வடிவமைத்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பார்க்கும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள தளம் இது.

இன்று இன்டெர்நெட்டில் உலாவ பயன்படுத்தப்படும் ஐகான்கள் திரையை கீழிறக்கிப்பார்ப்பது போன்ற பல உத்திகள் வீடியோ கேம் உலகில்தான் முதலில் உதித்ததாக பால்ஸ் கருதுகிறார்.

எனவே வீடியோ கேம் வடிவில் ஒரு தளத்தை வடிவமைத்துப்பார்ப்பது அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்லும் என்று நம்புகிறார்.

—————–

link;
http://spw.playbe.com/

செல்பேசி சரி,மீன்பேசி தெரியுமா?

seafoodஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி இருக்கும் . எதற்காக அனுமதி வாங்க வேண்டும் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆவேசப்படவேண்டாம். உங்களை சமூக அக்கறை மிக்கவராகவும் சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் .
நீங்கள் வாங்க உள்ள மீன் நல்ல மீனா என்று பார்த்து தானே வாங்குவீர்கள்.அது மட்டும் போதுமா அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன் தானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா
அதற்காக தான் இந்த எஸ்எம்எஸ் .சரி எஸ்எம்எஸ் அனுப்பினால் எப்படி அது தெரியும்.
நீலச்சமுத்திரம்(blueocean) என்னும் பெயரில் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதில் வாங்க உள்ள மீன் பெயரை தெரிவித்தால் அந்த அமைப்பு குறிப்பிட்ட அந்த மீனை வாங்கலாமா என தெரிவிக்கும். அதாவது அந்த மீன் பாதிப்புக்குள்ளானதா அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லதா என்பதை தெரிவிக்கும்.
வர்த்தகரீதியான மீன் பிடித்தலால் பல மீன் வகைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.சில வகை மீன் வகைகள் அழியும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டன.இதே நிலை தொடர்ந்தால் அரிய ரக மீன் இனங்களை நிரந்தரமாக இழக்க நேரிடலாம். இதை உணர்ந்துள்ள சுற்றுச்சூழல் இயக்கங்கள் அழியும் நிலையில் உள்ள மீன் ரகங்களை பாதுகாக்க பாடுபட்டு வருகின்றன. பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவை முயன்று வருகின்றன.
நீலச்சமுத்திரம் அமைப்பும் இதில் ஒன்று. சர்வதேச அமைப்பான இது சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன்களை மட்டுமே உண்ணச்செய்யும் வகையில் மீன்பேசி(fishphone) என்னும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் தாங்கள் வாங்க உத்தேசித்துள்ள மீன் பெயரை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் செய்தால் அது பற்றிய விவரங்களை அனுப்பிவைக்கும். அந்த மீனை வாங்கலாமா என்றும் பதில் எஸ்எம்எஸ் வந்து சேரும். குறிப்பிட்ட அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் பாதிப்புக்குள்ளானது எனும் பட்சத்தில் அதற்கு பதில் வேறு மீனையும் பரிந்துரைக்கும்.
எந்த மீன் பாதிப்புக்குள்ளானது எவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்பதை அந்த மீனின் வரலாறு அது எத்தனை விரைவாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது மீன்பிடித்தலால் எப்படி பாதிப்புக்குள்ளாகின்றன போன்ற அம்சங்களை எல்லாம் பரிசிலித்து பின்னர் மீனை சாப்பிடலாம் என்ற பச்øச்கொடி காட்டப்படும்.
மேலும் இந்த மீனை பிடிக்கும் போது மற்ற மீன்கள் பாதிக்கப்படுகின்றனவா போன்ற சங்கதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இவை பின்பற்றப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்களுக்கும் இதே போன்ற விவரங்கள் பரிசிலிக்கப்பட்டு பதில் அனுப்ப படுகிறது.
இப்படி பாதிப்புக்குள்ளான மீன்களை வாங்காமல் தவிர்ப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பிற்கு பொது மக்களும் உதவ முடியும் என்னும் நம்பிக்கையில் இந்த மீன்பேசி சேவையை நீலச்சமுத்திரம் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு அதனடிப்படையில் முடிவு எடுப்பது மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு கூடி நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் கையில் உள்ள செல்போனில் இருந்து ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பதன் மூலம் சரியான தகவலை தெரிந்துக்கொண்டு முடிவெடுத்து செயல்பட முடியும்.
இது சுலபமானது மட்டும் அல்ல சுற்றுச்சூழல் நோக்கில் பயன் தரக்கூடியது. நீலச்சமுத்திர அமைப்பு பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பாடுப்பட்டு வருகிறது.பருவநிலை மாற்றம் பாதிப்புகளின் தீவிரத்தை புரிந்துகொள்ள சமுத்திரம் உதவுவதாக கூறும் இந்த அமைப்பு இது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
இதற்காக தனது இணையதளத்தில் விரிவான தகவல்களை அளித்து வரும் இந்த அமைப்பு பாதிப்பில்லாத மீன்கனை சாப்பிட வழி செய்யும் மீன்பேசி எஸ்எம்எஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தளத்தின் செல்போனுக்கு ஏற்ற வடிவமும் இருக்கிறது.
எஸ்எம்எஸ் வசதியை சமூக வழிப்புணர்வுக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்
என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.

—————-
link;
www.fishphone.org

வீட்டுக்கு வீடு இணையதளம்-2

lifeat1குடியிருப்புக்கு என்று ஒரு வலைப்பின்னல் தளம் இருக்கும் பட்சத்தில் அங்கு வசிப்பவர்களின் பழக்க வழக்கங்களை அது முழுவதுமாக மாற்றி விடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லலாம்! மாற்றங்கள் என்றால் வெளிப்படையாக தெரியக் கூடிய தலைகீழ் மாற்றங்கள் அல்ல. மிகவும் நுட்பமான மாற்றங்கள்!
.
வலைப்பின்னல் தளம் வந்த பிறகும் கூட குடியிருப்பவர்கள் முன்போல சக குடியிருப்புவாசிகளை கண்டும் காணாமல் தங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தியபடி நகர வாழ்க்கைக்குரிய இயந்திரகதியில் தான் இருக்கப் போகிறார்கள்.
ஆனால் வலைப்பின்னல் தளத்தில் தங்களுக்கான இருப்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்றால் அதன் பின்னர் தொடர்ச்சியாக பல மாயங்கள் நிகழலாம்-நிகழும்!

குறிப்பிட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை அமைத்துக் கொண்டு அதில் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். அறிமுகச் சித்திரத்தில் இருந்து தொடங்கி நேற்று பார்த்த சீரியலில் இருந்து படித்த புத்தகம், கேட்ட கிசுகிசு என எந்த தகவலை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். விஷயம் என்ன வென்றால், நீங்கள் உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை இதன் வழியே உணர்த்தி விடுகின்றீர். அதாவது பேசத் தயாராக இருப்பதை தெரியப்படுத்துகிறீர்கள்!

இதே போல குடியிருப்பின் மற்ற வீடுகளில் வசிப்பவர்களும் அவர்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டிருப்பார்கள் அல்லவா? அவற்றை நீங்கள் படித்துப் பார்க்கலாம். அதில் ஏதாவது ஒரு விஷயம் உங்களை கவரும் அல்லவா, அது பற்றி உடனே ஒரு பின்னூட்டம் செய்யலாம்-பின்னூட்டம் என்றால் ஒரு கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்கும் சம்பிரதாயம் என்று பொருள்-வலைப்பின்னல் உலகில் பிரபலமாக இருக்கும்“ வார்த்தை இது.

இப்படி வலைப்பக்கத்தை பார்ப்பதும், அதற்கு கருத்து சொல்வதும் ஒரு தொடர் உரையாடலுக்கு வழி வகுக்கும்.
இன்று எல்லோர் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்கிறது-கம்ப்யூட்டர் இருந்தால் இன்டெர்நெட் இணைப்பும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே போல அலுவலகத்தில் இருந்தும் கூட இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம்.

குடியிருப்பில் வசிப்பவர்கள் நேரில் பார்த்துப் பேசி, சுக துக்கங்களை பரிமாறிக் கொள்ளத்தானே நேரம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்டெர்நெட்டில் உலாவுவதற்கும், இ-மெயில் அனுப்புவதற்கும் பழகியவர்கள் வலைப்பின்னல் தளத்தில் இதற்காக கொஞ்சம் நேரத்தை செலவிடலாம் தானே!

சங்கீதத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர், ஏழாவது மாடியில் இருக்கும் பெண்மணிக்கும் இசையில் அதீத ஈடுபாடு இருப்பதை அவரது வலைப்பின்னல் பக்கத்தின் மூலம் தெரிந்து கொண்டால், அந்த ஆர்வமே அவர்களை இணைக்கும் பாலமாகி விடும் அல்லவா? தினந்தோறும் (அ) நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் இசையார்வம் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா? சங்கீத சீசனின்போது பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக கச்சேரிக்கு சென்று வரலாமே! இதே போல ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் பக்தி சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு கோயிலுக்கு ஒன்றாக போய் வரலாம். இந்த நட்புறவு கொஞ்சம் விரிவடைந்து இசையார்வம் கொண்ட ஏழெட்டு பேர் ஒரு குழுவை அமைத்துக் கொள்ளலாம்.

இது ஒரு உதாரணம்தான். வலைப் பின்னல் பக்கங்கள் இன்னும் எத்தனையோ விதங்களில் உறவுப் பாலம் அமைத்து தரவல்லவை! பிள்ளைகளின் படிப்பு மற்றும் வீட்டுப்பாடம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். காய்கறி விலை உயர்வு, நாட்டு நடப்பு விவாதம் என அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை பகிர்ந்து கொள்வதற்கான வழியை வலைப்பின்னல் பக்கம் உருவாக்கித் தந்து விடுகிறது.

இன்னும் ஒரு படி முன்னேறி குடியிருப்பு சங்கத்திற்கான பொதுப் பக்கத்தை உருவாக்கி பராமரிப்பு, சங்க கூட்டம், பொது நிகழ்ச்சி போன்ற தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். அலுவலகம் செல்பவர் களும், வீட்டில் உள்ள ஆண்களும், இளைஞர்களும் கூட வலைப்பின்னல் பக்கம் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு நட்புறவை வளர்த்துக் கொள்ளலாம்.

பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு இ-மெயில் அனுப்பி தொடர்பு கொள்ள நேர்வது விசித்திரமாக தோன்றலாம். அதை விட மாடிப்படி ஏறும் போது மூன்றாம் மாடியில் இருப்பவரை சந்திக்கும் போது நேற்று ஒரு இ-மெயில் அனுப்பினேனே என்று கேட்பது எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இல்லை, நம்மை பார்த்ததுமே அவர் நேற்று உங்கள் வலைப்பின்னல் பக்கத்தை பார்த்தேன். விலைவாசி பற்றி சரியாக சொல்லியிருந்தீர்கள் என பேச ஆரம்பித்தால் எப்படி இருக்கும்!

ஒரே இடத்தில் வசிப்பவர்கள், பரஸ்பரம் அறிந்து கொள்ளாமல் இருக்கும் நிலையை மாற்றி சுய அறிமுகத்தை சாத்தியமாக்கி தொடர்பு கொள்ள வலைப்பின்னல் தளம், சந்திப்பு மையமாக இருக்கும் என தாராளமாக நம்பலாம். இவையெல்லாம் சாத்தியமா? என்ற சந்தேகம் தேவையற்றது. காரணம் அமெரிக்காவில் உள்ள ‘லைப் அட்’ நிறுவனம் குடியிருப்புகள் தங்களுக் கான வலைப்பின்னல் தளங்களை உருவாக்கி கொள்ளும் சேவையை அளித்து வருகிறது. கட்டண அடிப்படையில் தன்னை நாடி வரும் குடியிருப்புகள் சார்பில் வலைப் பின்னல் தளத்தை அமைத்துக் கொடுத்து பராமரிப்பு சேவையையும் இந்நிறுவனம் வழங்குகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இந்த சேவையை விரும்பி பயன்படுத்தி வருகின்றன.

இதன் நிறுவனரான மேத்யூகோல்ஸ்டீன், ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றியவர். புதிதாக குடியிருப்பு பகுதிகளுக்கு வருபவர்கள் அங்குள்ளவர்களை அறிமுகம் செய்து கொள்ள போதுமான வழிகள் இல்லாமல் இருப்பதை கவனித்த இவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பரஸ்பரம் தொடர்பு கொள்ள ஒரு வழி வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒவ்வொரு குடியிருப்புக்குமான வலைப்பின்னல் சேவையை வழங்கும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

———-

link;
www.lifeat.com