Tag Archives: டிவிட்டர்

டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம்.

டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும்.

டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம்.

நாளிதழ்களிலும் டிவிகளிலும் நிபுணர்கள் கருத்து தெரிவிப்பது போல சாமன்யர்கள் கூட டிவிட்டரில் எந்த தலைப்பு குறித்தும் தாங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.அவற்றை எத்தனை பொருட்படுத்துவார்கள் என்பது வேறு விஷயம்.ஆனால் சமீபத்தில் பார்த்த படத்தில் துவங்கி உலக அமைதி வரை எந்த விஷயம் குறித்தும் நாம் என்ன நினைக்கிறோம் என்று டிவிட்டரில் சொல்லலாம்.

டிவிட்டரில் பதிவாகும் இந்த கருத்துக்கள் உலகின் நாடித்துடிப்பை உணர்த்தக்கூடியதாக அமையலாம்.

புதிய படம் பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை கருத்து கணிப்பு எதுவும் நடத்தாமலேயே டிவிட்டரில் அந்த படத்திற்க்காக பகிரப்பட்ட பதிவுகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.அரசியல் தலைவரின் கருத்துக்கு என்ன எதிர்வினை என்றோ,சமீபத்தில் அம்பலாமான ஊழல் பற்றி மக்களின் பார்வை என்ன என்றோ டிவிட்டரோ உணர்த்தி விடும்.

இதெல்லாம் டிவிட்டரால் விளையும் பயன்கள்.இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.

டிவிட்டரில் பரிமாறப்படும் கருத்துக்கள் தப்பான அபிராயமாகவும் இருக்கலாம்.

உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகம் விவாதிக்கப்படும் பருவ நிலை மாற்றத்தையே எடுத்து கொள்ளலாம்.பருவநிலை மாற்றத்தால் வருங்காலத்தில் பெரும் அபாயம் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கும் நிபுணர்கள் பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பருவநிலை பாதிப்பின் தீவிரம் சர்ச்சைக்குறியதாவே இருக்கிறது.ஒரு பக்கம் பத்தாண்டுகளில் கடல் உள்ளே வந்துவிடும் ,இமைய மலை உருகி வழியும் என்றெல்லாம் சொல்கின்றனர்.இன்னொரு பக்கமே இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் இதன் காரணமாகவே பருவநிலை பாதிப்பை அலட்சியப்படுத்த முடியும் என்றில்லை.இந்த விஷயத்தில்  இருதரப்பு நிலைப்பாடு குறித்தும் சரியான புரிதல் தேவை.அதற்கு முதலில் ஆழமான வாசிப்பு தேவை.மேலோட்டமாக ஏதாவது ஒரு கட்டுரை அல்லது இன்னும் மோசமாக ஒரே ஒரு மேற்கோளை படித்துவிட்டு எல்லாம் தெரிந்துவிட்டது போல கருத்து தெரிவிப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

டிவிட்டரில் இப்படி நிகழ வாய்ப்புள்ளது.யாரோ ஒரு சிலர் பருவ நிலை மாற்றம் மிகைப்படுத்தப்படுவதாக படித்து விட்டு அவப்போது அதற்கு எதிரான கருத்தை டிவிட்டரில் பதிவு செய்யலாம்.பருவநிலை நிபுணர்கள மிகுந்த கரிசனத்தோடு புதிய ஆய்வு முடிவை வெளியிட்டு தனது கவலையை தெரிவிக்கும் போது இவர்கள் டிவிட்டரில் அநத கருத்தை பகடி செய்யலாம்.இன்னும் ஒரு படி மேலே போய்  நிபுணரின் கருத்தை எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமலேயே தீர்மானமாக மறுக்கலாம்.அதற்கு ஒரு அறைவேக்காட்டு ஆய்வு,அல்லது செய்தியை ஆதரவாக சுட்டிக்காட்டலாம்.

பருவநிலை மாற்றத்தின் மீது உண்மையான அக்கரை கொண்டவர்களுக்கு இந்த பதிவுகள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் நிச்சயம் உண்டாக்கும்.அதிலும் பருவநிலை மாற்றத்தின் வேகத்தை தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று நம்புகிறவர்கள் இவற்றை பார்க்கும் போது உள்ளபடியே கொதித்து போவார்கள்.

இப்படி தான் பருவநிலை மாற்றம் மீது கொள்கை பிடிப்பு கொண்டிருந்த ஆஸ்திரேலியே வாலிபர் ஒருவர் டிவிட்டரில் வெளீயாகும் பருவநிலை பதிவுகளை பார்த்து வெறுத்து போனார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிஜல் லெக் சாப்ட்வேர் நிபுணராக பணியாற்றி வருகிறார்.லெக் பருவநிலை மாற்றதின் மீது மிகுந்த அக்கரை கொண்டவர்.பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர வேண்டும் என்றும் உணர்த்த வேண்டும் என்றும் நினைப்பவர்.

அது மட்டும் அல்ல பருவநிலை மாற்றம் ஏற்படவில்லை என்று கருதுவபர்களிடம் அது குறித்து வாதிடவும் விருப்பம் கொண்டவர்.இந்த ஆர்வம் காரணமாக டிவிட்டரில் உலாவும் போது யாராவது பருவநிலை மாற்றம் நிகழவில்லை என்பதை போல கருத்து தெரிவிப்பதை பார்த்து விட்டால்  உடனே அதற்கு டிவிட்டர் பதிவின் மூலமே பதில் அளிக்க துவங்கி விடுவார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான அறியாமையை போக்குவது தனது கடமை  என்னும் உணர்வோடு டிவிட்டர் பதிவுகளில் உள்ள கருத்து பிழைகளை சுட்டிக்காட்டி உற்சாகமாக வாதிட்டு வந்தார். ஆனால் இந்த உற்சாகம் அதிக நாள் நீடிக்கவில்லை.ஒன்று டிவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டவர்களில் பலர் உண்மையை ஏற்க மனமில்லாமல் கன்மூடித்தனமாக வாதிட்டனர்.இரண்டாவதாக அப்படியே பொருமையாக பதில் சொல்லி வாதிட்டு புரிய வைக்க முயன்றாலும் வேறு யாராவது பருவநிலை மாற்றம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருவதை பார்க்க முடிந்தது.

ஒவ்வொருவரோடு வாதிடுவதும் முடியாத காரியமாக இருந்தது மட்டும் அல்லாமல் இந்த விவாதம் முடிவே இல்லாததாகவும் அமைந்தது.

புவியின் எதிர்காலத்தையே பாதிக்ககூடிய தீவிர பிர்ச்சனை  என லெக் நம்பும் பருவநிலை மாற்றம் குறித்து டிவிட்டரில் பலரும் மனம் போன போக்கில் கருத்துக்களை வெளியிட்டு வந்தது கண்டு மனம் வெதும்பி போனார்.

இத்தகைய நிலையில் லெக் என்ன செய்திருக்க முடியும்.டிவிட்டர் விவாதமே தேவையில்லை என்று ஒதுங்கி போயிருக்கலாம்.அப்படி செய்ய வருக்கு மனமில்லை.தெரிந்தே தவறான கருத்துக்கள் உலா வர அனுமதிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை.அப்படியென்றால் டிவிட்டரில் விவாத்ததை தொடர வேண்டும்.

ஆனால் இப்படி முகம் தெரியாத எதிரிகளுக்கு டிவிட்டரில் பதில் அளிப்பது என்றால் அதற்காகவே கனிசமான நேரத்தை செலவிட வேண்டும்.அதோடு தர்கரீதியாக எத்தனை சிறந்த பதில் தந்தாலும் அதை ஏற்காமல் மீண்டும் தவறான புரிதலின் அடிப்படையிலேயே டிவிட்டரில் பதிவுகள் வெளியாகும் போது என்ன செய்ய முடியும்.

எல்லா கருத்து போராளிகளுக்கும் ஏற்படும் தடுமாற்றம் தான் இது.டிவிட்டர் வெளியில் இதனை எதிர் கொண்ட லெக் தனது சாப்ட்வேர் ஆற்றலை பயன்படுத்து இதற்கு பதிலடி கொடுக்க தீர்மானித்தார்.

விவாத களத்தில் தானே இறங்கி போராடுவதால் நேரம் தான் வீண் என்று நினைத்த லெக் அதற்காக பருவநிலை விவாகார்த்தைல் தவறான கருத்துக்கள் மறுப்பில்லாமல் உலாவ அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானித்தார்.எனவே இதற்காக என்றே ஒரு பாட்டை உருவாக்கி அதனிடம் விவாத பொருப்பை ஒப்படைத்து தான் ஒதுங்கி கொள்ள முடிவு செய்தார்.

இப்படி லெக் உருவாக்கிய பாட் தான் ஏஇ_ஏகிடபில்யூ.குறிப்பிட்ட செயலை தானியங்கியாக செய்து முடிப்பதற்காக உருவாக்கப்படும் சிறிய அளவிலான ஆணைத்தொடர்களே இவ்வாறு பாட் என்று அழைக்கப்படுகின்றன.இணைய உலகில் விதவிதமான பாட்கள் உள்ளன.

கூகுல் போன்ற தேடியந்திரங்கள் புதிய இணைய பக்கங்களில் உள்ள தகவல்களை திரட்டி தொகுக்க பல பாட்களை இணைய கடலில் உலாவ விட்டுள்ளன.குக்கீஸ் என்னும் இணைய செயல்பாடு ஒற்றர்கலும் ஒரு வித பாட்களே.

லெக் டிவிட்டருக்காக உருவாக்கிய பாட் பருவநிலை மாற்றம் தொடர்பான தவறான நிலைபப்ட்டிலான பதிவுகள் தோன்றுகின்றனவா என்று கண்கானிக்கும் திறன் கொண்டதாக இருந்தது.அத்தகைய பதிவுகளை கண்டுவிட்டால் அதுவே விவாத்ததில் இறங்கிவிடும்.அதாவது அந்த பதிவுக்கு பதில் தர வேண்டும் என்று புரிந்து கொண்டு ஒரு பதிவை வெளியிடும்.

பாட் பதில் தருவதற்காக என்று லெக் பருவநிலை பிரச்சனை தொடர்பாக ஒரு தகவல் பெட்டகத்தையும் உருவக்கியிருந்தார்.விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை பாட் இங்கிருந்து உருவிக்கொள்ளும்.மற்றபடி அதற்கு வேறு எதுவும் தெரியாது.

ஆனால் டிவிட்டரில் பருவநிலை மாற்றம் பற்றி யாரெல்லாம பேசுகின்றனர் என்பதை கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டே இருக்கும்.இதற்காக என்று ஒருஇ சில பதங்களை லெக் கற்றுத்தந்திருந்தார்.அதனடிப்படையில் அப்படி ஏதாவது பதிவு தோன்றும் போது தனது தகவல் பெட்டியில் இருந்து பதிலை அளிக்கும்.

ஆக டிவிட்டரில் எங்கே பருவநிலை மாற்றத்தை மறுதலிக்கும் கருத்து தோன்றினாலும் லெக் உருவாக்கிய பாட் அதற்கான பதிலை அளித்து விவாத்தை தொடரும்.பல நேரங்களில் எதிர்ப்பாளர்கள் யாரோ ஒருவரோடு விவதிக்கிறோம் என்ற உணர்வோடு எதிர் விவாத்ததிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

விவாதத்திற்கான ரோபோவை போல அந்த பாட்டும் மிகவும் விசுவாசமாக டிவிட்டரில் செயல்பட்டு வருகிறது.

டிவிட்டர் பரப்பில் ஒரு புதிய மைல்கல்லாக இந்த ரோபோவை கருதலாம்.

இதனை உருவாக்கிய லெக் அடுத்த கட்டமாக தனது பாட்டிற்கான பதில்களை மற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான தளங்களில் இருந்தும் எடுக்க தீர்மானித்திருக்கிறார்.

ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம்.

ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது.

இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது தொட்டாலோ உடனே தனது உணர்வை டிவிட்டர் செய்தியாக்கி விடுகிறது.

ச‌க்தி வாய்ந்த‌ சென்ஸார்க‌ள் இந்த மர‌‌த்தோடு பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அவை பிராட்பேன்ட் இண்டெர்நெட் இணைப்புட‌ன் இணைக்க‌ப‌ப்டுள்ள‌ன்.ம‌ர‌த்தை சுற்றி நிக‌ழும் அசைவுக‌ளின் போது மின்காந்த‌ அலைக‌ளில் ஏற்ப‌டும் மாற்ற‌த்தை கொண்டு சென்ஸார்க‌ள் அத‌னை உண‌ரும்.

அதன்‌  பிற‌கு இண்டெர்நெட் இணைப்பு மூல‌ம் டிவிட்ட‌ரில் த‌க‌வ‌ல் தெரிவிக்கும்.ஒவ்வொரு வ‌கையான‌ அசைவுக்கு ஏற்ப‌ வித‌வித‌மான‌ டிவிட்ட‌ர் செய்தியை வெளிப்ப‌டுத்தும் வ‌கையில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

யாராவ‌து நெருங்கி வ‌ந்தால் ம‌ர‌ம் த‌ன‌து ம‌கிழ்ச்சியை தெரிவிக்கும் . யாரும் வ‌ர‌வில்லை என்றால் ம‌ர‌ம் த‌னிமையில் இருப்ப‌தாக‌ சொல்லும்.நிறைய‌ பேர் அருகில் வ‌ந்தால் மிக‌வும் பிசியாக‌ இருப்ப‌தாக‌ ம‌கிழ்ச்சி அடையும்.

ம‌ர‌த்திற்கென‌ அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் இந்த‌ செய்திக‌ளை தொட‌ர்ந்து ப‌டிக்க‌லாம் .ப‌தில் டிவிட்டர் அ‌னுப்ப‌லாம்.

ஒரு மணி நேர‌த்தில் 100 பேர் தொட்டுவிட்ட‌ன‌ர் மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ உள்ள‌து என்றெல்லாம் ம‌ர‌ம் டிவிட்ட‌ர் செய்துள்ள‌து.
 
சுவார‌ஸ்ய‌மான‌ விஷ‌ய‌ம‌ தான். ஆனால் என்ன‌ ப‌ய‌ன் என்று கேட்க‌லாம்.

சென்ஸார் ம‌ற்றும் டிவிட்ட‌ர் போன்ற‌வை இணையும் போது த‌க‌வ‌ல் தொட‌ர்பில் புதிய‌ விஷ‌ய‌ங்க‌ள் சாத்திய‌மாக‌லாம் என்ப‌தை உண‌ர்த்த‌வே இது போன்ற‌ சோத‌னை முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ன‌.

உதாரண‌‌த்திற்கு ப‌க்க‌ வாத‌த‌தால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ நோயளிக‌ள் இப்ப‌டி சென்ஸார் முல‌ம் தொட‌ர்பு கொள்ள‌ வைக்க‌லாம் என்கின்ற‌ன‌ர்.பாதுகாப்பு நோக்கிலும் இவை ப‌ய‌ன்ப‌டும் என்கின்ற‌ன‌ர்.

டிவிட்ட‌ர் செய்யும் ம‌ர‌த்தை பார்க்க‌ விரும்பினால்…
அப்ப‌டியே செல்போன் மூல‌ம் தொட‌ர்பு கொள்ளும் ப‌ர‌ம் ப‌ற்றீய‌ முந்தைய‌ ப‌திவையும் காண‌வும்.கட்டிடம் டிவிட்டர் செய்வது தொட‌ர்பான‌ ப‌திவையும் காண‌வும்

—————

http://twitter.com/connectedtree

————

http://cybersimman.wordpress.com/2009/08/28/twitter-28/

——————-

http://cybersimman.wordpress.com/2009/01/12/botony/

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.

 ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் நடந்த அதிசயம் இது.

ஆனால், தற்போதைய தலைமுறை இந்தப் படத்தையே ஓர் அதிசயமாக பார்க்கக்கூடும்! ஒரு பெண்ணிட‌ம் பேச‌ ஏன் இத்த‌னை த‌ய‌ங்க‌ வேண்டும்? அவ‌ள் ப‌க்க‌த்தில் செல்ல‌வே ஏன் ப‌ய‌ந்து ந‌டுங்க‌ வேண்டும்?

இப்ப‌டி ப‌ல‌ கேள்விக‌ள் எழ‌க்கூடும். அந்த‌ நாய‌க‌னின் த‌விப்பும், அத‌னை ராஜேந்த‌ர் க‌வித்துவ‌மான‌ முறையில் சொன்ன‌தும் இந்த‌ கால‌ இளைஞ‌ர்க‌ளுக்கு புரியாத‌ புதிராக‌ இருக்க‌லாம்.

இந்த‌ செல்போன் யுக‌த்தில் காத‌ல் என்ப‌து ஒரு எஸ் எம் எஸ் தொலைவில் தான் உள்ள‌து. ஒரு பெண்ணை பிடித்திருக்கிற‌தா, அப்ப‌டியென்றால் எப‌ப்டியாவ‌து அவ‌ள் செல்போன் எண்ணை வாங்கிவிட்டால் ஒரே ஒரு எஸ் எம் எஸ்-சில் தொட‌ர்பு கொண்டுவிட‌லாம். அத‌ன் பிற‌கு அதே எஸ் எம் எஸ்-சில் தொட‌ங்கி இமெயில், ஃபேஸ்புக், டிவிட்ட‌ர் என எத்த‌னையோ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌.

அது ம‌ட்டுமா… கால‌மும் ச‌மூக‌மும் நிறையவே மாறிவிட்ட‌ன‌. பெண்க‌ளோடு பேச‌த் த‌ய‌ங்கும் அச‌ட்டு ஆண் பிள்ளைக‌ள் இன்று அரிதாகிவிட்ட‌ன‌ர். இது ஆணும் பெண்ணும் கை கோர்த்து திரியும் கால‌ம்.

என‌வே, ‘ஒரு த‌லை ராக‌’ காத‌ல் இன்றைய‌ இன்டர்நெட் த‌லைமுறைக்கு குழ‌ப்ப‌த்தை த‌ர‌லாம். ஆனால் 1980க‌ளில் நில‌விய‌ மனோநிலையை இந்த‌ப் ப‌ட‌ம் பிர‌திப‌லிக்கிற‌து என‌ப‌தை நினைவில் கொள்ள‌ வேண்டும். காத‌லை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு த‌ங்க‌ளுக்குள்

ம‌ருகிய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இளைஞர்க‌ள் அந்த‌ப் ப‌ட‌த்தின் நாய‌க‌னில் த‌ங்களைக் க‌ண்டு ஆறுதல் அடைந்த‌தே அந்த‌ப் ப‌ட‌த்தை பெரு வெற்றி பெற‌ வைத்த‌து. காத‌லைச் சொல்ல‌ முடிவ‌தை வெற்றியாக‌வும், காத‌ல் தோல்வியை கூட‌ காதலின் வெற்றியாக‌வும் க‌ருதிய‌ கால‌த்தின் ப‌ட‌ம் அது.

 இன்றைய இன்டர்நெட் த‌லைமுறை அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்து சிரிக்க‌லாம். அல்ல‌து, கால‌ம் எப்ப‌டி மாறிவிட்ட‌து என்று விய‌ந்து போக‌லாம்.

இல்லை அதற்கு மாறாக, படத்தை பார்க்கும் இன்டர்நெட் தலைமுறை தங்களை கொடுத்து வைத்த தலைமுறை என்று நினைத்து மகிழும் வாய்ப்பும் இருக்கிற‌து. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கால மாற்றம் இருபாலரும் சந்தித்து பேசிக்கொள்வதை சகஜமாக்கியிருக்கிற‌து என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி காதலர்கள் இடையிலான தகவல் தொடர்பை இன்னும் சுலபமாக்கியிருக்கிறது.

இன்றுதான் காதலை வெளிப்படுத்தவும் காதலை வளர்த்துக்கொள்ளவும் எத்தனை வழிகள் இருக்கின்றன. காதலர்கள் ஒயாமால் செல்போனிலே பேசிக்கொண்டே இருக்கலாம். தொலைபேசியை போல வீட்டில் உள்ளவர்கள் கவனிப்பார்களே என்ற அச்சம் இல்லாமல் செல்போனில் தனனை மறந்து காதல் வானில் மிதக்கலாம். பேசு முடியாத‌ நிலை என்றால் இருக்க‌வே இருக்கிற‌து எஸ் எம் எஸ். குறுஞ்செய்திக‌ளை அனுப்பியே காத‌ல் உரையாட‌லில் மூழ்க‌லாம்.

இன்னும் க‌டித‌ பாணி காத‌லை விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கு இருக்க‌வே இருக்கிற‌து இமெயில் வ‌ச‌தி. இல்லை என்றால் இன்டர்நெட் அர‌ட்டையில் ஈடுப‌ட‌லாம். ஐ எம் சாட் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.

எல்லாம் சுத‌ந்திர‌மான‌வை. அந்த‌ர‌ங்க‌மான‌வை. காத‌லனின் க‌டிதம் அம்மாவிட‌ம் சிக்கிகொண்டால் என்ன‌ செய்வ‌து என்னும் அச்ச‌ம் இமெயில் கால‌ காத‌லிக்கு கிடையாது. காத‌ல் ப‌ரிமாற்ற‌த்துக்கு ம‌ட்டும‌ல்ல‌ காத‌ல் தேட‌லுக்கும் கூட‌ இன்டர்நெட்டே கைகொடுக்கும். முன் போல பீச்சிலோ பார்க்கிலோ காத‌ல் த‌வ‌ம் செய்ய‌த் தேவையில்லை.

வ‌லைப்பின்ன‌ல் சேவையான‌ ஃபேஸ்புக் அல்ல‌து ஆர்குட்டில் வ‌லைவீசி ஒத்த‌க‌ருத்துள்ள‌வ‌ர்க‌ள் இணைவ‌து சுல‌ப‌ம் தான். ஃபேஸ்புக்கில் புகைப்ப‌ட‌த்துட‌ன் கூடிய‌ அறிமுக‌ ப‌குதியின் மூல‌ம் இள‌சுக‌ள் த‌ங்க‌ள‌து விருப்பு வெறுப்புக‌ளை வெளிப்ப‌டுத்தி அத‌ன‌டிப்ப‌டையில் ஜோடி தேடிக்கொள்ள‌லாம். க‌ண்ட‌வுட‌ன் காத‌ல் என்ப‌து போல‌ காத‌லை வெளிப்ப‌டுத்த‌ அவ‌ச‌ர‌ப்ப‌ட‌ வேண்டிய கட்டாய‌மும் இல்லை. ஃபேஸ்புக்கில் த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் செய்த‌ப‌டி ஒருவ‌ர் ம‌ன‌தை ஒருவ‌ர் புரிந்து கொள்ள‌ முற்ப‌ட்டு எல்லாம் ச‌ரி என்றால் காத‌ல் முடிவை அறிவிக்க‌லாம். அதோடு காத‌லில் விழுந்தேன் என்ப‌தை அறிவிக்க‌ ஃபேஸ்புக்கை விட‌ சிற‌ந்த‌ வழியில்லை.

ரொம்ப‌ சுல‌ப‌மாக‌வும் ந‌ய‌மாக‌வும் இத‌னை செய்ய‌லாம். அதில், உள்ள‌ ஸ்டேட்ட‌ஸ் ப‌குதியில் மாற்ற‌ம் செய்வ‌த‌ன் மூலம் காதல் செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். அதே போல ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் இருந்து வில‌க்கி காதல‌ன் அந்த‌ஸ்த்துக்கும் கொண்டு செல்ல‌லாம். இவ்வ‌ள‌வு ஏன் அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் அறிவிக்காத‌ வ‌ரை காத‌லுக்கு அதிகார‌ப்பூர்வ‌ அந்த‌ஸ்து இல்லை என்று க‌ருத‌ப்ப‌டும் வ‌ழ‌க்க‌ம் உருவாகியுள்ள‌து தெரியுமா? ஃபேஸ்புக்கில் வெளியீட்டால் தான் காத‌லிலேயே சேர்த்தி என‌ நினைக்கும் அள‌வுக்கு நில‌மை இருக்கிறது.

 குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை கூட‌ காத‌ல் வாக‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். பெரும்பாலும் செய்தி வெளியீட்டுக்கே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ந்தாலும் இத‌ன் ப‌கிர்வு த‌ன்மையை காத‌ல‌ர்க‌ளும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம்.

அதிலும் க‌ண்ட‌தும் காத‌ல் கொண்டு விடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் நேற்று தியேட்டரில் அவ‌ளைப் பார்த்தேன், பார்த்த‌தும் ம‌ன‌தை ப‌றிகொடுத்துவிட்டேன் என்று ஒரு டிவிட்ட‌ர் செய்தியை த‌ட்டிவிட்டு காத‌ல் உல‌கில் நுழைய‌லாம். அவ‌ளும் கூட‌ அந்த‌ டிவிட்டை பார்த்துவிட்டு ‘காத‌லா, காத‌லா’ என அழைத்து ப‌தில் செய்தி மூல‌ம் காத‌லை உறுதிப்ப‌டுத்த‌லாம்.

அநேக வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன். அவ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்வ‌து அவர‌வ‌ர் கையில் தான் இருக்கிற‌து. ஃபிளிக்க‌ர் மூல‌ம் புகைப‌ப‌ட‌ காத‌லில் ஈடுப‌ட‌லாம். யூடியூப் வ‌ழியே வீடியோ காத‌லிலும் திளைக்க‌லாம். அது ம‌ட்டுமா இன்று காத‌ல் வ‌லை வீசுவ‌த‌ற்கான‌ நீர் ப‌ர‌ப்பும் ப‌ர‌ந்து விரிந்து கிட‌க்கிற‌து.

 சும்மா உள்ளூரில் தான் காத‌ல் த‌வ‌ம் இருக்க‌ வேண்டும் என்றில்லையே. இன்டர்நெட்டில் நுழைந்து விட்டால் வைய‌மே ந‌ம‌க்கான‌ இட‌மாகிவிடாதா? ஊர், ந‌க‌ர‌ம் என்ற‌ வ‌ரைய‌ரை இல்லாம‌ல் இமெயில் முல‌மோ ம‌றுப‌டியும் ஃபேஸ்புக் முல‌மோ யாரை வேண்டுமானால் தொட‌ர்பு கொண்டு ந‌ட‌பை வளர்த்துக் கொண்டு காத‌ல் ப‌ய‌ண‌த்தையும் துவ‌க்க‌லாம்.

இன்டர்நெட்டின் வ‌ருகைக்கு பின் காணாம‌லே காத‌ல் த‌த்துவ‌த்துக்கு புத்துயிர் கிடைத்திருக்கிற‌து. நேரில் பார்க்க‌மாலேயே இமெயில் வாயிலாக‌ அறிமுக‌மாகி… காத‌லர்களாகி… அதன்‌ பின், முத‌ல் முறையாக நேரில் ச‌ந்தித்துக்கொண்ட‌ ந‌வீன‌ காத‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர். இதெல்லாம் ஒரு த‌லை ராக‌ த‌லைமுறைக்கு சாத்திய‌மாகாத‌ வ‌ச‌திக‌ள். மற்ற துறையைப் போலவே இன்டர்நெட் காத‌ல‌ர்க‌ளூக்கும் புதிய‌ க‌த‌வுக‌ளை திற‌ந்துள்ள‌து.

ஆனால், ஒன்று… இன்டர்நெட் காத‌ல் ஆப‌த்துக்க‌ள் நிறைந்த‌து என‌பதை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது. இமேயில் மூல‌ம் அறிமுக‌மாகி தப்பான‌வ‌ர்க‌ளின் வ‌லையில் விழுந்து ஏமாந்த‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ உள்ள‌ன‌ர். கியுபா முன்னாள் அதிப‌ர் காஸ்ட்ரோவின் ம‌க‌ன் இப்ப‌டி அமெரிக்க‌ வாலிப‌ர் ஒருவ‌ரை கொல‌ம்பிய‌ அழ‌கி என‌ நினைத்து ஏமாந்த‌ க‌தையும் இருக்கிற‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ஃபேஸ்புக் புதிய‌ உற‌வுக்கு எப்ப‌டி உத‌வுகிற‌தோ அதே போல‌ உற‌வுக்கும் வேட்டு வைக்க‌லாம். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளில் ப‌ல‌ர் ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ள் அல்ல‌து முத‌ல் காத‌ல‌னை/காதலியை தேடும் ப‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தும், அவ‌ர்க‌ளில் சில‌ர் இதில் வெற்றி பெற்று ப‌ழைய உற‌வை புதுப்பித்துக் கொண்டு புதிய‌ உற‌வில் சிக்க‌லை தேடிக்கொள்வ‌து குறித்தும் இன்டர்நெட் உல‌கில் ப‌திவுக‌ள் இருக்கின்ற‌ன.

எனவே, எச்சரிக்கை தேவை! ஆதி கால‌ காத‌லோ இன்டர்நெட் காத‌லோ, காத‌லுக்கான‌ பொன்விதிக‌ள் எப்போதுமே பொதுவ‌னாவை.

அதை நினைவில் கொண்டால் காத‌ல் வ‌ச‌ப்ப‌டும்!

———–

நன்றி;யூத்புல் விகடன்

டிவிட்டருக்கு ஒரு சோதனை

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது.
அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் செய்தி நிறுவனங்களூக்கு உலக நடப்பு பற்றி செய்தி க‌ண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.

இவ‌ற்றைத்த‌விர‌ வேறு க‌ட்டுப்பாடுக‌ளும் உண்டு.அந்த‌ ப‌ண்ணை வீட்டில் இருக்கும் க‌ம்ப்யூட்ட‌ர்க‌ளில் ப‌ழைய‌ த‌க‌வ்ல்க‌ள் எதுவும் இல்லாம‌ல் வெறுமையாக்வே இருக்கும். அவ‌ர்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும் செல்போனை கொண்டு இண்டெர்நெட்டில் உலா வ‌ர‌ முடியாது.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் இர‌ண்டுமே செய்தி வெளியீட்டில் உத‌வுவ‌தாக‌ பேச‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. அதிலும் குறிப்பாக‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌வும் செய்திக்ளை வெளியிட‌வும் ஏற்ற‌தாக‌ இருப்ப‌தாக‌ புக‌ழ‌ப்ப‌டுகிற‌து.

ஈரான் தேர்த‌ல் பிர‌ச்ச‌னையின் போது டிவிட்ட‌ர் அட‌க்கு முறைக்கு ந‌டுவே செய்தியை வெளிக்கொண‌ர்வ‌தில் பெரும் புர‌ட்சியையே உண்டாக்கிய‌து. ச‌மீப‌த்தில் ஹைதி நில‌ந‌டுக்க‌த்தின் போது கூட‌ டிவிட்ட‌ர் செய்தி வெளியிட்டு சாத‌ன‌மாக‌ பேரூத‌வி புரிந்த‌து.

அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து.என்வே டிவிட்ட‌ர் செய்திக‌ளீன் ந‌ம்ப‌க‌த்த‌ன‌மை குறித்த கேள்விக‌ள் உள்ள‌ன‌.
இந்த‌ பின்ன‌ணியில் டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக்கின் செய்தி வெளியீட்டுத்தன்மையின் வ‌ர‌ம்புக‌ளை ப‌ரிசோதித்து பார்த்து விடுவ‌து என்று தீர்மானித்து தான் இந்த‌ ப‌ரிசோத்னைக்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
அடுத்த் மாத‌ம் முத‌ல் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ இந்த‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் க‌ன‌டா,சுவிஸ்,பிரான்ஸ்,பெல்ஜிய‌ம்,நாடுக‌ளைச்சேர்ந்த‌ வானொலி நிருப‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ள‌ன‌ர். பிரான்சில் இந்த‌ சோத்னை நிக‌ழ‌ உள்ள‌து.

செய்தி வெளியிட்டில் டிவிட்ட‌ரை எந்த‌ அள‌வுக்கு ந‌ம்ப‌லாம் என்று இந்த‌ சோத‌னை உண‌ர்த்தும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

டிவிட்டரில் பில்கேட்ஸ்

நின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புக‌ழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும் போது தொண்டர்கள் ஆதரவாளர்களும் குவிந்து விடுகின்றனர்.பில் கேட்ஸ் வருகையில் இது நிகழ்ந்திருக்கிறது.அதாவது கட்சி ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கில் தொண்டர்கள் சேருவது போல டிவிட்டரில் அவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்கள் கிடைத்துள்ளனர்.

பில் கேட்சின் செல்வாக்கின் அடையாளம் இது.
குறும்பதிவு சேவையான‌ டிவிட்டரை பல பிரப‌லங்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.புதிதாக பிரபலங்களும் டிவிட்டரில் ஐக்கியமாகி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌து பிர‌ப‌ல‌ம் டிவிட்ட‌ருக்கு வ‌ரும் போதும் அது க‌வ‌ன‌த்தை ஈர்க்கிற‌து.செய்தியாகிற‌து. விவாதத்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

குறிப்பிட்ட‌ அந்த‌ பிர‌ப‌ல‌ம் டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்து கொள்ளும் த‌க‌வ‌ல்க‌ளை ப‌டிப்ப‌தில் இணைய‌வாசிக‌ளுக்கு ஆர்வ‌மும் உண்டாகிற‌து.விளைவு ப‌ல‌ரும் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளாக‌ இணைகின்ற‌ன‌ர்.

ஒரு சில‌ பிர‌ப‌ல‌ங்க‌ளுக்கு ஆயிர‌க்க‌ண‌க்கில் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் கிடைக்க‌லாம். சில‌ருக்கு ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் கிடைக்க‌லாம்.இத‌ற்கு நால் க‌ண‌க்கில் ஆக‌லாம்.வார்க்க‌ண‌க்கில் ஆக‌லாம்.

ஆனால் அபூர்வ‌மாக‌ ஒரு சில‌ருக்கு எடுத்த‌ எடுப்பிலேயே அயிர‌க்க‌ன‌க்கில் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் கிடைத்து அந்த‌ என்ணிக்கை வெகு விரைவிலேயே ல‌ட்ச‌க்க‌ண்க்கில் உய‌ரலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விஷ‌ய‌த்தில் இந்த‌ அபூர்வ‌ம் சாத்திய‌மாகியுள்ள‌து.பில் கேட்ஸ் டிவிட்ட‌ரில் நுழைந்த‌ செய்தி வெளியான் உட‌னேயே அவ‌ருக்கு 10 ஆயிர‌ம் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ள் கிடைத்து விட்ட‌ன‌ர்.அடுத்த‌ சில‌ ம‌ணியில் இது 25 ஆயிர‌மாக உய‌ர்ந்து 8 ம‌ணி நேர‌த்துக்குள் ஒரு ல‌ட்ச‌த்தை தாண்டிவிட்ட‌து.

இத‌னை ஒரு டிவிட்ட‌ர் சாத‌னை என்றே சொல்ல‌ வேண்டும்.
பில் கேட்ஸ் டிவிட்டர் வருகையை சக டிவிட்டர் பிரபலங்களூம் வரவேற்றுள்ளனர்.

அடிப்படையில் ஒரு புரோகிராமர் என்பதால் கேட்ஸ் முதல் டிவிட்டை  புரோகிராம‌ர்க‌ள் மொழியில் ஹ‌லோ வோர்ல்டு என‌ குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டிருந்தார்.

கேட்ஸ் டிவிட்ட‌ர் செய்வ‌தை இங்கே பார்க்க‌வும்..http://twitter.com/billgates