Tag Archives: தேடியந்திரம்

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும்.

மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை தொடர்பான குறிப்புகளை யார் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம். எவர் வேண்டுமானாலும் திருத்தலாம்.இசை தொடர்பான தகவல் என்றால் கட்டுரைகளோ ,பாடகர்கள் அல்லது இசைக்குழுக்கள் குறித்த த‌க‌வ‌ல்க‌ளோ இல்லை.மாறாக நோட்ஸ் என்று சொல்லப்படும் பாட‌ல்க‌ளின் இசைக்குறிப்புக‌ள் இட‌ம் பெறுகின்ற‌ன‌.
அதாவ‌து பாட‌ல்க‌ளுக்கான‌ மியுசிக் ஷீட்டை அப்ப‌டியே ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.நிச்ச‌ய‌ம் இசை க‌லைஞ‌ர்க‌ளுக்கும் இசை ஆர்வ‌ல‌ர்க‌ளுக்கும் இது ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.குறிப்பாக‌ இசையை ப‌யில்ப‌வ‌ர்க‌ளுக்கு பேரூத‌வியாக‌ இருக்கும்.
இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ ம‌ற்றொரு சிற‌ப்பம்ச‌ம் பாட‌ல்க‌ளை தேடுவ‌த‌ற்கான‌ வ‌ச‌தி.சில‌ நேர‌ங்க‌ளில் பாட‌லக‌ளின் மெட்டு தெரியும். என்ன‌ பாட‌ல் என்று தெரியாது அல்ல‌வா?அது போன்ற‌ பாட‌ல்க‌ளை மெட்டை குறிப்பிட்டு தேட‌லாம்.

நினைவில் இருக்கும் மெட்டை விசில‌டிப்ப‌து போல‌ வாயால் வாசித்துக்காட்ட‌லாம்.இல்லை விசைப்ப‌ல‌கை மூல‌ம் இசைத்துக்காட்ட‌லாம்.

—————

http://www.musipedia.org/

அந்த கால தேடியந்திரங்கள்

25-05_excite_98——-தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.தேடல் என்றாலும் கூகுல் என்றாகிவிட்டது.இருப்பினும் கூகுலுக்கு முன்னரே மகத்தான தேடியந்திரங்கள் இருந்திருக்கின்றன.

அல்டாவிஸ்டா,இன்க்டோமி,கோ,எக்ஸைட்,லைகோஸ்..

இப்போது இந்த பட்டியலை பார்க்கும் போது இதெல்லாம் என்ன ஹாலிவுட் படங்கலீன் பெயரா என்று கேட்கத்தோன்றும்.ஆனால் இவையெல்லாம் ஆரம்ப காலத்தில் கொடி கட்டிப்பற‌ந்த தேடியந்திரங்கள் தெரியுமா?இன்னும் பல தேடியந்திரங்கள் இருந்தன. அவை பிரபலமாகவும் இருந்தன.

ஆனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்த கூகுல் முன்னுக்கு வந்து இன்று தேடல் உலகை மொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு விட்டது.

இதற்கான காரணங்களை அலச முற்பட்டால் பெரிய ஆய்வே நடத்த வேண்டும்.

அதைவிட அந்த கால தேடியந்திரங்களை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.

சிக்ஸ்ரிவிஷ‌ன்ஸ் என்னும் இணைய‌த‌ள‌ம் ப‌ழைய‌ தேடிய‌ந்திர‌ ப‌ட்டிய‌ல் ஒன்றை வெளியிட்டுள்ள‌து. அந்த‌ ப‌ட்டிய‌ல் இதோ….

———–
link;
http://sixrevisions.com/web_design/popular-search-engines-in-the-90s-then-and-now/

வீட்டுக்கு வரும் கூகுல் வானம்

google-sky-1கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது.
கூகுல் தேடியந்திரம், கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் என்னும் பெயரில் வரைபட சேவையை வழங்கி வருவது தெரிந்ததே.
கூகுல் மேப்ஸ், உலகின் வரை படங்களை வழங்குகிறது என்றால், கூகுல் எர்த் பூமியின் செயற்கைக் கோள் காட்சிகளை வழங்குகிறது.
கூகுல் எர்த் சேவையின் மூலம் விண்ணில் இருந்து பார்ப்பது போல பறவை பார்வையாக பூமியை காண முடியும்.
பின்னர் திரைப்படங்களில் ஜூம் செய்யப்படுவதை போல குளோசப் காட்சிக்கு மாறி, குறிப்பிட்ட பகுதியில் தெருக்களை கூட, ஏன் வீடுகளை கூட பெரிதாக்கி பார்க்க முடியும்.
கூகுலின் சேவை பலரை வீட்டில் இருந்தபடியே புவி முழுவதும் உலாவ வைத்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக இப்போது கூகுல், அனைவரையும் வீட்டில் இருந்தபடி வானத்தில் உலாவும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
அதாவது உங்கள் வீட்டுக்குள் ளேயே வானத்தை கூகுல் கொண்டு வந்திருக் கிறது. வீடு என்றால், உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் என்று பொருள்.
கூகுல் எர்த் சேவையின் ஒரு விரிவாக்கமாக “ஸ்கை’ என்னும் பெயரில் இந்த புதிய சேவை அறிமுகமாகியிருக்கிறது.
பெயரை போலவே இந்த சேவை வானத்தை, புகைப்பட காட்சியாக முன்வைக்கிறது. கூகுல் ஸ்கையை டவுன்லோடு செய்து கொண்டால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் வானம் அடங்கிவிடும் சாரி விரிவடைந்து விடும்.
அதன் பிறகு மவுஸ் நகர்த்தலில் வானத்தில் உள்ள கோடிக்கணக் கான நட்சத்திரங்களையும், லட்சக் கணக்கான பிரபஞ்சங்களையும் பார்த்து ரசிக்க முடியும்.
ஒரு காலத்தில் ஓய்வான மன நிலையில் இருக்கும் போது, வானத்தை அன்னாந்து பார்த்து ரசிக்கும் வழக்கம் பலருக்கு இருந் தது. மனதை லேசாக்கி ஒரு வித மகிழ்ச்சியை தரக்கூடிய அனுபவம் இது. இயற்கையோடு ஒரு புள்ளி யாக நாமும் கரைந்துவிடும் உணர்வை தரும் உன்னத அனுபவ மாக இதனை உணர்ந்தவர்கள் உண்டு.
ஆனால் நகரத்து நெரிசலிலும், நவீன வாழ்க்கையின் நெருக்கடியி லும் வானம் பார்ப்பதற்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.
இந்த குறையை போக்கும் வகை யில் கூகுல் ஸ்கை கம்ப்யூட்டரில் வானத்தை பளிச்சிட வைத்திருக்கிறது.
வானவியல் சார்ந்த இணைய தளங்கள் பலவற்றில் வானத்தின் காட்சிகளையும், நட்சத்திரங்களின் புகைப்படங்களையும் காண முடியும். ஆனால் அவையெல்லாம் வெறும் புகைப்படங்கள்தான்.
கூகுல் ஸ்கை அவ்வாறு இல்லாமல், வானத்தை உண்மையா கவே பார்க்கக்கூடிய உணர்வை ஏற்படுத்தித் தரும் வகையில் வானத்தின் புகைப்படங்களை ஒன்றிணைத்து தருகிறது.
இதற்காக லட்சக்கணக்கான புகைப்படங்கள் ஒன்றாக வைத்து தைக்கப் பட்டிருக்கின்றன.
பராசக்தி படத்தில் வரும் வசனத்தை போல, இந்த சேவையால் கூகுலுக்கு என்ன பயன்? கூகுலுக்கு என்ன அக்கரை என்று கேட்க தோன்றலாம். கூகுலுக்கு இதனால் நேரடியான பலன் எதுவும் இல்லை.
நிறுவனமாக கூகுலிடம் ஒரு நல்ல பழக்க இருக்கிறது. ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் கூகுல், அவற்றில் மிக முக்கியமாக, ஊழியர்கள் 10 சதவிகித வேலை நேரத்தை தங்கள் சொந்த விருப்பம் சார்ந்த ஆய்வுப் பணிகளில் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட கூகுல் பொறியாளர்கள் சிலர் இந்த திட்டத்தை முன்வைக்கவே கூகுல் அதனை ஏற்று கொண்டு முழு சேவையாக உரு வாக்கி, கூகுல் ஸ்கையை இணைய வாசிகளுக்கு வழங்கியிருக்கிறது.
இணையவாசிகளுக்கு புதிய வகை யான தகவல்களை கொண்டு செல்ல வேண்டும் என்னும் விருப்பத்தின் விளைவாக கூகுல் ஸ்கை அறிமுகம் செய்யப்பட்டி ருப்பதாக கூகுல் எர்த் திட்டத்தின் மேலாளர் ஒருவர் கூறுகிறார்.
கூகுல் வரைப்படங்களின் விசேஷ அம்சம் என்னவென்றால், அந்த வரை படத்தின் மீது இருப்பிடம் சார்ந்த தகவல்களை இணைய வாசிகள் ஒட்டவைத்து, முற்றிலும் புதிய சேவை களை உருவாக்கி கொள்ளலாம்.
கூகுல்ஸ்கையிலும், இதே போல இணையவாசிகள் தாங்கள் விரும் பும் தகவல்களை ஒட்டவைத்து முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
வானத்தை மட்டும் பார்த்து ரசிக்கா மல் அதில் உள்ள நட்சத்திரங்கள் பற்றிய விவரம் அல்லது நட்சத்திரம் வெடித்து சிதறுவதன் விவரிப்பு ஆகியவற்றை ஒட்டவைக்கலாம்.
இவ்விதமாக, புதிய வால் நட்சத்திரம் தென்படுகிறது என்றால், அதன் வருகையை கூகுல் ஸ்கையில் உணர்த்தலாம்.
இது போன்ற வாய்ப்புகளால் கூகுல் எர்த், வானவியலை உங்கள் வீட்டின் பின்புறத்திற்கே கொண்டு வந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
அதுதான் கொல்லைபுற வானவியல்.

=———–

link;
http://earth.google.com/sky/index.html

வெல்வதற்கு ஒரு தேடியந்திரம்

askவின்ஸி டாட் காம், (Winzy.com) தேடியந்திரத்தை பேராசைக்காரர் களுக்கான தளம் என்று தான் வர்ணிக்கத் தோன்றுகிறது.
.
ஒவ்வொரு முறை தகவல்களை தேட முற்படும்போதும், கேட்டத் தகவல் களை தருவதோடு, பரிசும் தருவதாக செல்லும் தேடியந்திரத்தை வேறு எப்படி அழைப்பது? ஆம், ஒவ்வொரு தேடலும் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு என்று ஆசை காட்டு கிறது வின்ஸி டாட் காம்.

ஆனால் இது இணையவாசிகளின் பிழை அல்ல. தேடியந்திரங்களிடம் அவர்கள் நெத்தியடி பாணியில் தகவல்களை எதிர்பார்க்கின்றனரேத் தவிர, தாராள மனதோடு பரிசு வழங்க வேண்டும் என்று கேட்பதில்லை. இது போட்டியில் முன்னிற்பதாக தேடியந் திரம் தானாக கண்டு பிடித்திருக்கும் உத்தி.

தேடியந்திரக் கடலில் ஏற்கனவே ஏகப்பட்ட தோனிகளில் எண்ணற்ற கப்பல்களும் மிதந்து கொண்டிருப்ப தால் புதிதாக வரும் தேடல் தேனிகள் கவனத்தை ஈர்க்க தேடல் அல்லாத வழிகளையும் நாடத்தான் வேண்டி யிருக்கிறது. இந்த நிதர்சனத்தை புரிந்துகொண்டே வின்ஸி டாட் காம் தேடி வருபவர்களுக்கு பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பும் தருவதாக அழைப்பு விடுக்கிறது.

ஆனால் ஒன்று பரிசுக்கான பொருட் களை கவனமாகவும், கன்னியமாக வும் தேர்வு செய்துள்ளனர். ‘ஐ-பாடு’ இசை கேட்பு சாதனத்தை வெல்லுங்கள், எக்ஸ் பாக்ஸ் வீடியோ கேம் உங்களுக்காக காத்திருக்கிறது போன்ற அறிவிப்புகள் நிச்சயம் தொழில் நுட்ப பிரியர்களை கவர்ந்திழுக்கும்.

இப்படி இணையவாசிகள் பொருட் படுத்தக்கூடிய பரிசுகளுக்கு நடுவே ரொக்கப்பரிசும் உண்டு. ‘வின்ஸி’யாஸ் எப்படி பரிசுகளை வாரி வழங்க முடிகிறது என்று சந்தேகம் எழலாம். இணையவாசிகள் வந்து எட்டிப்பார்க்கும் ஒவ்வொரு முறையும் தொடர்புடைய விளம்பர இணைப்பு களின் மூலம் வருவாய் வரும் பழைய கணக்குதான் தாராளத்தை தாங்கி நிற்கிறது. உண்மையில் ‘வின்ஸி’ புதிதாக எந்த சேவையையும் வழங்க வில்லை.

தேடியந்திரம் என்று பெயரேத் தவிர அதனிடம் சுயமாக தேடல் உத்தி கிடையாது. மேம்பட்ட தேடல் சேøயை வழங்கும் ஒரு சில தளங்களைப் போல பிரபலமான ஆக்ஸ் டாம் காம் தேடியந்திர சேவையை பயன்படுத்தியே இது முடி வுகளை பட்டியலிட்டுக் காட்டுகிறது.

இதன் தனித்தன்மை தகவல்களோடு தரப்படும் பரிசுகளில் தான் இருக்கிறது. இதுவும் கூட பழைய உத்திதான். டாட் காம் அலைவீசிய காலத்தில் ஐவின் டாட் காம் தளம் இதனை தான் செய்தது.

ஆனால் டாட் காம் அலை அடங்கும் முன்பே இந்த தளங்கள் காணாமல் போய் விட்டன. இப்போது வின்ஸி மீண்டும் பரிசு மழையை பெய்விக்க முயற்சிக்கிறது. வின்ஸி பரிசுகளோடு நின்று விட வில்லை. போனசாக வேறு சில விஷயங்களையும் செய்கிறது. எனவே தான் இந்த தளத்தை கவனிப்பது அவசியமாகிறது.

வின்ஸியில் மூன்று விதமாக பரிசு களை வெல்லலாம். முதல் முறை தேடினாலே போதும் என்பது இரண்டாம் முறை உங்கள் நண்பருக்கு வின்ஸியை பரிந்துரை செய்து அவர்கள் இதனை பயன்படுத்தி பரிசை வெல்லும்போது உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும்.

மூன்றாவது முறையில் மாதந்தோறும் நடக்கும் குலுக்கல் போன்ற போட்டியில் பங்கேற்று பரிசை வெல்ல முடியும். நன்றாக கவனித்தீர்கள் என்றால் இவை எல்லாமே இந்த தளத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இருப்பது புரியும்.

தொடர்ந்து வரச்செய்வதோடு, வரு பவர்களை கவரும் வகையில் வலைப் பின்னல் வசதியும் தருகிறது. அதாவது நீங்கள் பரிந்துறைக்கும் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய அவர்களுடன் தொடர்பு கொள்ள தங்களுக்கென தனிப் பக்கத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

இதேபோல தங்களுக்கென தனிக் குழுக்களை அமைத்துக்கொண்டு புள்ளிகளை சேகரித்தபடி பரிசுகளை வென்றுகொண்டே இருக்கலாம். இதைத்தவிர, பிரபல பிரவுசர்களுக் கான சூப்பர் வசதியும் உண்டு.

தேடல் நோக்கம் நிறைவேறுவ தோடு, கூடவே பரிசுகளும் கிடைக்கும் போது கசக்கவா செய்யும் என்றும் வின்ஸியை புகழலாம். வந்த வேலையை விட்டுவிட்டு கவனத்தை சிதற விட்டு நேரத்தை விரயமாக்குவது தேவையா? என்றும் கேட்கலாம்.

————–

link;
www.winzy.com

வேலை வேட்டை தளம்

வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம்.
.
வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை பயோடேட்டா கடலில் தேடிப்பார்க்க வும் முடியும்.

இந்த வகையில் வேலைத் தேடுபவர் மற்றும் வேலை தருபவர் இடையே பாலமாக வேலைவாய்ப்பு தளங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்திற்கும் அதன் தனித் தன்மைக்கேற்ப கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற மான்ஸ்டர் டாட்காம் தளத்தில் துவங்கி, வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளங்களின் பொது அம்சம் மேலே குறிப்பிட்டவையாகத்தான் இருக்கும்.

ஆனால் ஜாப்-ஹன்ட் தளத்தில் இந்த அம்சம் எதுவுமே கிடையாது. இந்த தளத்தில் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை இடம் பெற வைப்பதற் கான வழி கிடையாது.

நிறுவனங்களும் தங்களது அறிவிப்பை இங்கே இடம் பெற வைக்க முடியாது. என்றாலும் கூட இந்த தளம் வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு சகல விதங்களிலும் உதவக்கூடிய தளமாகவே இருக்கிறது.

உண்மையில் வேலை வேட்டை என்று பொருள்படும் இந்த தளத்தின் பெயருக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய வகையில் இந்த தளம் வேலை வாய்ப்பை பெற உதவி செய்கிறது.

வேலை தேடுபவர்களின் விவரங் களை பதிவு செய்ய அனுமதிக்கா விட்டாலும், இந்தத்தளம், மற்ற வேலை வாய்ப்பு தளங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. இவ்வாறு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பு இணைப்புகள் இந்த தளத்தின் அடிநாதமாக விளங்குகின்றன.

இணையவாசிகள் தங்களுக்கு தேவையானதை பெறக் கூடிய வகை யில் இந்த இணைப்பு கள் அனைத்தும் அவற்றுக்குரிய தலைப்பு களின் கீழ் தொகுத்து அளிக் கப் பட்டுள்ளன.
முன்னணி வேலை வாய்ப்பு தளங்க ளோடு இத்தளம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற் றில் உள்ள விவரங் களை இணையவாசிகளுக்கு அளிக் கிறது.

எனவே இந்தத்தளம் வேலை தேடி வருபவர்களுக்கு பய னுள்ள தகவல்களை சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

வேலைதேடும் போது கவனிக்க வேண்டியவை, பயோடேட்டாவை தயார் செய்யும் முறை. எந்த வேலை வாய்ப்பு தளத்தில் யார் வேலை தேடலாம் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகள் இந்த கட்டுரைகளில் உள்ளன.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த தளம், ஏற்கனவே வேலையில் இருந்து அதனை இழந்து தவிப்பவர் களை மனதில் வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது ஒரு வழி தானே தவிர, அதுவே ஒரு இறுதியான இடம் அல்ல என்பது இந்த தளத்தின் கொள்கையாக இருக்கிறது.

இந்த தளத்தின் உரிமையாளரான சூசன் ஜாய்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை இழந்து தவித்த போது, தன் போன்றவர்களுக்கு மறு வேலைவாய்ப்பை தேடித் தருவதற் காக இந்த தளத்தை நடத்தலானார்.

ஏற்கனவே செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு தளத்தை விலைக்கு வாங்கி, அதனை தற்போதைய பாதைக்கு அவர் அழைத்து வந்திருக்கி றார். பிரதானமாக அமெரிக்காவை மையமாக கொண்டே இந்த தளம் செயல் படுகிறது. அமெரிக்காவில் ஒவ் வொரு மாநிலம் அல்லது நகரத்திலும் உள்ள வாய்ப்புகளையெல்லாம் தனித்தனியே பட்டியலிட்டிருக்கின்றனர்.

எனவே நம்மவர்களுக்கு நேரடி யாக பயன் படும் என்று சொல்ல முடியாவிட்டாலும், நம்மூரில் இந்த தளத்தை பின்பற்றி ஒரு சிறப்பான வேலை வாய்ப்பு தளத்தை அமைப்பதற் கான உந்து சக்தியாக இந்த தளம் அமையலாம்.

————-
link;
www.job-hunt.org