Tag Archives: தேட‌ல்

பேஸ்புக்கால் இணைந்த குடும்பம்

37 ஆண்டுகளுக்கு பின் தந்தை மகனும் ஒன்றிணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தானே. அதைவிட ஆச்சரியம் கடந்த 37 ஆண்டுகளாக பரஸ்பரம் தேடிக்கொண்டிருந்த இந்த இருவரும் வலை பின்னல் தளமான பேஸ்புக் மூலம் இணைந்திருப்பதுதான். 
.
கிரஹாம் கார்பட் மற்றும் அவரது மகனான ஸ்பியர்ஸ் கார்பட் ஒன்றிணைந்த விதம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது பார்க்கக்கூடிய தந்தை  மகன் தேடல் கதையை விட மிகவும் சுவாரஸ்யமானது, நெகிழ்ச்சியானது.  ஸ்பியர்ஸ் கார்பட்டுக்கு தற்போது 39 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ஒரே லட்சியம் தன்னுடைய தந்தையை தேடி கண்டுபிடிப்பதுதான். 37 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஸ்பியர்ஸ் 2 வயது குழந்தையாக இருந்தபோது அவரது அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு நினைவு தெரிந்த நாள் முதலாக ஸ்பியர்ஸ் தன்னுடைய தந்தையை சந்திக்க விரும்பியிருக்கிறார். என்றாவது ஒருநாள் அப்பாவை பார்த்துவிட முடியும் என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்போடு தேடல் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். சமீப காலமாக இன்டர்நெட் மூலமும் அவர் தந்தையை தேடியிருக்கிறார். இந்த முயற்சியில் எந்தவிதமான பயனும் கிடைக்காத நிலையிலும் அவர் மனந்தளராமல் தனது தேடலை தொடர்ந்திருக்கிறார்.

தற்போது இன்டர்நெட்டில் பிரபலமான விலாசமாக இருக்கும் பேஸ் புக் வலைப்பின்னல் தளத்தில் பெரும்பாலானோருக்கு சொந்த பக்கம் இருப்பதை உணர்ந்திருந்த ஸ்பியர்ஸ் பேஸ்புக் தளத்திலும் தன்னுடைய தந்தை பற்றிய தகவல்களை தேடியிருக்கிறார்.

தந்தையின் பெயரை டைப் செய்து விட்டு படபடக்கும் இதயத்தோடு தேடல் முடிவுகளை ஆராய்ந்த அவருக்கு இதுவரை ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. ஆனால் சமீபத்தில் ஒருநாள் பொறி தட்டி தந்தையின் பெயரில் ஒரு மாற்றத்தை செய்து தேடியிருக்கிறார். இது வரை ஸ்பியர்ஸ் எனும் பெயரை தந்தையுடன் சேர்த்து தேடிய அவர் இப்போது கிரஹாம் கார்பட் என தேடி பார்த்திருக்கிறார்.

இந்த தேடலின் பயனாக 15 கிரஹாம் கார்பட்டுகளின் பேஸ்புக் பக்கங்கள் வந்து நின்றிருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தபோது குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் இருந்த புகைப்படத்தை கண்டதுமே அவரது இதயம் உற்சாகத்தில் கூடுதலாக அடித்துக்கொண்டது.

அந்த புகைப்படத்தில் இருந்தவர் 30 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் எப்படி இருப்பாரோ அதே தோற்றத்தில் இருந்த அந்த மனிதரை பார்த்ததுமே அவர்தான் தனது தந்தையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. கண்ணில் நீர்மல்க படபடக்கும் கைகளில் அவருக்கு இமெயில் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த இமெயிலை பெற்ற கிரஹாம் கார்பட்டும் உண்மையில் நெகிழ்ந்துதான் போனார். அவரும் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனை பலவிதமாக தேடிக்கொண்டுதான் இருந்தார். இப்போது வந்த பேஸ்புக் செய்தி மகன் தனக்கு கிடைத்துவிட்டதை அவருக்கு உணர்த்தியது.  

இமெயில் பரிமாற்றத்திற்கு பிறகு தந்தையும் மகனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்போது நெகிழ்ச்சியாக 3 மணி நேரத்திற்கும் மேல் அவர்கள் விளையாடி இருக்கின்றனர். ஸ்பியர்ஸ் தன்னுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளையும் கண்டு மகிழ்ந்திருக்கிறார்.  

தந்தையான கிரஹாமும் தனது பேரனை கண்டு மகிழ்ந்திருக்கிறார். இந்த சந்திப்பை ஒரு இண்டர்நெட் கால அதிசயம் என்று சொல்ல வேண்டும். பேஸ்புக் சாத்தியமாக்கிய அதிசயம்.இந்த தேடலில் பேஸ்புக் கைகொடுத்தது தற்செயலான ஒன்றா அல்லது உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் இந்த வலைப்பின்னல் சேவையின் ஆதார குணத்தினால் நிகழ்ந்ததா என்பது சிந்தனைக்குரிய கேள்வி.

பிடித்தமான பாடக‌ர்களை கண்டுபிடிக்க உதவும் இணையதள‌ம்.

எனக்கு உமா ரமணன் பாடிய பாடல்களை மிகவும் பிடிக்கும். அதே போல பி எஸ் சசிரேகா,ஜென்ஸி,எஸ் என் சுரேந்தர்,ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்,வாணி செயராம ஆகியோர் பாடிய பாடல்களும் மிகவும் பிடிக்கும்.

நிற்க இது எனது தனிப்பட்ட ரசனை பற்றிய பதிவு அல்ல. அவர்களின் குரலில் உள்ள பொது தன்மை கவனிக்கத்தக்கது, எஸ் பி பி யின் குரல் வெகுஜன வகை என்றால் சுரேந்தரின் குரல் கொஞ்சம் வித்தியாசமான அழகை கொண்டது.

மேலும் சுரேந்தரை பிடித்திருந்தால் ஜென்ஸியை பிடித்திருக்கலாம்.செயச்சந்திரனை பிடித்திருக்கலாம்.தீபன் சகரவர்த்தியையும் பிடித்திருக்கலாம். இது பொது விதி அல்ல.ஆனால் ஒரே மாதிரியான குரல் வளம் கொன்டவ‌ர்களில் ஒருவரை பிடித்திருந்தால் இன்னொருவரை பிடித்துபோகலாம்.

இனி விஷயத்திற்கு வருவோம்.ஏற்கனவே அறிமுகமான பாடகர்களில் பிடித்தமானவர்கலை தேர்வு செய்வதோ அல்ல‌து அவர்களிடையேயான பொது தன்மையை கண்டு பிடிப்பதோ பெரிய விஷயமல்ல.

ஆனால் அவர்களைப்போலவே குரல் கொண்ட நம‌க்கு கேட்டதும் பிடித்து போகக்கூடிய ஒரு புதிய பாடகரை அறிமுகம் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?அதற்கான இணையதளத்தை தான் நாம் பார்க்கப்போகிறோம்.

மியூசிக் மேப் என்னும் அந்த இணையதளம் இசை கண்டு பிடிப்பு இயந்திரம் வகையை சேர்ந்தது.

அதென்ன இசை கண்டுபிடிப்பு இயந்திரம்?

புதிய இசையை கண்டுபிடிக்க உதவும் தேடியந்திரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
இணைய உலகில் மிக பிரபலம்.

நாம் அறிந்த‌ கூகுல் போன்ற‌ த‌க‌வ‌ல் தேடிய்ந்திர‌ங்க‌ளில் இருந்து இவை மூற்றிலும் மாறுப‌ட்ட‌வை.ஆங்கில‌த்தில் வாவ் ஃபேக்ட‌ர் என்பார்க‌ளே அதே போன்ற‌ ஆச்ச‌ர்ய‌த்த‌ன்மை இவ‌ற்றிட‌ம் உண்டு.

அதாவ‌து நம‌க்கு பிடித்திருக்க‌ கூடிய‌து என‌ நாமே அறிந்திராத‌ பாட‌ல்க‌ள‌ மற்றும் பாட‌க‌ர்க‌ளை ந‌ம்க்கு அறிமுக‌ம் செய்யும் ஆற்ற‌ல் கொண்டவை இவை.

இந்த‌ த‌ள‌ங்க‌ளில் தேடும் போது ந‌ம்க்கு பிடிக்க‌கூடிய‌ பாட‌ல்க‌லை இவை க‌ண்டுண‌ர்ந்து ப‌ரிந்துரைத்து விய‌க்க‌ வைக்கும்.இதெப்ப‌டி சாத்திய‌ம்?

எல்லாம் ஒரு அனுமான‌ம் தான்.ஆனால் அறிவிய‌ல் பூர்வ‌மான‌ அனுமானம்.

மேலே ஒரு பாடகர்களின் ப‌ட்டிய‌லை பார்த்தோம் இல்லையா?அதில் உள்ள‌து போல‌வே குறிப்பிட்ட‌ ஒரு பாட‌க‌ரை பிடித்திருந்தால் அதே போன்ற‌ த‌ன்மை கொண்ட‌ ம‌ற்ற‌ பாட‌க‌ர்களையும் பிடித்துபோகும்.

இந்த‌ ரச‌னைக்கான‌ பொது த‌ன்மைக‌ளை துல்லிய‌மாக‌ க‌ண்டு பிடிக்க‌கூடிய‌ சாப்ட்வேர் ஒருவ‌ருக்கு பிடிக்க‌கூடிய‌ பாடக‌ர்க‌ளை அழ‌காக‌ அடையாள‌ம் காட்டிவிடும்.

முத‌ன் முத‌லில் ப‌ண்டோரா சாப்ட்வேர் இத‌னை செய்து காட்டிய‌து. ஒருவ‌ர் த‌ன‌க்கு பிடித்த‌மான‌ பாட‌லை ச‌ம‌ர்பித்த‌தும் அத‌ன் இசைக்கூறுக‌ளை அல‌சி ஆராய்ந்து அதே போன்ற‌ கூறுக‌ள் கொண்ட‌ பாட‌ல்க‌ளை தேடி க‌ண்டு பிடித்து ப‌ரிந்ததுரைத்து அச‌த்துவ‌தோ இந்த‌ சாப்ட்வேரின் சிற‌ப்ப‌ம‌ச‌ம். ஒரு பாட‌ல் ஏன் பிடித்திருகிர‌து என்று கேட்டால் ந‌ம்க்கே கூட‌ ப‌தில் சொல்ல‌ தெரியாது ஆனால் இந்த‌ சாப்ட்வேர் த‌ன‌து செயற்கை புத்திசாலித‌த‌ன‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தி ந‌ம் ரச‌னையை ப‌குத்துண‌ர்ந்து ச‌ரியாக‌ சொல்லிவிடும்.

இதே பாணியிலான‌ இசை க‌ண்டுபிடிப்பு  இய‌ந்திர‌மாக மியூசிக்மேப் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இதில் என்ன‌ விஷேச‌ம் என்றால்,பாடக‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை வ‌ரைப‌ட‌மாக‌ அளிப்ப‌து தான்.

இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்துமே ந‌ம்க்கு பிடித்த‌மான‌ பாட்க‌ரின் பெய‌ரை ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.உட‌னே பாட‌க‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் ந‌ட‌ச‌த்திர‌ கூட்ட‌ம் போல‌ ஒரு வ‌ரைப‌ட‌மாக‌ தோன்றும். மைய‌த்தில் உள்ள‌ பாட‌க‌ர்க‌ள் நாம் கேட்டு ர‌சித்த‌ பாட‌க‌ர்க‌ளின் குர‌ல் வ‌ள‌த்துக்கு மிக‌வும் அருகாமையில் உள்ள‌வ‌ர்க‌ள் என்று பொருள். என்வே அவ‌ர்க‌ளை பிடித்திருக்க‌ வாய்ய்ப்புக‌ள் அதிக‌ம். தொலைவில் உள்ள‌வர்க‌ளை பிடித்திருக்க‌ அந்த‌ அள‌வுக்கு  வாய்ப்பு குறைவு.

புதிய‌ பாப் பாட‌க‌ர்க‌ளை அறிமுக‌ம் செய்து கொள்ள‌ இது மிக‌ச்சிற‌ந்த‌ வ‌ழி.வ‌ரைப‌ட‌மாக‌ தோன்றுவ‌து கூடுத‌ல் சுவார்ஸ்ய‌ம்.

ஜிநாட் என‌ப்ப‌டும் செய‌ற்கை அறிவு சார்ந்த‌ சாப்ட்வேரின் அடிப்ப‌டையில் இந்த‌ இய‌ந்திர‌ம் செய‌ல்ப‌டுகிற‌து.இந்த‌ த‌ள‌த்திலேயே புத்த‌க‌ங‌க்ள்,திரைப்ப‌டங்கள் ம‌ற்றும் ம‌னித‌ர்க‌ளூக்கான‌ க‌ன்டுபிடிப்பு சேவையும் இருக்கினற‌ன‌ எனப‌து க‌வ‌ன‌த்திற்குறிய‌து.

அதாவ‌து ந‌ம‌க்கு பிடித்த‌ எழுத்தாள‌ர்க‌ள், ம‌ற்றும் திரைப்ப‌ட‌ங‌க்ளின் பெய‌ரை ச‌ம‌ர்பித்து பிடிக்க கூடிய‌ எழுத்தாள‌ர‌க்ள் ம‌ற்றும் ப‌டங்க‌ளின் பெய‌ரை அறிய‌லாம்.
ஜினாட் என்னும் மைய இணையத‌ள‌த்தின் மூலமும் அணுக‌லாம்.

—————-

http://www.music-map.com/

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது.

கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார்.

கூகுல்  அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் தகவல்களை தாங்கி நிற்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்க மற்றும் மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

இணைய‌வாசிக‌ளின் ஆர‌வ‌ மிக்க‌ ப‌ய‌ன்பாட்டால் நாளுக்கு நாள் வ‌ள‌ர்ந்து கொண்டே வ‌ரும் விக்கிபீடியாவின் அதிக‌ரித்து வ‌ரும் த‌க‌வ‌ல் நிலையில் அத‌ற்கு ஈடு கொடுக்கும் வ‌கையில் விக்கிபீடியா த‌ன‌து தொழில்நுட்ப‌ வ‌ச‌தியை மேம்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டியுள்ள‌து.
இத‌ற்காக‌ நிதி திர‌ட்டு முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ரும் நிலையில் கூகுல் த‌ன் ப‌ங்குக்கு நிதி வ‌ழ‌ங்கியுள்ள‌து.

கூகுலின் உத‌வி விக்கிபீடியாவிற்கான‌ அங்கீகார‌மாக‌வும் அமைகிற‌து.

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும்.
அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை தேட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ந‌ல்ல‌ முய‌ற்சி.மென்பொருளை ம‌ட்டுமே தேட‌ உத‌வும் த‌ள‌ம் ப‌ய‌ன் மிக்க‌து தான்.

ஆனால் இந்த‌ தேடிய‌ட்ந்திர‌த்தில் எப்ப‌டி தேடுவ‌து என்ப‌து தெளிவாக‌ குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை.தமிழில் டைப் செய்ய‌ வேண்டுமா,மென்பொருளின் பெய‌ர் தெரிந்திருக்க‌ வேண்டுமா போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் தெளிவு ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

இணைய‌வாசிக‌ள் இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்த்து அத‌ன் குறை நிறைக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

—-

http://menpor.axleration.com/

உணர்வுகளால் உலா வர ஒரு இணையதள‌ம்.

ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்பில் ஆழ்த்தலாம்.உள்ளூர புன்னகைக்க வைக்கலாம்.

இப்படி ஒவ்வொரு இணையதளமும் உங்களை ஏதாவது ஒரு உணர்வில் ஆழ்த்தவே செய்யும். இந்த உணர்வின் அடிப்படையிலெயே இணையதளங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? எமோட்டிபை அதை தான் செய்கிறது.அந்த சுவாரஸ்யமான இணையசேவையை பற்றி பார்க்கலாம்.

இணைய‌ உல‌க‌ம் ஒரு கால‌த்தில் வ‌லை வாச‌ல்க‌ளால் நிர‌ம்பியிருந்த‌து.யாஹூ போன்ற வலை வாசல்கள் மூலமே இனையதை உலா வந்தோம். இன்று திர‌ட்டிக‌ள் அல்ல‌து புக்மார்க்கிங் த‌ள‌ங்க‌ள் தான் இணைய‌ உலாவுக்கு வ‌ழி காட்டுகின்ற‌‌ன‌.

டிக்,ரிடிட்,டெலிசிய‌ஸ்,என‌ நீளும் இந்த‌ வ‌ழிகாட்டி த‌ள‌ங்க‌ளின் கோட்பாடு பார்த்த‌ல்;ப‌குத்த‌ல்;ப‌கிர்த‌ல் என்று சொல்ல‌லாம். அதாவ‌து இணைய‌த்தில் பார்க்கும் த‌ள‌ங்க‌ளில் சிற‌ந்த‌வ‌ற்றை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.இந்த‌ ப‌கிர்வுக்கு முன் அவ‌ற்றை வ‌கைப்ப‌டுத்த‌ வேண்டும்.

அதாவ‌து ப‌கிர‌ விரும்பும் த‌ள‌ம் தொழில்நுட்ப‌ வ‌கையை சேர்ந்த்தா, சினிமா வ‌கையைச்சேர்ந்த்தா என‌ குறிப்பிட்டால் அந்த‌ வ‌கையில் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌டும். இப்படி முத்திரை குத்துவ‌து பொதுவாக டாக் செய்வ‌து என‌ அழைக்கப்ப‌டுகிற‌து.த‌மிழில் குறிச்சொற்க‌ள் என்று புரிந்து கொள்ள‌லாம்.

இந்த‌ குறிச்சொற்க‌ளின் உத‌வியினாலேயே இணைய‌வாசிக‌ள் த‌ங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ த‌க‌வ‌ல்களை சுல‌ப‌மாக‌ தேடி அடைய‌ முடிகிற‌து. உதார‌ண‌த்திற்கு தொழில்நுட்ப‌ செய்திகளில் ஆர்வ‌ம் மிக்க‌வ‌ர்க‌ள் தொழிநுட்ப‌ம் என்னும் குறிச்சொல்லை கிளிக் செய்தால் அந்த‌ ப‌குப்பில் உள்ள‌ த‌க‌வ‌ல்க‌ளை எல்லாம் பார்க்க‌ முடியும்.

இதெல்லாம் தெரிந்த‌து தானே என்று சொல்கிறீர்க‌ளா?

இந்த‌ முறையில் ஒரு அழ‌கான‌ மாற்ற‌மாக‌ எமோட்டிபை த‌ள‌ம் வ‌ந்துள்ள‌து என்ப‌தே ச‌ங்க‌தி. எமோட்டிபை த‌ள‌த்தில் நீங்க‌ள் குறிச்சொல் அடிப்ப‌டையில் அல்லாம‌ல் ஒரு த‌ள‌ம் உங்கள் ம‌ன‌தில் உண்டாக்கும் உன‌ர்வுக‌ளின் ப‌டி ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.

உதார‌ண‌த்திற்கு குறிப்பிட்ட‌ த‌ள‌ம் உத்வேக‌ம் த‌ர‌வ‌ல்ல‌து என‌ நீங்க‌ள் நினைத்தால் உத்வேக‌மான‌து என‌ ப‌கிர்ந்து கொள்ள‌லாம். இதே போல‌ ஒரு இணைய‌த‌ள‌ம் அல்ல‌து செய்தி அதிர்ச்சியான‌து என்றால் அத‌ற்கான‌ பிரிவில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம். இப்ப‌டியாக‌ ந‌கைச்சுவை,அதிர்ச்சி,உத்வேக‌ம்,சோக‌ம்,வேத‌னை,மிர‌ட்சி,விய‌ப்பு ,உறுத்த‌ல் என‌ எட்டு வித‌மான‌ உண‌ர்வுக‌ளின் கீழ் த‌ள‌ங்க‌ளை ப‌கிர‌லாம். உண‌ர்வுக‌ளுக்கு ஏற்றார் போல் மிக‌ அழ‌கான‌ லோகோக்க‌ளை தேர்வு செய்ய‌லாம்

.அதே போல் இந்த‌ த‌ல‌த்தில் ப‌கிர‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌லை பார்க்க‌ விரும்புகிர‌வ‌ர்க‌ள் உண‌ர்வுக‌ளின் லோகோவை கிளிக் செய்தால் போதும் அத‌ற்கான‌ பாட்டிய‌ல் தோன்றும். டிக் போன்ற‌ தள‌ங்க‌ளை காட்டிலும் சுவார‌ய‌மான‌ சேவை இது.

அதிலும் உண‌ர்வுச்சின்ன‌ங்க‌ளான‌ எமோட்டிகான்க‌ளை அறிந்திருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் சுவார்ஸ்ய‌மான‌தாக‌ இருக்கும்.

———–

http://emotify.com/emotipacks/