(அ) திமுக வெற்றி வாய்ப்பும், கூகுளின் அல்கோரிதம் விளையாட்டும்!

Screenshot_2021-03-27 அதிமுக வெற்றி வாய்ப்பு - Google Search2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை அறிய எல்லோருக்கும் ஆர்வம் இருக்கவே செய்கிறது. அதிலும் அரசியல் கட்சி ஆதாரவாளர்களுக்கு இந்த ஆர்வம் கூடுதலாகவே இருக்கும். இதற்கு விடை காண கருத்துக்கணிப்புகளை நாடலாம் என்பது போலவே, இணையத்திலும் தேடிப்பார்க்கலாம். அதாவது கூகுளில் இந்த கேள்விக்கான பதிலை தேடிப்பார்க்கலாம்.

ஆனால், அதிமுக ஆதரவாளர்கள், அகட்சிக்கான வெற்றி வாய்ப்பை அறிய கூகுளை அணுகினால் அதிருப்தி அடையவே வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில், திமுக ஆதரவாளர்கள்,  அதிமுக வெற்றி வாய்ப்பு என்ன என்பதை கூகுளில் தேடிப்பார்த்தால், இன்ப அதிர்ச்சி அடைவார்கள். காரணம், கூகுளின் அல்கோரிதம் விளையாட்டு தான்.

ஆம், கூகுள் தேடியந்திரத்தில், அதிமுக வெற்றி வாய்ப்பு எனும் பதங்களை தமிழில் டைப் செய்து தேடினால், அதற்கான தேடல் முடிவுகளை பட்டியலிடுவதோடு, நீங்கள் தேடுவது இதுவா? எனக்கேட்டு திமுக வெற்றி வாய்ப்பு எனும் பரிந்துரையை முன்வைக்கிறது.

கூகுளை நம்பி இந்த மாற்று பரிந்துரையை கிளிக் செய்தால், திமுக வெற்றி வாய்ப்பு தொடர்பான தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. அதே நேரத்தில், திமுக வெற்றி வாய்ப்பு என தேடினால், கூகுள் எந்த பரிந்துரையும் இல்லாமல் தொடர்புடைய முடிவுகளை நேரிடையாக பட்டியலிடுகிறது.

இதை வைத்துக்கொண்டு கூகுள் தேடல் முடிவுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது என்றாலும், நிச்சயம் சராசரி இணையவாசிகளுக்கு இந்த பரிந்துரையும், பாகுபாடும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக கட்சி சார்பிலான நபர்களுக்கு இந்த பரிந்துரை இன்னும் கூடுதலான குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

அதிமுக வெற்றி வாய்ப்பு என தேடினால் கூகுள் ஏன் திமுக வெற்றி வாய்ப்பா? என கேட்க வேண்டும்.

இந்த கேள்விக்கு விடை காண, கூகுளின் அல்கோரிதம் விளையாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

கூகுள் மிகவும் பிரபலமான தேடியந்திரம் மட்டும் அல்ல, அது புத்திசாலித்தனமான தேடியந்திரமாகவும் இருக்க முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக அது, இணையவாசிகள் என்ன தேடுகின்றனர் என்பதை யூகித்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றலையும் பெற்றிருக்கிறது.

ஒருவர் எந்த இடத்தில் இருந்து தேடுகிறார்? , இதற்கு முன்னர் எவற்றை எல்லாம் தேடியிருக்கிறார்?  என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிசீலித்து இணையவாசிகளுக்கு பொருத்தமான தேடல் முடிவுகளை கூகுள் முன்வைக்கிறது. இந்த நோக்கில், கூகுளுக்கு இணையவாசிகளின் தேடல் வரலாறு, தேடல் ஜாதகம் எல்லாம் அத்துப்படி என்று சொல்லப்படுவதை விட்டுவிடலாம்.

கூகுள், இணையவாசிகளுக்கு பொருத்தமான தேடல் முடிவுகளை அளிப்பதோடு நிற்காமல், தேடல் முடிவுகளை மின்னல் வேகத்தில் வழங்குவதிலும் குறியாக இருக்கிறது. ஏனெனில் இணையவாசிகள் சில மில்லிநொடிகள் கூட தேடல் முடிவுக்காக காத்திருப்பதை கூகுள் விரும்பவில்லை என கூறலாம்.

இணையவாசிகளின் தேடலை இன்னும் எந்த விதத்தில் எல்லாம் எளிதாக்கலாம் என கூகுள் யோசித்து செயல்படுகிறது. அதாவது, தேடலுக்கான கீவேர்டை முழுவதும் கூட டைப் செய்ய வேண்டாம் என கூகுள் நினைக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகள் டைப் செய்யத்துவங்கும் போதே, அவர்கள் மனதில் உள்ளதை யூகிப்பது போல, நீங்கள் தேட விரும்புவது இதுவா ? என்னக்கேட்டு பல்வேறு பரிந்துரைகளை முன்வைக்கிறது.

உதாரணமாக விண்டோஸ் என ஆங்கிலத்தில் தேடல் முற்பட்டால், முதல் எழுத்தை டைப் செய்யும் போதே, நீங்கள் தேடுவது, வெஸ்ட் இண்டீசா, விப்ரோவா, விக்கிபீடியாவா எனக்கேட்டு மூன்றாம் எழுத்தின் போது விண்டோசா என கேட்கிறது. ஆம், எனில் மிச்ச எழுத்துகளை டைப் செய்யாமலேயே அந்த பதத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த பரிந்துரைகள் அபத்தமாக அமையும் தருணங்களும் உண்டு, அருமையாக அமையும் தருணங்களும் உண்டு. எது எப்படியோ, கூகுள் பயனாளிகள் பெரும்பாலும் இந்த பரிந்துரைக்கு பழகிவிட்டனர். நமது தேடலில் கூகுளுக்கு என்ன அவ்வளவு அக்கரை என்றோ அல்லது கூகுள் ஏன் இப்படி மூக்கை நுழைக்கிறது என்றோ யாரும் கேட்பதில்லை.

இதே போலவே, கூகுள் நீங்கள் தேடுவது இதுவா?  (Did you mean ) எனும் மாற்று பரிந்துரையையும் முன்வைக்கிறது.

இந்த இரண்டு வகை பரிந்துரைகளும் பின்னே இருப்பது அல்கோரிதம்கள் தான். உண்மையில் கூகுள் தேடல் சேவைக்கு பின்னே இருப்பதும் அல்கோரிதம் தான். அதன் பேஜ்ரேங்கிங் அல்கோரிதமே, பின் இணைப்புகளின் அடிப்படையில் சிறந்த தேடல் முடிவுகளை அளிப்பதாக கருதப்படுகிறது.

இது போலவே, பயனர்கள் தேட உள்ள கீவேர்டை முன்கூட்டியே கணிக்க ஒரு அல்கோரிதமை பயன்படுத்துகிறது. இது ஆட்டோகம்ப்ளிட் என சொல்லப்படுகிறது. ஒரு வார்த்தையை டைப் செய்து முடிப்பதற்கு முன்னர் தானாகவே அதை முழுமையாக்கி கொள்ளும் தானியங்கி வசதி என புரிந்து கொள்ளலாம்.

ஸ்பெல் செக்கிங் எனப்படும், வார்த்தைகளில் பிழைகளை கண்டறிய பயன்படும் மென்பொருள் அடிப்படையிலான இந்த அல்கோரிதம் செயல்படும் விதம் தொடர்பாக நுட்பமான மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பல இருக்கின்றன என்றாலும், பொதுவாக ஒரு எழுத்தை தொடர்ந்து அடுத்து வரக்கூடிய எழுத்தை கொண்டு, முழு வார்த்தையையும் கணிக்கும் வகையில் இதன் செயல்பாடு அமைவதாக புரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் சி எனும் எழுத்தை அடித்தால், அடுத்தது ஆர்  எனும் எழுத்தாக அல்லது  ஏ எனும் எழுத்தாக அமையும் பட்சத்தில், கிரிக்கெட் என்றோ கேட்ச் என்றோ பரிந்துரைக்கலாம். இந்த வார்த்தை விளையாட்டு பெரும்பாலான நேரங்களில் சரியாக அமைகிறது என்றால் அதற்கு காரணம், கூகுள் கூட்டு யூகித்தலை பின்பற்றுவது தான்.

அதாவது, சி. எனும் எழுத்தை தொடர்ந்து ஒருவர் வேறு என்ன எழுத்தை வேண்டுமானாலும் டைப் செய்யலாம். அடுத்து டைப் செய்ய இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் இது பொருந்தும். அப்படியிருக்க கூகுள் எப்படி இவற்றை கணிக்க முயல்கிறது. இது பெரிய ரிஸ்க் இல்லையா என கேட்கலாம்.

இந்த இடத்தில் தான் கூகுள், பொதுவாக தேடப்படும் பதங்களை கவனிக்கிறது. அதாவது, தனது தேடியந்திரத்தில் பயனாளிகள் என்ன எல்லாம் தேடுகின்றனர் என்பதை கவனித்து அதனடிப்படையில் கீவேர்டுகளை குறித்து வைக்கிறது. எனவே, பெரும்பாலும் சி என டைப் செய்தவர்கள் கிரிக்கெட்டை தேடிபால், சி எனும் எழுத்திற்கு கிரிக்கெட்டை பரிந்துரைக்கிறது. இந்தியர்கள் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால், சென்னையில் இருந்து தேடினால் சி எனும் எழுத்திற்கு கூகுள் தவறாமல் கிரிக்கெட்டை காண்பிக்கும். அதே நேரத்தில் ஸ்வீடன் அல்லது கென்யாவில் இருந்து தேடுபவர்களுக்கு அவர்கள் பிராந்திய தன்மைக்கு ஏற்ப வேறு பரிந்துரையை காண்பிக்கும். ( ஆம், கூகுளில் எல்லோரும் ஒரே விதமான தேடல் முடிவுகளை பெறுவதில்லை).

இதே போலவே, தேடல் பதங்களை தவறாக டைப் செய்தாலும் கூகுள் அல்கோரிதம் அதை திருத்தி புரிந்து கொண்டு சரியான பதத்தை பரிந்துரைக்க முயல்கிறது.

உதாரணத்திற்கு, கிரிக்கெட் என தேட விரும்பும் ஒருவர், நடுவே ஆர் அல்லது ஐ எனும் ஆங்கில எழுத்திற்கு பதிலாக வேறு எழுத்தை டைப் செய்துவிட்டால், கூகுள் இது கிரிக்கெட்டிற்கான தேடல் என்று யூகித்து, நீங்கள் தேடுவது கிரிக்கெட்டா என கேட்கும். ஆம் எனில் அதை கிளிக் செய்து கொள்ளலாம்.

இந்த உத்தி செயல்படும் விதமும் கொஞ்சம் நுட்ப்மானது. டைப் செய்யப்படும் எழுத்துக்களில் எது பிழை என்பதை யூகித்து அதற்கான சரியான சொல்லை பரிந்துரைக்கும் போது வாய்ப்புள்ள பல சொற்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவற்றில் முதலில் பரிந்துரைக்கப்படும் சொல்லை பயனர் கிளிக் செய்தால் அதை அல்கோரிதம் குறித்து வைத்துக்கொள்ளும். அதே நேரத்தில் ஆரம்ப பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு கடைசி பரிந்துரை ஏற்கப்பட்டாலும் குறித்து வைத்துக்கொள்ளும். இவற்றை கூட்டிக்கழித்துப்பார்த்து, அடுத்த முறை ஒருவர் பிழையாக டைப் செய்யும் போது பரிந்துரை செய்து அதை அவர் ஏற்கிறாரா? இல்லை நிராகரிக்கிறாரா? என்பதையும் கவனிக்கும்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான், நீங்கள் தேடுவது இதுவா? எனும் பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. இந்த பரிந்துரை இலக்கு தவறும் தருணங்களும் உண்டு.

கூகுள் தேடலின் பின்னே உள்ள அல்கோரிதம்கள் செயல்படும் விதம் தொடர்பான பொதுவான புரிதல் இவை என்றாலும், தற்போது அதிமுக வெற்றி வாய்ப்பு எனும் தேடலுக்கு, நீங்கள் தேடுவது திமுக வெற்றி வாய்ப்பா? என கேட்டு பரிந்துரை செய்வது எதன் அடிப்படையில் என்பது கூகுளுக்கே வெளிச்சம்!

நன்றி; புதிய தலைமுறை இணையதளத்தில் எழுதியது.

கூகுளும், தமிழக தேர்தலும்- சில கேள்விகள்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.