Tag Archives: apple

அதிவேக ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. இதில் வல்லுனர்கள் மட்டும் அல்ல, ஸ்மார்ட்போன் அபிமானிகளும் மாறுபடுவார்கள். தங்கள் அபிமான போன் தான் செயல்திறன் மிக்கது எனும் தீர்மானமான எண்ணம் பலரிடம் இருக்கலாம். அதோடு விலை மற்றும் பயன்பாட்டுத்தன்மையை கருத்தில் கொண்டால் இது இன்னும் சிக்கலாகும்.
ஆனால் உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் எது எனும் கேள்விக்கு பதில் சொல்ல இந்த சிக்க எல்லாம் இல்லை. பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழகா ஆய்வாளர்கள், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை அடிப்படையாக கொண்டு உலகின் வேகமான ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளனர். சும்மாயில்லை, உலகம் முழுவதும் உள்ள 4,500 ஸ்மார்ட்போன்களை பல்வேறு செல்போன் நெட்வொர்க்கில் பயன்படுத்திப்பார்த்து இந்த பட்டியலை தயாரித்துள்ளனர்.
டவுண்லோடு வேகப்படி பார்த்தால் முதல் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சாம்சங் காலெக்ஸி நோட் 3 முதலிடத்தில் உள்ளது. இதன் வேகம் 137.8Mbps .அடுத்த இடத்தில் இருப்பது சீன தயாரிப்பான ஒன் பிளஸ் ஒன். இதன் வேகம் 137.4Mbps. 3 வது இடத்தில் ஐபோன் 6 இருக்கிறது. சாம்சங் காலெக்ஸி எஸ் 4 மற்றும் எஸ் 5 அடுத்த 2 இடங்களிலும் அதை அடுத்து எல்ஜியின் ஜி3 மற்றும் ஜி 2 உள்ளன. நோக்கியா லூமியா 1520 க்கு 8 வது இடம்.
பதிவேற்றும் (அப்லோட்) வேகத்தின் படி பார்த்தால் சாம்சங் காலெக்ஸி எஸ்5 முதலிடத்தில் உள்ளது. காலெக்ஸி எஸ் 4 க்கு 2 வது இடம் என்றால் எல்ஜி- ஜி2 வுக்கு மூன்றாவது இடம். நோக்கியா லூமியா 1020 க்கு 5 வது இடம்.
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வதும் பேஸ்புக்கில் வீடியோவை பதிவேற்றுவதும் பிரபலமாக இருக்கும் நிலையில் அப்லோடு வேகமும் முக்கியம் தான்.
இந்த ஆய்வை நடத்தி பலகலைக்கழக பேராசிரியர் ஜுக்கா மேனர் (Jukka Manner ) அதிக விலை என்பது அதிக இணைய வேகத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாக கூறியுள்ளார்.
ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எலக்டிரிகல் இஞ்சினியரிங் 2013 முதல் நெட்ரேடார் எனும் செயலி மூலம் மொபைல் இணைய வசதியை ஆய்வு செய்து வருகிறது. நெட்ரேடார் செயலி மூலமாக இணைய பயன்பாடு பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த செயலி டவுண்லோடுக்கும் கிடைக்கிறது. நீங்களும் கூட இதில் பங்கேற்கலாம்.; https://www.netradar.org/

———–

இது ஆப்பிள் ரகசியம் !
ஆப்பிளின் ஐபோன் பற்றி நீங்கள் விரிவாக அறிந்து வைத்திருக்கலாம். ஐபோன் பற்றி பல அறிய தகவல்களும் அத்துபடியாக இருக்கலாம். ஆனால் ஐபோன் விள்ம்பரத்தை உற்று கவனித்து இருக்கிறீர்களா? அதில் எப்போதுமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் தெரியுமா? அந்த விளம்பரங்களில் எல்லாம் காட்டப்படும் நேரம் காலை 09.41 ஆக இருக்கும். இதன் பின்னே ஏதோ சங்கேத குறியீடு இருப்பதாக எல்லாம் நினைக்க வேண்டாம். இதன் பின்னே இருப்பது மர்மமும் அல்ல; அழகான சின்ன ரகசியம் , அவ்வளவு தான். தி அட்லாண்டிக் பத்திரிகை இதை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது.
09.42 என்பது 2007 ஜனவரில் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் முறையாக ஐபோனை அறிமுகம் செய்த நேரம். 2010 வரை இந்த நேரமே விளம்பரத்தில் இடம்பெற்றது. 2010 ல் இது 09.41 என மாற்றப்பட்டது. இது ஜாப்ஸ் முதல் ஐபேடை அறிமுகம் செய்த நேரம். அதன் பிறகு ஐபோன் மற்றும் ஐபேட் விளம்பரங்களில் எல்லாம் 09.41 எனும் நேரமே இடம் பெற்றுள்ளது.
ஆப்பிளின் புதிய பொருள் அறிமுகத்துக்கான கீநோட் உரை மிகவும் பிரசித்தம். இந்த உரையை எப்போதுமே 40 வது நிமிடத்தில் அறிமுகம் நிகழும் வகையில் அமைப்பதும் ஆப்பிளின் வழக்கமாம். பெரிய திரையில் தயாரிப்பு தோன்றும் போது அதில் உள்ள நேரமும் பார்வையாளர் கடிகாரத்தில் உள்ள நேரமும் ஒன்றாக இருக்க வேண்டுமாம். ஆனால் 40 நிமிடத்தை துல்லியமாக அடைவது கடினம் என்பதால் ஒரு நிமிடம் கூடுதலாக வைத்துள்ளனர்.
எல்லாம் சரி, ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் விளம்பரம் என்ன நேரம் காட்டும்?

————-

ஓபரா மினி உலாவியின் மைல்கல்

சமீபத்தில் இந்தியாவில் பயனாளிகள் எண்ணிக்கையில் வாட்ஸ் அப் செயலி 70 மில்லியன் தீவிர பயனாளிகள் எனும் மைல்கல்லை எட்டியது. இப்போது மொபைல் உலாவியான ( பிரவுசர்) ஓபரா மினி இந்தியாவில் 50 மில்லியன் பயனாளிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த மைல்கல் தொடர்பான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள ஓபரா, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு அடுத்த இடத்தில் தனது பிரவுசர் இருப்பதாகவும் கூறியுள்ளது. அதோடு உலக அளவில் இந்தியாவின் தான் ஓபரா மினி பயனாளி பரப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓபரா பிரவுசர் பயன்படுத்தும் ஸ்மார்போன் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 110 சதவீதம் அதிகரித்து மொத்த பயனாளிகளில் பாதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இணைய பக்கத்தை 90 சதவீதம் சுருக்கி தருவது உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறுவன பிரவுசரில் இருப்பதாக ஓபரா தெரிவிக்கிறது. நீங்களும் வேண்டுமானால் பயன்படுத்தி பரிசோதித்துப்பாருங்கள்!.

—————-

சாம்சங்கின் புதிய போன் வரிசை

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய வரிசையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. சாம்மொபைல் இணையதளம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. சாம்சங் வழக்கப்படி இந்த புதிய வரிசை போன்களும் ஒற்றை எழுத்து பெயர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதனிடையே காலெக்ஸி எஸ்- 5 க்கு தொடர்ச்சியாக பிராஜக்ட் ஜிரோ எனும் பெயரில் எஸ்- 6 க்கான தயாரிப்பு நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே கசிந்த தகவல்களை உறுதி செய்வது போல சாம்சங் டைசன் இயங்கு தளத்திலான ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறைந்த விலையிலான இந்த போன்கள் இந்திய சந்தையில் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் தனது கியர் வாட்சில் டைசன் இயங்கு தளத்தை பயன்படுத்தி வருகிறது.

———–
செயலி செய்யலாம் வாங்க!
எங்கு பார்த்தாலும் செயலிகள்( ஆப்ஸ்) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. செயலிகள் பயன்படுத்துவது சுலபமாக இருப்பது போல புதிய செயலிகளை உருவாக்குவதும் சுலபமானது தான் என்று பலரும் சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். அட நாமும் கூட செயலி செய்து பார்க்கலாமே என்ற ஆசை இருந்தால் அதற்கான இலவச இணைய வகுப்பை ஆஸ்திரேலிய பலகலைக்கழகம் துவங்கியுள்ளது.அந்நாட்டின் சார்லஸ் ஸ்டர்ட் பலகலை (Charles Sturt University ) இணைய வகுப்பு மற்றும் வெப்பினார் மூலம் இந்த பயிற்சியை வழங்க இருக்கிறது. போன்கேப் எனும் ஓபன் சோர்ஸ் பிரேம் ஒர்க் மூலம் இந்த செயலி பயிற்சியை அளிக்கிறது.
ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் என எல்லா போன்களுக்குமான செயலிகளை உருவாக்கலாம்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இணையம் வழி கல்வி செல்வாக்கு பெற்று வரும் நிலையில் இது புதியதொரு நல்வரவு; மேலும் விவரங்களுக்கு: http://www.itmasters.edu.au/free-short-course-cross-platform-mobile-app-development/

————–
செல்ஃபீ எச்சரிக்கை

இது செல்ஃபீ யுகம். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரிடம் இப்படி சுயபடம் எடுத்து வெளியிடும் பழக்கம் இருக்கிறது. எந்த நிகழ்வையும் சுயபடம் எடுக்கும் பழக்கம் நல்லதா ? கெட்டதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும் சுயபட பழக்கம் பணியிட்த்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் சுயபடம் எடுப்பது , நார்சிஸம் எனப்படும் சுய ரசிப்பின் அடையாளமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அது மட்டும் அல்ல, சுயபடம் எடுப்பது ஒருவரது சுய கட்டுப்பாடு இனமையையும் குறிக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒருவரது வேலைவாய்ப்பையும் பாதிக்கலாம். வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் பலர் , சமூக ஊடகங்களில் ஆய்வு செய்வதாகவும் அப்போது அதிக சுயபடம் வெளியிட்டவர்களை நிராகரிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. சுயவெளிப்பாட்டில் இத்தனை ஆர்வம் கொண்டவர்கள் ஒரு குழுவாக சிறப்பாக செயல்படும் தன்மை குறைவாக பெற்றிருப்பார்கள் என்று இதற்கு வல்லுனர்கள் இதற்கு விளக்கம் தருகின்றனர். ஆக, செல்ஃபீ பிரியர்கள் கொஞ்சம் யோசித்து படம் எடுப்பது நல்லது.

———-
நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

ஸ்மார்ட் போனால் ஆன பயன்!

ஸ்மார்ட்போன்கள் வெறும் அந்தஸ்தின் அடையாளமோ அல்லது கவனச்சிதறலோ அல்ல, அவை செயல்திறனை மேம்படுத்துபவை. உற்பத்தியை பெருக்குபவை. இப்படி சொல்லப்படுவதில் சந்தேகமோ ஆச்சர்யமோ இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள், ஏனெனில் சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் பணியிடத்தில் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுடன், சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பிலும் கைகொடுப்பதாக தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பிளாக்பெரி சார்பில் ஜிஎப்கே எனும் ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவில் இந்த கணிப்பை மேற்கொண்டது. இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகளில் சுமார் 9,500 பங்கேற்பாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தான், பெரும்பாலான இந்திய ஸ்மார்ட்ப்யனாளிகள் , ஸ்மாட்போன்கள் நேரத்தை மிச்சமாக்கி, செயல்திறனை மேம்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். எந்த நேரத்திலும் பணியை மேற்கொள்ள வழி செய்வதன் மூலம் வாழ்க்கையையும் எளிதாக்கு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில், 67 சதவீதம் பேர் ,தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதில் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 69 சதவீதம் பேர் ஏற்கனவே செய்து கொண்டுள்ள வேலைகளை மேலும் சிறப்பாக செய்ய புதிய வழிகளை தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இனியும் வேலையை செய்து முடிப்பது மட்டுமே முக்கியமல்ல, அதை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக செய்வது தான் முக்கியம் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போன்கள் நேரத்தை மிச்சமாக்குவதாகவும், ஒரு வாரத்தில் சராசரியாக 5 மணி நேரம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆக, ஸ்மார்ட்போன் வாங்க இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்திருக்கிறது. அப்படியே ஸ்மார்ட்போன் பயனாளிகள் உங்கள் செயல்திறனையும் சோதித்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.

————-

லேப்டாப் கையேடு

லேப்டாப்பில் தான் எத்தனை பிராண்ட்கள்,எத்தனை ரகங்கள். புதிய லேப்டாப் வாங்க விரும்பினால் இவற்றில் சிலவற்றின் அம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது. இப்படி லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க விரும்பினால் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடவும் வேண்டாம், ஒப்பீட்டு இணையதளங்கள் பக்கமும் போக வேண்டாம். அமெரிக்கரான மரேக் கிப்னே (Marek Gibney ) அருமையான வழியை இதற்காக உருவாக்கி இருக்கிறார். மனிதர் லேப்டாப்களுக்கான சுற்றுலா வரைபடம் மூலம் லேப்டாப் தொடர்பான எல்லா விவரங்களையும் ஒரே சார்ட்டில் கொண்டுவந்து விட்டார். இந்த வரைபடத்தில் லேப்டாப்கள் சின்ன சின்ன ஐகான்களாக இடம்பெற்றுள்ளன. எந்த ஐகான் அருகே மவுஸ் சுட்டியை கொண்டு சென்றாலும் அந்த லேப்டாபின் படம் மற்றும் விலை உள்ளிட்ட அம்சங்கள் தோன்றுகின்றன.( விலை டாலரில் கொடுக்கப்பட்டுள்ளது). திரை அளவு ,நினைவுத்திறன் உள்ளிட்ட அம்சங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில நிமிடங்களில் ஒரு லேப்டாப் ஷோரூமிற்கு சென்று வந்தது போன்ற உணர்வை பெறலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும் வழி இருக்கிறது.
லேப்டாப்களை ஒப்பிட்டு பார்க்க இதைவிட சிறந்த வழி இருக்கலாம், ஆனால் சுலபமான வழி இருக்க வாய்ப்பில்லை.
அட லேப்டாப் வரைபடம் ( http://things.gnod.com/laptops/) நன்றாக இருக்கிறதே என்று தோன்றினால் இதன் மூல இணையதளத்திற்கும் (http://www.gnod.com/ ) சென்று பாருங்கள். எம்பி3 பிளேயர்கள் போன்றவற்றுக்கும் இதே போன்ற வசதி இருப்பதுடன், இசை,இலக்கியம் மற்றும் திரைப்ப்டங்களுக்கான இதே போன்ற ஒப்பீட்டு வசதி உள்ளன. உங்கள் ரசனை அடிப்படையில் புதிய விஷயங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான அருமையான வழியாக இவை இருக்கின்றன.

—————

ஆப்பிள் வாட்ச் அழகி

ஆப்பிள் வாட்ச் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு விடை காண இன்னும் சில மாதங்களாவது காத்திருக்க வேண்டும். சரை, ஆப்பில் வாட்சியை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்? இதற்கான பதிலைப்பெற பிரபல பேஷன் இதழான வோக் ( Vogue ) பத்திரிகையின் சீன பதிப்பின் பக்கங்களை புரட்டினாலே போதும். இதன் நவம்பர் இதழில் சீன சூப்பர் மாடல் அழகி லியூ வென் ஆப்பிள் வாட்சி அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். முகப்பு பக்க்த்திலும் இந்த ஆப்பிள் வாட்ச் அழகி தான் அலங்கரிக்கிறார். இதழின் ஆசிரியர் ஆப்பிள் வாட்சுடனான இந்த கூட்டு முயற்சி பற்றி விரிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
ஆப்பில் வாட்ச் பேஷன் சந்தையை முக்கிய இலக்காக கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சிக்கே முன்னணி பேஷன் கலைஞர்க்ள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வோக் சீன இதழில் முகப்பு பக்கத்தில் ஆப்பில் வாட்ச் அலங்கரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சும்மா இல்லை சீன வோக் இதழுக்கு 13 லட்சம் வாசகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
’மற்ற நாடுகளை விட சீன மக்கள் தான் புதிய தொழில்நுப்டம் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஏற்றுக்கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர் . புதிய மற்றும் நவீனமான எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதில் சீனர்கள் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள்’- ஆப்பிள் சீன வோக் இதழை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அதன் எடிட்டர் இன் சீஃப் ஏஞ்சலிசியா செயூங் அளித்துள்ள பதில் இது.
இதனிடையே ஆப்பிளின் வடிவமைப்பு நுப்டங்களை நக்லெடுப்பதாக அதன் வடிவமைப்பு பிரிவு துணைத்தலைவர் ஜோனாத்தன் ஐவி கூறியுள்ள புகாருக்கு , சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி ( Xiaomi ) தலைவர் லின் பின் மறுப்பு தெரிவித்துள்ளார். எங்கள் தயாரிப்பை பயன்படுத்தி பார்த்தால் தான் தெரியும், வேண்டுமானாலு ஐவிக்கு ஒரு ஜியோமி போனை பரிசாக அனுப்பி வைக்கத்தயார் என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்த பின் சொல்லும் கருத்துகளை அறிய ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சபாஷ் சரியான சவால் தான் .

———–
நான்காவது பயர்பாக்ஸ் போன்

ஸ்பைஸ், இண்டெக்ஸ் மற்றும் அல்காடெல் என பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிறுவனங்களின் வரிசையில் ஜென் மொபைலும் சேர உள்ளது. மொசில்லாவுடன் இணைந்து ஜென் மொபைல் நிறுவனமும் குறைந்த விலையிலான பயர்பாக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இந்திய சந்தையில் அறிமுகமாகும் நான்காவது பயர்பாக்ஸ் போனாக இருக்கும். ஸ்மார்ட்போன் அனுபவத்தை முதலில் பெற விரும்புகிறவர்களுக்கு பயர்பாக்ஸ் போன்ற குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் உதவும் என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இந்திய பயனாளிகள் விலையை முக்கியமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மொசில்லா மேலும் பல கூட்டு திட்டங்களுடன் பயர்பாக்ஸ் ஓஎஸ் பயன்பாட்டை விரிவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பயர்பாக்ஸ் சந்தையை மேம்படுத்தும் வகையில் இபே இந்தியா, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயலிகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

——-

இந்த காமிரா எப்படி?

ஸ்மார்ட்போன்கள் முன்பக்க காமிரா, பின்பக்க காமிரா என இரட்டை காமிராக்களுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட் போன் நிறுவனமான எச்டிசி தனியே ஒரு காமிராவை அறிமுகம் செய்துள்ளது. எசிடிசி ரீ (HTC Re ) எனும் பெயர் கொண்ட அந்த காமிரா சற்றே விநோதமானது. காமிரா போலவே தோற்றம் அளிக்காத அந்த காமிரா ஒரு சின்ன குழாய் போல தான் இருக்கிறது. இதில் திரையும் கிடையாது. அதனால் என்ன கையில் எடுத்ததுமே படம் பிடிக்கதுவங்கி விடலாம் என்கிறது எச்டிசி. இதில் மொத்தமே இரண்டு பட்டன்கள் தான். பின் பக்கம் உள்ள வெள்ளி நிற பட்டனை அழுத்தினால் போதும் படம் எடுக்கத்துவங்கிவிடும். புகைப்பம் எடுக்க ஒரு அழுத்து. இன்னொரு முறை அழுத்தினால் வீடியோ. இதில் என்ன விஷேசம் என்றால் இதை ஆன் செய்ய தனியே ஸ்விட்ச் கிடையாது . கையில் எடுத்ததுமே , இயக்கத்தை உணர்ந்து ஆன் செய்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது.
படம் படிக்கும் தருணம் வந்துதும், ஸ்மார்போனை கையில் எடுத்து காமிராவை இயக்கி, காட்சியை நோக்கி மையம் கொள்வது எல்லாம் எதற்கு, உடனே காமிராவை எடுத்து கிளிக் செய்ய முடிந்தால் தான், நிஜவாழ்க்கை தருணங்களை அப்படியே படம் பிடிக்க முடியும் என்கிறது எச்டிசி. புகைப்படத்தை சேமிக்கும் மற்றும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. ஸ்மார்ட்போனுடன் செயல்படும் செயலி ஒன்றும் இருக்கிறது. செயலி மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்துக்கொள்ளலாம்.
காமிரா பிரிவில் கவனத்தை ஈர்த்திருக்கும் ஆக்‌ஷன் காமிராவான கோப்ரோவுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. விலை; 199 டாலர்.
எச்டிசி அறிமுகம் செய்துள்ள டிசைன் ஐ போனிலும் செல்ஃபீ காமிரா தான் விஷேசம் என்கின்றனர்.

————–

ஆண்ட்ராய்டு ஒன் சவால்

ஆண்ட்ராய்ட் ஒன் மீது கூகிள் மிகுந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. குறைந்த விலையிலான இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்தியா உள்ளிட்ட ஆசிய சந்தையில் முதல் முறை ஸ்மார்ட்போன் பயனாளிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டி நிலவும் நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் சவாலான நிலையை எதிர்கொள்ள இருப்பதாக ஐடிசி (International Data Corporation ) ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மார்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் அதிகமாக செலவிட்டு வரும் நிலையிலும் இந்திய சந்தையை கைப்பற்றுபது கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன சந்தை அடைக்கப்பட்டிருதால் கூகிள் இந்தியாவில் தான் அடுத்த பில்லியன் வாடிக்கையாளர்கள் பிரிவில் கவனம் செலுத்தியாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு ஒன் கூகிளுக்கு முக்கியமானது என்றும் இந்தியாவில் வாங்ககூடிய விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் திறன் கொண்டது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆண்ட்ராய்டு ஒன் ஏற்கனவே கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்ற்உம் ஸ்பைஸ் நிறுவனங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் அறிமுகாமக உள்ளது.
———-

நன்றி; தமிழ் இந்து

ஸ்மார்ட்போன் நடைபாதையும் செல்போன் தொப்பியும்.

ஸ்மார்ட்போன் பாதை!
chinese-phone-laneகையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக என்று சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் 50 மீட்டர் ஸ்மார்ட்போனும் கண்ணுமாக இருப்பவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது. அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போனை பாதையில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் ,இதற்கான அறிவிப்பு நீங்களே பொறுப்பு எனும் எச்சரிக்கை பாணியில் எழுதப்பட்டுள்ளது. அருகிலேயே ,சீனாவின் முதல் செல்போன் நடைபாதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமையான இந்த யோசனையை செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்தை உணர்த்துவதற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சி சார்பில் அமெரிக்காவின் பின்பற்றப்பட்ட யோசனையின் உந்துதலால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் டிவிட்டரான வெய்போவில் இளசுகள் பலரும் மூழ்கி கிடப்பதும் அவர்களில் பலர் நடந்து கொண்டே குறும்பதிவு அனுப்பும் வழக்கம் கொண்டிருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஸ்மார்ட்போன் அடிமைகள்!

ஸ்மார்ட்போன் தாக்கம் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கவலை தரும் தகவலை தெரிவிக்கிறது. கல்லூரி மாணவ,மாணவிகளில் 75 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை சார்ந்து இருப்பது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 5 பேரில் ஒருவர் ஸ்மார்ட்போன் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 86 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனை இரவில் தூங்கும் போது கைக்கு அருகிலேயே வைத்திருப்பதாகவும், 81 சதவீதம் பேர் போனை இழந்தால் பெரும் நெருக்கடிக்கு ஆளாவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இன்னும் மோசம் என்ன தெரியுமா, ஆயிவில் பங்கேற்றவர்களில் 63 சதவீதம் பேர் போன் ஒலிக்காத நேரங்களில் கூட அது ஒலிப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளது தான். இன்னும் 55 சதவீதம் பேர் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அல்லது மோசமான மனநிலையில் இருந்து விடுபட ஸ்மார்ட்போனில் தஞ்சம் அடைவதாக கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போனை சார்ந்திருப்பதற்கான காரணம் நடைமுறை சார்ந்த்தாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் கையில் போன் வைத்திருக்கும் போது பாதுகாப்புடன் உணர்வதை இதற்கான உதாரணமாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் தாக்கத்தால் எதுவுமே உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடதப்பட்டுள்ளது. ஆனால் மிக சுலபமாக நம் நாட்டு மாணவர்களுக்கும் பொருந்தக்கூடியது தான் இல்லையா?
அலபாமா பலகலைக்கழக ஆய்வாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மாணவர்களுக்கான தேசிய சஞ்சிகையில் வெளியாக உள்ளது. ஆய்வின் தலைப்பு; ஸ்மார்ட்போன் மோகம் பற்றிய உண்மைகள்!.

செல்ஃபீ தொப்பி-செல்பீ காமிரா !
Acer-Selfie-4செல்ஃபீ என்று சொல்லப்படும் சுயபடங்களின் மோகம் அல்லது ஆர்வம் தீவிரமாகி கொண்டே தான் போகிறது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதுப்புது சாதனங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. செல்ஃபீ போன்கள், செல்ஃபீ பிரெஷ் என தொடரும் இந்த வரிசையில் சமீபத்திய வரவு செல்ஃபி தொப்பி. கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் தயாரிப்பில் புகழ்பெற்ற ஏசர் நிறுவனத்தின் யு.கே பிரிவு இந்த செல்ஃபீ தொப்பியை அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற பேஷன் வடிவமைப்பாளர் ஒருவருடன் இணைந்து உருவாக்கப்பட்டூள்ள இந்த அகண்ட தொப்பில் இணைக்கப்பட்டுள்ள டேப்லெட்டை கொண்டு அழகான சுயபடத்தை எடுத்துக்கொள்ளலாமாம்.
லண்டன் பேஷன் வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த செல்ஃபீ தொப்பி.
செல்ஃபீ தாக்கத்தின் இன்னொரு அடையாளம் காமிரா தயாரிப்பு நிறுவனமான நிக்கான் செல்ஃபீ வசதி கொண்ட காமிராவை அறிமுகம் செய்துள்ளது. அதன் புதிய கூல்பிக்ஸ் காமிரா (Coolpix S6900. ) சுயபடம் எடுப்பதற்கான டச்ஸ்கிரீன் வசதி கொண்ட எல்சிடி திரையை கொண்டுள்ளது. ஏற்கனவே கேனானின் பவர்ஷாட் காமிராவில் இதே போல செல்ஃபீக்கான வசதி உள்ளது. இதன் பின்பக்கத்தில் உள்ள எல்சிடி திரை மூலம் சூப்பராக சுயபடம் எடுக்கலாமாம்.

Apple-iPhone-Pricesஐபோன் 6 அறிமுகமும் வரவேற்பும்
ஒரு வழியாக ஐபோன் 6 அறிமுகமாகி விட்டது. பரவலாக கணிக்கப்பட்டது போலவே ஐபோன் 6 மற்றும் சற்றே பெரிய அளவில் ஐபோன் பிளஸ் ஆகியவற்றை ஆப்பிள் 9 ந் தேதி ஆப்பிள் அறிமுகம் செய்தது. கூடவே ஆப்பிள் வாட்ச் மற்றும் சொல்போனில் பணம் செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் அடுத்த ஆண்டு தான் விற்பனைக்கு வருகிறது. ஆனால் அதன் தோற்றமும், வடிவமைப்பும் பலரை கவர்ந்துள்ளது. அறிமுக விழாவில் இது வரையான ஐபோன்களிலேயே சிறந்ததாக ஐபோன் 6 உருவாக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் கூறினார். ஆப்பிள் அபிமானிகள் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர் போலும். அது தான் ஐபோன் 6 மற்றும் ஐபோன் பிளஸ் ஆகியவற்றின் முன்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு24 மணி நேரத்தில் 4 மில்லியன் போன்கள் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஐபோன் 5 முதல் நாளில் 2 மில்லியன் விற்பனை ஆனதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
முன்பதிவில் ஐபோன் 6 மாதிரியை விட அளவில் பெரிய ( விலையும் அதிகம்) ஐபோன் பிளசுக்கு தான் அதிக மதிப்பு இருந்த்தாக சொல்லப்படுகிறது.
இதனிடையே பெரிய திரை போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி இதெல்லாம் 2 ஆண்டுகளுக்கு முன்னரே நெக்சஸ் போனில் இருந்தது தானே என்று ஆண்ட்ராய்டு அபிமானிகள் சிலர் கேலி செய்கின்றனர் .தொழில்நுட்ப இதழ் ஒன்று இரண்டு போனின் அம்சங்களையும் ஒப்பிட்டு வெளியிட்ட வரைபட சித்திரத்தை அவர்கள் ஆதாரமாக காட்டுகின்றனர்.
எது எப்படியோ, ஐபோன் 6 மற்ற ஐபோன்கள் போல தாமதமாக அல்லாமல் சிக்கிரமே இந்தியாவுக்கு வருகிறது. அடுத்த மாதம் இந்தியாவில் ஐபோன்6 வருகிறது. அதற்கு முன்னதாக ஐபோன் 5 மாதிரிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்ல, ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் வதந்திகளால் ஊகிக்க முடியாத தயாரிப்புகளை ஆப்பிள் உருவாக்கி கொண்டிருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இவை ஒருபுறம் இருக்க, ஆப்பிளின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட எம்பி3 சாதனமான ஐபாடுகளின் நிலை என்ன என்று இசைப்பிரியர்கள் பலர் ஏக்கத்துடன் கேட்கின்றனர். ஐபாடுகளில் புதிய ரகம் எதுவும் அறிமுகமாகமல் இருப்பதால் ஆப்பிள் இதற்கு ஓசைப்படாமல் குட்பை சொல்ல இருக்கிறதா என்றும் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஸ்மார்ட்போன் யுகத்தில் ஐபாடுக்கு இடம் இருக்கிறதா ? இருந்தும் இது பற்றி வயர்டு இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை ஐபாடு பிரியர்களுக்கு ஆன்ந்தம் அளிக்கும்: http://www.wired.com/2014/09/rip-ipod/

கிழக்கிற்காக ஒரு ஸ்மார்ட்போன்!
எதிர்பார்க்கப்பட்டது போலவே கூகிள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. கார்பன் ( ஸ்பார்கில் வி), ஸ்பைஸ் (டிரிம் யூனோ ) மற்றும் மைக்ரோமேக்ஸ் (கேன்வாஸ் ஏ1 ) ஆகிய இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று போன்களுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்பைஸ் மற்றும் கார்ப்ன் ஆண்ட்ராய்டு ஒன் போன்களை பிலிகார்ட் மற்றும் ஸ்னேப்டீல் மின்வணிக தளங்கள் மூலமும் மைக்ரோம்கேஸ் போனை அமேசான் இந்திய தளம் மூலமும் வாங்கலாம். ஸ்பைஸ் போனின் விலை ரூ.6299. மைக்ரோமேக்ஸ் விலை ரூ. 6,499. கார்பன் போனின் விலை ரூ.6399 .
மூன்று போன்களுமே அடிப்படையில் பொதுவான அமசங்களை கொண்டிருக்கின்றன. மூன்றுமே இரட்டை சிம்கள் கொண்டவை, 4.5 இன்ச் டிஸ்பிலே கொண்டவை, முன் பக்க மற்றும் பின் பக்க காமிராக்களுடன் 1 ஜிபி ரேம் மற்றும் 1700mAh பேட்டரி கொண்டவை. 1.3GHz பிராசஸர் கொண்டிருக்கின்றன.
இரட்டை சிம் மற்றும் மெமரி கார்டு வசதி இந்தியாவுக்காக என சேர்க்கப்பட்டுள்ளன.
வாங்ககூடிய விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் எனும் கருத்துடன் கூகிள் இந்த போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்களின் விலையை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமான ஆண்ட்ராய்டு வடிவம் மற்றும் வன்பொருள் வடிவமைப்பு கொண்டிருப்பதாக கூகிள் தெரிவிக்கிறது.
ஆண்ட்ராய்டு ஒன் போனில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன என்றால் இவை இந்திய சந்தையில் முதன் முதலாக அறிமுகமாகி இருக்கிறது. இந்திய சந்தையில் இருந்து தான் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்,பாகிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு அறிமுகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களுடன் இணைந்தும் இவை அறிமுகமாக உள்ளன. இவை மேற்கத்திய சந்தையில் அறிமுகமாகுமா ?என்று தெரியவில்லை . அடிப்படையில் கிழக்கில் உள்ள நாடுகளுக்கான போன் இது. இந்தியா இதன் மையமாக உள்ளது.
ஆண்ட்ராய்டு ஒன் அறிமுகம் தொடர்பான மற்ற முக்கிய அம்சங்கள் 2 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் வசதி மற்றும் ஆப்லைனில் யூடியூப் வீடியோ பார்க்கும் வசதி.

டாப் டென்னில் இந்தியா!
ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பொருத்தவரை இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக சர்வதேச அமைப்பான ஜி.எஸ்.எம்.ஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் 111 மில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் இருப்பதாக இதன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. சீனா ,அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
ஸ்மார்ட்போனின் எதிர்கால போக்குகள் மற்றும் கணிப்புகள் தொடர்பான அறிக்கையாக இது அமைந்துள்ளது. 2020 வாக்கில் ஸ்மார்ட்போன் இணைப்புகளில் ஐந்தில் நான்கு இணைப்புகள் வளரும் நாடுகளில் இருந்து வரும் என தெரிவிக்கும் இந்த அறிக்கை மூன்று போனில் 2 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் சொல்கிறது.
ஸ்மார்ட்போன்களின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது மற்றும் பட்ஜெட் போன்களுக்கான தேவை ஆகியவை இந்த வளர்ச்சிக்க காரணங்களாகும்.
அடுத்த 18 மாதங்களில் மட்டும் 1 புதிய பில்லியன் ஸ்மார்ட்போன் இணைப்புகள் உருவாகும் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி தமிழ் இந்து.

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

applreமே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் என்றால் நினைவுக்கு வரும் பழங்களும் இருக்கின்றன. காய்கறிகளும் இருக்கின்றன. ஏன் இந்த திடீ காய்,கனி ஆய்வு என கேட்கலாம். இன்று அறிமுகம் செய்ய இருக்கும் ரைடிராக் இணையதளம் தான் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது.

இது போன்ற இணையதளத்தை நாமும் உருவாக்கலாமே என நினைக்க வைக்கும் இணையதளமாக ரைப்டிராக் இருக்கிறது. இந்தியாவுக்காக ,குறைந்தபட்சம் தமிழகத்திற்காக இது போன்ற ஒரு தளம் தேவை என்பது எனது விருப்பம்.

ரைப் டிராக்கில் அப்படி என்ன இருக்கிறது ? ரைப் டிராக் மிகவும் எளிமையான தளம். அதன் பின்னே இருப்பது எளிமையான கருத்தாக்கம்- பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பருவத்தை காட்டுகிறது இந்த இணையதளம். இப்போது சீசன் இருக்கிறதா ? என அறிய விரும்பும் பழம் அல்லது காய்கறி பெயரை இந்த தளத்தில் டைப் செய்தால் அதற்கான பதிலை இது அளிக்கிறது. இதற்கான விடையில் அதன் பருவகால மாதங்கள் பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படுகிறது. வேறு விதங்களிலும் தேடிப்பார்க்கலாம்.

ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு பருவம் உண்டு. காய்கறிகளுக்கும் அப்படியே. விஞ்ஞானம் மூலம் காய்,கனிகளை ஆண்டு முழுவதும் விளைய வைத்தாலும், பழங்கள் அவற்றுக்கு உரிய பருவதில் தான் சுவையுடன் இருக்கும். ஆக, இப்போது பருவத்தில் உள்ள பழங்களை வாங்கி பயன்படுத்துவதற்காக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பருவ காலங்களை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.

அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இந்த தளம் அமைந்துள்ளது. கனிகளின் பருவங்கள் பொதுவானது என்றாலும், இந்தியாவுக்கு உரிய பழங்களும் காய்கறிகளும் பிரத்யேகமானவை. எனவே நம்மூரிலும் இது போன்ற ஒரு இணையதளம் அமைக்கப்பட்டால், இது கொய்யா காலமா? அன்னாசி காலமா என்று தெரிந்து கொள்ளலாம். மதுரை மல்லி, கனகாம்பரம் என்று கூட விரிவுபடுத்தலாம்.

இப்போதைக்கு ரைப்டிராக் பக்கம் போய் பாருங்கள்: http://ripetrack.com/produces?utf8=%E2%9C%93&query=apple

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p02_apple>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள். 

இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு இணையதளமாக முன்னேறிச்செல்லாம். ஏதேனும் ஒரு இணையதளத்தை அடையாளம் காண முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. தெரியவில்லை எனகூறி அடுத்த தளத்தை கிளிக் செய்து பார்க்கலாம். ஒரு இணையதளத்தை தவறாக அடையாளம் சொன்னால், சரியான விடைக்கான க்ளுவையும் இந்த தளம் தருகிறது. 

சுவாரஸ்யமான விளையாட்டு போல தான். இணையதளங்களின் தோற்றம் உங்களுக்கு எந்த அளவுக்கு அத்துப்படி என்று அறிய முயன்று பார்க்கலாம்.

இணையதள முகவரி: <a href="http://dedesigntheweb.com/

“>http://dedesigntheweb.com/