Tagged by: apps

காடுகள் பேசுவதை கேட்க ஒரு இணையதளம்

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன. இதே போலவே காடும், காடு சார்ந்த இணையதளம் என சொல்லக்கூடிய வகையில் சவுண்ட்ஸ் ஆப் பாரஸ்ட் (https://timberfestival.org.uk/soundsoftheforest-soundmap/ ) எனும் புதுமையான இணையதளம் ஒன்றும் இருக்கிறது. வனத்திருவிழாவை நடத்தும் டிம்பர் பெஸ்டிவல் எனும் அமைப்பின் சார்பில் இந்த திருவிழாவின் அங்கமாக நடத்தப்படும் இந்த தளம், வன ஒலிகளுக்கான வரைபடமாக திகழ்கிறது. இந்த தளத்தில் உள்ள உலக வரைபடத்தின் மீது […]

உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெற இயற்கை சிகிச்சையாக வனக்குளியலில் மூழ்கி திளைக்க வழி செய்யும் இணையதளங்கள் இருக்கின்றன....

Read More »

கிளப்ஹவுசில் கூட்டம் அலைமோதுவது ஏன்?

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் தமிழாக்கம் தொடர்பான விவாதமும் தீவிரமாக நடைபெறுகிறது. ஆக, இந்தியர்கள் மத்தியில் இந்த செயலி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கிளப்ஹவுசில் இணைந்திருக்கிறீர்களா? என கேட்பது அல்லது கிளப்ஹவுசில் சந்திப்போம் என்று சொல்வதோ தான் சமூக ஊடக உரையாடலில் பலரும் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இந்த பரபரப்பு காரணமாக, இதுவரை கிளப்வுவுசை அறியாதவர்களும் அதில் இணைய ஆர்வம் […]

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் த...

Read More »

இணையதளங்களால் ஆன பயன் என்ன?

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம். இப்போதைக்கு, உங்கள் இணையதளத்தை மக்கள் நாடி வருவது? ஏன் எனும் தலைப்பில் சைமன் ரெனால்ட்ஸ் என்பவர் போர்ப்ஸ் இதழில் எழுதிய பழைய பத்தி பற்றி பார்க்கலாம். குலோபல் ரிவ்யூஸ் எனும் இணைய ஆய்வு நிறுவனம் ஒன்றின் தகவலை அடிப்படையாக வைத்து சைமன் இந்த பத்தியை சுருக்கமாக எழுதியுள்ளார். இணையதளங்களை நாடி வருபவர்களில் மூன்றில் ஒருவர் நண்பர்கள் பரிந்துரையால் குறிப்பிட்ட […]

பலரும் இணையதளங்களை தேடி வருவதற்கான காரணங்களாக பொதுவான சில நோக்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. இது பற்றி தனியே பார்க்கலாம்....

Read More »

கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை !

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்கள், யுபிஐ சார்ந்த சேவைகள் வாயிலாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இப்படி டிஜிட்டல்மயமாகி இருப்பது பண பரிவர்த்தனை மட்டும் அல்ல, கடன் வசதியும் தாம். ஆம், இப்போது டிஜிட்டல் கடன் பெறுவது எளிதாகி இருக்கிறது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் டிஜிட்டல் கடன் வழங்குகின்றன. அடிப்படையில் பார்த்தால், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் […]

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்...

Read More »

கொரோனா கால வாக்குமூலங்கள்

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்கள். கொரோனா கன்பெஷன்ஸ்.மீ (https://covidconfessions.me/ ) தளமும் இத்தகைய கல்வெட்டு தளம் தான். இந்த தளம், கொரோனா கால தனிமை படுத்தலில் பலரும் செய்த சின்ன சின்ன தவறுகளை அனாமேதயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. கொரோனா காலத்தில் எல்லோருமே கடினமான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாம் எல்லோருமே சின்ன சின்னதாக பாவங்களை […]

கொரோனா கால கல்வெட்டுகள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம். அதாவது, கொரோனாவால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களை பதிவு செய்ய...

Read More »