Tag Archives: apps

தானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா!

கூகுள் கண்ணாடியைjbareham_170922_2006_0343 நினைவு இருக்கிறதா? வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த  அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. இந்த தன்மைக்காகவே அது சர்ச்சைக்கும் இலக்கானது.

இப்போது கூகுள் வெள்ளோட்டம் விட்டிருக்கும் கூகுள் கிளிப்ஸ் காமிராவை பார்த்தால், கூகுள் கிளாஸ் நினைவுக்கு வராமல் இல்லை. ஸ்மார்ட் காமிரா என சொல்லப்படும் கூகுள் கிளிப்ஸ் உள்ளங்கைக்குள் அடங்கிவுடக்கூடிய சதுர வடிவ காமிராவாக இருக்கிறது. அண்மையில், பிக்சல்-2 நிகழ்ச்சியில் கூகுள் அறிமுகம் செய்த புதிய பிக்சல் போன், உள்ளிட்ட சாதனங்களுக்கு மத்தியில், விரைவில் வருகிறது எனும் அறிவிப்புடன் கிளிப்ஸ் காமிராவும் அறிமுகம் செய்யப்பட்டது.

சட்டை பாக்கெட் அல்லது பர்சில் வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு கச்சிதமான இந்த இரண்டுஅங்குல காமிராவின் பர்ஸ்ட்லுக் அனுபவத்தை தொழில்நுட்ப இணைய இதழான தி வெர்ஜ், விரிவாக விவரித்துள்ளது. முதல் பார்வைக்கு கூகுள் கிளிப்ஸ் வியக்க வைக்கிறது.

இந்த காமிராவில் சின்னஞ்சிறிய லென்ஸ் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி இதில் வியூபைண்டர் எல்லாம் கிடையாது. ஏனெனில் இந்த காமிரா தானாக படம் எடுத்துக்கொள்ளும். எனவே இதை கையில் வைத்து க்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டின் எங்காவது ஒரு முளையில் தொங்கவிட்டால் போதும் அது தானாக படம் எடுத்து பதிவு செய்து கொள்ளும். இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டும் இணைந்த கலையில் இது செயல்படுவதால், காட்சிகளை தானாக உணர்த்து கிளிக் செய்து விடுகிறது. அது மட்டும் அல்ல, தான் பார்க்கும் முகங்களை நினைவில் நிறுத்துக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கிறது. ஆக, நாளடைவில் இது முகங்களை நன்றாக பரீட்சயம் செய்து கொண்டு, அறிமுகம் இல்லாதவர்களை படம் எடுப்பதை தவிர்க்கவும் கற்றுக்கொண்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றபடி வீட்டில் இருக்கும் போது, சுவாரஸ்யமான தருணங்கள் என கருதப்படும் காட்சிகளை அது படமெடுத்தபடி இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஏழு நொடி ஓடக்கூடியதாக இருக்கும். இவற்றில் இருந்து தேவையான காட்சியை தேர்வு செய்து புகைப்படமாக மாற்றிக்கொள்ள்லாம். அப்படியே தொடர் படமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஒலி வசதி கிடையாது. எனவே வீடியோ என்று சொல்ல முடியாது.

காமிராவுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக செயலி மூலம் ஸ்மார்ட்போனில் படங்களை பார்க்க முடியும். அதிலேயே சேமித்துக்கொள்ளலாம். தேவை எனில் கையாலும் இதில் படமெடுக்கலாம். இதற்கான ஷட்டர் வசதி இருந்தாலும், இந்த காமிராவை அதன் போக்கில் விட்டு விடுவது தான் சிறந்தது என கூகுள் நினைக்கிறது. உதாரணத்திற்கு மழலைகள் உள்ள வீட்டில் பாசமிகு பெற்றோர்கள் கிளிப்ஸ் காமிராவை ஒரு மேஜையில் பொருத்தி விட்டால், மழழலையின் குறும்புகளும், மந்தகாசமான புன்னகைகளும் அழகாக பதிவாகி இருக்கும். பெற்றோர் அருகே இல்லாவிட்டால் கூட, காமிரா கச்சிதமாக குழந்தையின் பொன்னான தருணங்களை பதிவு செய்து கொள்ளும். சும்மா இல்லை, 130 கோணத்தில் விசாலமாக பார்த்து காட்சிகளை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது.

இந்த காமிரா, ஆக்‌ஷன் காமிராவாக வர்ணிக்கப்படும் கோ புரோ காமிரா மற்றும் ஸ்னேப்சேட் நிறுவனத்தின் ஸ்பெக்டகல் கண்ணாடிக்கு போட்டியாக சொல்லப்பட்டாலும் உண்மையில் கூகுள் இதை பெற்றோர்களை இலக்காக கொண்டு களமிறக்க உள்ளது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்டவர்களும் இந்த காமிராவை பயன்படுத்தலாம்.

சுற்றுப்புறத்தை புரிந்து கொண்டு, அதில் தென்படும் முகங்களை உணர்ந்து கொண்டு தானாக படமெடுக்கும் காமிரா, தானாக படமெடுக்கப்படும் போது சிக்க கூடிய அற்புதமான தருணங்களை நினைத்துப்பார்த்து வியக்க வைத்தாலும், இன்னொரு பக்கம் இது அந்தரங்கத்தின் மீதான ஊடுருவலாக அமைந்துவிடாதா எனும் கேள்வியும், அச்சமும் எழாமல் இல்லை.

கூகுள் இதை உணராமல் இல்லை. அதானால் தான் காமிரா என்று எல்லோரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியாகும் சிவப்பு ஒளியும் காமிரா படமெடுத்துக்கொண்டிருப்பதை உணர்த்தும் என்பதால் எதிரே இருப்பவர்கள் அறியாமல் படமெடுக்கப்படும் அபாயம் இல்லை, தவிர இதன் பயன்பாடு பெரும்பாலும் வீட்டு சூழலில் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், இதில் பதிவாகும் காட்சிகள் வேறு எங்கும் தானாக சேமிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே கிளவுட் வசதியில் ஒருங்கிணைக்கப்படும். எனவே புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் குறைவு என கருதலாம். இந்த காமிரா அதன் உரிமையாளருக்கே விசுவாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் தெரிந்த முகங்களுக்கு பழகி அவர்களை படமெடுக்கவே முற்படும் என்பதால் பூங்காவில் சென்று அமர்ந்திருக்கும் போது கூட, மற்ற குழந்தைகளை விட்டு, உரிமையாளர் குழந்தையின் விளையாட்டையே இது பதிவு செய்ய முற்படும். எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்யும் மாயம்.

தினசரி வாழ்க்கை காட்சிகளை இடைவிடாமல் பதிவு செய்யும் வசதி தொழில்நுட்ப உலகில் லைப்லாகிங் என சொல்லப்படுகிறது. புதுமையான கருத்தாக்கம் என்பதை கடந்து இது நடைமுறை வாழ்க்கையில் இன்னும் பயன்பாட்டிற்கு வந்துவிடவில்லை. ஒருவிதத்தில் கூகுள் காமிராவும் இந்த பிரிவின் கீழ் தான் வருகிறது. இந்த காமிரா எந்த வகையான வரவேற்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இதை தனித்து பார்ப்பதற்கு இல்லை. ஸ்மார்ட்போன் தவிர வீடுகளில் தானியங்கி சாதனங்கள் நுழையத்துவங்கிவிட்டன. அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த வகை சாதனங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. கூகுளும் தன்பங்கிற்கு கூகுள் ஹோம் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. வீடுகளை இல்லங்களை ஸ்மார்ட் இல்லமாக்கும் போட்டியில் கூகுளும் தன்னை தீவிரமாக இணைத்துக்கொண்டுள்ளது. இதனால் சராசரி வாழ்க்கை மேம்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் அல்லவா!

 

 

வீடியோ புதிது: அழுகையின் பின்னே உள்ள அறிவியல்

ஆனந்தத்திலும் கண்ணீர் பெருகலாம், சோகத்திலும் கண்ணில் நீர் வரலாம். இன்னும் பல காரணங்களினால் கண்ணீர் பெருகலாம். எல்லாம் சரி, கண்ணீர் ஏன் வருகிறது என்பது தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாப் சயின்ஸ் யூடியூப் சானலின் நாம் ஏன் கண்ணீர் விடுகிறோம் எனும் வீடியோவை பார்க்கலாம். அழுகையின் பின்னே உள்ள விஞ்ஞானத்தை மிக எளிதாக இந்த வீடியோ விளக்குகிறது. சராசரி கண்ணீர், அன்னிச்சை உணர்வாக வரும் கண்ணீர், உணர்ச்சி பெருக்கால் வரும் கண்ணீர் என அழுகையில் அடிப்படையில் மூன்று வகை இருப்பதை தெரிந்து கொள்வதோடு, ஆனந்தக்கண்ணீர் மற்றும் உணரச்சி பெருக்கிலான கண்ணீர் உள்ளிட்டவை, பரிணாம நோக்கில் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான சமிக்ஞ்சை என்பது உள்ளிட்ட விளக்கத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

வீடியோவை காண: https://www.youtube.com/watch?v=QGdHJSIr1Z0

 

 

செய்தி புதிது; 360 கோணத்தில் காணும் வசதி

விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் 360 கோணத்திலான வீடியோக்கள் தான் அடுத்த பெரிய சங்கதி என பேசப்படுகிறது. இந்த வசதியை அளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனங்களும் வரிசையாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வகை உள்ளடக்கத்தை காண்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. இந்த வீடியோக்களை டவுண்லோடு செய்த பிறகு அவற்றை காண தனியே பிளேயரை பயன்படுத்த வேண்டும். இந்த குறையை போக்கும் வகையில், முன்னணி பிரவுசர்களில் ஒன்றான ஓபரா விர்ச்சுவுவல் ரியாலிட்டி காட்சிகளுக்கான பிளேயர் வசதியையும் தனது பிரவுசரில் இணைத்துள்ளது. இதன் மூலம், பயனாளிகள் வி.ஆர் சாதங்களை மாட்டிக்கொண்டு எந்த சிக்கலும் இல்லாமல் மெய்நிகர் உலகில் பயணிக்கலாம். இதற்கென தனியே பிளேயரை டவுண்லோடு செய்யவேண்டிய அவசியமில்லை.

தகவல் புதிது: நோபல் பரிசு தகவல்களை அறிய …

நோபல் பரிசு தொடர்பான அறிவிப்புகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில் அறிய விருப்பம் எனில், நோபல் விருது குழுவின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம். (@NobelPrize) நோபல் குழுவின் அறிவிப்புகள் அனைத்தும் இந்த பக்கத்தில் குறும்பதிவுகளாக சுடச்சுட பகிரப்படுகின்றன. அறிவிப்புகள் தவிர நோபல் பரிசு தொடர்பான முக்கிய செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் ரிடிவீட் வடிவில் அறியலாம். டிவிட்டரில் இருப்பவர்கள் தாங்கள் பின் தொடரும் டிவிட்டர் முகவரிகளில் இந்த முகவரியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

 

தளம் புதிது: நேரம் என்ன நேரம்!

 

நவீன உலகில் இரவு பகல் பார்க்காமல் தான் உழைக்க வேண்டியிருக்கிறது. அதோடு, நம்முடைய பணி தொடர்புகள் உலக அளவில் விரிந்திருப்பதால், நாம் பகலில் பணியாற்றும் போது, மறுமுனைவில் இருப்பவர்களுக்கு அது இரவா, பகலா என அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இதற்கு உதவும் வகையில், உலக நேரங்களை உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப மாற்றிக்காட்டுகிறது ’மைடைம்சோன்’ இணையதளம். குரோம் பிரவுசருக்காக இது வழங்கும் நீட்டிப்பு சேவை மூலம், இந்த வசதியை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இமெயில் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் சந்திப்புக்கான திட்டமிடலில் ஈடுபடும் போது, இங்குள்ள நேரத்தை குறிப்பிட்டு சம்மதமா என கேட்கும் போது, வலப்பக்கமாக கிளிக் செய்தால், மெயிலை பெறுபவர் ஊரில் என்ன நேரம் என மாற்றிக்காட்டுகிறது.

 

இணைய முகவரி: https://mytimezone.io/

 

 

 

 

 

 

காகித விமானத்தின் ஹைடெக் வடிவம்

கொஞ்சம் புதுமையான ஐடியா கைவசம் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அறிமுகம் செய்து ஆதரவை அள்ளலாம் என்பதை ஏற்கனவே இணைய கில்லாடிகள் பலர் நிருபித்துள்ளனர். இப்போது ’பவர் அப்’ நிறுவனம் எனும் இளம் நிறுவனம் இதை மீண்டும் powerup-and-VR-582x388நிருபித்துள்ளது. அதிநவீன காகித விமானங்களை உருவாக்கும் பவர் அப் நிறுவனம், இந்த விமானத்தை அப்டேட் செய்வதற்கான கோரிக்கையோடு கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து கலக்கி கொண்டிருக்கிறது.

காகித விமானத்தில் அப்படி என்ன புதுமை செய்துவிட முடியும் என அலட்சியமாக நினைக்க வேண்டாம். நவீன தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் சிறுபிள்ளைகள் விளையாட்டான காகித விமானத்தையும் ஹைடெக் சாகசமாக மாற்றலாம். ’பவர் அப்’ அதை தான் செய்திருக்கிறது.

காகிதத்தை அழகாக மடித்து விமானமாக்கி கையால் காற்றில் வீசி எறிந்து விளையாடிய அனுபவம் பலருக்கு இருக்கலாம். ஏன் அலுவலக சூழலில் கூட பெரியவர்கள் பணிச்சுமை டென்ஷனை மறக்க காகித விமான விளையாட்டில் ஈடுபடுவது உண்டு. சந்தேகமாக இருந்தால் கூகுளில் காகித விமானத்தை குறிக்கும் ஆங்கில வார்த்தையான பேப்பர் பிளேன் எனும் பதத்தை டைப் செய்து வரும் முடிவுகளை பார்க்கவும். காகித விமான விளக்க வீடியோவில் துவங்கி, ஸ்மார்ட்போன் உதவியுடன் காகித விமானங்களை பறக்க விடும் விளையாட்டு வரை பலவிதமான முடிவுகளை பார்க்கலாம்.

நிற்க, பவர் அப் என்ன செய்திருக்கிறது என்றால், சாதாரண காகித விமானத்தை இஞ்சினால் இயக்கப்பட்டு தானாக பறக்கும் விமானமாக மாற்றியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த விமானத்திற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம் இதை ஸ்மார்ட்போன் வழியே கட்டுப்படுத்தவும் செய்யலாம். புளுடூத் வசதி வழியே இது செயல்படுகிறது. ரிமோட் கண்ட்ரோலால் இயங்கும் பொம்மை கார் போல இந்த காகித விமானத்தை ஒரு பத்து நிமிடம் பறக்க வைத்து விளையாடலாம்.

காகித விமானத்தை பறக்க விட்டால் நேராகச்சென்று குப்புற கவிழ்ந்து விடும். இதை வைத்துக்கொண்டு நண்பர்களோடு யார் அதிக தூரம் எறிய முடிகிறது என போட்டி வைக்கலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், பவர் அப் நிறுவனம், காகித விமானத்தில் சின்னஞ்சிறிய இஞ்சினை பொருத்தி தானாக பறக்கும் ஆற்றலை அளித்திருக்கிறது.

புதுமையான முயற்சி என்றாலும் கொஞ்சம் காஸ்ட்லியானது. காகிதத்தில்பொருத்தும் சிறிய இஞ்சின் மற்றும் அதை இயக்க கூடிய பேட்டரியை தயார் செய்ய வேண்டும். இந்த அமைப்பிற்கான ஸ்மார்ட்போன் செயலியையும் உருவாக்க வேண்டும். இதற்கு எல்லாம் முதலிடு தேவை. கைக்காசை போடலாம் அல்லது கடன் வாங்கலாம் என்றாலும் கூட, தயாரிப்புக்கு போதிய ஆதரவு இருக்குமா என்பது தெரியாது. இது போன்ற சோதனை முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக என்றே கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் இருக்கிறது.

கிரவுட்சோர்சிங் என சொல்லப்படும் இணையவழி நிதி திரட்டலுக்கான மேடையாக கிக்ஸ்டார்ட்டர் செயல்படுகிறது. புதுமையான ஐடியாவை கைவசம் வைத்திருப்பவர்கள் அதை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்க நினைத்தால் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் அதற்கான பக்கத்தை அமைத்து கோரிக்கை வைக்கலாம். ஐடியாவை விவரித்து அதை செயல்படுத்த எவ்வளவு நிதி தேவை என்பதை தெரிவிக்க வேண்டும். அந்த ஐடியாவால் கவரப்படும் இணையவாசிகள் நிதி அளித்து ஆதரவு தெரிவிக்கலாம். ஆதரவு என்றால் அள்ளிக்கொடுக்க வேண்டும் என்றில்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஐந்து டாலரோ, பத்து டாலரோ கூட கொடுக்கலாம். இப்படி பலர் கொடுக்க முன்வந்தால் கணிசமான தொகை சேர்ந்துவிடும். கோரிக்கை வைத்த மொத்த தொகையும் கிடைத்துவிட்டால் களத்தில் இறங்கிவிட வேண்டியது தான். ஆதரவு தெரிவித்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துவிட்டு, தயாரிக்கும் பொருளை பரிசாக அனுப்பி வைக்கலாம்.

இந்த முறையில் கிக்ஸ்டார்ட்டரில் நிதி திரட்டி வெற்றி பெற்று கலக்கிய நிறுவனங்களுக்கு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த பட்டியலில் தான் பவர் அப் நிறுவனமும் இணைந்திருக்கிறது.

சாதாரண காகித விமானத்தை இஞ்சின் மூலம் இயக்கி ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தும் விமானமாக மாற்றும் எண்ணத்துடன் கிக்ஸ்டார்ட்டரில் கோரிக்கை வைத்து அதற்கான நிதியை திரட்டுவதிலும் பவர் அப் நிறுவனம் வெற்றி பெற்றது. இது நடந்து ஆறு ஆண்டுகள் இருக்கலாம். ஸ்மார்ட்போனால் காகித விமானத்தை பறக்கவிடலாம் எனும் ஐடியாவால் கவரப்பட்ட நூற்றுக்கணக்கானோர் இதற்கு நிதி அளித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இப்போது இந்த நவீன காகித விமானத்தை மேலும் அப்டேட் செய்யும் எண்ணத்துடன் பவர் அப் மீண்டும் கிக்ஸ்டார்ட்டர் கதவைத்தட்டியுள்ளது. இந்த முறை காகித விமானத்தை மேலும் மேம்படுத்தியிருக்கிறது. எப்படி என்றால் இதில் சின்னஞ்சிறிய காமிரா ஒன்றையும் பொருத்தியுள்ளது. அதனுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி என கூறப்படும் மெய்நிகர் தன்மை கொண்ட கண்ணாடியுடன் இதை இணைத்துள்ளது. ஆக, விமானம் பறக்கும் போது அதில் உள்ள காமிர படம் பிடிக்கும் காட்சிகளை விர்ச்சுவல் ரியாலிட்டி சாதனம் மூலம் பார்த்து மகிழலாம். அப்படியே விமானத்தை அப்படியும், இப்படியும் மாற்றி மாற்றி இயக்கவும் செய்யலாம்.

ட்ரோன்கள் என சொல்லப்படும் ஆளில்லா விமானம் போலவே செயல்படும் தன்மையை பெற்றுள்ள இந்த விமானத்தை தயாரிக்க தான் இந்த முறை நிறுவனம் நிதி கோரியுள்ளது. கேட்ட நிதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை பலர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர். இந்த விமானம் செயல்படும் விதம் பற்றி விளக்கும் அருமையான வீடியோ ஒன்று இதன் கிக்ஸ்டார்ட்டர் பக்கம் மற்றும் நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.; https://www.poweruptoys.com/

நிதி அளிக்க முன் வருபவர்களுக்கு இந்த காகித ட்ரோன் விமானம் பரிசாக அனுப்பி வைக்கப்படும் என்பதோடு, சந்தையிலும் இது விற்பனைக்கு வர உள்ளது. விநோதமும், புதுமையும் இணைந்த ஐடியாக்கள் எப்படி கிக்ஸ்டார்ட்டர் மூலம் செயல்வடிவம் பெறுகின்றன என்பதற்கு இது நல்ல உதாரணம். அது மட்டும் அல்ல, ஒரு புதுமையான ஐடியாவை எப்படி எல்லாம் அப்டேட் செய்து அசத்தலாம் என்பதற்கும் நல்ல உதாரணம். அது மட்டும் அல்ல, ஒரு எளிய விளையாட்டை தொழில்நுட்பத்துடன் இணைத்து இன்னும் சுவாரஸ்யமாக்கலாம் என்பதை உணர்த்துவதோடு, ட்ரோன் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய நுட்பங்களும் யதார்த்த வாழ்க்கையை நோக்கி இன்னும் நெருங்கி வரத்துவங்கியிருக்கின்றன என்பதையும் உணர்த்துகிறது.

உங்கள் மனதிலும் இது போன்ற மின்னல் கீற்று ஐடியாக்கள் இருந்தால் கிக்ஸ்டார்ட்டர் பாணி இந்திய தளங்களை முயன்று பார்க்கலாம்.

படிவங்களுக்கான இணையதளம்

TidyForm-670x459விண்ணப்ப படிவங்கள் அல்லது ஆவணங்களுக்கான இணைய காப்பகமாக டைடிபார்ம் இணையதளம் விளங்குகிறது. இந்த தளத்தில் பல வகையான படிவங்களை காணலாம். எக்செல் கோப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம், வரவு செலவு வடிவங்கள் என பல வகையான ஆவண வடிவ நகல்களை இந்த தளத்தில் காணலாம். 2,000 க்கும் மேற்பட்ட வகைகளில் 20,000 க்கும் மேற்பட்ட படிவங்கள், ஆவணங்களின் நகல்கள் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

செலவு கணக்கு அறிக்கை, வாராந்திர அறிக்கை, இன்வாய்ஸ், குடும்ப பட்ஜெட் என பலவிதமான வடிவங்கள் இந்த பட்டியலில் உள்ளன. வர்த்தக தேவை முதல் வாழ்க்கை வரை எல்லா விதமான தேவைகளுக்கும் இவை கைகொடுக்கும்.

பயணர்கள் தங்களுக்கு தேவையான வகையை கிளிக் செய்து அதில் உள்ள வடிவங்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து பார்க்கலாம் அல்லது தேவையான குறிச்சொல்லை குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம். குறிப்பிட்ட ஆவண நகல் வடிவத்தை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.

இணைய முகவரி: https://www.tidyform.com/

 

——-\

 

செயலி புதிது: புதுமையான உரையாடலுக்கு உதவும் செயலி

மெசேஜிங் பரப்பில் புதிய செயலியாக எக்சேட்லி.மி செயலி அறிமுகம் ஆகியுள்ளது. ஐபோன்களுக்கான அறிமுகம் ஆகியுள்ள இந்த செயலி புதுமையான முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை சாத்தியமாக்குவதாக தெரிவிக்கிறது.

மேசேஜிங் செயலிகள் பொதுவாக ஏற்கனவே அறிந்த நபர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. இந்த செயலி மாறுபட்ட வகையில், ஒத்த கருத்துள்ளவர்களி அறிந்து தொடர்பு கொள்ள வழி செய்வதாக தெரிவிக்கிறது.

இந்த செயலியில் ஒளிப்படத்தை பதிவேற்றிவிட்டு, பயனாளிகள் தங்களைப்பற்றி தெரிவித்து அதனடிப்படையில் தங்களைப்போலவே உள்ளவர்களை தேடலாம். பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு உரையாடலில் ஈடுபடலாம்.

மெசேஜிங் பரப்பில் ஏற்கனவே அதிக செயலிகள் இருக்கும் நிலையில், இந்த புதுமையான செயலியால் எந்த அளவு வரவேற்பை பெற முடியும் என பார்க்கலாம்./

மேலும் தகவல்களுக்கு: http://exactly.me/

பிளேஷ் மூடுவிழா அறிவிப்பும், இணைய வரலாறு கவலையும்!

960x0பழையன கழிதல் என்பது மென்பொருள் சேவைகளுக்கும் பொருந்தும் தான். அதிலும் இணைய தொழில்நுட்பம் வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழைய மென்பொருள் சேவைகள் காலாவதியாகி கைவிடப்படும் நிலை ஏற்படுவது இயற்கையானது தான். இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் அடோப் பிளேஷ் மென்பொருளுக்கும் இது தான் நிகழ இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் அண்மையில் அறிவித்ததை நீங்களும் கவனித்திருக்கலாம். இது தொடர்பாக அடோப் வெளியிட்ட அறிவிப்பில், பிளேஷ் மென்பொருள் வாழ்க்கையை முடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. 2020 ம் ஆண்டு வாக்கில் பிளேஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுவத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பொருள் பிளேஷ் மென்பொருள் மெல்ல கொல்லப்படும் என்பதாகும்.

இந்த அறிவிப்புக்கான எதிர்வினைகளை பார்க்கும் போது, பிளேஷ் மென்பொருளுக்கு விடை கொடுக்க பெரும்பாலானோர் தயாராகிவிட்டது போலவே தோன்றுகிறது. பிளேஷ் மென்பொருளின் முடிவு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும், இப்போதாவது அடோபிற்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் தான் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப செய்தி தளங்கள் கூட, பிளேஷின் தவிர்க்க இயலாத மரணம் என்பது போல தலைப்பு வெளியிட்டிருந்தன. கிஸ்மோடோ இணையதளம் பிளேஷை கருணக்கொலை செய்ய அடோப் முன்வந்துள்ளது என வர்ணித்திருந்தது. இன்னும் சிலர், தவிர்க்க இயலாத பிளேஷ் முடிவு இப்போதாவது அறிவிக்கப்பட்டுள்ளதே என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பல தளங்கள் பிளேஷ் மென்பொருளுக்கு இறங்கற்பா எழுதிக்கொண்டிருக்கின்றன.

பிளேஷ் மீது ஏன் இத்தனை வெறுப்பும், விமர்சனமும் இருந்தாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவிடக்கூடாது. பிளேஷ் அடிப்படையில் இணையத்திற்கான மல்டிமீடியா சேவைகளை உருவாக்க பயன்படும் மென்பொருள். அனிமேஷன், வீடியோகேம் மற்றும் வீடியோக்களை உருவாக்க பிளேஷ் பயன்படுத்தப்படுகிறது. கிராபிக் தான் இதன் பலம் என்பதால், இணையதளங்களை செழுமையாக்க கூடிய செயலிகளையும், சேவைகளையும் பிளேஷ் கொண்டு எளிதாக உருவாக்க முடிந்தது. அது மட்டும் அல்ல இணையத்தில் வீடியோக்களை எளிதாக பார்க்கவும் பிளேஷ் கைகொடுத்தது. வீடியோ பகிர்வு சேவை பிரிவில் முன்னோடியான யூடியூப் 2005 ல் அறிமுகமான போது பிளேஷ் பிளேயர் மூலமே வீடியோக்களை பார்க்க வழி செய்ததாக விக்கிபீடியா கட்டுரை குறிப்பிடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அது மட்டும் அல்ல, பிளேஷ் கொண்டு எண்ணற்ற கேம்களும், அனிமேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படி கோலோச்சிய பிளேஷ் முடுவிழாவை நோக்கி தள்ளப்பட இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், பிளேஷ் தொழில்நுட்பம் காலாவதியாகவிட்டது என்பது. ஒரு காலத்தில் இணையதளங்களுக்கான சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்க பிளேஷ் தேவைப்பட்டது என்றாலும், அதன் பின் நிகழ்ந்த பாய்ச்சலில் அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அதோடு பிரவுசர்களில் பயன்படுத்தப்படும் எச்டிஎம்.எல் தொழில்நுட்பத்திற்கு பிளேஷ் அந்நியமாகிவிட்டது. எனவே மென்பொருளாளரகள் பிளேஷுக்கு குட்பை சொல்லி வருகின்றனர்.

பிளேஷை பொருத்தவரை இன்னொரு பிரச்சனை, அதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள். பிளேஷ் மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் பல சேவைகள் மால்வேர் எனப்படும் வில்லங்க வாகனங்கள் மறைந்திருக்கும் இடமாக கருதப்படுகிறது. பிளேஷில் உருவாக்கப்பட்ட எட்டிப்பார்க்கும் விளம்பரங்கள் அல்லது வீடியோக்கள் மால்வேர்களின் உரைவிடமாக அமைவது உண்டு. அதோடு, உங்கள் பிளேஷ் பிளேயர் காலாவதியாகிவிட்டது, அப்டேட் செய்யவும் எனும் அறிவிப்பையும் பிளேஷ் சார்ந்த தளங்களில் அடிக்கடி பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இதுவும் வில்லங்க அறிவிப்பாக அமைந்து, இதை கிளிக் செய்தால் மால்வேருக்கான ஜன்னல் திறக்கப்பட்டு அவை கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். இதற்கு பிளேஷை குற்றம் சாட்ட முடியாது என்றாலும், மால்வேரை உருவாக்கும் விஷமிகளின் பயன்பாட்டால் பிளேஷ் பாதுகாப்பு ஓட்டைகள் நிறம்பியதாக கருதப்பட்டு வருகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம் வந்துவிட்டதாலும், மால்வேர் வாகனமாக இருப்பதாலும் பிளேஷுக்கு எதிராக வலுவான விமர்சனங்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. பல பிரவுசர் நிறுவனங்களும், பிளேஷை கழற்றிவிட்டுள்ளன. இவ்வளவு ஏன், ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபோனில் இதற்கு இடமே கொடுக்கவில்லை. பிளேஷ் மறைந்தாக வேண்டிய மென்பொருள் என முதலில் அறிவித்தது ஜாப்ஸ் தான். பிளேஷ் டெஸ்க்டாப் காலத்திற்கான மென்பொருள், ஸ்மார்ட்போன யுகத்தில் அதற்கு தேவையில்லை என ஜாப்ஸ் காட்டமாக கூறியிருந்தார்.

ஏதோ ஒரு விதத்தில் பலரும் இப்போது இதை ஏற்கத்துவங்கிவிட்டனர். அதன் விளைவு தான் அடோப் நிறுவனம், பிளேஷை கைவிடும் முடிவை அறிவித்துள்ளது: https://blogs.adobe.com/conversations/2017/07/adobe-flash-update.html

நிற்க இந்த செய்திக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. பிளேஷ் மென்பொருளுக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதும், அவர்களில் பலர் பிளேஷ் நீடுழி வாழ வேண்டும் என கோரிக்கை எழுப்பியிருப்பதும் தான் அது. மென்பொருளாலரான ஜுஹா லின்ஸ்டெட் (Juha Lindstedt ) என்பவர் பிளேஷை கைவிடக்கூடாது என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஒன்றை துவக்கியிருக்கிறார். அவரது கோரிக்கை ஒரளவு வரவேற்பை பெற்றிருப்பதோடு காரசாரமான விவாதத்தையும் துவக்கி வைத்திருக்கிறது.

லின்ஸ்டெட் பிளேஷை காப்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் வாதம் மிகவும் முக்கியமானது. பிளேஷுக்கு முடிவிழா என்பது ஒரு மென்பொருள் சார்ந்த முடிவு மட்டும் அல்ல, அது இணைய வரலாறு சார்ந்ததும் கூட என்பது தான் அவரது வாதத்தின் முக்கிய அம்சம். அதாவது பிளேஷ் கொண்டு உருவாக்கப்பட்ட இணையசேவைகளும், கேம்களும், அனிமேஷன்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படா முடியாமல் போய்விடும் என்று அவர் கவலைப்படுகிறார். இந்த சேவைகளும், கேம்களும் இணைய வரலாற்றின் அங்கமாக இருப்பதால் அவை காணாமல் போவது இணைய வரலாற்றின் ஒரு பகுதி அழிந்து போவதற்கு சமம் என்கிறார் அவர்.

இதற்காக கித்ஹப் எனும் தொழில்நுட்ப தளத்தில் கோரிக்கை மனு அளித்து ஆதரவு கோரியுள்ளவர், பிளேஷ் பிளேயர் என்பது இணைய வரலாற்றின் முக்கிய துண்டு, அதை கொல்வது எதிர்கால தலைமுறை கடந்த காலத்தை அணுக முடியாமல் செய்துவிடும் என்று தெரிவித்துள்ளார். கேம்கள், இணையதளங்கள், இணைய சோதனை முயற்சிகள் எல்லாமே மறக்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மென்பொருளில் ஏற்படும் முன்னேற்றம் என்பது கடந்த காலத்தை அழிப்பதாக அமைய வேண்டுமா என்பது தான் அவர் கேட்கும் கேள்வி. ஆம், சில ஆண்டுகள் கழித்து மென்பொருள் வரலாறு பற்றி விவாதிக்கும் போது பிளேஷ் மென்பொருள் தொடர்பாக பேசும் போது, அதற்கான உதாரணங்களை காண முடியாமல் வெறும் விக்கிபீடியா கட்டுரையை தகவலை மட்டும் காண்பது என்பது வரலாற்று வெறுமையாகி விடலாம் அல்லவா? இந்த கவலையினால் தான் லின்ஸ்டெட் பிளேஷை காப்பாற்ற குரல் கொடுக்க கோரியிருக்கிறார். ஆனால், பிளேஷ் தொடர்பான நிதர்சனத்தை அவர் உணராமல் இல்லை. எனவே தான், பிளேஷ் மென்பொருளை கொலை செய்துவிடாமல், அதை ஓபன் சோர்ஸ் முறையில் வெளியிட்டு இணையவாசிகள் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இது சரியா? பலன் தருமா? எனும் நோக்கில் மென்பொருள் உலகில் விவாதம் நடைபெற்று வருகிறது.: https://github.com/pakastin/open-source-flash

இணைய யுகத்தின் பழைய சேவைகளையும், தளங்களையும் தக்க வைத்து, இணைய வரலாற்றை காக்க வேண்டும் எனும் இயக்கத்தின் பாதையில் பிளேஷுக்கான போராட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பாக்கலாம். இந்த செய்திக்கு வாலாக ஒரு தகவலையும் நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வரைவதற்கான எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளுக்கு விடை கொடுப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த எளிமையான மென்பொருளுக்கு ஆதரவாக பயனாளிகள் டிவிட்டரில் பொங்கியதை அடுத்து, பெயிண்ட் மென்பொருள் விண்டோஸ் ஸ்டோரில் தொடரும் என அறிவித்தது. 32 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான மென்பொருளுக்கு இத்தனை அபிமானிகளா என்றும் வியந்து போவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. கம்ப்யூட்டரில் வரைவதை எளிதாக்கிய அந்த மென்பொருளும் இணைய வரலாற்றின் அங்கம் தான்.

 

தளம் புதிது: அந்த நாள் இணையதளங்கள்

இணைய வரலாற்றை திரும்பி பார்க்க இணையதளங்களை திரும்பி பார்ப்பதைவிட சிறந்த வழி வேறில்லை. அதாவது, சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட இணையதளங்கள் எப்படி இருந்தன என்பதை திரும்பி பார்ப்பது. குறிப்பிட்ட கால கட்டத்தில் இணையதளங்கள் எப்படி தோற்றம் அளித்த என தெரிந்து கொள்ள முடிவது இணைய வடிவமைப்பு பற்றி மட்டும் அல்ல, உள்ளடக்கத்தின் போக்கு பற்றியும் புரிய வைக்கும்.

அந்த வகையில், இணையத்தின் முன்னணி இணையதளங்கள் பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்பதை தெரிந்து கொள்ள வழி செய்கிறது டென் இயர்ஸ் அகோ இணையதளம்.

இதன் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ரெட்டிட், யூடியூப், அமேசான், பிபிசி, டைம், ஆப்பிள் உள்ளிட்ட இணையதளங்களின் லோகோ மீது கிளிக் செய்தால் அவை 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி காட்சி அளித்தன என்பதை பார்க்கலாம்.

இணையதளங்களின் பழைய வடிவங்களை சேமித்து காப்பாற்றிவரும், வெப் ஆர்கேவ் தளத்தில் சேமிக்கப்பட்ட இணைய பக்கங்களை கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நீல் அகர்வால் என்பவர் இந்த சுவாரஸ்மான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.

இணைய முகவரி: http://tenyearsago.io/

 

செயலி புதிது; புத்தக குழுக்களை உருவாக்கலாம் வாங்க!

நல்ல புத்தகத்தை படித்தால் மட்டும் போதுமா என்ன? அது பற்றி சக வாசகர்களுடன் விவாதித்தால் தான் வாசிப்பு அனுபவம் இன்னும் விசாலமாகும் அல்லவா? ஸ்மார்ட்போன் யுகத்தில் இத்தகைய பகிர்தலுக்கு உதவும் வகையில் புக்டிரைப்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், புத்தக புழுக்கள் தாங்கள் படித்த ரசித்த புத்தகம் தொடர்பான குழுவை உருவாக்கி கொண்டு அது பற்றி விவாதிக்கலாம். இந்த குழுவில் சேருமாறு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நமக்கு பிடித்த புத்தகம் தொடர்பான குழுவில் சேர்ந்து கருத்து தெரிவிக்கலாம்.

நாம் விவாதிக்க விரும்பும் புத்தகங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு கருத்து சொல்ல அழைக்கலாம். ஒவ்வொரு புத்தகம் பின்னும் ஒரு குழு இருக்கிறது என்பதை சாத்தியமாக்க விரும்புகிறது இந்த செயலி.

மேலும் விவரங்களுக்கு: http://booktribes.us/

 

 

நன்றி; தமிழ் இந்து இளமை புதுமையில் எழுதியது.

பயனுள்ள பிடிஎப் கருவிகளை அளிக்கும் இணையதளம்

CleverPDFபிடிஎப் கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும் போது, பல தகவல்கள் பிடிஎப் கோப்பு வடிவில் இருப்பதை பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களே கூட, பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பிடிஎப் கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்கு தேவைப்படக்கூடிய பலவிதமான இணைய கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பிடிஎப் இணையயதளம்.

பிடிஎல் கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குறிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால் பல நேரங்களில் பிடிஎப் கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் தேவை ஏற்படலாம். உதாரணத்திற்கு பிடிஎப் கோப்பை சாதாரன வேர்டு கோப்பாக மாற்ற வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களை செய்வதற்கான கருவிகள் அனைத்தும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐகான் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் விரும்பிய கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதே போல பிற கோப்பு வடிவங்களில் இருந்தும் பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பவர்பாயிண்ட் அல்லது உருவப்படத்தை பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

இவற்றைத்தவிர, பிடிஎப் கோப்புகளை இணைப்பது, பிடிஎப் கோப்புகளை பிரிப்பது, சுருக்குவது போன்ற தேவைகளுக்கான இணைய கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி பிடிஎப் தொடர்பான 19 வகையான பயன்பாட்டிற்கான இணைய கருவிகளை இந்த தளத்தில் அணுகலாம்.

இணைய முகவரி: https://www.cleverpdf.com/

 

செயலி புதிது; ஜிப் வடிவில் செய்திகள்

செய்திகள் சார்ந்த செயலிகளில் மிகவும் வித்தியாசமான செயலியாக ஸ்னிப்ட் அமைந்துள்ளது. இந்த செயலி செய்திகளை சுருக்கமாக மட்டும் அல்ல, சுவாரஸ்யமான முறையிலும் வழங்குகிறது. அதாவது செய்திகளை ஜிப் மற்றும் வீடியோ மீம்கள் வடிவில் வழங்குகிறது.

இந்த செயலியில், விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல், இந்தியா, சர்வதேசம் என பல பிரிவுகளில் உங்களுக்கு விருப்பமான பகுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு அந்த பிரிவு செய்திகளை ஜிப் வடிவில் அல்லது 4 நொடி சுருக்கமான வீடியோ மீம்களாக பார்க்கலாம்.

செய்திகள் தொடர்பான வீடியோ மீம்கள் அல்லது ஜிப்களை ஒரே இடத்தில் அணுகுவதையும் இந்த செயலி எளிதாக்குகிறது எனலாம்.

ஜிப்களை கண்டு ரசித்த பிறகு மேற்கொண்டு தகவல்கள் தேவை எனில், 150 வார்த்தை சுருக்கத்தையும் வாசிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.mysnippt.snippt&hl=en