Tag Archives: daily

1-daily2

புகழ்பெற்ற மனிதர்களின் வெற்றி பழக்கங்களை அடையாளம் காட்டும் இணையதளம்

உளவியல் மேதையான சிக்மண்ட் பிராய்டு தினமும் நடைபயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது உங்களுக்குத்தெரியுமா? விசாரணை உள்ளிட்ட மகத்தான் நாவல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரான பிரான்ஸ் காப்கா தினமும் உடற்பயிற்சி செய்துவிட்டு நடைபயிற்சி செய்யும் வழக்கம் கொண்டிருந்தார் என்பது தெரியுமா?

வரலாற்றின் புகழ்பெற்ற படைப்பாளிகளில் பலரும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொணிருந்தனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த தகவல்கள் வியப்பை அளித்தாலோ அல்லது புகழ் பெற்ற மேதைகளின் பழக்கங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலோ அதற்காக என்றே அருமையான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போடியோ.காம் எனும் இணையதளம் சார்பில் ,புகழ்பெற்ற படைப்பாற்றல் மிக்க மனிதர்களின் தினசரி பழக்கவழக்கங்கள் எனும் தலைப்பில் இதற்கான இணைய பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

படைப்பாற்றாலால் உலகை வியக்க வைத்த மேதைகள் தங்கள் வாழ்நாளில் பின்பற்றிய பழக்கங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அழகாக வரைபட சித்திரமாக இடம்பெற்றுள்ளது. இன்போகிராபிக் என்று சொல்லப்படும் இந்த வரைபட சித்திரத்தை பார்த்தாலே போதும் எழுத்தாளர்களும் மேதைகளும் என்ன வகையான பழக்கங்களை கொண்டிருந்தனர் என்று தெரிந்து கொள்ளலாம்.

புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக்கில் துவங்கி, ஆங்கில கவிஞர்கள் ஜான் மில்டன், ஆடென், சமகல கவிஞர் மாட் ஆக்லோ, விஞ்ஞானி,தத்துவஞானி என பல முகங்களை கொண்ட பெஞ்சமின் பிராங்கிளின், நாவலாசிரியர்களின் ஆதர்சமான பிரான்ஸ் காப்கா, உளவியல் மேதை சிக்மெண்ட் பிராய்டு, தத்துவஞானி இமானுவல் காண்ட், லோலிடா நாவலை தந்த விலாதிமிர் நபகோவ் ,பரணாம கொள்கையை அளித்த சார்லஸ் டார்வின் உள்ளிட்ட மேதைகளின் தினசரி பழக்கங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மேதைகளின் பெயர் வரிசையாக பட்டியலிடப்பட்டு அதற்கு அருகிலேயே அவர்களின் பழக்கங்கள் பல வண்னங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேதைகளின் தினசரி செயல்பாடுகள் தூக்கம், படைப்பாற்றல் செயல், பணி , உணவு/கேளிக்கை , உடற்பயிற்சி மற்றும் இதர செயல் என ஆறு அம்சங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு செயலும் ஒரு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேதைகளின் பெயர் முன்னால் இருக்கும் இந்த வண்ண கட்டங்களை பார்த்தே அவர்கள் எப்போது எதை செய்யும் பழக்கம் கொண்டிருந்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட செயல்களில் எத்தனை நேரம் செலவிட்டனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பட்டியல் படி பார்த்தால் அநேகமாக பெரும்பாலானோருக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருப்பதும், பலரும் நடை பயிற்சியை மேற்கொண்டு வந்த்தையும் தெரிந்து கொள்ளலாம். அதே போல ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான மேதைகள் குறைவான தூக்க்த்தை கொண்டிருந்ததையும் தெரிந்து கொள்ளலாம். பால்சாக், ஆடென், போன்றவர்கள் நாள் முழுவதும் எழுதிக்கொணிடிருந்ததையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். காப்கா உள்ளிட்ட வெகு சிலரே பிழைப்புக்காக தினசரி பணியில் இருந்ததனர் போன்ற சுவாரஸ்யமான புரிதலையும் இந்த பட்டியல் அளிக்கிறது.

பட்டியலை மொத்தமாக பார்ப்பதோடு, குறிப்பிட்ட பழக்கத்தை மட்டும் கிளிக் செய்து அதில் மேதைகள் எவ்வாறு மாறுபடுகின்றனர் என்ற விவரத்தையும் பார்க்கலாம்.

மேதைகள் பற்றி தெரிந்து கொள்ள சுவாரஸ்யமான வழி என்பதோடு நம்மை மாற்றிக்கொள்வதற்கான ஊக்கத்தையும் இந்த  வரைபட சித்திரம் அளிக்கும்.

இந்த வரைபட சித்திரம் உங்களுக்கு பிடித்திருந்தால் அப்படியே மேசன் கரியின் இணையதளத்திற்கும் செல்லவும். காரணம் மேசன் கரி தான் இந்த வரைபட சித்திரத்திற்கான ஊக்கமும் ஆதாரமுமாக இருப்பவர்.

பத்திரிகயாளரும் எழுத்தாளருமான மேசன் கரி ,வரலாற்றில் மேதைகளின் வாழ்க்கையை ஆய்வு செய்து, படைப்பாற்றல் மிக்கவர்கள் பின்ற்றிய தினசரி பழக்கம் மற்றும் அவர்கள் கொண்டிருந்த விநோதமான வழக்கங்கள் குறித்தி டெய்லி ரிச்சுலல்ஸ் எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தின் அடிப்படையில் தான் மேலே உள்ள இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது.

 

மேதைகள் வாழ்வை அறிய; https://podio.com/site/creative-routines

 

மேதைகள் வாழ்வு பற்றிய புத்தகம்; http://www.masoncurrey.com/

 

———–

 

 

 

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

qபொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன.

தாட்ஜாய் , பொன்மொழி தேடியந்திரமாக வரவேற்கிறது. முகப்பு பக்கம் அத்தனை எளிமை. நடுநாயகமாக ஒரு தேடல் கட்டம். அதில் பொன்மொழிகளை தேடலாம். அதன் கீழே பொன்மொழிகளை ,மூன்று விதமான தலைப்புகளில் பட்டியலாக பார்க்கலாம். அருகிலேயே டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் தினம் ஒரு பொன்மொழி பெறும் வசதி இருக்கிறது. அவ்வளவு தான் இந்த பொன்மொழி தளம். ஆனால் இஷ்டம் போல பொன்மொழிகளை தேடிக்கொண்டே இருக்கலாம். குறிப்பிட்ட பொன்மொழி தேவை என்றால் தேடல் கட்டத்தை பயன்படுத்தலாம் .அல்லது, பொன்மொழி வகைகள் அல்லது பொன்மொழி சொன்னவர்கள் பட்டியலை கிளிக் செய்து வரிசையாக பொன்மொழிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். பொன்மொழி வகைகள் ஆங்கில அகர வரிசைப்படி அமைந்துள்ளன. ஒவ்வொரு தலைப்பாக பார்த்தால் நேரம் போவதே தெரியாது.

கோட்ஸ்பாரால்  தளமும் இதே முறையில் ஆனால் கொஞ்ச்ம் மாறுபட்டு இருக்கிறது. ( http://quotes4all.net/) . இதன் முகப்பு பக்கம் வரிசையாக பொன்மொழிகளுடன் வரவேற்கிறது. அந்த பொன்மொழிகளை படித்து ரசித்த பின், கீழ் பகுதியில் கிளிக் செய்தாலும் சரி அல்லது மேலே உள்ள பகுதிக்கு சென்றாலும் சரி பொன்மொழிகளின் உலகம் அகல விரிகிறது. கீழ்ப்பகுதியில் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக உள்ள பொன்மொழி வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து பார்க்கலாம். அதற்கும் கீழே மேலும் பொன்மொழிகளுக்கான வாயில் ஒரு கிளிக்கில் திறக்கிறது. தளத்தின் மேல் பகுதியில் பார்த்தால், ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசை கண்களை உறுத்தாத வகையில் தரப்பட்டுள்ளது. எந்த எழுத்தை கிளிக் செய்தாலும் அந்த எழுத்தியில் துவங்கும் பொன்மொழிகளை காணலாம்.

பொன்மொழிகளை மதிப்பீடு செய்யும் வசதியும் இருக்கிறது. எளிமையான அமைப்பை மீறி இந்த தளங்களில் இருககூடிய செழுமை வியப்பானது.

தினம் தினம் விஜயம் செய்ய வேண்டிய தளங்கள் இவை . காலையில் ஒரு சில நிமிடங்களையாவது செலவிடுங்கள். இல்லை, அவப்போது நேரம் கிடைக்கும் போது சென்றுப்பாருங்கள் .உங்கள் வாழ்க்கை ஊக்கம் பெறட்டும்.

———-

தினமும் பொன்மொழியுடன் துவக்க விருப்பமா? கோட்சீக்ரெட் உட்பட சிறந்த பொன்மொழி இணையதள அறிமுகங்களுக்கு :

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.

<dailyp>

திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம்.

அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை.

திட்டமிட்டு செயல்படுவது என தீர்மானித்தவுடன்,இந்த தளத்தில் உங்களுக்கான குறிப்பேட்டில் ஒவ்வொரு தினத்திற்கான பணிகளை குறித்து வைக்ககத்துவங்கி விடலாம்.செய்ய நினைப்பதை டைப் செய்து சேமிக்க என கிளிக் செய்தால் போதும், அந்த கட்டளை நம் நினைவூட்டலுக்காக காத்திருக்கும்.இப்படி ஒவ்வொரு செய‌லையும் சேமித்துக்கொள்ளலாம்.

டைப் செய்யத்துவங்கியதுமே நமக்கான தனி இணைய முகவரி உருவாக்கப்பட்டு விடுகிறது.அடுத்த முறையில் இருந்து அந்த பிரத்யேக ,முகவரியில் உள்ள குறிப்பேட்டை பயன்படுத்தலாம். தின‌மும் செய்ய விரும்புவதை இப்படி டைப் செய்து குறித்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த குறிப்பேட்டை பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளலாம். செய்து முடித்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.

புதிய பணிகளை குறித்து வைக்க,திருத்த என்னும் இடத்தில் கிளிக் செய்தால் பழைய குறிப்பேடு வந்து நிற்கிறது.அதில் நாட்காட்டி போல வரிசையாக தேதி அடிப்படையில் குறித்து வைத்த பணிகளை காணலாம்.

திட்டமிடலை எப்படி நிறைவேற்றியிருக்கிறோம் என பத்து நாள் கழித்தோ ,மாத கடைசியிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.

எளிமையான தளம் என்றாலும் நேர்த்தியானது. ஆங்கிலத்தில் தான் டைப் செய்ய வேண்டும். ஆனால் தமிழில் பயன்படுத்த விரும்பினால் வேறு ஒரு செயலியில் டைப் செய்து இங்கே பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தி பாருங்கள். திட்டமிடல் உங்களுக்கு வெற்றி தரட்டும்.

திட்டமிட… http://www.dailytodo.org

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம்.

வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம்.

எழுத்து என்பது கலை தான் என்ற போதிலும் அதனை பட்டைத்தீட்டிக்கொள்ள படைப்பாற்றலோடு கொஞ்ச்ம பயிற்சியும் தேவை என்னும் சு ரா வின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உள்ளது.

நல்ல எழுத்தாளர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதி பார்த்துவிட வேண்டும் என்று கூறும் சு ரா வின் கருத்து இணைய உலகிற்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள் இணையம் நமது கருத்துக்களை பதிவு செய்யவும் பகிரவும் எத்தனை வசதிகளை தந்துள்ளது.வலைப்பதிவு மூலமாக வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோமோ இல்லையோ முக்கிய அனுபவங்களை பதிவு செய்யலாம்.டைரி எழுதுவது போல மனதில் தோன்றுவதை குறித்து வைத்து கொள்ள உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.

தினமும் புகைப்பத்தோடு வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய தூண்டும் தளங்களும் இருக்கின்றன.எனன் இருந்து என்ன பயன்,எதையும் இடைவிடாமல் செய்யும் குணம் தான் இல்லையே.சோம்பலும் மறதியும் வழிமறித்து கொள்வதால் இத்தகைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் சுறுசுறுப்பு கிடைக்கப்பெறுவது பெரும் பாடாக அல்லவா இருக்கிறது.

இத்தகைய சோம்பேறிகளுக்காக என்றே அருமையான ஒரு இணைய டைரி சேவை அறிமுகமாகியுள்ளது.

வாழ்க்கை குறிப்புகளை எழுத உதவும் அந்த தளம் நாள் தவறாமல் அதனை எழுதி முடிக்கவும் வழி செய்கிறது.டிவிட்டர் யுகத்தில் பலரும் மறந்து விட்ட இமெயில் துணையோடு இதனை அழகாக நிறைவேற்றுகிறது இந்த இணையதளம்.அதற்கேற்ப மிகவும் பொருத்தமாக மெயில்டைரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெயில் டைரியில் தினமும் உங்கள் வாழ்வனுபவத்தை நீங்கள் குறித்து வைக்கலாம்.டைரி எழுதுவது போல தான் என்றாலும் ஒரு நாள் உற்சாகமாக ஆரம்பித்து விட்டு மாறுநாளே மறந்து போய்விடும் அபாயம் இந்த சேவையில் இல்லை.

காரணம் இந்த தளம் தினமும் இமெயில் வாயிலாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.இதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்ட நாள்தோறும் இமெயில் வாயிலாக இன்றைய தினம் என்ன நடந்தது என்று கேள்வியை இந்த தளம் கேட்கும் .அதற்கு பதில் அளிப்பதற்காக கொஞ்சம் யோசித்து பார்த்து முக்கிய நிகழ்வுகளை குறித்து வைக்கலாம்.

நாட்காட்டி வசதியோடு இபப்டி குறிப்புகளை இடம் பெறச்செய்வதற்கான வசதியும் உள்ளது.

இது தான் என்று இல்லாமல் எல்லா வகையான விஷயங்களையும் இதில்,பகிர்ந்து கொள்ளலாம்.அனுபவங்களை மட்டும் அல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.செல்போனில் இருந்தும் அனுபவங்களை அப்டேட் செய்யலாம்.

ஒரு கட்டத்திற்கு பின் திரும்பி பாத்தால் இந்த பதிவுகள் செறிவானவையாக வியக்க வைக்கலாம்.பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோ காட்டி மகிழ கூடியவையாக இருப்பதோடு நமக்கே பயனுள்ளதாக இருக்கலாம்.

நினைத்தை அடையவும் இந்த தளம் கைகொடுக்கும்.யார் கண்டது உங்கள் அனுபவங்கள் ஒரு ஆழமான நாவலுக்கு உரியதாக கூட இருக்கலாம்.

டைரி எழுதுவதன் அருமையை புரிந்து கொள்ள பிரும்புகிறவர்கள் அனந்தரஙக பிள்ளை டைரி பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள குறிப்புகளை படித்து பார்க்க வேண்டும்.

டைரி எழுத இனைய முகவரி;http://maildiary.net/

logo-main

இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்.

டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் பற்றி தான் சொல்ல வேண்டும்.காரணம் டெய்லிலிட் இந்த பிரிவில் முதலில் தோன்றி முன்னோடி தளம்.

டெய்லிலிட் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் அது வழங்கும் அம்சங்களை பார்க்கும் போதும் முன்னோடி தளம் என்றெ சொல்லத்தோன்றும்.

எந்த புத்தகத்தை படிக்க விருப்பமோ அதனை டெய்லிலிட்டின் பட்டியலில் இருந்து தேர்வு செய்து இமெயில் முகவரியை சமர்பித்து விட்டால் தினமும் புத்தகத்தின் ஒரு பகுதி இமெயிலில் வந்து சேரும்.இமெயிலில் மடும் அல்ல ஆர் எஸ் எஸ் முறையிலும் புத்தக தவணையை பெறலாம்.அது மட்டும் அல்லாமல் எப்போதெல்லாம் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்ட நாட்களையும் குறிப்பிடலாம்.கம்ப்யூட்டரில் அல்லது கையில் இருக்கும் செல்போனில் என்று புத்தகம் படிக்கும் வசதி கொண்ட எந்த சாதனம் வழியாகவும் புத்தக தவணையை பெறலாம்.

வெளியூர் பயணங்களின் போது அல்லது விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட புத்தகத்தை படித்து முடிக்க விரும்பினாலும் இந்த‌ வசதியை பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.சுஜாதாவின் கணேஷ் வசந்த் கதைகளில் கனேஷ் வெளியூர் பயணங்களின் போது தவறாமல் ஏதாவது ஒரு புத்தகத்தை சுட்கேசில் எடுத்து வைப்பார்.ஒரு கதையில் நீண்ட நாளாக படிக்க நினைத்த டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் புத்தகத்தை கனேஷ் எடுத்து வைப்பதாக சுஜாதா எழுதியதாகவும் ஞாபகம்.

டெய்லிலிட் மூலம் நீங்களும் கூட வெளியூர் பயணத்தின் போது எந்த் ஒரு புத்தகத்தையும் படித்து முடித்து விடலாம்.இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது அலுவலக் நேரத்தில் வேலை பளுவுக்கு இடையே கொஞ்சம் ரிலாக்சாக படித்து மகிழலாம்.(வேலை பாதிக்கப்படாமல்)

புத்தகத்தின் தவணையை ஒரே மூச்சில் படித்தாயிற்றா?அடுத்த தவணைக்காக மறு நாள் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.மேலும் படிக்கவும் என்ற பகுதியில் கிளிக் செய்தால் அடுத்த தவணை உடனே வந்தே சேரும்.

விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்ய பல வழிகள் இருக்கின்றன.

புத்தகங்களின் பட்டியல் எழுத்தாளர்களின் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.புத்தக வகைகளின் பட்டியலிலும் தேடலாம்.அல்லது குறிப்பிட்ட புத்தகம்,எழுத்தாளர் பெயரை குறிப்பிட்டு தேடலாம்.இதை தவிர புதிதாக அறிமுகமாகியுள்ள புத்தகங்கள் மற்றும் சமீபத்திட புத்தகங்களும் தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சில புத்தகங்களை தனியேவும் கட்டம் கட்டி பரிந்துரை செய்கின்றனர்.

சமூக வலைப்பின்னல் தளங்கள் போல உறுப்பினர்கள் விரும்பி படிக்கும் புத்தங்களையும் பார்க்கலாம்.அவர்களோடு தொடர்பு கொண்டு நட்பைவும் வளர்த்து கொள்ளலாம்.புத்தக பிரியர்களுக்கான விவாத அரங்கும் இருக்கிற‌து.

எல்லோரும் தினமும் இமெயில் பார்க்கிறோம் ஆனாலும் புத்தகம் படிக்க நேரம் இல்லை என்று புலம்புவதை கவனித்து இந்த இரண்டையும் இணைத்து இமெயில் வழியே தினமும் புத்தகம் படிக்கும் இந்த சேவையை உருவாக்கியதாக இந்த நிறுவனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இணையதள முகவரி;http://www.dailylit.com/

பார்க்க முந்தைய பதிவு.http://cybersimman.wordpress.com/2011/12/11/book-2/