Tagged by: digital

எம்பி- 3 க்கு என்ன ஆச்சு?

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி-3 வடிவத்திற்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கி போயிருக்கலாம். எம்பி-3 இறந்து விட்டது!, எம்பி-3 கொல்லப்பட்டு விட்டது! போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை பார்த்தால் இசை மனதும், இணைய மனதும் திடுக்கிடத்தானே செய்யும். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்பதை, இல்லை,எம்பி3 இறக்கவில்லை!, எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 […]

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியில...

Read More »

டிஜிட்டல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் குறும் பழக்கங்கள்!

பதிவுகள், குறும்பதிவுகள் என சொல்வது போல, பழக்கங்களிலும் குறும் பழக்கங்கள் இருக்கின்றன தெரியுமா? ஆங்கிலத்தில் இதை மைக்ரோ ஹாபிட்ஸ் அல்லது மினி ஹாபிட்ஸ் என்கின்றனர். அதாவது ஒரு பழக்கத்தின் சிறு அங்கம் என்று பொருள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு அது முதலில் பழக்கமாக மாற வேண்டும். ஆனால் பழக்கம் அத்தனை எளிதல்ல. புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அல்லது பழைய பழக்கத்தை மாற்றிக்கொள்ள விடாமுயற்சி தேவை. உற்சாகத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து கடைபிடிக்கும் உறுதி இல்லாமல் தொய்வு ஏற்பட்டால் […]

பதிவுகள், குறும்பதிவுகள் என சொல்வது போல, பழக்கங்களிலும் குறும் பழக்கங்கள் இருக்கின்றன தெரியுமா? ஆங்கிலத்தில் இதை மைக்ரோ...

Read More »

கைரேகையிலும் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்

இணையத்திற்கான எத்தனை பாதுகாப்பான பூட்டை தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர் எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்டு முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிருபித்து வருகின்றனர். இதற்கு மாற்று […]

இணையத்திற்கான எத்தனை பாதுகாப்பான பூட்டை தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹே...

Read More »

இணையத்தை கலக்கும் லெகோ விவசாயி

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார். அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெ...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »