Tagged by: email.

டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன். சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும். டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் […]

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்...

Read More »

இந்த இணையதளம் இபுக் தளங்களின் சிகரம்.

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது. முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது. புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க […]

இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்...

Read More »

இமெயிலில் புத்தகம் படிக்க இன்னொரு இணையதளம்.

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம். டெய்லிலிட் தளமும் இமெயில் வாயிலாக தவணை முறையில் புத்தகம் படிக்க உதவும் தளம் தான்.உண்மையில் டெய்லிலிட் போல என்று டிப்ரீட் பற்றி தான் சொல்ல வேண்டும்.காரணம் டெய்லிலிட் இந்த பிரிவில் முதலில் தோன்றி முன்னோடி தளம். டெய்லிலிட் தளத்தின் உள்ளடக்கம் மற்றும் அது வழங்கும் அம்சங்களை பார்க்கும் போதும் முன்னோடி தளம் என்றெ சொல்லத்தோன்றும். எந்த […]

இமெயில் வாயிலாக புத்தகம் படிக்க உதவும் டிப்ரீட் இணையதளம் பற்றி படிக்கும் போது டெயிலிட் தளம் பற்றியும் நினைவுக்கு வரலாம்....

Read More »

இமெயில் வழியே புத்தகம் படிக்க!

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு அதை படிக்க நேரம் இல்லாமல் அப்படியே அலமாரியில் வைத்திருக்கும் நபர்கள் இந்த தளத்தை நாடலாம்.அப்படி நாடினால் படிக்க நினைத்த புத்தகத்தை நிச்சயம் படித்து முடித்து விடலாம். ஆனால் உடனடியாக இல்லை.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கமாக!அது இந்த தளத்தின் சிறப்பு. படிக்க நினைத்தவர்கள் மறந்தாலும் சரி,இந்த தளம் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமான நினைவு படுத்தி […]

வாழைப்பழத்தை உரித்து ஊட்டியும் விடுவது போல புத்தகம் படிப்பதற்கு சுலபமான வழி காட்டுகிறது டிப்ரீட் இணையதளம். ஆசை ஆசையாக பு...

Read More »

தினம் ஒரு புத்தகம் படிக்கலாம் வாங்க.

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கேன் செய்தபடி முன் அட்டையையும் பின் அட்டையையும் திரும்பி பார்ப்பீர்கள்.அதில் எழுதியுள்ள அறிமுக குறிப்புகளை படிக்கும் போதே புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஒரு அபிப்ராயம் உருவாகத்துவங்கியிருக்கும்.அடுத்ததாக புத்தகத்தை புரட்டிய படி முன்னுரையையும் நடுவே உள்ள பக்கங்களில் சில வரிகள் அல்லது பத்திகளை படித்து பார்ப்பீர்கள். இதற்குள் புத்தகத்தின் சாரம்சம் பிடிபட்டிருக்கும்.சரி வாங்கலாம்,அல்லது வேண்டாம் என்று முடிவு செய்து விடுவீர்கள்!. இது […]

புதிதாக ஒரு புத்தகத்தை பார்த்தும் அதனை வாங்க தீர்மானிப்பதற்கு முன் என்ன செய்வீர்கள்?புத்தகத்தை அப்படியே மனக்கண்ணால் ஸ்கே...

Read More »