கேட்ஜட்டை நம்பாதே!

1-lorry1இடதுபுறமாக திரும்பவும், குறுகிய வளைவு, வேகத்தடை இருக்கிறது… போன்ற போக்கு வரத்து வாசகங்களை எல்லாம் முக்கிய சாலைகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
வருங்காலத்தில் இந்த வாசகங் களோடு, தயவுசெய்து உங்கள் கையில் இருக்கும் கேட்ஜட்டை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும் வாசகங்களையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்.
.
இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் இத்த கைய எச்சரிக்கை வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொழில் நுட்பத்திற்கு ஏற்பட்ட பின்ன டைவு என்றும், தொழில் நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைக்கும் போக்கிற்கான விழிப்புணர்வு என்றும், எப்படி வேண்டுமானா லும் எடுத்துக் கொள்ளலாம்.

எதுவாக இருந்தாலும் நிச்சயம் நம்மை எல்லாம் யோசிக்க வைக்கக் கூடிய விஷயமாக இது இருக்கிறது. இனி பிரச்சனையை விரிவாக பார்ப்போம். செயற்கைக்கோள் மூலம் இருப் பிடத்தை கண்டறியும் வசதியின் துணையோடு காரோட்டி களுக்கு அவர்கள் செல்லும் ஊர்களுக் கான வழி காட்ட முடியும் எனும் புரிதல் சமீபகாலமாக பரவலான கவனத்தை பெற்றிருக்கிறது.

நவீன கார்கள் இத்தகைய வழிகாட்டும் வரைப்பட வசதி யோடு வருகிறது. இத்தகைய வழிகாட்டும் வரைபட வசதியை கையடக்க கம்ப்யூட்டர் சாதனங்க ளிலும் டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி, புதுமையானதாக வும் மிகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது.

ஒரு நகரின் வரைப்படத்தையே நமது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பை இது ஏற்படுத்தி தருகிறது. இத்தகைய வசதி காரில் அல்லது கையில் இருந்தால் வாகன ஓட்டிகள் பாதை தெரியாமல் திண்டாட வேண்டிய தேவையே இருக்காது என்று கூறப்படுகிறது.

எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் வரைப்பட வழிகாட் டியை பார்த்து சரியான பாதையை தெரிந்து கொள்ளலாம்.
சாட்டிலைட் நேவிகேஷன் அதா வது செயற்கைக்கோள் மூலம் வழி காட்டுதல் என்று கூறப்படும் இந்த சேவை, கார்களில் பொருத் தப்படும் நவீன வசதிகளில் முக்கியமானதாக மாறி வருகிறது.

உள்ளூர்வாசிகளை விட வெளியூர்வாசிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேறு நகரங்களுக்கு செல்லும் போது அல்லது புதிய இடங்களுக்கு பயனிக்கும் போது வழி பற்றிய தடுமாற்றமே இல்லாமல் இந்த வழிகாட்டியை நம்பிச் செல்லலாம். இப்படித்தான் பாராட்டப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிற்×ரில் செயற்கைக்கோள் வழிகாட்டுதலை நம்ப வேண்டாம் எனும் எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஊரில் உள்ள பாதை ஒன்றின் வழியே பயணம் செய்த வாகன ஓட்டிகளில் பலர் செயற்கைக்கோள் வழிகாட்டும் சேவையை நம்பி முன்னேறி செல்லும்போது, வம்பில் மாட்டிக் கொண்டு முழித்ததை யடுத்து இந்த எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை குறுகலானது. இதன் வழியே கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள் ளது. ஆனால் இந்த விவரம் வரைப்பட வழி காட்டியில் தெளி வாக குறிப்பிடப் படுவதில்லை.

எனவே கனரக வாகனங்களில் வருவோர் தொடர்ந்து முன்னேறி சென்று பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். இதனையடுத்து நகர நிர்வாகம் மேல் சொன்ன எச்சரிக்கை வாசகத்தை இடம் பெற வைத்துள்ளது.

இது சோதனை முறையிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிரிட்டனில் நாடு தழுவிய அளவில் இது போன்ற வாசகங்கள் வைக்கப் பட்டுள்ளது.

செயற்கைக்கோள் வழிகாட்டும் சேவையை முற்றிலும் நம்பி விடக் கூடாது என்று இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. பிரிட்டன் மட்டுமல்ல, மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் செயற்கைக் கோள் வழிகாட்டும் சேவையை நம்பி சென்று வாகன ஓட்டிகள் வழி மாறி தவித்தது போன்ற சம்பவங்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன.

ஜெர்மனியில் இத்தகைய சம்பவம் ஒன்றில் செயற்கைக் கோள் வழி காட்டும் சேவை இடதுபக்கம் திரும்பவும் என்று கட்டளையிட்டது. அதனை ஏற்றுக் கொண்டு ஸ்டியரிங்கை திருப்பியபோது கார் நேராக சென்று ரெயில்வே தண்டவாளத் தில் மோதியது. இத்தகைய சம்பவங்கள் அதி கரித்து வருவது செயற்கைக் கோள் வழிகாட்டும் சேவையை மட்டுமே நம்புவது பாதுகாப்பான தல்ல என்பதைத் தான் நமக்கு சொல்கிறது.

————-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.