ஃபெடரரின் புதிய சாதனை

—-ஆறாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை குறி வைத்திருக்கும் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரருக்கு சாதனை புதிதல்ல.மொத்தம் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ,நீண்ட போராட்டத்திற்கு பின் பிரெஞ்சு ஒபனில் பட்டத்தை வென்றது என் பெடரரின் சாதனைகள் அநேகம் என்றாலும் இங்கே சாதனை என குறிப்பிடப்படுவது ஃபெடரரின் டென்னிஸ் சாதனை அல்ல. அவரது இணைய உலக சாதனை இது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் ஃபெடரர் இணைய உல‌கில் 2.5 ல‌ட்ச‌ம் ர‌சிக‌ர்க‌ளை பெற்றிருக்கிறார். அதாவ‌து அவ‌ர‌து இணைய‌த‌ள‌த்தின் மூல‌ம் ப‌திவு செய்து கொண்ட‌ ர‌சிக‌ர்க‌ளின் எண்ணிக்கை 2.5 ல‌ட்சத்தை க‌ட‌ந்திருக்கிற‌து.

மிகப்பெரிய சாதனை தான். இல்லை என்றால் ஃபெடரரே இதனை தனது தளத்தில் குறிப்பிட்டு பெருமைப்பட்டிருக்க மாட்டார்.இத்த‌னை ர‌சிக‌ர்க‌ள் உறுப்பின‌ர்க‌ளாக‌ சேர்ந்திருப்ப‌தை க‌ண்டால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக‌ ஃபெட‌ரர்
குறிப்பிட்டுள்ளார்.

ஃபெட‌ர‌ரின் டென்னிஸ் சாத‌னைக்குப்பின் க‌டின‌ உழைப்பும் மேதமையும் இருக்கிற‌து என்றால் அவர‌து இணைய சாத‌னைக்குப்பின் இருப்பது திற‌ந்த‌ ம‌ன‌த்திலான‌ அணுகுமுறை.அதாவ‌து ஃபெட‌ர‌ர் ஒரு பிர‌ப‌ல‌ ந‌ட்ச‌த்திர‌ம் என்னும் அந்த‌ஸ்த்தின் மூல‌ம் ம‌ட்டுமே இந்த‌ ஆத‌ர‌வை பெற்றுவிட‌வில்லை. அதையும் தாண்டி ர‌சிகர்க‌ளோடு உள்ளன்போடு தொட‌ர்புகொள்ள் இண்டெர்நெட்டை ஈடுபாட்டோடு பயன்படுத்தியதாலேயே இத‌னை சாதித்திருகிறார்.

ஃபெட‌ர‌ரின் இணைய‌த‌ள‌மே அதற்கு சான்று.

த‌‌ன்னைப்ப‌ற்றிய‌ செய்திக‌ள்,புகைப்ப‌ட‌ங்க‌ள், வீடியோ ப‌திவுக‌ள் என‌ எல்லாவ‌ற்றையும் ஃபெட‌ரர் த‌ன‌து த‌ள‌த்தில் இட‌ம்பெற‌ வைத்திருக்கிறார்.இவ‌ற்றோடு அவ‌ர் வ‌லைப்ப‌திவு மூல‌ம் ர‌சிக‌ர்க‌ளிட‌ம் தொட‌ர்புகொண்டு வ‌ருகிறார். ர‌சிக‌ர்க‌ள் அவ‌ரைப்ப‌ற்றி தெரிந்துகொள்ள‌ விரும்பும் த‌க‌வ‌ல்க‌ளை அவ‌ரே நேர‌டியாக‌ ப‌கிர்ந்து கொண்டு வ‌ருகிறார்.

இதுவே அவ‌ர‌து இணைய‌த‌ள‌த்தை உயிரோட்ட‌ம் மிக்க‌தாக‌ மாற்றியுள்ள‌து.

link;
http://www.rogerfederer.com/en/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஃபெடரரின் புதிய சாதனை

  1. வாழ்த்துகள்,

    உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது…

    Reply
  2. Anzer

    It is not 25 lakhs
    it is 2lakh 50K

    Reply

Leave a Comment

Your email address will not be published.