ஷாப்பிங் தேடியந்திரம்

nearசெல்போனால் என்ன வெல்லாம் சாத்தியம் என்று நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்த ஆச்சர்யத்தை நீங்களும் உணர ஒரு நகரின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் முன் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதோடு நீங்கள் மிகவும் பிசியாக இருப்பதாகவும் அனுமானித்துக்கொள்ளுங்கள்.
ஷாப்பிங் மாலில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் வேலை பளு காரணமாக அதற்காக நீங்கள் குறைந்தபட்ச நேரமே செலவிட முடியும்.
இந்நிலையில் உள்ளே போய் சம்பந்தப்பட்ட பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கே கணிசமான நேரத்தை செலவிட விரும்பவில்லை.
இப்படியொரு நிலை ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று கையில் இருக்கும் வேலையை பார்க்க விரைந்து சென்று விடுவீர்கள்.
மாறாக, உங்கள் கையில் செல்போன் இருந்து (நிச்சயம் இருக்க வாய்ப்பு இருக்கிறது) அதில் நியர் பை நவ் போன்ற ஷாப்பிங் சேவை (அமெரிக்காவில் அறிமுகமாயிருக்கும் சேவை ) வசதியும் இருந்தால், ஷாப்பிங் மாலில் உங்களுக்கு தேவை யான இந்த பொருள் இருக்கிறதா? இருக்கிறது எனில், அது எந்த இடத்தில் அல்லது கடையில் இருக்கிறது? அதன் விலை என்ன? போன்ற விவரங்களை கையில் இருக்கும் செல்போனிலேயே அறிந்து கொண்டு விடலாம்.
அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? நியர் பை நவ் நிறுவனம் ஷாப்பிங் மாலில் இடம்பெற்றுள்ள பொருட்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அவற்றை பட்டியலிட்டு வைத்திருக்கிறது.
ஷாப்பிங் செய்வதற்கு முன்னர் அதனிடம் தேவைப்படும் பொருள் பற்றி குறிப்பிட்டால், தனது பட்டியலில் இருந்து அந்த பொருள் தொடர்பான விவரங்களை நியர் பை நவ் தேடித் தந்து விடுகிறது.
ஆக, ஷாப்பிங் மாலுக்குள் அடியெடுத்து வைக்காமலேயே அங்கு நாம் வாங்க விரும்பும் பொருள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு விடலாம்.
ஷாப்பிங் மாலுக்குள் சென்று சுற்றித்திரிந்த பிறகு நமக்குத் தேவையான பொருள் இருப்பில் இல்லை என்று ஏமாற்றத்தோடு திரும்பி வர வேண்டிய அவசி யம் இருக்காது.
அதுமட்டுமல்லா மல், தேவையான பொருள் இருக் கிறது என்று தெரிந்தவுடன் அதனை வாங்க வருகிறோம் என்று ஷாப்பிங் மால் ஊழி யருக்கு எஸ்எம்எஸ் மூலமே தகவல் தெரிவித்து அந்த பொருளை ரிசர்வ் செய்து வைத்து விடும் வசதியும் உண்டு. இதனால் நமக்கு முன்னர் வேறு ஒருவர் அதனை வாங்கிக் கொண்டு போய்விடும் அபாயத்தையும் தடுத்து விடலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த இந்நிறுவனம், முதல் கட்டமாக அந்நகருக்கான ஷாப்பிங் பட்டியலை தயார் செய்து இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் ஈடு பட்டுள்ள நிறுவனங்களோடு இணைந்து அவற்றின் வசம் கையிருப்பு உள்ள பொருட்களின் விவரங்களை இந்த நிறுவனம் திரட்டி வைத்திருக்கிறது.
எதிர்காலத்தில் மேலும் பல நகரங் களுக்கு இந்த சேவை விரிவுபடுத் தப்பட விருக்கிறது. தற்போது தகவல் களை தேடுவதற்கு முன்பாக நாம் இருக்கும் இருப் பிடத்தை சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த சேவையே இருப்பிடத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற தகவல்களை தானாக சமர்ப்பித்து விடும்.
செல்போனில் மட்டுமல்லாமல், இன்டெர்நெட் மூலமும் இந்த தகவல் களை தெரிந்துகொள்ளலாம். ஷாப்பிங் செல்வதற்கு முன்னர் இந்த நிறுவனத் தின் தளத்திற்கு விஜயம் செய்து பொருட்களின் நிலை, கையிருப்பு மற்றும் விலை போன்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு விடலாம்.
இன்டெர்நெட் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் மட்டுமல்லாமல், ஷாப்பிங் மால்களில் நேரடியாக சென்று பொருட்களை வாங்குபவர்கள் கூட முதலில் ஷாப்பிங் தளத்திற்கு விஜயம் செய்து பொருட்களின் விலை போன்ற விவரங்கள் குறித்த ஆய்வில் ஈடுபடும் பழக்கம் கொண்டு இருக்கின்றனர். இதனை கவனித்த ஸ்காட் டன்லப் ஷாப்பிங் செய்வதற்கு முந்தைய தகவல்களை அளிக்கும் சேவையை துவங்கினால், சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்.
அதன் விளைவாக பிறந்ததே நியர் பை நவ். ஜிபி ஷாப்பர் என்னும் மற்றொரு அமெரிக்க நிறுவனமும் இதுபோன்ற சேவையை வழங்கி வருகிறது.
இன்டெர்நெட் மூலம் பொருட்களை வாங்குவது காலப்போக்கில் கடை களுக்கு தேவையில்லாமல் செய்து விடும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு நிகழவில்லை. மாறாக, இன்டெர்நெட் உதவியோடு கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் புதிய பழக்கம் உதயமாகி உள்ளது

kink;
http://www.nearbynow.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.