ஒரு நாள் ,இண்டெர்நெட்டில் ஒரு நாள்

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நேரத்தில் விவரங்களை துல்லியமாகவும் சுவார்ஸ்யமாகவும் காட்டக்கூடியது என்ப‌தில் சந்தேகம் இல்லை.

பக்கம் பக்கமாக எழுதுவதை விட சமயங்களில் ஒரு புகைப்படம் விஷயத்தை அழகாக உணர்த்திவிடக்கூடும் என்பது பரவலாக அறிந்த விஷயம் தான்.அதோடு சொல்லப்படும் விஷயத்தின் சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சித்திரங்கள் அல்லது வரைபடங்கள் மையக்கருத்தை புரிந்து கொள்ள பேரூதவியாக இருக்கும்.

கட்டுரைகளுக்கு நடுவே புள்ளிவிவரங்களை வரைபடமாக கட்டம் போட்டு காட்டுவதை பார்க்கலாம்.தற்போது அனிமேஷன் உதவியோடு வரைப்படங்கள் கலக்கலாக இடம்பெறுகின்றன.

க‌ட்டுரைக‌ளுக்கு ந‌டுவே வ‌ரைப‌ட‌ங்க‌ள்/சித்திர‌ங்க‌ள் இட‌ம்மெறுவ‌து ஒரு ர‌க‌ம் என்றால் வ‌ரைப‌ட‌ங்க‌ளே க‌ட்டுரையாக‌ உருவாக்க‌ப்ப‌டுவ‌தும் உண்டு.இவ‌ற்றுக்கு தான் த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌ம் என்று பெய‌ர்.அதாவ‌து இன்ஃபோகிராபிக் .

இந்த‌ த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌ங்க‌ள் மிக‌வும் ச‌க்தி வாய்ந்த‌வையாக‌ க‌ருத‌ப்ப‌டுகின்ற‌ன‌.
அத‌ற்கு அடிப்ப‌டையில் சில‌ கார‌ன‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.ஒன்று தொட‌ர்புடைய‌ விவ‌ர‌ங்க‌ள் அனைத்தையும் செங்க‌ல் அடுக்குவ‌து போல அது அதற்கு உரிய இடத்திலும் அளவிலும் அழ‌காக‌ அடுக்கிவிட‌லாம்.அப்போது பார்க்க‌ அழ‌காக் இருப்ப‌தோடு சொல்ல‌ வ‌ந்த‌ செய்தியும் தெளிவாக‌ உண‌ர்த்த‌ப்ப‌டும்.

வாசிப்பு சோம்ப‌ல் கொண்ட‌வ‌ர்க‌ள் கூட‌ இத்த‌கைய‌ இன்ஃபோ கிராப்பிக்கை உற்று க‌வ‌னித்து விஷ‌ய‌த்தை கிர‌கித்து கொள்வார்க‌ள் என்ப‌து குறிபிட‌த்த‌க்க‌து.
அது மட்டும‌ல்ல‌ சில‌ விவ‌ர‌ங்க‌ளை க‌ட்டுரையாக‌ எழுதுவ‌தை விட‌ த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌மாக‌ உருவாக்குவ‌து பொருத்த‌மான‌தாக‌ இருக்கும்.

இண்டெர்நெட் யுக‌த்தில் த‌க‌வ‌ல் வ‌ரைப்ப‌ட‌ங்களை த‌யார் செய்வ‌து த‌னி துறையாகவே உருவெடுத்துள்ள‌து.த‌க‌வ‌ல்க‌லை காட்சிரீதியாக‌ க‌ற்ப‌னை செய்து பார்ப்ப‌து என்று இத‌னை கூறுகின்ற‌ன‌ர்.காட்சிரீதியாக‌ க‌ற்ப‌னை செய்து பார்ப்ப‌து மூல‌ம் புதிய‌ ப‌ரிமாண‌த்தில் விஷ‌ய‌ங்க‌ளை விள‌ங்கி கொள்ள‌ முடியும் என்கின்ற‌ன‌ர்.

இப்ப‌டி த‌க‌வ‌ல்க‌ளை காட்ரீதியாக்கி காட்டும் நிபுண‌ர்க‌ளும் உருவாகியுள்ள‌ன‌ர்.

த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌ங்க‌ள் க‌லை ம‌ட்டும‌ல்ல‌;அறிவிய‌லும் கூட‌.

த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌ங்க‌ளுக்கு உதார‌ண‌ம் தேவை என்றால் இண்டெர்நெட்டில் ஒரு நாள் என்னும் வ‌ரைப‌ட‌த்தை குறிப்பிட‌லாம். இண்டெர்நெட் ப‌ய‌ன்பாடு ம‌ற்றும் தாக்க‌த்தை உண‌ர்த்தும் இந்த‌ அற்புத‌ சித்திர‌ம் ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ சொல்ல‌ வேண்டாம். ப‌ட‌த்தைப்பார்த்தாலே அத‌ன் அருமை புரியும்.

ஆன்லைன் எஜுகேஷ‌ன்டாட் நெட் என்னும் த‌ள‌த்தில் இது இட‌ம் பெற்றுள்ள‌து. இந்த‌ தள‌த்தில் எல்லாமே த‌க‌வ‌ல் வ‌ரைப‌ட‌ங்க‌ள் தான் தெரியுமா?
.———-

link;
http://www.onlineeducation.net/internet/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.