பொன்மொழிகளுக்கான இணையதளம்.

ஒரு பொன்மொழியோடு ஆரம்பிக்கலாம்.

காற்றின் திசை குறித்து நம்பிக்கை இல்லாதவர்கள் புலம்புவார்கள்.நம்பிகை மிக்கவர்கள் திசை மாற காத்திருப்பார்கள்.எதார்த்தமானவ‌ர்கள் காற்றின் திசைக்கு ஏற்ப தங்கள் படகை திருப்பிகொள்வார்கள்.

ஊக்கம் தரக்கூடிய இந்த பொன்மொழியை சொன்னவர் வில்லியம் ஆர்தர் வார்டு என்னும் எழுத்தாளர். இதனை பகிர்ந்து கொண்டிருப்பவர் ஜேமி ஒயே.இதற்கு உதவிய தளம் கோட்புக் டாட் காம்.

இதே போன்ற உக்கம் தரக்கூடிய பொன்மொழிகளை படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்க‌ப்பட்டுள்ள இணையதளம் இது.பொன்மொழி பிரியர்களுக்கான சுரங்கம் என்றும் இந்த தளத்தை சொல்லலாம்.

பொன்மொழிக‌ளை ப‌ட்டிய‌லிடும் இணைய‌த‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இல்லை..12 ஆண்டாக‌ இணைய‌த்தில் இருப்ப‌தாக் பெருமைப‌ட்டுக்கொள்ளும் கோட்கார்ட‌ன் த‌ள‌த்தில் துவ‌ங்கி பிரைனி கோட்,விஸ்ட‌ம் கோட்,கொட்டேஷ‌ன்ஸ்பேஜ்,என‌ எண்ண‌ற்ற‌ த‌ள‌ங்க‌ள் பொன்மொழிக‌ளுக்காக‌வே இருக்கின்ற‌ன‌.
ஆனால் அவ‌ற்றை எல்லாம் விட‌ கோட்புக் த‌ள‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து

பொதுவாக‌ பொன்மொழி த‌ள‌ங்க‌ளை பார்த்தால் ,அக‌ர‌ வ‌ரிசைப்ப‌டியும் ,த‌னித்த‌னி த‌லைப்புகளின் கீழும் பொம்மொழிக‌ள் இட‌ம்பெற்றிருக்கும்.எழுத்தாள‌ர்க‌ளின் பெய்ர்க‌ளிலும் பொன்மொழிகள் தொகுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.தேட‌ல் வ‌ச‌தியும் இருக்கும் என்றாலும் இவ‌ற்றில் ஒருவித‌ அலுப்பூட்டும் தன்மை இருக்கும்.

எப்போதாவ‌து பொன்மொழி தேவை ஏற்ப‌ட்டு செல்ல‌லாமே த‌விர‌ தின‌மும் விஜ‌ய‌ம் செய்ய‌க்கூடிய‌ வ‌கையில் இவை சுவார‌ஸ்ய‌மாக‌ இருக்கும் என்று சொல்வ‌த‌ற்கில்லை.

ஆனால் கோட்புக் வெறும் பொன்மொழிகளின் தொகுப்பாக‌ இல்லாம‌ல் சுவார‌ஸ்ய‌மாக‌வே இருக்கிற‌து.அதற்கு காரணம் இதில் நீங்களும் பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்பதே.

ஆம் இந்த‌ த‌ள‌த்தை பொன்மொழிக‌ளுக்கான‌ டிவிட்ட‌ர் போன்ற‌து என்றும் சொல்ல‌லாம்.டிவிட்ட‌ரில் த‌க‌வ‌ல்க‌ளை ப‌கிர்ந்து கொள்வ‌து போல‌ இந்த‌ த‌ள‌த்தில் பொன்மொழிக‌ளை ச‌ம‌ர்பிக்க‌லாம்.

உங்க‌ள் ம‌ன‌ம்க‌வ‌ர்ந்த‌ பொன்மொழியை அத‌னை சொன்ன‌வ‌ர் யார் என்னும் விவ‌ர‌த்தோடு ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.இதே போல‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ப‌கிர்ந்து கொண்டுள்ள‌ பொன்மொழிகளை பின்தொட‌ர‌ முடியும்.

முக‌ப்பு ப‌க்க‌த்தில் ந‌ச் என்று அழ‌காக‌ ஒரு பொன்மொழி எப்போதும் வ‌ர‌வேற்கிற‌து.அதில் கிளிக் செய்தால் மேலும் பொன்மொழிக‌ளை காண‌லாம்.அதை ச‌ம‌ர்பித்த‌ உறுப்பின‌ர‌து பெய‌ரை கிளிக் செய்தும் பொன்மொழிகளை படிக்க‌லாம்.

நீங்க‌ளும் பொன்மொழிக‌ளை சம‌ர்பிக்க‌ நினைத்தால் உறுப்பின‌ராக‌ சேர‌வேண்டும்.அப்போது உல‌கோடு உங்க‌ளுக்கு பிடித்த‌ பொன்மொழிக‌ளை பகிர்ந்து கொள்ள‌லாம்.

பொன்மொழியோடு துவ‌ங்கிய‌தால் அவ்வ‌ண்ண‌மே முடிக்க‌லாம்.

புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்காத‌ ஒருவ‌ன் எழுத‌ ப‌டிக்க‌த்தெரிய‌த‌வ‌னை விட‌ சாத‌கமான‌ நிலையை பெற‌ முடியாது. சொன்ன‌வ‌ர் மேற்கோள்க‌ளின் ம‌ன்ன‌ன் மார்க் டுவைன்.

——http://qwotebook.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பொன்மொழிகளுக்கான இணையதளம்.

  1. பகிர்வுக்கு நன்றி!

    Reply
  2. புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்காத‌ ஒருவ‌ன் எழுத‌ ப‌டிக்க‌த்தெரிய‌த‌வ‌னை விட‌ சாத‌கமான‌ நிலையை பெற‌ முடியாது.

    அருமை!.

    -ஜெகதீஸ்வரன்.
    http://sagotharan.wordpress.com

    Reply
  3. rifana

    தேவையான பதிவு நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.