கூகுலின் காணொலி ஆலோசனை சேவை, ஹெல்ப் அவுட்ஸ்

A Google Helpout videoகாணொலி ஆலோசனை, காணொலி உரையாடல் வசதி , நிபுணருடன் நேரடி உதவி, எப்படி வழிகாட்டி, நேருக்கு நேர் நிபுணர் ஆலோனை !. தேடியந்திர நிறுவனமான கூகுல் அறிமுகம் செய்துள்ள கூகுல் ஹெல்ப் அவுட்ஸ் வசதி இப்படி எல்லாம் வர்ணிக்கப்படுகிறது. கூகுலின் இந்த புதிய அறிமுகம் இணைய உலகில் உண்டாக்கியிருக்கும் பரபரப்பையும் இந்த வர்ணனைகள் உணர்ந்த்துகின்றன.

 பலவிதங்களில் வர்ணிக்கப்பட்டாலும், அடிப்படையில் இந்த வசதி , காணொலி மூலம் அதாவது வீடியோ வழியே துறை சார்ந்த நிபுணர்களுடன் நேரடியாக ஆலோசனை பெறுவதற்கான வழி. இதன் மூலம் சந்தேகங்களை தீர்த்து கொள்லலாம். புதிய விஷயங்களில் பயிற்சி பெறலாம். வழிகாட்டி குறிப்புகளோடு உடனடி ஆலோசனைகள் சாத்தியமாகும். கூகுலிடம் ஏற்கனவே உள்ள காணொலி உரையாடல் சேவையான கூகுல் ஹாங்க் அவுட் நீட்சியாக இந்த கூகுல் ஹெல்ப் அவுட்ஸ் சேவை அறிமுகம் ஆகியுள்ளது. அமெரிக்காவுன் சான்பிரான்சிஸ்கோ நிகழ்ச்சியில் கூகுல் இதை அறிமுகம் செய்துள்ளது.

 நிஜமான மனிதர்களிடம் இருந்து ,நிஜமான உதவி ,உடனடியாக ! என்று கூகுல் ஹெல்ப் அவுட் இந்த சேவையை வர்ணித்து கொள்கிறது. ( மேலும் ஒரு வர்ணனை ) . இந்த சேவை மூலமாக குறிப்பிட்ட துறையை சேர்ந்த நிபுணர்களிடம் காணொலி மூலம் நேரடியாக ஆலோசனை பெறலாம். மேக்-அப் செய்வதில் துவங்கி, சமையல் கலை, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது போன்ற விஷயங்கள் தொடர்பாக நிபுணர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டு காணொலி வழியே விளக்கம் பெறலாம். இப்போதைக்கு கலை மற்றும் இசை, சமையல் கலை, அழகு கலை உள்ளிட்ட ஏழு துறைகளில் இந்த ஆலோசனை சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். முதல் கட்டமாக ஆயிரம் நிபுணர்கள் வரை கூகுல் தேர்வு செய்துள்ளது. நிபுணர்கள் மட்டும் அல்லாமல் நிறுவங்களும் கூட இடம் பெற்றுள்ளன.

 காணொலி ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண விகிதங்கள் மாறுபடலாம். கூகுல் குறிப்பிட்ட சதவீதத்தை தனது கமிஷனாக எடுத்து கொள்கிறது. இந்த சேவை மேலும் பல துறைகளில் மேலும் எண்ணற்ற நிபுணர்களுடன் விரிவு படுத்தப்பட உள்ளது. மருத்துவ துறைக்கான சேவையை பொறுத்த வரை கூகுல் மிகவும் கவனமாக அணுக உள்ளது.

 இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் இணையவாசிகள் ஹெல்ப் அவுட் இணையதளத்தில் நுழைந்து தாங்கள் தெளிவு பெற விரும்பும் துறையை சேர்ந்த நிபுணர்களை தேர்வு செய்து தொடர்பு கொள்ளலாம்.

 இதை முற்றிலும் புதிய சேவை என்று சொல்வதற்கில்லை. இணையம் மூலம் அலோசனை வழங்கும் மற்றும் பாடம் நடத்தக்கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. ஆலோசனை சேவைகளை பொறுத்தவரை ஆர்வம் உள்ள இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை கற்றுத்தர முன்வரலாம். இந்தியாவிலே கூட இது போன்ற இணைய சேவைகள் இருக்கின்றன. காணொலி கல்வி வழங்கும் இணைய தளங்களும் பிரபலமாக இருக்கின்றன. இந்த வகையான பயிற்றுவித்தல் முறையே எதிர்கால கல்வியின் திசை என்கின்றனர். அதே போல எப்படி எனும் கலையில் வழிகாட்டும் இணையதளங்களும் நிறைய

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.