ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்

இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால் ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும் வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில் ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய அறிமுகமான மோட்டோ ஜி போன்  இந்த நிலையை மேலும் வலுவாக்கலாம். ஆண்ட்ராய்டு போன்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கேம்களும்,அப்ளிகேஷன்களும்( செயலிகள்) இருக்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களுக்கான தனி பிரவுசர்களும் இருக்கின்றன.பிரத்யேகமான ஸ்கிரீன்சேவர்களும் இருக்கின்றன. பல்வேறு செயல்பாடுகளை துரிதமாக்குவதற்கான குறுக்கு வழிகள் இருக்கின்றன. இன்னும் பல விஷயங்களும் பயன்பாடுகளும் இருக்கின்றன. அது மட்டுமா கார்கள் மற்றும் பிற சாதங்களிலும் கூட ஆண்ட்ராய்டை பொருத்தும் வசதி அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு தனி உலகம் தான். எல்லாம் சரி,  ஆண்ட்ராய்டு தொடர்பான செய்திகளையும், தகவல்களையும் அறிந்து கொள்வது எப்படி ?ஆண்ட்ராய்டு தொடர்பான புதிய பயன்பாடுகளையும் ,அறிமுகங்களையும் அறிந்து கொள்வது எப்படி? இந்த கேள்விகளுக்கு பதிலாக அமையக்கூடிய அருமையான ஆறு இணையதளங்களை இங்கே பார்க்கலாம். இவை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை திரட்டித்தருகின்றன.

ஆண்ட்ராய்ட் டேப் ( http://www.androidtapp.com/ )

ஆண்ட்ராய்டு செயலிகள் விமர்சனம், ஆண்ட்ராய்டு புதிய செயலிகள், செய்திகள், ரேட்டிங்க், நேர்க்காணல்கள் என்று ஆண்ட்ராய்டு தொடர்பான எல்லாவற்றையும் அளிக்கும் இணையதளம் இது. இப்போது தான் புதிதாக ஆண்ட்ராட் போனை வாங்கியிருந்தாலும் சரி அல்லது ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் அனுபவம் மிக்கவர் என்றாலும் சரி இந்த தளத்தில் அவர்களுக்கு சுவாராஸ்யம் தரக்கூடிய செய்திகளையும் தகவல்களையும் பெறலாம்.

ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலிகளை எப்படி டவுண்லோடு செய்து பயன்படுத்துவது  என்று தெரியவில்லையா ? கவலையே வேண்டால் அதற்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் போனில் விசைப்பலைகையை மாற்றுவது எப்படி என்பதில் துவங்கி , வால்பேப்பரை எப்படி மாற்றுவது ,ரிங்டோனை எப்படி மாற்றுவது என ஆண்ட்ராய்டு குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கான பதிலகளை ஆண்ட்ராய்டு வழிகாட்டி பகுதியில் காணலாம்.

ஆண்ட்ராய்ட் செய்திகள் ,செயலிகள் , போன்கள் ஆகியவற்றுக்கும் தனித்தனி பகுதிகள் இருக்கின்றன. இமெயில்,இசை,விளையாட்டுகள் ஆகிய பகுதிகளும் இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு உலகில் என்ன நடக்கிறது என்பதில் அப்டேட்டாக இருக்க இந்த இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆப்ஸூம் (http://www.appszoom.com/)

ஆண்ட்ராய்டு செயலிகளை தேடிப்பார்க்கவும் ஒப்பிட்டு பார்க்கவும் ஏற்ற இடமாக ஆப்ஸூம் வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ப புதிய ஆண்ட்ராய்டு செயலிகளை இங்கு அறிமுகம் செய்து கொள்ளலாம். எளிமையான தோற்றத்துடன் சிக்கல் இல்லாமல் காட்சி அளித்தாலும் செயலிகள் தொடர்பாக இந்த தளம் தகவல்களை வழங்கும் விதம் அசர வைக்கிறது.

சிறந்த செயலிகளை கண்டறியுங்கள் என கொட்டை எழுத்துக்களில் அழைப்பு விடுக்கும் முகப்பு பக்கத்தில் தேவையான செயலிகளை தேடிப்பார்க்கலாம். தேடல் கட்ட்த்தின் கீழ் செயலிகளை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது. ஒவ்வொரு தலைப்பாக கிளிக் செய்து தொடர்புடைய செயலிகளை பார்க்கலாம்.

அதற்கு கீழ், அன்றைய தினத்தின் சிறந்த செயலிகள் எனும் அறிமுகத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகள் முன் வைக்கப்படுகின்றன. இதே போல அதிக பயனாளிகளால் தரவிறக்கம் செய்யப்
பட்ட செயலிகளை இதற்கு கிழே பார்க்கலாம். மேலும் சில தலைப்புகளிலும் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு செயலிக்கான அறிமுகத்துடன் அவை இலவசமானதா . அவற்றின் பயன்பாடு மதிப்பீடு என்ன போன்ற விவரமும் இடம்பெற்றிருந்தாலும் தேவையான செயலியை கிளிக் செய்த பிறகு தான் இந்த இணையதளத்தின் சிறப்பம்சமே இருக்கிறது.

கிளி செய்யப்பட்ட செயலிக்காக தோன்றும் இணைய பக்கத்தில் அநேகமாக அந்த செயலி தொடர்பான எல்லா விரங்களுமே இடம்பெற்றிருக்கின்றன. செயலி பற்றிய விவரம், அவற்றுக்கான ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோக்கள் ,பயனாளி கருத்துக்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கான தலைப்புகள் மேல் பக்கத்தில் வரிசையாக இருக்க அதன் கீழ் செயலியின் தோற்றங்களை பார்க்கலாம். நடுநாயகமாக செயலி பயன்பாடு பற்றிய விரிவான விமர்சன விளக்கம் இடம்பெற்றுள்ளது. செயலி நண்பர்களை அடையாலம் காணும் பகுதியும் இதன் கீழே இருக்கிறது. அதாவது செயலி யாரால் எல்லாம் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை இதில் தெரிந்து கொள்ளலாம்.

இட்து பக்கத்தில் தொடர்புடைய பிற செயலிகளுக்கான பட்டியலும் இருக்கிறது. அப்படியே செயலியின் குறை நிறைகள் சுருக்கமாக கொடுக்கபட்டுள்ளது. இந்த செயலி பிடித்திருக்கிறதா ? உடனே அதை உங்களுக்கான செயலி பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் மற்ற செயலிகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆர்வம் உள்ள எந்த ஒரு செயலி பற்றிய முழுமையான சித்திரத்தையும் இந்த ஒரே பக்கத்தில் பெற்றுவிடலாம்.

ஆனால் ஒன்று ஒவ்வொரு செயலியாக கிளிக் செய்து பார்த்து கொண்டே இருக்கத்தோன்றும் . அந்த அளவுக்கு செயலிகளுக்கான தகவல் சுரங்கமாக இருக்கிறது.

அசத்தலான இந்த தளம் பற்றிய கூடுதல் தகவல் , இது ஆண்ட்ராய்டு போன்களுக்கானது மட்டும் அல்ல; இதே முறையில் ஐபோன் செயலிகளுக்கான தகவல்களையும் தருகிறது. முகப்பு பக்கத்திலேயே ஆண்ட்ராய்டா ,ஐபோனா என தேர்வு செய்து கொண்டு விட வேண்டும்.

செயலிக்கே ஒரு செயலியா என்பது போல இந்த தளத்தின் ப்ரிந்துரைகளை செயலி வடிவிலும் பெறலாம். புதிய செயலிகள் மற்றும் சிறந்த செயலிகல் இரண்டுமே செயலி வடிவில் அமைந்துள்ளன. இவற்றை தரவிற்க்கம் செய்து கொண்டால் ஆண்ட்ரய்டு போனில் இருந்தே புதிய பயனுள்ள செயலிகலை தெரிந்து கொண்டு விடலாம்.

ஒரே கிளிக்கில் செல்போன் ஒலி அளவை மாற்ற வழிசெய்யும் பயனுள்ள செயலி உட்பட நூற்றுக்கணக்கான செயலிகளை அறிமுகம் செய்து கொண்டு பயனடையலாம்.இவ்வளவு வசதிகளும் விவரங்களும் இருக்கும் போது செயலிகளை தரவிறக்கம் செய்யும் வசதி இல்லாமல் இருக்குமா ? பார்த்தவற்றில் பிடித்துப்போன செயலிகளை எளிதாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு அண்ட் மீ (http://androidandme.com/)

ஆண்ட்ராயு தொடர்பான செய்திகளுக்கான இணையதளம். ஆண்ட்ரய்ட் செயலிகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்த வாரத்தின் பத்து முன்னணி செயலிகள் போன்ற சுண்டி இழுக்கும் தலைப்புகளின் செயலிகளை அறிந்து கொள்ளலாம். புதியவர்களுக்கான வழிகாட்டி குறிப்புகளும் இருக்கின்றன. தேடல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி பிரியர்களுக்கு ஏற்றது. ஆண்ட்ராய்டு உலகில் எதையும் தவறவிடாமல் இருக்கலாம்.

ஆண்ட்ராய்டு சமூகம் (http://androidcommunity.com/forums/)

ஆண்ட்ராய்டு பிரியர்களுக்கான சமுகமாக விளங்கும் இணையதளம். ஆண்ட்ராய்டு தொடர்பான செய்தைகள், விமர்சனம், புதிய சாதன்ங்கள் பற்றிய தகவல்களை பெறலாம். குறிப்பாக ஆண்ட்ராய்டு புதிய சாதன்ங்கள் பற்ற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தளம் உதவியாக இருக்கும். இதில் உள்ள பயனாளிகள் விவாத

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

3 Comments on “ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்

  1. மிக பயனுள்ள பதிவு .மிக பலர் தேடும் விசயங்களின் மொத்த சங்கமம்

    Reply
    1. cybersimman

      மகிழ்ச்சி நண்பரே. ஆண்ட்ராய்டின் செல்வாக்கு அதிகரிக்க ஆண்ட்ராய்டு தகவலுக்கான தேடலும் அதிகரிக்கிறது.

      அனுபுடன் சிம்மன் .

      Reply
  2. Gpm Palanisami

    2014-03-17 9:56 GMT+05:30 Cybersimman’s Blog :

    > cybersimman posted: “இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட்போன் என்றால்
    > ஆண்ட்ராய்ட் போன்கள் தான். ஆப்பிளின் ஐபோன் அதன் நேர்த்தி மற்றும்
    > வடிவமைப்புக்காக செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும் நம்மவர்கள் மத்தியில்
    > ஆண்ட்ராய்ட் தான் பிரபலமாகவும் , பரவலாகவும் இருக்கிறது. சமீப்பத்திய
    > அறிமுகமான மோட”

    Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published.