Archives for: October 2014

வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம்

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் !) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும். ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள ( நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநிலவாரியாக வானொலி நிலையங்களை […]

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத...

Read More »

சூரியனை துரத்திச்சென்ற புகைப்பட கலைஞர்

இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்கு முடியாது என்று அசந்து போகும் வகையில் சூரிய அஸ்தமனத்தை அட்டகாசமாக படம் பிடித்து வியக்க வைத்திருக்கிறார் புகைப்பட கலைஞரான சைமன் ராபர்ட்ஸ். சூரிய அஸ்தமன காட்சியை படம் பிடிப்பது அப்படி என்ன கஷ்டமா? என்று கேட்கலாம். அமெசூர் புகைப்பட கலைஞர்கள் முதல் தொழில்முறை வல்லுனர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் படம் எடுத்து தள்ளியிருக்கின்றனர். அநேகமாக உலகில் அதிகம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் […]

இது வரை இப்படி ஒரு சூரிய அஸ்தமன காட்சியை ஒருவரும் பார்த்திருக்கு முடியாது என்று அசந்து போகும் வகையில் சூரிய அஸ்தமனத்தை அ...

Read More »

பாலைவனச்சோலை பார்க்க அழைக்கும் கூகிள்

அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது. ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப […]

அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக...

Read More »

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய […]

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷ...

Read More »

நியூரான்களுடன் பேசும் கம்ப்யூட்டர்கள்

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத் தலை இராவணனன் எழுப்பக்கூடிய சுவாரஸ்யமான கேள்விகளைப் பார்க்கலாம். இராவணனின் பத்துத் தலைகளிலும் மூளை இருந்ததா? பத்து தலையின் கண்களும் தனித்தனியே காட்சிகளைக் கண்டனவா? பத்து தலை காதுகளும் ஒரே ஒலிகளை கேட்டனவா? தனித்தனி ஒலிகளை கேட்டனவா? நடைமுறையில் பத்து தலைகளின் பலன்கள் என்னவாக இருந்தன? இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். பத்து தலைகள் செயல்பட்ட விதம் […]

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத...

Read More »