டிவிட்டருக்கு வயது பத்து!

சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றான டிவிட்டர் பத்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் உதயமாகி , அதே ஆண்டு ஜூலை மாதம் அதிகாரபூர்வமாக அறிமுகமான டிவிட்டர் அதன் பிறகு தனது வளர்ச்சிப்பாதையில் எத்தனையோ மைல்கற்களையும், மாற்றங்களையும் சந்தித்துள்ளது.

ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியமானவை டிவிட்டர் குறும்பதிவு சேவையாக தன்னை உருமாற்றிக்கொண்டு வந்துள்ள விதம். 140 எழுத்துக்களுக்குள் நிலைத்தகவல்கள் பகிர்வுக்கான சாதனமாக டிவிட்டர் புகழ்பெற்றிருந்தாலும் டிவிட்டரின் துவக்கப்புள்ளி ஆச்சர்யமானது.

டிவிட்டர் உண்மையில் ஒரு உப சேவையாக கிளத்து வளர்ந்தது. ஓடியோ எனும் நிறுவனம் தான் அதன் மூலவேர். பாட்காஸ்டிங் சேவைக்கான இந்த நிறுவனத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அதன் நிறுவனர்களான ஜேட் டோர்சே, இவான் வில்லிமஸ் ( பிலாகர் நிறுவனர்) மற்றும் பிஸ் ஸ்டோன் ஆகியோர் டிவிட்டர் சேவை பற்றி ஆலோசித்தனர்.

எஸ்.எம்.எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் பிரபலமாக இருந்த கால கட்டம் அது. அப்போது தனிநபர்கள் குழுவினருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியாகவே டிவிட்டர் முன்வைக்கப்பட்டது.

அதன் பிறகு தனிநபர்கள் நிலைத்தகவலை தங்கள் வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்ளும் சேவையாக அறியப்பட்டது.
”நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்” எனும் தகவலை பகிர்ந்து கொள்ள வழி செய்த டிவிட்டர், இது போன்ற தகவல்களிலும் எல்லாம் யாருக்கு ஆர்வம் இருக்கும் என்ற விமர்சனங்களை மீறி பயனாளிகளை கவர்ந்தது. அதன் பிறகு செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கான சாதனமாக டிவிட்டர் உருவெடுத்து மெல்ல விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது.

பூகம்பம் போன்ற நிகழ்வுகளை உடனடியாக பகிர உதவியது, விபத்துகளின் போது தகவல் அளிக்க செய்தது போன்றவை பிரபலமாக்கிய டிவிட்டர் சேவையை, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் புரட்சி வெடித்த போது மக்கள் உணர்வுகளை பகிர உதவும் சாதனமாகவும் புகழ்பெற வைத்தது.

டிவிட்டர் வளர்ச்சியில் மற்றொரு முக்கியமான விஷயம் அதன் ஆதார அம்சங்களான @ மூலம் பதில் அளிக்கு வசதி, ஒரு அலையென குறும்பதிவுகளை ஒற்றை தலைப்பின் கீழ் உருப்பெறச்செய்யும் ஆற்றலை தரும் ஹாஷ்டேக் வசதி மற்றும் ஒரு குறும்பதிவை நூறு குறும்பதுவுகளாக விஸ்வரூபம் எடுக்கச்செய்யும் ரிடிவீட் வசதி ஆகிய அம்சங்கள் அதன் பயனாளிகளால் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும்!.
@ மூலம் பதில் அளிக்கும் வசதியை முன்வைத்தவர்

டிவிட்டர் தோற்றம் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் அதன் ஆரம்ப பெயர் டிவிட்ராகவே (twttr) இருந்தது. அந்த கால கட்டத்தில் பிரபலமாக இருந்த பிளிக்கர் (Flickr )சேவையின் தாக்கம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதோடு அப்போது டிவிட்டர்.காம் எனும் முகவரியும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆறு மாதங்கள் கழித்து அந்த முகவரியை வாங்கிய பிறகே டிவிட்டர் என பெயர் மாற்றப்பட்டது.

———

தளம் புதிது; டிஜிட்டல் நாகரீகம்

இமெயில் நாகரீகம் ,செல்போன் நாகரீகம் பற்றி எல்லாம் ஒரு காலத்தில் பிரபலமாக பேசப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இமெயில் மற்றும் செல்போன் பயன்பாட்டில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விதிகள் இவ்வாறு நினைவுபடுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக பொதுவெளியில் இவற்றை கடைபிடிப்பது முக்கியம் என கருதப்பட்டது.

இவை பழைய சங்கதி என ஆகிவிட்டாலும் அடிப்படையானவை என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், இன்றைய தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வருங்கால தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பொது விதிகளை எட்டிக்.இயே தளம் பரிந்துரைக்கிறது.

நகைச்சுவை மிளர, பொருத்தமான கார்ட்டூன் சித்திரங்களும் இந்த விதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
படித்து விட்டு ரசிக்கவும் செய்யலாம். சிந்திக்கவும் செய்யலாம்.

ஸ்மார்ட்போன் முதல் ட்ரோன்கள் வரை பல வித தொழில்நுட்பங்களை வரையான ஆலோசனைகள் உள்ளன. ஸ்மார்ட்போன் பயன்பாட்டு குறிப்புகள் தாக் ஆகச்சிறந்தவையாக இருக்கின்றன.

வெளிச்சம் குறைவான பகுதி என்றால் போனை இயக்குவதற்கு முன் அதன் பின்னணி ஒளியை குறைக்கவும் மற்றும் உரையாடலின் போது போனில் நோட்டிபிகேஷன் வந்தால் , பேசிக்கொண்டிருப்பவர் முடிக்கும் வரையாவது காத்திருந்து அதை பார்க்கவும் போன்ற குறிப்புகள் அலட்சியம் செய்ய முடியாதவை.

——-

செயலி புதிது; பாரம்பரியம் காப்போம்

நாட்டில் உள்ள முக்கிய நினைவுச்சின்னங்களை பராமரிப்பதும், பேணிக்காப்பதும் அரசின் கடமை மட்டும் அல்ல; பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதில் மக்களும் அரசுக்கு உதவும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஸ்வச் பர்வர்த்தன் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி மூலம் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாஜ்மகால் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களைச்சுற்று உள்ள குப்பைகள், அசுத்தங்கள் மற்றும் பிற பாதிப்புகள் பற்றி புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம். இவை அதற்குறிய அகராதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொல்லியல் துறை கட்டுபபாட்டில் உள்ளவற்றில் 25 பாரம்பரிய சின்னங்கள் முதல் கட்டமாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை மெல்ல விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

தரவிறக்கம் செய்ய; https://play.google.com/store/apps/details?id=in.org.degs.swachhparyatanapp&hl=en

——-

விடியோ புதிது; விஞ்ஞானம் அழைக்கிறது

இணையத்தில் கல்வி சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பது தெரிந்த விஷயம் தான். இவற்றை தேடித்தரும் தளங்களும் இருக்கின்றன. இதே போல கம்ப்யூட்டர் அறிவியல் சார்ந்த வீடியோக்கள் மற்றும் காட்சி விளக்கங்களை காண விரும்பினால் அவற்றை தேடி அலையாமல் ஒரே இடத்தில் தொகுத்து அளிக்கிறது சி.எஸ்.வீடியோலக்சர்ஸ் இணையதளம்.

பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை இதில் பார்க்கலாம். அல்கோரிதம், கம்ப்யூட்டர் சிஸ்டம், டேட்டா, செயற்கை அறிவு என பலவித பதங்கள் தொடர்பான வீடியோக்கள், காட்சி விளக்கங்கள், பிடிஎப் வழிகாட்டிகள் ஆகியவற்றை காணலாம். கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாட திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

இணைய முகவரி; http://csvideolectures.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *