Archives for: January 2017

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்துள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...

Read More »

எங்கும் ட்ரோன்கள், மெய்நிகர் மாயம், புத்திசாலி பொருட்கள்… 2017 ல் தொழில்நுட்பம்!

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். பொருட்கள் எல்லாம் மேலும் புத்தி கூர்மை பெறும். எதிர்கால கார்கள் அணிவகுத்து நிற்கும். மனித அறிவை செயற்கை நுண்ணறிவு ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பாட்கள் பேசிக்கொண்டே இருக்கும். செயலிகள் மேம்படும்… இவை எல்லாம் என்ன என்று வியக்கிறீர்களா? 2017 ம் ஆண்டில் தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய போக்குகளாக வல்லுனர்கள் ஆர்வத்துடன் சுட்டிக்காட்டும் போக்குகள் தான் இவை. தொழில்நுட்ப உலகின் […]

காணுமிடமெல்லாம் ட்ரோன்கள் பறக்கும். மெய்நிகர் உலக அனுபவத்தை அளிக்க கூடிய சாதனங்களை மூக்கு கண்ணாடி போல அணிந்திருப்போம். ப...

Read More »

ரோபோக்கள் தேடி வருகின்றன!

புத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில்,  சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் நுகர்வோர் உலகில் வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அவற்றின் முன்னோட்ட மாதிரிகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை இந்த கண்காட்சியில் பெரிய சைஸ் ஸ்மார்ட் டிவிகள், தானியங்கி கார்கள், அணிகணிணி வகை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு கண்காட்சியில், பலவகையான ரோபோக்கள் […]

புத்தாண்டு பிறந்ததுமே கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில்,  சி.இ.எஸ் எனப்படும் நுகர்வோர் மின்னணு கண்காட்சி முக்கியமானது. அமெர...

Read More »

இவர் இணைய உலகின் கோலியாத்தை வீழ்த்தியவர் !

கேபிரியல் வைன்பர்க் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். யார் இந்த வைன்பர்க்? கூகுளுக்கு சவால் விடும் மாற்று தேடியந்திரமான டக் டக் கோவின் நிறுவனர் தான் இவர். இணையதளங்களை அறிமுகம் செய்வது போலவே தேடியந்திரங்களை அறிமுகம் செய்யும் ஆர்வத்தால் , டக் டக் கோ அறிமுகமான காலத்திலேயே அது பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது அது தேடாமல் தேடும் உத்தியை பின்பற்றி கவனத்தை ஈர்த்தது. பின்னர் எட்வர்ட் ஸ்னோடர்ன் விவகாரத்திற்கு பிறகு தனியுரிமை தொடர்பான விவாதம் விஸ்வரூபம் எடுத்த […]

கேபிரியல் வைன்பர்க் எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர். யார் இந்த வைன்பர்க்? கூகுளுக்கு சவால் விடும் மாற்று தேடியந்திரமான...

Read More »

நம் காலத்து நாயகர்கள் புத்தகம்

பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய தொடர் ’நம் காலத்து நாயகர்கள்’ புத்தக வடிவில் வெளியாகிறது. புதிய தலைமுறை கல்வி வார இதழில் தொடராக வந்த இந்த கதைகள் புதிய தலைமுறை பதிப்பக வெளியீடாக புத்தக வடிவம் பெறுகிறது. இது என்னுடைய மூன்றாவது புத்தகம். ஒரு விதத்தில் இரண்டாம் புத்தகமான நெட்சத்திரங்களின் […]

பேஸ்புக், ஸ்கைப், இன்ஸ்டாகிராம், டிரபாப்பாக்ஸ், சவுண்ட் கிளவுட் என நம் காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் இணைய சேவைகள்...

Read More »