சமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா!

DmNq9-KVAAEpgyLதமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகி இருக்கிறார் சோபியா. இல்லை #சோபியா! அப்படி தான் சமூக வலைதளமான டிவிட்டரும், பேஸ்புக்கும் அவரை கொண்டாடுகின்றன. இப்போது அவர் மட்டும் அல்ல, அவர் எழுப்பிய பாஜகவுக்கு எதிரன ஒழிக கோஷமும் டிவிட்டரில் முன்னிலை பெற்றுள்ளது. சோபியா கைதுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் சோபியா தான் அதிகம் பேசப்பட்டவராக இருக்கிறார்.

ஏதாவது ஒரு காரணத்திற்காக, சமூக ஊடகங்களில் டிரெண்டாவதும், பேசப்படுவதும் அடிக்கடி நடப்பது தான் என்றாலும், மாணவி சோபியா சார்ந்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் எழுந்திருக்கும் விவாதம் முக்கியமானதாக அமைகிறது. இணையத்தில் நடைபெறும் எல்லா விவாதங்களும் போலவே , இந்த விவாதத்திலும் எதிர் கருத்துக்களும், ஒழிக கோஷம் போட்டதற்காக சோபியாவை விமர்சித்தும், கேலி செய்தும் கருத்துக்கள் வெளியாகி கொண்டிருந்தாலும், அவரை மையமாக கொண்டு சமூக ஊடகங்களில் மேலெழுந்துள்ள #சோபியா #ReleaseSophia, #பாசிசபாஜக_ஆட்சிஒழிக, #FacistBJPDownDown, #TamilisaiSoundararajan போன்ற ஹாஷ்டேகுகள், இந்த சர்ச்சையை விட முக்கியமானதொரு விஷயத்தை சுட்டிக்காட்டுவதாகவே அமைகிறது.

ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு குரலை பதிவு செய்வதற்கான உரிமை தான் அது. இந்த உரிமை காக்கப்பட வேண்டியது மட்டும் அல்ல, கொண்டாடப்பட வேண்டியது என்பதையும் சமூக ஊடக விவாதங்கள் உணர்த்துகின்றன. நாடு முழுவதும் எதிர் குரல் நசுக்கப்படுவதாக கருத்து வலுப்பெற்று வரும் நிலையில் ஒரு சாமானிய மாணவி எழுப்பிய குரல், இங்கு பேசுபொருளாகி இருக்கிறது.

பாஜக மாநிலை தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சொல்வது போல, மாணவி சோபியா திட்டமிட்டு இதைச்செய்தாரா அல்லது உணர்வெழுச்சியில் செய்தாரா? என்று தெரியவில்லை. அந்த விவாதமும் தேவையும் இல்லை. ஏனெனில் ஜனநாயக நாட்டில் ஒழிக கோஷம் போட எவருக்கும் உரிமை இருக்கிறது. இது பாஜகவுக்கு எதிராக எழுப்ப பட்டதால் ஆதரிக்க வேண்டும் என்றில்லை, யாரை எதிர்த்து, யார் கோஷம் போட்டிருந்தாலும் அதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அது தவறானது, அடக்குமுறைக்கு சமமானது என்பதை உரத்துச்சொல்வது சிவில் சமூகத்தின் கடமை. ஆறுதல் அளிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தமிழ் சமூகம் அதை செய்திருக்கிறது.

பாஜக தரப்பினர் இதில் அதிருப்தி கொள்ள ஆயிரம் காரணம் இருக்கிறது. அவர்கள் சோபியாவை கண்டிக்கலாம். அவர் எழுப்பிய கோஷத்தை விமர்சிக்கலாம். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் செய்தது, விமர்சனத்தை ஏற்க மனமில்லாததையே காட்டுகிறது. இதை தான் டிவிட்டரில் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ரவி எனும் டிவிட்டர் பயனாளி (@ravixas ) சொல்லி இருப்பது போல இது விமான நிலையத்தோடு முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை. ஆனால் ஆல் இந்தியா அளவில் டிரெண்டிங்காகி விட்டது. விளைவு இப்போது பலரும், # பாசிஸ பாஜக ஒழிக எனும் ஹாஷ்டேகுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கோஷத்தை தான், தூத்துக்குடி விமானத்தில் பயணித்த தமிழசை முன் மாணவி சோபியா எழுப்பியிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழிசை காவல்நிலையத்தில் புகார் அளிதத்தை அடுத்து மாணவி சோபியாவை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

twitter-trending3415-1536027153கைது நடவடிக்கைய அடுத்து, இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது கருதியவர்கள் பலரும் டிவிட்டரில், தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் #சோபியா எனும் ஹாஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர். கவின் வடிவேல் எனும் டிவிட்டர் பயனாளி (@kevin_vadivel) பீரங்கி முன் ஒருவர் நிற்பது போன்ற படத்தை வெளியிட்டு, சோபியா செய்ததும் இது போன்றது தான், தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். அப்துப் பாசித் (@bashu_bashith ) என்பவர் துணிச்சலான பெண் என பாராட்டியுள்ளார். பத்திரிகையாளர் ஷபிர் அகமது (@bashu_bashith) நகர்புற நக்சல்கள் பட்டியலில் சோபியா சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். மதுரை சமையன் (@bashu_bashith ) என்பவர் பாஜகவையும், தமிழிசையையும் கதறவிட்ட #சோபியா என தெரிவித்துள்ளார். சாம் என்பவர் இது கருத்து சுதந்திரம் அற்ற நிலை என கூறியுள்ளார்.

இப்படியாக #சோபியா ஹாஷ்டேக் பிரபலமான நிலையில், பலரும் அவரை விடுவிக்கும் கோரிக்கையையும் வலியுறுத்தி வருகின்றன. சுபவீரபாண்டியன் (#சோபியா) உள்ளிட்ட எண்ணற்றவர்கள் சோபியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர். இது தொடர்பான #ReleaseSophia ஹாஷ்டேகும் பிரபலமாகி இருக்கிறது.

இதனிடையே பலரும் சோபியாவின் எதிர்ப்பு கோஷத்தையும் தூக்கி பிடித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் (@mkstalin) , ” நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிஸ ஆட்சி ஒழிக என குரல் கொடுத்துள்ளார். மேலும் பலரும் இதே போன்ற கருத்துக்களை கூறி வருவதால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக  எனும் ஹாஷ்டேகும் பிரபலமாகி இருக்கிறது. தமிழக அளவில் மட்டும் அல்ல, இந்திய அளவிலும் இந்த விவாதம் நடக்கிறது.

இதனிடையே காவேரி டிவி, ‘ யார் இந்த சோபியா? எனும் கேள்வியோடு, சோபியா பற்றிய அறிமுக சித்திரத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சோபியா, எம்.எஸ்.சி கணிதம் முடித்துவிட்டு இப்போது கனடாவில் ஆய்வு மாணவியாக இருக்கிறார்.

இந்த விவாதத்தில் சோபியாவின் மதம், சமூகம் எல்லாவற்றையும் இழுத்து கருத்து தெரிவிக்கும் பதிவுகளும் வெளியானாலும், பொதுவாக கருத்து தெரிவிக்கும், அதிலும் முக்கியமாக எதிர்ப்பு குரலை பதிவு செய்யும் உரிமையை பலரும் வலியுறுத்துவதை பார்க்க முடிகிறது. இந்தியா பெருமிதம் கொள்ளும் ஜனநாயக பண்பிற்கு இது முக்கியமானது.

அதனால் தான் சோபியா கொண்டாடப்பட வேண்டியவராக இருக்கிறார். வலைப்பதிவாளரான சரவண கார்த்திகேயன் இதை அழகாக பதிவு செய்திருக்கிறார். சோபியா காட்டிய துணிச்சல் முக்கியமானது என அவர் கூறியுள்ளார். மேலும் தன் நாட்டைப்பற்றி கவலை கொண்டதால் அவர் ஒரு உதாரண ஆளுமை என்றும் பாராட்டியிருக்கிறார். : http://www.writercsk.com/2018/09/blog-post_4.html

சமூக ஊடகம் மூலம் கவனத்தை ஈர்த்த ஒரு சாமானிய மாணவிக்கு அவர் முன்னிறுத்தும் துணிச்சல் மற்றும் கருத்துரிமை மிக்க செயலுக்காக ஒரு வலைப்பதிவாளர் மகுடம் சூட்டியிருப்பதும் பொருத்தமானதே. வாழ்க இணைய ஜானநாயகம்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.