கூகுளின் கேள்வி பதில் செயலி விரிவாக்கம்

resume-template-freeகூகுல் நிறுவனம், தனது கேள்வி பதில் சேவையான நைபர்லி (Neighbourly ) செயலியை நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான குவோரா போன்ற இந்த செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடம் இருந்து பெற வழி செய்கிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை துவங்கி அருகாமையில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட் வரை எண்ணற்ற கேள்விகளை இந்த செயலி மூலம் கேட்டு பதில் பெறலாம். தகவல் அறிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்கலாம். இந்த செயலி வாயிலாக உள்ளூர் வல்லுனராக விளங்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஜி.பி.எஸ் அடிப்படையில் இந்த சேவை செயல்படுகிறது. முதல கட்டமாக மும்பை நகருக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலி இரண்டாம் கட்டமாக, விசாகப்பட்டினம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது தில்லி மற்றும் பெங்களூருக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாடு தழுவிய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதே போல் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் வரைபட சேவை வாயிலாக அதில் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளூர் வர்த்தக நிறுவனங்களை தொடர்பு கொள்வதற்கான வசதியையும் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://neighbourly.google.com/about/

தளம் புதிது

ரெஸ்யூம்களை உருவாக்க உதவும் இணையதளம்

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் போது ரெஸ்யூம் தொடர்பாக பலவித கேள்விகளும், சந்தேகங்களும் இருக்கலாம். ரெஸ்யூம் சிறந்ததாக இருக்கிறதா? திறமைகளை எல்லாம் வெளிப்படுத்து வகையில் இருக்கிறதா? போன்ற கேள்விகள் ரெஸ்யூம் தயாரிப்பில் ஈடுபடும் போது எழலாம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் நேர்த்தியான முறையில் தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்கி கொள்ள மைரெஸ்யூம்பார்மெட் தளம் கைகொடுக்கிறது. இந்த தளத்தில் ஐந்தே நிமிடங்களில் அட்டகாசமான ரெஸ்யூமை தயார் செய்து கொள்ளலாம். இதிலிருந்து மாதிரி ரெஸ்யூம்களை தேர்வு செய்து, அதில் உள்ள அம்சங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட தகவல்களை இடம்பெறச்செய்து நமக்கான ரெஸ்யூமை உருவாக்கி கொள்ளலாம். முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தந்த ரெஸ்யூம்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலோடு இந்த தளம் ரெஸ்யூம்களை உருவாக்கி தருகிறது. ரெஸ்யூம்களை பிடிஎப் கோப்பு வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு முன், ரெஸ்யூம் எப்படி தோற்றம் அளிக்கிறது என்பதையும் முன்னோட்டம் பார்த்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://www.myresumeformat.com/

வீடியோ புதிது

ஹைபர்லிங்க் வரலாறு தெரியுமா?

இணையத்தின் ஆற்றலே இணைப்புகளில் தான் இருக்கிறது. அதாவது அடையாளம் காட்டுப்படும் இடத்தில் கிளிக் செய்தால் அதற்கு பின்னணியில் உள்ள மூல இடத்திற்கு அழைத்துசெல்லப்படும் வசதி. ஹைபர்லிங்க் என குறிப்பிடப்படும் இந்த வசதி மூலம் தான் இணையத்தில் இருந்த இடத்தில் இருந்து தகவல்களை நாடி விரும்பிய இடங்களுக்கு எல்லாம் தாவ முடிகிறது. எல்லாம் சரி இந்த ஹைபர்லிங்க் வசதியின் வரலாறு தெரியுமா? வடிவமைப்பாளரான மார்கரெட் ஸ்டூவர்ட், 4 நிமிடத்திற்கும் குறைவான வீடியோவில் இந்த வரலாற்றை சுவைபட விவரித்துள்ளார். இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் வானேவர் புஷ் 1945 ல் இணையத்திற்கான மூல கருத்தாக்கத்தை முன்வைத்த கட்டுரையில் ஹைப்ர்லிங்க் போன்ற வசதியை குறிப்பிட்டதில் இருந்து, 1965 ல் டெட் நெல்சன் எனும் வல்லுனர் முதலில் ஹைபர்லிங் எனும் வார்த்தையை பயன்படுத்தியது என, ஹைபர்லிங்க் வரலாற்றை இந்த வீடியோ அழகாக விவரிக்கிறது. இடையே அறிமுகமான ஹைபர்டைஸ் எனும் வார்த்தைகள் மீது கிளிக்கினால் வண்ணங்கள் விரியும் வசதி தொடர்பான சுவாரஸ்யமான தகவலை தெரிந்து கொள்ளலாம். இணையத்தில் நாம் சர்வ சாதாரனமாக பயன்படுத்தும் மிக முக்கிய வசதியின் பூர்வ கதையை இந்த வீடியோ மூலம் அறியலாம். வியக்கலாம்!

வீடியோவை காண: https://youtu.be/3Va3oY8pfSI

(தகவல் புதிது)

அலெக்சா சேவையில் ஸ்கைப் வசதி

அமேசான் நிறுவனத்தின் குரல் வழி உதவியாளர் சேவையான அலெக்சாவுடன் மைக்ரோசாப்டின் ஸ்கைப் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்கள் வாயிலாக ஸ்கைப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்கைப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் தவிர ஸ்கைப் வாயிலாக மொபைல் மற்றும் லேண்ட்லைன் போன்களுக்கும் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸா பயனாளிகள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று இந்த வசதியை ஒருங்கிணைத்து இயக்கி கொள்ளலாம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த வசதி அறிமும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அலெக்ஸா குரல் வழி உதவியாளர் சேவையில் பிரத்யேக வசதிகளை உருவாக்கி கொள்வதற்கான அலெக்ஸா ஸ்கில் புளுபிரிண்ட் வசதியையும் அமேசான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.