டெக் டிக்ஷனரி- 18 யூனிகார்ன் (Unicorn) – ஒற்றைக்கொம்பு

uniயூனிகார்ன் எனும் வார்த்தை ஸ்டார்ட் அப் உலகில் மிகவும் பிரபலமானது மட்டும் அல்ல, மதிப்பு மிக்கதும் கூட. உண்மையில் ஸ்டார்ட் அப்களின் மதிப்பையே இந்த வார்த்தை குறிக்கிறது.
ஸ்டார்ட் அப் என்றாலே, அபார வளர்ச்சி வாய்ப்பு மிக்க வளர் இளம் நிறுவனங்கள் என்று தானே பொருள். பெயருக்கு ஏற்ப ஒரு ஸ்டார்ட் அப் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் போது யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதாக கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் யூனிகார்னாக கருதப்படுகின்றன.
ஸ்டார்ட் அப் உலகில் இந்த அந்தஸ்தை பெறுவது சிகரம் தொடுவதாகவும் கருதலாம். இப்போதைய கணக்கு படி உலகில் 266 யூனிகார்ன்கள் இருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது. ஆச்சர்யப்படும் வகையில் சீனாவில் தான் யூனிகார்ன்கள் எண்ணிக்கை அதிகம்- 127. அமெரிக்கா அடுத்த உள்ளது.- 96. இந்தியா 23 யூனிகார்ன் நிறுவனங்களுடன் 3 வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் தான் யூனிகார்கன்களை பெற்றுள்ளன.
யூனிகார்ன்களுக்கு உதாரணம் வேண்டும் எனில், கேள்வி பதில் தளமான குவோரா, ஏர்பிஎன்பி, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை கூறலாம். சீனாவின் பைட்டான்ஸ் உலகின் மதிப்பு மிக்க யூனிகார்னாக கருதப்படுகிறது. நம்மவர்களுக்கு நன்கு பரீட்சியமான டிக்டோக்கின் தாய் நிறுவனம் இது. ஜோமேட்டோ, பேடிஎம், பைஜு, பில்டெஸ்க்க். குவிக்கர் ஆகியவை இந்திய யூனிகார்ன்கள்.
பேஸ்புக், ஸ்கைப்,. டிவிட்டர், அலிபாபா, ஜிம்யோமி என்னால் முன்னாள் யூனிகார்ன்களாக கருதப்படுகின்றன. ஒரு காலத்தில் யூனிகார்ன்களாக இருந்த இந்நிறுவங்கள் பொது பங்குகளை வெளியிட்ட பிறகு முழு வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.
நிற்க, யூனிகார்ன் போலவே இன்னொரு வார்த்தையும் ஸ்டார்ட் அப் அகராதியில் இருக்கிறது. அண்டர்கார்ன். அதாவது, ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு பெற்றிருந்து பின்னர், பொது வெளியீட்டிற்கு வரும் போது, அதைவிட குறைந்த மதிப்பெண் பெறும் நிறுவனங்கள் அண்டர்கார்னாக கருதப்படுகின்றன. விரைவில் பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள இணைய காட்சி பலகை சேவையான பிண்டிரெஸ்ட் இத்தகைய அண்டர்கார்னாக கருதப்படுகிறது.
எல்லாம் சரி, யூனிகார்னுக்கான தமிழ் பதம் என்ன? பிடிவாதமாக தமிழ் படுத்தினால் இதை ஒற்றைக்கொம்பு என குறிப்பிடலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் யூனிகார்ன் என்று பயன்படுத்துவது கூட சரியாகவே இருக்கும்.
அதென்ன ஒற்றைக்கொம்பு என கேட்பவர்கள் கவனிக்க, உண்மையில் யுனிகார்ன் என்றால், ஒற்றைக்கொம்பு கொண்ட குதிரை போன்ற கற்பனை விலங்கு என அர்த்தம். இத்தகைய விலங்கு அளவில்லாத சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. யூனிகார்ன் பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவலை இந்த குவோரா கேள்வி பதில் விவரிக்கிறது: https://www.quora.com/What-is-the-meaning-of-a-unicorn

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.