டிஜிட்டல் டைரி -பருத்திவீரனும், அமெரிக்க பேஸ்புக் திருடனும்

190522222338-city-of-torrington-police-department-mugshot-01-exlarge-169’பருத்திவீரன்’ திரைப்படத்தை ஸ்லாகித்து பேசவும், விமர்சிக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் இருப்பது போலவே, சர்ச்சைக்குரிய காட்சிகளும் பல இருக்கின்றன. சின்ன சின்ன திருட்டுகளுக்காக கைதாவதை வழக்கமாக கொண்ட பருத்திவீரன், பெரிதாக சிக்கி தனது படம் நாளிதழில் வரவேண்டும் என்பது தனது லட்சியம் (!) என சொல்வது போல படத்தில் வரும் காட்சியை மட்டும் இந்த பதிவுகாக கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

ஏனெனில், இந்த காட்சியை நினைவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தில், காவல்துறையால் வலைவீசி தேடப்பட்டு வரும் ஒரு திருடன், பேஸ்புக்கில் தனக்கு 15,000 லைக் கிடைத்தால், தானாக வந்து சரண் அடைவதாக பேரம் பேசியிருக்கிறான்.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள டாரிங்டன் பகுதி காவல்துறை பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக 29 வயதான ஜோஸ் சிம்ஸ் என்பவரை தேடி வருகின்றனர். வழக்கமான தேடலோடு, பேஸ்புக்கிலும் வலைவிரித்தனரா? என்று தெரியவில்லை.

ஆனால், தேடப்படும் திருடன் சிம்ஸ், காவல்துறையினரை பேஸ்புக் பக்கம் வாயிலாக தொடர்பு கொண்டு, தான் சரணடைய டீல் பேசியிருக்கிறான். பேஸ்புக்கில் தனது தேடப்படும் அறிவிப்புக்கு 15,000 லைக் கிடைத்தால் தானே வந்து சரண் அடைந்துவிடுகிறேன் என்பது தான் அந்த டீல். காவல்துறையினரும் இதற்கு ஒப்புக்கொண்டு தங்கள் பேஸ்புக் பக்கத்தில், திருடனின் படத்தை வெளியிட்டனர்.

இது கொஞ்சம் கஷ்டமானது தான், ஆனால் முடியாதது இல்லை என கருதி ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்க கூடியது போலவே, பேஸ்புக் லைக்கிற்காக திருடன் காவல்துறையிடம் டீல் பேசிய செய்தி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பலருக்கும், இது உண்மையா? அல்லது ஏதேனும் நகைச்சுவை விளையாட்டா? எனும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இது விளையாட்டு இல்லை உண்மை செய்தி தான் என காவல்துறையாக தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த செய்தி தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேடப்படும் குற்றவாளி ஒருவருடன் பேஸ்புக் லைக் ஒப்பந்தம் போடுவது சரி தானா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக காவல்துறைக்கான அறம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் வல்லுனர் மகி ஹேபர்பீல்ட் என்பவர், இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

’குற்றவாளி சிம்ஸ், காவல்துறையையும், பொதுமக்களையும் ஏமாற்ற சமூக ஊடகத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றும், பேஸ்புக் லைக்கை விட்டுத்தள்ளுங்கள், திருடர்களுடன் காவல்துறை பேரம் பேசுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல ‘ என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ஒரு விளையாட்டாகவிடும், திருட்டு ஆசாமிகள் எல்லாம் இதே பாணியில், சட்டத்துடன் விளையாடத்துவங்கிவிடுவார்கள் என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

நிச்சயம் இந்த கவலை அலட்சியம் செய்யக்கூடியதல்ல. இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்து, வருங்காலத்தில் குற்றவாளிகள், சமூக ஊடகத்தில் ஏதேனும் சவால் விட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

இதனிடையே, செய்தி நிறுவனத்தால் தொடர்பு கொள்ளப்பட்ட போது, திருடன் சிம்ஸ், தனது சரண் வாக்குறுதி உண்மையானது என்றும், காவல்துறையின் தீவிர தேடல் முயற்சிக்கு கொஞ்சம் ஊக்கம் அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஓடி ஓடி தனக்கும் அலுத்து போய்விட்டதால் சரண் அடைய தீர்மானித்ததாகவும், பேஸ்புக் வாயிலாக கூறியுள்ளார்.

பல்வேறு துறையினர் சமூக உடகங்களை பயன்படுத்துவது போலவே, காவல்துறையினரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறை பிரிவுகள் சார்பில் பேஸ்புக் பக்கம் துவக்கப்படுவதும், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதும் இயல்பாக இருக்கிறது. காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகளுக்கான எச்சரிக்கை நோட்டீஸ்களும் கூட பேஸ்புக் வாயிலாக வழங்க்கப்பட்டுள்ளன.

இவை ஒரு பக்கம் இருந்தாலும், திருடனின் லைக் கோரிக்கையை காவல்துறை ஏற்றுக்கொண்டிருப்பது சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. பேஸ்புக் லைக் பழக்கம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், குற்றவாளிகள் கைகளில் இது எத்தனை வில்லங்கமான விஷயமாகி இருக்கிறது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

பேஸ்புக் லைக் மோகத்தின் இன்னொரு விபரீத உச்சம் என இந்த சம்பவத்தை கருதலாம்.

நிற்க, இதனிடையே அமெரிக்க திருடனின் கோரிக்கைக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. லைக்களின் எண்ணிக்கை 20,000 த்தை தாண்டியிருக்கிறது. ஆனால், திருடன் சிம்ஸ் சொன்னபடி சரண் அடைந்ததாக இன்னமும் செய்தி தான் கிடைக்கவில்லை.

டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்

கேள்வி பதில்கள் என்று வரும் போது இணையத்தில் குவோராவை அடித்துக்கொள்ள முடியாது. அதனால் தான் குவோரா கேள்வி பதில்களுக்கான இணைய சமூகம் என வர்ணிக்கப்படுகிறது. ஆனால், குவோராவைத்தவிரவும் பல தளங்களில் பயனுள்ள கேள்வி பதில்களை பார்க்கலாம். இவ்வளவு ஏன், குறும்பதிவு சேவை தளமான, டிவிட்டரிலும் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்க்கப்படுகின்றன.

இப்படி டிவிட்டரில் கேட்கப்படும் கவனத்திற்குரிய கேள்விகளை எல்லாம் தொகுத்து தருவதற்கு என்றே, ’ரியல் குட் கொஸ்டின்ஸ்” (https://reallygoodquestions.co/) எனும் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் டிவிட்டரில் முக்கிய நபர்களும், வல்லுனர்களும் கேட்கும் கேள்விகளை தேடி எடுத்து பட்டியலிடுகிறது.

டிவிட்டர் பிரபலங்கள் பலர் கேட்டுள்ள கேள்விகளை முகப்பு பக்கத்தில் பார்க்க முடிகிறது. கேள்விகளுக்கான பதில்கள் தொடர்புடைய விவாத சரட்டையும் பார்க்க முடிகிறது.

டிவிட்டரில் எத்தனைவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்ற வியப்பும் ஏற்படுகிறது. சுவாரஸ்யமான கேள்விகளை கண்டறிய இந்த தளம் உதவியாக இருக்கும். பயனாளிகள் விரும்பினால் தாங்கள் எதிர்கொள்ளும் டிவிட்டர் கேள்விகளையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.

டிக்டோக்கின் புதிய செயலி

டிக்டோக் அலையில் இருந்தே இன்னமும் மீண்டெழ முடியவில்லை அதற்குள் டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் புதியதொரு செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகவும் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப்பாக கருதப்படும் பைட்டான்ஸ் நிறுவனம், பெயிலியாவோ எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்ய இருக்கிறது. சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தால், பிளிப்சேட் என பொருள்வரும் இந்த செயலி, தற்போது இணையத்தில் பிரபலமாக இருக்கும் மேசேஜிங் வகை செயலிகளை சேர்ந்ததாக இருக்கிறது.

எனினும், இந்த புதிய செயலி மேசேஜிங் வாயிலாக உரையாடல் மேற்கொள்வதில் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்க இருக்கிறது. இந்த செயதியில் உறுப்பினர்கள், பல்வேறு பிரிவுகளின் கீழ் தங்கள் விருப்பம் அல்லவது ஆர்வம் சார்ந்து குழு உரையாடலை மேற்கொள்ளலாம்.

முதல் கட்டமாக சீனாவில் இது செயலி அறிமுகமாகிறது. அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடயே டிக்டோக் சார்பாக, ஸ்பாடிபை போன்ற இசை ஸ்டீரிமிங் சேவையும் அறிமுகம் ஆக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நன்றி : மின்னம்பலம் தளத்தில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.