எழுத்தாளர் சுஜாதா உண்மையில் ஒரு ஜீனியசா?

4-Figure3-1எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க கூடியவை. ஆனால் பல நேரங்களில் சுஜாதாவின் அறிவு கீற்றாக வெளிப்படுவதை நினைத்து வியப்பதா அல்லது மேலதிக தகவல்களை சொல்லாமல் விட்டுச்செல்லும் தன்மையை நினைத்து நொந்துக்கொள்வதா? என்று தடுமாறத்தோன்றும்.

இண்டோநெட் பற்றி சுஜாதாவின் ஒற்றை குறிப்பும் இத்தகையை நிலை தான் உண்டாக்குகிறது.

இண்டோநெட் எனும் வார்த்தையை முதல் முறையாக கேள்விபடுவதாக இருந்தால், சுஜாதாவுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். மனிதர் 1992 ல் இண்டோநெட் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அநேகமாக தமிழில் இண்டோநெட் பற்றி குறிப்பிட்ட ஒரே நபராக அல்லது ஒரு சிலரில் ஒருவராக சுஜாதா இருக்க வேண்டும்.

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் எனும் சுஜாதாவின் அதிகம் கவனிக்கப்படாத புத்தகத்தில் தான் இந்த குறிப்பு வருகிறது. இதை படிக்கும், எத்தனை பேர் இண்டோநெட் குறிப்பை கவனிப்பார்கள் அல்லது அது பற்றி மேலும் அறிய விரும்புவார்கள் எனத்தெரியவில்லை.

நானே கூட, இந்திய இணைய வரலாற்றை தேடிக்கொண்டிருக்காவிட்டால், இண்டோநெட்டை அலட்சியம் செய்து கடந்திருப்பேன் என்றே தோன்றுகிறது. ஆனால், இணையத்தை உருவாக்கிய இணையதளங்கள் தொடர்பான வலை 3.0 தொடருக்காக, இணைய வரலாறு தொடர்பான தகவல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இதில் உலக அளவிலான தகவல்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் இந்தியா தொடர்பான தகவல்கள் தான் நொண்டியடிக்கின்றன.

இந்தியாவுக்கு இணையம் வந்தது எப்படி என்பது தொடர்பாக இணையத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கட்டுரைகளே கிடைக்கின்றன. அவை அனைத்துமே, இரண்டும் மைல்கற்களை குறிப்பிடுவதோடு நின்று விடுகின்றன.

அவற்றில் ஒன்று, 1995 ஆகஸ்ட் மாதம் வி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலம் இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையம் அறிமுகமானது என்பது. அதற்கு முன்னர், 1986 ல் உருவான, எர்நெட் எனும் கல்வி நிறுவனங்களுக்கான வலைப்பின்னல் தான் , இந்தியாவில் இணையத்திற்கான அடிப்படை என்பதாக இரண்டாவது மைல்கல் அமைகிறது.

நல்லது, எர்நெட் தான் இந்தியாவில் இணையத்திற்கு அடித்தளம் அமைத்தது. ஆனால் அதற்கு முன்? இந்த கேள்விக்கு அதிக பதில்கள் இல்லை. இந்த கேள்வியே அவசியம் இல்லை என்பது போல, இணையத்தில் தகவல்கள் இல்லாத நிலை.

தகவல்கள் இல்லாமல் இல்லை. அவை புத்தகங்களிலும், ஆய்வுக்கட்டுரைகளிலும் மறைந்துகிடக்கலாம். அதே நேரத்தில் இன்னமும் பதிவு செய்யப்படாமலும் இருக்கலாம்.

நிற்க, இந்த இடத்தில் தான் வாத்தியார் சுஜாதா வந்து நிற்கிறார். மேல் சொன்ன ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் புத்தகத்தில், ஓரிடத்தில் வைடு ஏரியா நெட்வொர்க் பற்றி விளக்குகிறார். நகரங்களுக்கு இடையே இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் என்பது போல எழுதிவிட்டு, இப்போது இந்தியாவில் இண்டோநெட் இதை வழங்கி கொண்டிருக்கிறது என குறிப்பிடுகிறார்.

இதை படித்தவுடன் பொறி தட்டியது. உடனே இண்டோநெட் தொடர்பாக தகவல்களை தேடிப்பார்த்தால் அதற்கும் திண்டாட வேண்டியிருந்தது. ஆனால் பிடிஎப் கோப்பு வடிவில் கிடைத்த ஒரு சில கட்டுரைகள் வாயிலாக இண்டோநெட் அருமையை உணர முடிகிறது.

இண்டோநெட் என்பது இந்தியாவில் 1970 களில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் வலைப்பின்னல். சி,.எம்.எஸ் எனும் அரசு நிறுவனம் இதை அமைத்தது. இதன் வாயிலாக தான் இந்திய நகரங்களுக்கு இடையே கம்ப்யூட்டர்கள் மூலம் பரிவர்த்தனை செய்ய முடிந்தது. பின் ஒரு கட்டத்தில் இது இணையத்தின் மூல வடிவமான அர்பாநெட்டுடன் இணைக்கப்பட்டது.

ஆக, இந்தியாவில் எர்நெட்டுக்கு முன் என்ன எனும் கேள்விக்கான பதில்களில் ஒன்று, இண்டோநெட் என்பதாகும். இந்த கம்ப்யூட்டர் வலைப்பின்னலே இந்தியாவில், இணையத்திற்கான மூல விதையை விதைத்தது.

இண்டோநெட் பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும் போல்.

இப்போது சொல்லுங்கள், சுஜாதா, 1992 ல் எழுதிய ஒரு புத்தகத்தில் இண்டோநெட் பற்றி போகிற போக்கில் கோடிட்டு காட்டுகிறார். மனிதர் ஜீனியஸ் இல்லாமல் என்ன?

ஆனால் ஒன்று, இண்டோநெட் பற்றி நீங்களே தேடி தெரிந்து கொள்ளுங்கள் என்பது போல, அது பற்றி மேதிக தகவல்களை தராமல் விட்டுவிட்டார். இந்தியாவில் இணையத்தின் முன்னோடி என்றும் குறிப்பிடவில்லை. இது சற்று ஏமாற்றம் தான். ஆனால், குறிப்பிடும் ஒவ்வொரு விஷயத்திற்கும் கோணார் நோட்ஸ் போட்டு எழுதுவது சாத்தியமில்லை. அதை செய்வது நம் பொறுப்பு.

சுஜாதாவின் இந்த புத்தகத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விடுபடலும் இருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை வலைவீசி தொகுத்திருப்பவர், வைய விரிவு வலை பற்றியோ, பிரவுசர் பற்றியோ குறிப்பிடவில்லை. 1992 ல் வலை பொதுமக்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் சுஜாதா நிச்சயம் அறிந்திருப்பார் அல்லவா!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.