ஹாலிவுட் சினிமாவை கொரியா கைப்பற்றியது எப்படி?

முதலில், உங்கள் தகவலுக்காக ஒரு விஷயம் ( எப்.ஒய்.ஐ) – இந்த பதிவு ஹாலிவுட் சினிமாவை பற்றியதோ அல்லது நம்மவர்கள் இப்போது அதிகம் கொண்டாடும் கொரிய சினிமா பற்றியதோ அல்ல: தென்கொரியாவின் பாரசைட் திரைப்படம், முதல் வெளிநாட்டு மொழி படமாக ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்திருக்கும் பின்னணியில், இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும், தென் கொரிய சினிமாவின் தனித்தன்மைகளை பேசுவதாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படவே செய்யும். இருப்பினும், இந்த பதிவின் நோக்கம் கொரிய சினிமாவை அலசி ஆராய்வது அல்ல. மாறாக, இணைய யுகத்தில், ஒரு தேசமாக தென் கொரியா நிகழ்த்தி வரும் சர்வதேச பாய்ச்சல் தொடர்பாகவே இந்த பதிவு அமைகிறது.

பாரசைட் திரைப்படம் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வென்றிருப்பது, ஆஸ்கரில் பல முதல்களாக அமைந்துள்ளது. ஆஸ்கர் விருதுகளை அமெரிக்கத்தனத்திற்கு விழுந்துள்ள முதல் அடியாகவும் இதை கருதலாம். ஹாலிவுட்டில் எடுக்கப்படாத ஒரு படம், சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, ஆஸ்கர் விருதை மேலும் பரவலாக்குமா எனும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.

இந்த விருதே அடிப்படையில் ஹாலிவுட்டிற்கானது எனும் போது, இது போன்ற கேள்விகளே அபத்தமானவை எனப்படுகிறது. ஆனால், துவக்கத்தில் சொன்னது போல, ஹாலிவுட் சினிமாவோ, கொரிய சினிமாவோ இங்கு முக்கியம் இல்லை. நாம் பேசுவதும், கொண்டாடுவதும் சர்வதேச அளவிலான விஷயமாக இருக்கிறது என்றால், கொரியா பாரசைட் படத்திற்கு முன்பாகவே, இத்தகைய கவனத்தை பல முறை பெற்றிருக்கிறது என்பது தான்.

இதற்கு முதலில் நினைவுக்கு வருவது, கொரிய பாப் பாடகர் சை (Psy ) தான். இவர் வேறு யாருமல்ல, கங்னம் ஸ்டைல் பாடல் மூலம் யூடியூப்பில் உலக அளவில் வைரலாகி சர்வதேச நட்சத்திரமானவர். கொரியாவில் நன்கறியப்பட்ட பாட பாடகரான, சை, யூடியூப்பில் பதிவேற்றிய பாடல் ஆல்பம் மூலம், சர்வதேச அளவில் பிரபலமானார். இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட காலத்தில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட, பேசப்பட்ட வீடியோவாக இது அமைந்தது. யூடியூப்பில் நூறு கோடிக்கு மேல் பார்வைகளை பெற்ற முதல் வீடியோவாகவும் இது அமைந்தது.

கொரிய பாடகரின் துள்ளலான பாடலும், அதற்கு பொருத்தமான அவரது பாணியிலான நடனமும், கங்னம் ஸ்டைலை உலக அளவில் பிரபலமாக்கி அவரை கொண்டாட வைத்தது. ஜஸ்டின் பைபர்களும், டெய்லர் ஸ்ப்விட்களும், மடோனாக்களும், ஜெனிபர் லோபசும் கோலோச்சிக்கொண்டிருந்த இணைய உலகை, இந்த கொரிய நட்சத்திரம் யூடியூப் மேடை மூலம், தன்னை நோக்கி திரும்ப வைத்தார். இது மிகப்பெரிய சாதனை தான்.

தென் கொரியாவின் சர்வதேச அளவிலான தாக்கம் போது, நினைவுக்கு வரும் அடுத்த விஷயம், ’ஓ மை நியூஸ்’ இணையதளம். இன்று இணைய உலகில் பயனர் உள்ளடக்கம் பற்றி பெரிதாக பேசப்படுகிறது. மேலும், சிட்டிசன் ஜர்னலிசம் எனப்படும் குடிமக்கள் இதழியலும் முக்கிய போக்காக உருவெடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் இந்த போக்கை இன்னும் வலுவாக்கியிருக்கிறது. இதழியலில் துறையில் தொழில்முறையாளர்களின் கோட்டை என்று சொல்லப்படுவதை இவை தகர்த்துள்ளன.

இந்த மக்கள் இதழியல் போக்கின் துவக்கப்புள்ளிகளில் ஒன்றாக ஓ மை நியூஸ் அமைகிறது. 2000 மாவது ஆண்டு துவக்கப்பட்ட இந்த இணையதளம், பயனாளிகளை வெறும் வாசகர்களாக மட்டும் கருதாமல், அவர்களை பங்களிக்கும் செய்தியாளர்களாக கொண்டு செயல்பட்டது. எல்லோரும் இந்நாட்டு நிருபரே என்று சொல்லக்கூடிய வகையில், சாமானிய மக்களை செய்தி சேகரிப்பவர்களாக செயல்பட வைத்து பெரும் வெற்றி பெற்ற ஓ மை நியூஸ் இணையதளம், உலக அளவில் சிட்டிசன் ஜர்னலிசத்திற்கான முன்னோடியாக கருதப்படுகிறது.

இந்த வரிசையில் தான் இப்போது பார்சைட் திரைப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது.

அது மட்டும் அல்ல, இணைய பயன்பாடு மற்றும் கலாச்சாரம் என்று வரும் போது தென் கொரியா முன்னோடி தேசமாகவும் இருந்து வருகிறது. வீடியோ கேம் பழக்கம் துவங்கி செல்போன் பயன்பாடு வரை தென்கொரியா, இணைய உலகின் முக்கிய போக்குகளுக்கான மையங்களில் ஒன்றாக இருக்கிறது. உலகில் இணைய பயன்பாடு அதிகம் கொண்ட தேசங்களில் தென் கொரியா முன்னிலையில் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேல், ஆசியாவிற்கு இணையம் தென்கொரியா வழியே தான் வந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அர்பாநெட் வலைப்பின்னலாக துவங்கிய இணையம் அமெரிக்காவுக்கு வெளியே, ஐரோப்பிய நாடுகளில் விரிவடைந்த கால கட்டத்தில், ஆசியாவில் இருந்து முதலில் இணைந்த நாடாக தென்கொரியா அமைகிறது. கொரியாவின் கில்னம் சான் ( Kilnam Chon ) தான் அர்பாநெட்டின் முதன், முனையத்தை தென்கொரியாவில் அமைத்தார். – https://blog.apnic.net/2019/02/20/krseries-the-man-who-introduced-the-internet-to-asia/

ஆக, இணைய உலகில் கொரியா ஏற்கனவே தனக்கான தாக்கத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆக, பாரசைட் அந்த அளவு நல்ல படமா என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால், கொரியா சர்வதேச பாய்ச்சலுக்கு பலவிதங்களில் தன்னை தயார் படுத்தி வைத்திருக்கிறது என்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *