கொரோனா கவலை போக்க பதில் அளிக்கும் ’சாட்பாட்’

giphyகொரோனா வைரஸ் தொடர்பாக எழும் கேள்விகள், சந்தேகங்களினால் ஏற்படக்கூடிய கவலையை போக்கும் வகையில், பதில் அளிக்க கூடிய அரட்டை மென்பொருள் ( சாட்பாட்), அறிமுகமாகியிருக்கிறது.

கொரோனா கோ.ச் (https://coronacoa.ch/) எனும் முகவரியில் உருவாக்கப்பட்டுள்ள அந்த மென்பொருளுடன் உரையாடி கொரோனா தொடர்பான சந்தேகங்களையும், அச்சங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பது, உங்கள் கொரோனா அச்சத்தை போக்குவது மற்றும் சிறந்த தகவல்களை அளித்து பீதியை குறைப்பது ஆகியவை என் நோக்கம் என்று தெரிவித்து, கேள்விகளை கேட்க ஊக்குவிக்கிறது இந்த மென்பொருள்.

அதே நேரத்தில், தான் ஒரு டாக்டர் அல்ல, உங்களின் நண்பர் மட்டுமே என்று குறிப்பிட்டு, கேட்கும் கேள்விகளுக்கு நம்பகமான இடங்களில் இருந்து பதில்களை திரட்டி தருவதாகவும் தெரிவிக்கிறது.

அதன்பிறகு வரிசையாக மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க வேண்டியது தான்.

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பதற்கு முன், நம் மனதில் உள்ள சந்தேகத்தின் தன்மையை அறிவதற்கான குறிப்புகளை மென்பொருள் வழங்குகிறது. அவற்றை தேர்வு செய்வதற்கு ஏற்ப மேற்கொண்டு கேள்விகள் கேட்டு வழி நடத்துகிறது.

உதாரணமாக துவக்கத்தில், கொரோனா வைரஸ் என்றால் என்ன எனும் அடிப்படையான கேள்விக்கு விளக்கம் கேட்கலாம் அல்லது, நம் மனதில் உள்ள சந்தேகத்தின் தன்மையை குறிப்பிட்டு அடுத்த கேள்விக்கு செல்லலாம்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப எளிதான பதில்களை விளக்கமாக அளித்து வழிகாட்டுகிறது.

கொரோனா தொடர்பான செய்திகளையும், அதைவிட அதிகமாக வெளியாகும் பொய்ச்செய்திகளையும் படித்து மிரண்டு போயிருக்கும் நபர்களுக்கு, நிச்சயம் இந்த அரட்டை மென்பொருள் அளிக்கும் பதில்கள் ஆறுதலாக அமையும். அதைவிட முக்கியமாக கவலையை போக்க உதவும்.

நிற்க, இதே போலவே நம்மூரில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், கொரோனா பரிசோதனை தேவையா என வழிகாட்ட ஒரு அரட்டை மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த மென்பொருளுடன் உரையாடலாம்.  https://covid.apollo247.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *