ஜூம் வீடியோ சேவை உருவான கதை

105859950-1555599255965gettyimages-1137871677ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை வரை எல்லாவற்றுக்கும் கைகொடுக்கும் செயலியாக ஜும் இருக்கிறது. இதனிடையே ஜூம் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும், கேள்விகளும் எழுந்தாலும், இப்படி ஒரு அற்புதமான வீடியோ சேவை இத்தனை நாள் எங்கிருந்தது என்பதே ஜூமுக்கு அறிமுகம் ஆகிறவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக ஜூம் விளங்கும் என்பதற்கான சமிக்ஞ்சைகளை இணைய உலகில் பார்க்க முடிகிறது.

எல்லாம் சரி, ஜூம் சேவை உருவானது எப்படி என்பது உங்களுக்குத்தெரியுமா? இதை தெரிந்து கொள்ள எரிக் யுவான் (Eric S. Yuan ) கதையை தெரிந்து கொள்ள வேண்டும். யுவான் தான் ஜூமின் நிறுவனர். இவரது கனவில் உருவான ஜூம் தான், வீடியோ சந்திப்பு சேவைகளில் அதிகம் நாடப்படும் சேவையாக உருவாகியிருக்கிறது.

சீன அமெரிக்கரான, யுவான் ஜூம் சேவையை உருவாக்கிய பாதை சுவாரஸ்யமான கிளைக்கதைகள் கொண்டதாக இருக்கிறது. இந்த கதைகளை திரும்பி பார்ப்பதன் மூலம், யுவானின் வெற்றிக்கதையை அறிமுகம் செய்து கொள்வதோடு, ஜூம் சேவை வெற்றிக்கான காரணங்களையும் புரிந்து கொள்ளலாம்.

யுவானை நவீன கால கஜனி முகமது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், அமெரிக்காவில் தான் தனது எதிர்காலம் என தீர்மானித்து, அந்நாட்டில் குடியேற விசா பெற விரும்பிய போது, யுவானின் விசா விண்ணப்பம் முதலில் நிராககரிக்கப்பட்டது. ஆனால் யுவான் மனம் தளர்ந்துவிடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து, ஒன்பதாவது முயற்சியில் விசா பெற்றார்.

இந்த விசா கதைக்கு பின் மற்றொரு கிளைக்கதையும் இருக்கிறது. யுவானுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் எனும் கனவு உண்டான கதை அது.

1994 ம் ஆண்டு, யுவான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, ஜப்பானில் சில மாதங்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் இணையம் பற்றி பேசுவதை கேட்டார் யுவான். அந்த கால கட்டத்தில் இணையம் பெரிய அளவில் அறிமுகம் ஆகியிருக்கவில்லை. ஆனால் இணையத்தின் எதிர்கால ஆற்றல் பற்றி பில்கேட்ஸ் விவரித்தது யுவானை மிகவும் பாதித்தது.

அந்த கணத்தில் தன்னுடைய எதிர்காலமும் இணையம் தான் என தீர்மானித்தார். அந்த தீர்மானத்துடன் அமெரிக்கா செல்வது என்றும் முடிவு செய்தார். அடுத்த ஆண்டு முதல் அதற்கான முயற்சியை துவக்கியவர் 1997 ல் அமெரிக்காவில் வந்திறங்கினார்.

யுவானுக்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருக்கவில்லை. ஆனால் கோடிங் செய்வதில் சூரப்புலியாக இருந்தார். இதன் பயனாக, ’வெப்எக்ஸ்’ எனும் வீடியோ சந்திப்பு சேவை நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை கிடைத்தது.

இந்த இடத்தில், இன்னொரு ஆரம்ப கால கிளைக்கதையும் தெரிந்து கொள்ளலாம். கல்லூரி காலத்திலேயே யுவான், காதல் வயப்பட்டார். அப்போது தனது காதலியை பார்க்க பத்து மணி நேரம் ரெயிலில் பயணம் செய்திருக்கிறார். இந்த நீண்ட பயணங்களின் போது, காதலியை பார்த்து பேச வேறு வழி எதுவும் இல்லையா என அவர் யோசித்திருக்கிறார்.

இந்த காட்சியை அப்படியே நினைவில் வைத்துக்கொண்டால், பின்னாளில் அவர் ஜூம் வீடியோ சந்திப்பு சேவையை பெருங்கனவுடன் துவங்கிய வேட்கையை புரிந்து கொள்ளலாம்.

வெப் எக்ஸ் நிறுவனம் பின்னர் சிஸ்கோ நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. சிஸ்கோ நிர்வாகத்தின் கீழ் யுவான் மளமளவென மேலே வந்து, பொறியாளர்கள் பிரிவின் துணைத்தலைவரானார். உயர் பதவி, ஆறு இலக்க சம்பளம் எல்லாம் இருந்தும் அவருக்கு அந்த வேலை மீது அதிருப்தி இருந்தது.

ஒவ்வொரு நாள் காலை கண் விழிக்கும் போதும், மகிழ்ச்சி இல்லாமல் உணர்வேன். வேலைக்கு கூட போக விரும்பாமல் இருந்தேன் என்று அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இந்த அதிருப்திக்கு காரணம் இல்லாமல் இல்லை. சிஸ்கோ நிர்வாகத்தின் கீழ், வீடியோ சந்திப்பு சேவையை கையாண்டாலும், அதன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி கொண்டிருப்பதை அவர் கவனித்தார். ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளர் கூட இருக்கவில்லை என்று அவர் மனம் வெதும்பி கூறியிருக்கிறார். சிஸ்கோவின் வீடியோ சந்திப்பு சேவை சிக்கலானதாக இருப்பதும், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப அது மாறாததும் தான் இதற்கான காரணங்கள் என யுவான் உணர்ந்து கொண்டார்.

இந்த சேவை எளிமையாக இல்லாததையும் உணர்ந்தார். ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்கள் வீடியோ சந்திப்பு வசதியை பயன்படுத்த முயற்சிக்கும் போது, முதலில் அவர்கள் வைத்திருக்கும் சாதனம் என்ன என்பதை அமைப்பு உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் தாமதம் உண்டானது. மேலும் நிறைய வாடிக்கையாளர்கள் காத்திருந்தால், சேவையின் தரம் பாதிக்கப்பட்டது.

960x0அதே நேரத்தில் யுவான், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்கள் எழுச்சியையும் கவனித்தார். வீடியோ சேவைகள் இந்த சாதனங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அவருக்குள் ஒரு பட்சி சொல்லியது. ஆறு இலக்க சம்பள வேலையை விட்டு விட்டு, சொந்தமாக செயல்பட்டால் மட்டுமே தான் விரும்பும் வீடியோ சந்திப்பு சேவையை துவக்க முடியும் என அவர் நினைத்தார். அதன் படி 2010 ல் வேலையை விட்டு விலகினார்.

சிஸ்கோ வேலையை விடுவது அத்தனை எளிதான முடிவாக இல்லை. யுவானின் மனைவி, கைநிறைய சம்பளம் தரும் வேலையை விடுவதை ஏற்கவில்லை. இப்போது இதை செய்து பார்க்கவில்லை எனில் பின்னர் வருத்தப்படுவேன் எனக்கூறி மனைவியை சம்மதிக்க வைத்தார். அதன் பிறகு தெரிந்த நண்பர்களின் ஆதரவுடன் நிதி திரட்டி வேலையை துவக்கினார். டாங்கோ எனும் பெயரில், வீடியோ தொடர்புக்கான மேம்பட்ட செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஆனால் சில மாதங்களில் எல்லாம், வீடியோ சந்திப்பு வர்த்தகத்தை குறி வைக்க தீர்மானித்தார். முதலீட்டாளர்கள் பலர் யுவான் மீதான நம்பிக்கையில் நிதி அளித்திருந்தாலும், வீடியோ சந்திப்பு சேவையில் புதிய நிறுவனம் வெற்றி பெற முடியுமா என சந்தேகித்தனர். ஏற்கனவே, மைக்ரோசாப்டின் ஸ்கைப், கூகுள் ஹாங்கவுட், சிஸ்கோவின் வெப் எக்ஸ் சேவை ஆகியவற்றோடு மேலும் பல ஸ்டார்ட் அப்களும் இந்த துறையில் போட்டியில் இருந்தன. இவற்றுக்கு மத்தியில் புதிய சேவை வெற்றி பெறுவது என்றால், அது மிகச்சிறந்ததாக இருந்தால் மட்டும் சாத்தியம். இத்தகைய ஒரு சேவையை உருவாக்க யுவானும், அவரது குழுவினரும் தீவிரமாக முயற்சித்தனர்.

இரண்டு ஆண்டு முயற்சிக்கு பிறகு, 2012 ல் ஜூம் வீடியோ சந்திப்பு சேவை அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த வீடியோ சந்திப்பு சேவைகளில் இருந்து, ஜூம் பல அம்சங்களில் வேறுபட்டிருந்தது. அது மிகவும் லேசான செயலியாக இருந்தது. மேலும் எந்த வகை சாதனத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப மாறிக்கொண்டது. பிரவுசர்களில் அதை பயன்படுத்துவதிலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை. இணைய இணைப்பு தொங்கினாலும் வீடியோ காட்சி தொய்வில்லாமல் இருந்தது. மேலும் மொபைல் போன்களுக்கான திரை பகிர்வு வசதியும் இருந்தது. இந்த அம்சங்களே ஜூமின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

ஜூம் துவக்கத்தில் வர்த்தக வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு செயல்பட்டது. சந்தையில் இருந்த பெரும்பாலான வீடியோ சந்திப்பு சேவைகளை விட ஜூம், எளிமையாக இருந்தது வாடிக்கையாளர்களை கவர்ந்தது. வர்த்தக நிறுவனங்கள் தவிர மருத்துவமனை நிர்வாகம் போன்றவையும் ஜூமை பயன்படுத்தின. டாக்டர் ஆலோசனை, நோயாளிகள் சந்திப்பு போன்றவற்றை வீடியோ வழியே எளிதாக மேற்கொள்ள வழி செய்தது ஜூமை பிரபலமாக்கியது.

இங்கே இன்னொரு கிளைக்கதையை பார்க்கலாம். பின்னாளில் ஜூம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவராக பொறுப்பேற்ற ஜிம் மெர்சர் என்பவர் ஜூம் அறிமுகமான போது போட்டி நிறுவனம் ஒன்றில் இருந்தார். ஜூம் பற்றி பலரும் பரபரப்பாக பேசவே, அந்த சேவையில் அப்படி என்ன இருக்கிறது என பார்ப்பதற்காக, ஜூமை திறந்து உள்ளே நுழைந்தவர், ஒரே நேரத்தில் அதில் 25 பங்கேற்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தது பார்த்து, இதெல்லாம் எப்படி சாத்தியம் என திகைத்துப்போய் விட்டார். ஜூமின் சேவை அப்படி இருந்தது.

ஜூமின் சேவை தரமாக இருந்ததோடு, அதில் பின்னணி காட்சிகளை அமைத்துக்கொள்ளும் வசதி போன்றவை அந்த சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கியது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோரோடு பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து ஜூம் பெரிதாக வளர்ந்தது. கட்டண சேவை தான் என்றாலும், அதற்கேற்ற பயன்பாட்டு அம்சங்களை ஜூம் அளித்து அசத்தியது.

சில ஆண்டுகளில் ஜூம் பங்குச்சந்தையில் நுழைந்து கலக்கியது. அதன் முதல் பங்கு வெளியீடு நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமான நிறுவனமாக அறியப்பட்ட நிலையில் தான், கொரோனா தாக்கம், உலகமெங்கும் லாக்டவுனை கொண்டு வந்த போது, சராசரி வாடிக்கையாளர்களும் வீடியோ சந்திப்புக்கான சேவையை தேடத்துவங்கினர். ஜூமின் எளிமையும், பல்வேறு பயன்பாட்டு அம்சங்களையும் அவர்களை கவர்ந்திழுத்து இன்னும் பெரிய வெற்றியை தேடித்தந்திருக்கிறது.

40 நிமிடங்கள் வரை இலவசமாக பயன்படுத்தலாம் எனும் ஜூமின் கட்டண சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாக உள்ளது. ஜூம் சேவை பிரபலமான வேகத்திலேயே, அதன் பாதுகாப்பு குறைபாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானாயின என்றாலும், ஜூம் தன் பங்கிற்கு இவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு, குறைகளை களையத்துவங்கியது தான் பாராட்டுக்குறியதாக இருக்கிறது.

ஜூமின் வெற்றிக்கதையை இன்னொரு கிளைக்கதையோடு முடித்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். துவக்கத்தில், ஜூமின் வர்த்தக வாடிக்கையாளர்கள் சேவையை ரத்து செய்தால், உடனே யுவான் அவர்களுக்கு எல்லாம் மெயில் அனுப்பி என்ன பிரச்சனை என விசாரிப்பாராம். இந்த மெயிலை பார்த்ததும் பல வாடிக்கையாளர்கள், இந்த மெயிலை தானியங்கி மெயில் என நினைத்துக்கொள்வதும் நடந்திருக்கிறது. குறிப்பிட்ட நிறுவன வாடிக்கையாளர் ஒருவர், இப்படி தானியங்கி மெயிலை அனுப்பி வெறுப்பேற்ற வேண்டாம் என கூறிய போது, யுவான் அவரிடம், இது தானியங்கி மெயில் அல்ல, அதை அனுப்பியது தானே என்று விளக்கியிருக்கிறார். வாடிக்கையாளர்கள் மீது யுவான் வைத்திருந்த ஈடுபாடும் ஜூம் வெற்றிக்கை ஒரு காரணம்.

இணைப்புகள்: https://www.forbes.com/sites/alexkonrad/2019/04/19/zoom-zoom-zoom-the-exclusive-inside-story-of-the-new-billionaire-behind-techs-hottest-ipo/#24117f834af1

https://www.cnbc.com/2019/08/21/zoom-founder-left-job-because-he-wasnt-happy-became-billionaire.html

https://medium.com/thrive-global/the-inspiring-backstory-of-eric-s-yuan-founder-and-ceo-of-zoom-98b7fab8cacc

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *