வலை 3.0 – ஊதிய உரையாடலை ஜனநாயகமாக்கிய இணையதளம்

saநாளிதழ்களை நாடுவதை விட, இணையம் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிடலாம் என்பது, மான்ஸ்டர்.காம் துவங்கப்பட்ட காலத்தில் புதுமையாகவே இருந்தது என்றாலும், அடுத்து வந்த ஆண்டுகளில் இணையம் வேலை தேடுவதை எளிதாக்கியது. இந்த பிரிவில் மேலும் புதிய புதிய இணையதளங்கள் உருவாகி கொண்டிருந்தன.

ஆனால், வேலை வாய்ப்பு சார்ந்த தளங்களின் வரிசையில் சாலரி.காம் (Salary.com) போன்றதொரு தளம் கிளைவிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 1999 ல் அறிமுகமான இந்த தளம், வேலைவாய்ப்பு சந்தையில் தரவுகளை இணையவாசிகள் கையில் கொண்டு வந்தது.

தரவுகள் என்றால் ஊதியம் தொடர்பான தகவல்கள். இவற்றை சாலரி.காம், வேலை தேடுபவர்களின் விரல் நுனியில் அளித்து, ஊதியம் தொடர்பான உரையாடலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது.

வேலை கிடைப்பது ஒரு சவால் என்றால், திறமைக்கேற்ற ஊதியம் கைவரப்பெறுவது என்பது அதைவிட பெரிய சவால். வேலைக்கான தகுதி, திறன்களை வளர்த்துக்கொள்வது கூட எளிதானது தான். ஆனால், தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்கச்செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு சந்தையை பொருத்தவரை, எந்த பணிக்கு, யாருக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறது என்பது கிடைப்பதற்கரிய தகவலாகவே இருந்தது. புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு தான் இந்த நிலை என்றில்லை, அனுபவசாலிகளும் கூட, ஏற்கனவே பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட மேம்பட்ட வாய்ப்பை நாடும் போது, சரியான ஊதியம் தொடர்பான தகவல்கள் இல்லாமல் திண்டாடும் நிலை இருந்தது.

இன்னும் கூட, இந்த நிலை தொடர்கிறது என்றாலும், சாலரி.காம் இதை ஓரளவுக்கேனும் மாற்றிக்காட்டியது. நிறுவன பணிகளுக்கான ஊதியம் தொடர்பான தரவுகளை வேலை தேடுபவர்கள் தெரிந்து கொள்ள வழி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த தளம் துவங்கப்பட்டது.

இந்த தளம் மூலம், குறிப்பிட்ட பணிகளுக்கான சராசரி வருமானம் என்ன என்பதை தெரிந்து கொண்டு செயல்படுவது சாத்தியமானது. இது ஊதிய பேச்சு வார்த்தையில் பெருமளவு கைகொடுத்தது. வழக்கமாக, ஒரு பணிக்கான நேர்காணலை எதிர்கொள்ளும் போது, எதிர்பார்க்கப்படும் ஊதியம் பற்றிய பேச்சு வரும் போது, வேலைக்கு வந்திருப்பவருக்கு, தயக்கமும் தடுமாற்றமும் இருக்கும். எதிர்பார்க்கும் ஊதியம் அளவுக்கு அதிகமாக இருந்து வேலை கிடைக்காமல் போய்விட்டால் என்ன எனும் கவலையும் இருக்கும். அதே நேரத்தில், ஒப்புக்கொள்ளும் ஊதியம் சராசரியை விட குறைவாக இருந்துவிட்டால் என்ன எனும் அச்சமும் இருக்கும்.

இந்த குழப்பத்தை போக்கி கொள்ள அதிக வழி கிடையாது. வாய்ப்பிருந்தால், நெருக்கமானவர்களிடம் நிறுவன ஊதியம் பற்றி விசாரித்துப்பார்க்கலாம். ஆனால் இந்த தகவல் சரியானது என்றோ போதுமானது என்றோ நிச்சயமில்லை.

இந்த பின்னணியில் தான், ஊதியம் தொடர்பான தரவுகளை எல்லாம் எளிதாக அணுகச்செய்யும் வகையில் சாலரி.காம் அறிமுகமானது. ஊழியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்கள் துறையில் தங்களது பணிக்கான ஊதிய அளவுகோளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முடிந்தது. சம்பளம், மட்டும் அல்ல இதர படிகள் உள்ளிட்ட சலுகைகள் தொடர்பான தகவல்களையும் பெற முடிந்தது.

அதே போல நிறுவனங்கள் தரப்பிலும், குறிப்பிட்ட பிரிவில், குறிப்பிட்ட திறன்கள் கொண்ட ஊழியர்களுக்கான சம்பள அளவுகோளை தெரிந்து கொள்ளவும் இந்த தளம் வழி செய்தது. இது, ஊதிய சந்தையில் பேச்சுவார்த்தையை தகவல் சார்ந்ததாக ஆக்கியது. இதனால் ஜனநாயக தன்மையும் சாத்தியமானது.

இந்த தளத்தின் நிறுவனர் கென் பிளன்கட் (Kent Plunkett) தனிப்பட்ட அனுபவத்தில் இது போன்ற சேவைக்கான தேவையை உணர்ந்ததன் விளைவே சாலரி.காம் உதயமாக காரணமானது.

அப்போது, பிளன்கட், தனக்கான உதவியாளரை அமர்த்திக்கொள்ள விரும்பினார். உதவியாளருக்கு கொடுக்க கூடிய ஊதியம் பற்றி யோசித்த போது, இது தொடர்பான அளவுகோள் தேவை என உணர்ந்தார். ஆனால், ஊதியம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட போது, இந்த தகவல்களை எல்லாம் ஒரு சிலர் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, அதையே வர்த்தக நோக்கில் பயன்படுத்தி வருவதையும் தெரிந்து கொண்டார்.

இந்த அனுபவமே, ஊதியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையத்தின் மூலம் வழங்கினால், அதுவே ஒரு சேவையாக அமையும் என நினைக்க வைத்தது. இப்படி தான் சாலரி.காம் பிறந்தது.

வேலைவாய்ப்பு சந்தையில் அது வரை ரகசியமாக கையாளப்பட்டு வந்த ஊதியம் சார்ந்த தகவல்களை இந்த தளம் இணையம் மூலம் பரவலாக்கியது. வேலைவாய்ப்பு சந்தையில் இது பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த அடிப்படை சேவை பின்னர், பலவிதங்களில் மேம்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பேஸ்கேல் போன்ற தளங்கள் அறிமுகம் ஆயின. இந்த தளம், பணியாளர்கள் தங்கள் ஊதியம் தொடர்பான விவரங்களை சமர்பித்து, தாங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கான ஊதிய தகவல்களை தெரிந்து கொள்ளும் சேவையை வழங்கியது.

ஊழியர்கள் தங்கள் பணி புரியும் நிறுவனங்களின் சூழல், ஊதியம் போன்ற தகவல்களை அனாமதேயமாக பகிர்ந்து கொள்ள வழி செய்யும் கிளாஸ்டோர் போன்ற சேவைகளுக்கு எல்லாம் சாலரி.காம் தான் முன்னோடி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.