வியக்க வைக்கும் வருங்கால மருத்துவம்

medதொழில்நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு துறையிலும் நவின தொழில்நுட்பம் இரண்டற கலந்திருப்பதோடு, இதுவரை நினைத்து பார்க்க முடியாத விஷயங்களையும், புதிய பயன்பாடுகளையும் சாத்தியமாக்கி வருகிறது. மருத்துவ துறையில் இதற்கு விலக்கல்ல. மருத்துவ துறையில் ஏற்கனவே தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருங்கால மருத்துவத்தில் தொழில்நுப்டத்தால் நிகழக்கூடிய பல்வேறு அற்புதங்களை கொஞ்சம் சாம்பிள் பார்க்கலாம்:

மருத்துவ மாயக்கண்ணாடி

தொழில்நுட்ப உலகில் ஏ.ஆர் (AR ) , வி.ஆர் (VR ) பற்றி அடிக்கடி பேசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆக்மெண்டட் ரியாலிட்டியை தான் சுருக்கமாக ஏ.ஆர் என்கின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் யதார்தத்தை மேம்படுத்துவதை தான் இப்படி சொல்கின்றனர். அதாவது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்படும் தகவல்களை நிஜ உலகின் மீது பொருத்துவது என பொருள். உதாரணத்திற்கு புதிய காரோட்டி செல்லும் போது , இடப்பக்கம் திரும்புவதா, வலப்பக்கம் திரும்புவதா என டாஷ்போர்டில் உள்ள வரைபடத்தை பார்ப்பதற்கு பதிலாக, சாலை நடுவிலே உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் வலப்பக்கம் திருபவும் என உணர்த்தும் டிஜிட்டல் அம்புக்குறி மின்னினால் எப்படி இருக்கும். இது போன்ற விஷயங்களை தான் ஏ.ஆர் என்கின்றனர். இதற்கு மாறாக, வேறு ஒரு உலகில் உலாவுவது போல நம்மை டிஜிட்டல் உலகில் மூழ்கச்செய்யும் தொழில்நுட்பத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி என்கின்றனர். இந்த இரண்டு நுட்பங்களும் கைகோர்த்து செயல்படுவதை இரு நிலை கலப்பு யதார்த்தம் (mixed reality) என்றும் சொல்கின்றனர்.

வீடியோகேம் பிரியர்களுக்கு இந்த ஏ.ஆர், வி.ஆர் சங்கதி எல்லாம் பரீடிசயமாக இருக்கலாம். ஆனால், இந்த நுட்பங்களின் பயன்பாடு கேமிங் துறையோடு நின்றுவிடவில்லை. சகலவிதமான துறைகளிலும் இந்த நுட்பங்கள் பயன்படுகின்றன. மருத்துவ துறையிலும் இந்த நுட்பங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் பயனாக, எதிர்கால மருத்துவர்கள் ஏ.ஆர் நுட்பம் கொண்ட மாய கண்ணாடியை மாட்டிக்கொண்டு சர்ஜரி செய்யலாம் என்கின்றனர். உயிர் காக்க தேவையான நுட்பமான விவரங்கள் கண்ணாடி மூலம் அவர்கள் கண் முன் தோன்றி வழிகாட்டும்.

மூளைக்கு ஒரு மவுஸ் கிளிக்

ஏ.ஆர், வி.ஆர் போலவே, பி.சி.ஐ (BCI ) என்பதும் தொழில்நுட்ப உலகின் மந்திர வார்த்தையாக இருக்கிறது. அதென்ன பி.சி.ஐ? பிரைன் கம்ப்யூட்டர் இண்டர்பேசஸ் (brain-computer interfaces ) எனப்படும், மூளையுடன் டிஜிட்டல் சாதனங்களால் தொடர்பு கொள்வதை தான் இவ்வாறு சொல்கின்றனர். இது கொஞ்சம் ஆழமான, விரிவான கருத்தாக்கம் என்றாலும், கம்ப்யூட்டரை மவுஸ் மூலம் இயக்குவது போல, மனித மூளை தரும் சமிகிஞ்சைகளை கம்ப்யூட்டர் அமைப்பு பெற்று செயல்பட வழி செய்யும் அற்புதமாக இதை கருதலாம். இன்னும் எளிமையாக சொல்வது என்றால், மனித உடலுக்குள் ஒரு சின்ன சிப்பை பொருத்திவிட்டு, அதன் வாயிலாக கம்ப்யூட்டருக்கு தகவல்களை கடத்துவதாக இதை புரிந்து கொள்ளலாம். இதை பிரைன் இம்பேளண்ட் என்றும் சொல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் லேசர் சிகிச்சை எப்படி இருந்ததோ அந்த நிலையில் தான் தற்போது இந்த நுட்பமும் இருக்கிறது என்றாலும், வருங்காலத்தில் இது வேற வெவலுக்கு சென்றுவிடும் என்கின்றனர். அதன் பயனாக, கருவிழியில் ஒரு சின்னஞ்சிறு சிப்பை பொருத்தி பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம். செவித்திறன் பிரச்சனைகளையும் இவ்விதம் சீராக்கிம்கொள்ளலாம். இவ்வளவு ஏன், நினைவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள கூட ஒரு சிப்பை பொருத்திக்கொள்வது சாத்தியமாகலாம். பார்கின்சன்ஸ் நோய் போன்வற்றின் பாதிப்புகளை சீராக்கவும் இந்த நுட்பம் பயன்படலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

மாய மனிதர்களாவோமா!

கழுகுப்பார்வை, பாம்பு செவி ( பாம்புக்கு காது உண்டா?) என்றெல்லாம் சொல்லப்படுகிறது அல்லவா? இதே போன்ற திறனை மனிதர்களும் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? வருங்கால மருத்துவம் இதை எல்லாம் சாத்தியமாக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? நாமெல்லாம் சைபோர்க் (cyborg-) மனிதர்களாக மாறும் போது இவை சாத்தியம் தான். அதென்ன சைபோர்க்? கடவுள் பாதி, மிருகம் பாதி என்பது போல, மனிதர் பாதி, ரோபோ மீது என்று சொல்லக்கூடிய வகையில் தொழில்நுட்பத்தால் மனித ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் சைபோர்க் மனிதராகலாம் என்கின்றனர். உடலுக்குள் சிப் பொருத்திக்கொள்வது தான் என்றாலும் இது இன்னொரு அற்புதம் ஆகும். இப்போதே பல துணிச்சல்காரர்கள் உடலுக்குள் சிப்பை பொருத்திக்கொண்டு சைபோர்காக வலம் வருகின்றனர். வருங்காலத்தில், சிப்கள் மூலம், கழுகு பார்வை பெறுவது, செவித்திறனை இன்னும் துல்லியமாக்குவது எல்லாம் சாத்தியமாகலாம். இதெல்லாம் வியப்பாக இருந்தால், இதய துடிப்பை சீராக்கி கொள்ள பேஸ்மேக்கர் சாதனத்தை பொருத்திக்கொள்வது கூட ஒரு வித சைபோர்க் தன்மை தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!.

டைனோசர் மாத்திரை

இன்றைய தேதியில் ஹாட்டான தொழில்நுட்பம் என்றால் 3-டி பிரிண்டிங் எனப்படும் முப்பரிமாண அச்சு தான். பாரம்பரிய அச்சிடும் முறையில் இருந்து வேறுபட்டு லேயர். லேயராக அச்சிட்டு பொருட்களை உருவாக்க உதவும் இந்த நுட்பம் கொண்டு பெரிய சைஸ் வீடு முதல் மினியேச்சர் உருப்புள் வரை எண்ணற்ற பொருட்களை உருவாக்கி கொள்ளலாம். உயிரி மூலப்பொருட்களையும் இதற்காக பயன்படுத்தலாம் என்பதால் எதிர்காலத்தில் உடல் உருப்புகளை கூட இவ்விதம் உருவாக்கலாம் என மருத்துவ உலகம் தீவிரமாக நம்புகிறது. இது கொஞ்சம் பெரிய சங்கதி என்றாலும் , 3-டி பிரிண்டிங் இன்னும் பல விதங்களில் பயன்படும் சாத்தியங்கள் விரிகின்றன. உதாரணமாக மாத்திரைகளையும் 3-டி பிரிண்டிங்கில் அச்சிட்டுக்கொள்ளலாமாம். இதன் மூலம் டைனோசர் வடிவில் கூட மாத்திரையை உருவாக்கலாம். அதன் பிறகு குழந்தைகளை மாத்திரைகளை விழுங்கச்சொல்வது ஒரு பிரச்சனையாகவே இருக்காது!.

குரல் வழி சிகிச்சை

ஸ்மார்ட்போன் பிரியர்கள், ஆப்பிளின் சிறி, கூகுளின் டிஜிட்டல் அசிஸ்டண்ட், அமேசானின் அலெக்சா போன்ற குரல் வழி டிஜிட்டல் உதவியாளர்கள் சேவையை அறிந்திருக்கலாம். மனித குரலை இயந்திரங்கள் புரிந்து கொண்டு செயல்படும் இந்த வகை குரல் வழி சேவைகள் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குரல் வழி சேவை மூலம் தங்கள் கட்டளைகளை செயல்படுத்தலாம் என்றால், இன்னொரு பக்கம் நோயாளிகளின் நோய் அறிகுறிகளையும் கூட அவர்கள் குரல் மூலமே கண்டறியலாம் என்கின்றனர். உள்ளுக்குள் பதற்றமாக இருப்பது குரலில் வெளிப்படும் என்பது போல, குரலின் தனித்தன்மையான பல்வேறு அம்சங்களை டிஜிட்டல் நுட்பம் மூலம் கண்டறியலாம். குரல் பயோமார்க்கர்கள் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் இந்த அம்சங்கள் மூலம், எதிர்வரும் காலத்தில் ஒருவர் குரலை ஸ்கேன் செய்வதன் மூலமே இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிந்து விடலமாம்!.

நோயாளிகள் தான் ராஜா!

நவீன நுட்பம் சிகிச்சை முறைகளில் மட்டும் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதோடு நிற்காமல், நோயாளிகளுக்கு தகவல் அளிக்கப்படும் விதத்திலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்கின்றனர். மருத்துவர்கள் எதை கேட்டாலும் ஒழுங்காக சொல்வதில்லை எனும் மனக்குறை பலருக்கு உண்டு. மருத்துவ விஷயங்களை விளக்குவதில் உள்ள சிக்கல் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பம் இதற்கும் தீர்வாகிறது. இனி மருத்துவர்கள், நவீன நுட்பம் கொண்டு நோயாளிகளுக்கு நோய் தாக்கம் குறித்து எளிதாக விளக்கலாம். உதாரணமாக, கண் கருவிழி பிரச்சனை பற்றி மருத்துவர் பேசும் போது, குறிப்பிட்ட நிலை தொடர்ந்தால் பார்வை எப்படி எல்லாம் பாதிக்கப்படலாம் என மருத்துவர் மேலே சொன்ன ஏ.ஆர் நுட்பம் மூலம் படம் போட்டு காண்பித்து விளக்க முடியும்.

டிஜிட்டல் பச்சை குத்தல்

3-டி பிரிண்டிங் போலவே, மனித உடல் மீது மின்னணு அமைப்புகளை பச்சை குத்துவது போல டிஜிட்டல் முறையில் ஒட்டிக்கொள்ளலாம் என்கின்றனர். கண்ணுக்கு புலப்படாத நோனோ கம்பிகள் கொண்ட இந்த டிஜிட்டல் பட்டைகள், உடல் வெப்பத்தை கண்காணிப்பது, இதய த்துடிப்பை கண்காணித்து தகவல் சொல்வது உள்ளிட்ட பல வழிகளில் பயன்பட்டு உயிர் காக்க உதவும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.