டேவிட் போவியும், தியோடர் பாஸ்கரனும்!

bதமிழ் சூழலில், முதலில் ’டேவிட் போவி’ (David Bowie ) யார் என்பதை அறிமுகம் செய்தாக வேண்டும். பிரபலமான பாப் பாடகர் எனும் வழக்கமான அறிமுகத்தை கடந்து, ரசிகர்களின் ஆன்மாவுடன் கலந்து அவரது இசை பற்றி அழுத்தமாக எழுத வேண்டும். ஆனால், இந்த பதிவில் டேவிட் போவி பற்றி பேசப்போவதில்லை. ஏனெனில், போவியை முறையாக அறிமுகம் செய்வதற்காக அவரைப்பற்றி இப்போது தான் தேடித்தேடி படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னமும் அவரது இசை பக்கம் போகவில்லை. அவரது இசை பற்றி எழுத பாப் இசையில் போதுமான பரிட்சியம் இல்லை என்றாலும், இசை மேதையான போவியை இணைய பயன்பாட்டில் முன்னோடி என்ற அடிப்படையிலேயே அணுக இருப்பதால் பிரச்சனை இல்லை என நினைக்கிறேன்.

இதனிடையே எதற்கு இந்த பதிவு என்றால், போவி தொடர்பான தேடலில் கண்ணில் பட்ட ஒரு ஆச்சர்யமான அம்சத்தை பற்றி குறிப்பிடுவது அவசியம் எனத்தோன்றியது.

இணையம் என்பது பிள்ளை பருவத்தில் இருந்த காலத்திலேயே இணையத்தின் ஆற்றலை உணர்ந்தவராக போவி கருதப்படுகிறார். 1990 களில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இணையத்தின் எதிர்கால தாக்கம் பற்றி அத்தனை தொலைநோக்குடன் பேசியிருப்பதாக படித்திருப்பதால் அந்த நோக்கில் தகவல்களை தேடிக்கொண்டிருந்தேன்.

இது தொடர்பாக ஜெர்மி பேக்ஸ்மேனுக்கு போவி அளித்த பேட்டி தொடர்பாக பல கட்டுரைகள் தென்பட்ட நிலையில், டிட்பிட்ஸ் எனும் இணைய இதழ் கட்டுரையை வாசித்த போது தான் தற்செயலாக அந்த ஆச்சர்யம் உண்டானது.

300 வார்த்தைகளுக்குள் முடிந்து விடும் இந்த கட்டுரையின் கீழே இடம்பெற்றிருந்த ஒரே ஒரு பின்னூட்டத்தில் அந்த ஆச்சர்யம் உண்டானது.

பேக்ஸ் இயந்திரம் போல இணையமும் வெறும் கருவி தானே என பேட்டியாளர் கேட்கும் கேள்விக்கு, இல்லை, இது முற்றிலும் இது வேறு விதமானது என போவி புன்னகையுடன் பதில் அளித்திருக்கிறார். அதாவது, நீங்கள் நினைப்பதை எல்லாம் விட இணையம் பெரிதாக தாக்கம் செலுத்தப்போகிறது என உணர்த்தியிருக்கிறார்.

இணையத்தின் எல்லையில்லா வளர்ச்சியை துல்லியமாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கணித்ததை கொண்டாடும் இந்த கட்டுரையின் இறுதியில், ஜெப் ஹெட்சட் (Jeff Hecht) என்பவர் பின்னூட்டம் அளித்திருந்தார்.

கட்டுரையின் சாரம்சத்தின் தொடர்ச்சியாக அமைந்த அந்த பின்னூட்டத்தில், 1990 களில் பீட்டர் ரெஞே எனும் ஜெர்மானிய பொறியாளரை, கண்ணாடி இழை நுட்பத்தின் வரலாறு தொடர்பான ’சிட்டி ஆப் லைட்’ எனும் தனது புத்தகத்திற்காக நேர்காணல் செய்த போது, ” அட்லாண்டிக்கை கடந்த முதல் கண்ணாடி இழை கம்பி பெர்லின் சுவர் உடைக்கப்படுவதற்கு உதவியதா? எனத்தெரியாது ஆனால், தகவல் தொடர்பு என்பது பொதுவாக உலக அரசியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறது என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டத்தில், இணையம் வெகுமக்களை அடைவதற்கு முன், அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தவிர வேறு எதையும் குறிப்பாக நம்மில் யாராலும் கணித்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போவியின் தொலைநோக்கில் அவர் உடன்படுகிறாரா அல்லது மாறுபடுகிறாரா என்பது தெரியவில்லை என்றாலும், அவர் மேற்கோள் காட்டியிருந்த விஷயம் கவனத்தை ஈர்த்தது. பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது உலக வரலாற்றில் முக்கிய நிகழ்வு. இந்த மாற்றத்திற்கு வித்திட்ட அரசியல் சூழல் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் இணையத்தின் தாக்கம் பற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை. இணையம் எனும் வலைப்பின்னலின் உருவாக்கம் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.

இந்த பின்னணியில், கண்ணாடி இழை கம்பி நுட்பத்தின் தாக்கத்தை, பெர்லின் சுவர் தகர்ப்புடன் இணைத்து கருத்து சொல்லியிருப்பதை பார்த்ததும், யார் இந்த ஹெட்சட் என அறியும் ஆர்வம் ஏற்பட்டு, அவரைப்பற்றி தேடிப்பார்த்தால் தெரிய வந்த தகவல்கள் இன்னும் வியப்பாக இருந்தது.

ஹெட்சட், லேசர்கள் பற்றியும் கண்ணாடி இழை கம்பிகள் பற்றியும் கரைத்து குடித்தவராக இருக்கிறார். லேசர்களை புரிந்து கொள்வது எப்படி? , லேசர்களின் வரலாறு பற்றி எல்லாம் விரிவாக புத்தகங்கள் எழுதியிருக்கிறார். முன்னணி அறிவியல் சஞ்சிகைகளில் இந்த தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார். தொழில்நுட்பமே ஒரு தனிப்பிரிவு எனும் போது, அதில் லேசர், ஒலி மற்றும் கண்ணாடி இழை கம்பிகள் குறித்து மட்டும் ஒருவர் விரிவாகவும் ஆழமாகவும் எழுதி வருவதை பார்க்கும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

சரி ஹெட்சட் பற்றி இன்னும் விரிவாக படிக்க வேண்டும் என மனதுக்குள் குறித்து வைத்துக்கொண்டேன்.

இதை இங்கு சொல்ல காரணம், இணையத்தில் பின்னூட்டத்தின் மகிமையை சுட்டிக்காட்ட தான். இணையத்தின் எதிர்கால தாக்கம் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சியாக அர்த்தம் பொதிந்த ஒரு கருத்தின் மூலம், இதுவரை அறிந்திராத ஒரு மேதையை அறிந்து கொள்ள முடிந்தது.

ஆக, இணையத்தில் பின்னூட்டத்தை கவனியுங்கள். இந்த இடத்தில் சமூக ஊடகங்களில் நாம் காணும் பின்னூட்டத்தின் சரட்டையும் பொருத்திப்பார்த்தால், செறிவான கருத்து பரிமாற்றம் நடைபெறும் ஹேக்கர்நியூஸ் போன்ற தளங்கள் குறித்து நாம் பெருமூச்சு தான் விட வேண்டும் அல்லது இது போன்ற தளங்களை அறிந்தராத அறியாமையை நொந்து கொள்ள வேண்டும்.

நிற்க, இந்த பதிவுக்கும் தியோடர் பாஸ்கரனுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். பின்னூட்டம் தான் தொடர்பு!

போவி பற்றிய கட்டுரை படித்தது போல, ஸ்கிரோல் இணைய இதழில், முள்ளெலிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நம்மவரான பிரவின் குமார் என்பவரது நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. முள்ளெலிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஒரு காமிக் புத்தகத்தை கொண்டு வந்துள்ளது உள்ளிட்ட தகவல்களை அறிய முடிந்தது. இந்த கட்டுரை ’நேச்சர் இன் போகஸ்’ இணைய இதழில் முதலில் வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய இணையதளங்களை அறிந்து கொள்ளும் வழக்கமான ஆர்வத்தால், இந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்தால், நேச்சர் இன் போகஸ், இயற்கை, வன விலங்கு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ஆழமாக அறிமுகம் செய்யும் இணைய இதழாக இருப்பதை உணர முடிந்தது. இந்த இணைய இதழையும் புக்மார்க் செய்து கொண்டு, நம்மூர் வல்லுனர் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றனரே என பாராட்டியபடி பார்த்தால், கட்டுரையின் இறுதியில் தியோடர் பாஸ்கரன் பின்னூட்டம் அளித்திருந்தார்.

தியோடர் பாஸ்கரன் சினிமா வரலாற்றாளர் என்பது மட்டும் அல்ல, இயற்கையின் ரசிகர் என்பதும், சூழலியல் பற்றி தமிழில் தீவிரமாக எழுதி வருபவர் என்பதும் தெரிந்தது தான். நன்றாக எழுதப்பட்ட கட்டுரை, குமாரின் மலை எலிகள் தொடர்பான ஆய்வும் அறியப்பட வேண்டும் என, அவர் இக்கட்டுரையில் பின்னூட்டம் அளித்திருப்பதை பார்க்கும் போது, நேச்சர் இன் போகஸ் இணைய இதழ் இன்னும் முக்கியமானதாக தோன்றியது.

புதிய, பயனுள்ள,சுவாரஸ்யமான இணைதளங்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவன் என்ற முறையிலும், இணையதள அறிமுகத்திற்காகவே ’இணைய மலர்’ மின்மடலை நடத்தி வருபவன் என்ற முறையில், இந்த பதிவு இணைய கண்டறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்த உதவும் எனத்தோன்றியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *