இந்த இணையதளம் கொரோனா உதவி கையேடு

Twitter_COVID_2கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைப்பவர்களும் சரி, உதவி தேவைப்படுபவர்களும் சரி ’கோவிட்19-டிவிட்டர்.இன்’ (https://covid19-twitter.in/) தளத்தை அணுகுவது அவசியம். ஏனெனில் இந்த தளம் கொரோனா தொடர்பாக டிவிட்டரில் குவியும் உதவிகளுக்கான கையேடாக விளங்குகிறது.

பேரிடர் காலங்களில் உதவி கோராவும், நேசக்கரங்களை ஒருங்கிணைக்கவும் டிவிட்டர் அருமையான மேடை என்பது ஏற்கனவே பல முறை நிருபணமாகி இருக்கிறது. இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கியெடுத்து வரும் நிலையில், டிவிட்டரில் குறும்பதிவுகளாக உதவிக்கான கோரிக்கைகளை குவிந்து வருகின்றன. அதற்கு நிகராக குறும்பதிவு வடிவில் நேசக்கரங்களும் நீட்டப்பட்டு வருகின்றன.

டிவிட்டர் செயல்முறை இலக்கணப்படி, கொரோனா உதவி தொடர்பான கோரிக்கைகள், எளிதில் அடையாளம் காணப்படும் வகையில் தொடர்புடைய பொருத்தமான ஹாஷ்டேகுடன் வெளியாயின.

#Oxygen, #OxygenCans ,#DelhiNCR, #CovidResources, #DelhiFightsCorona, #sos, #CovidIndia ,#COVIDEmergency, #SOSIYC, #COVID19India, #CovidHelp…

இப்படி பலவிதமான ஹாஷ்டேகுடன் உதவிக்கான குறும்பதிவுகள் வெளியாகின.

ஏப்ரல் மாத வாக்கில் இந்த குறும்பதிவுகள் வெளியான விதம், நாட்டில் இரண்டாம் அலை பரவிய வேகத்தை உணர்த்தும் குறுக்கு வெட்டுச்சித்திரமாக அமைந்தது. அந்த அளவுக்கு திடிரென கொரோனா பாதிப்பு தொடர்பான உதவி கோரிக்கைகள் திடிரென அதிகரிக்கத்துவங்கி வேகம் பிடித்தது.

அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பதிவுகளும், ஆக்சிஜன் சிலிண்டர் எங்கே கிடைக்கும் என்பதற்கான கோரிக்கைகளும் அதிகம் வெளியாயின. தனிநபர்கள் நட்பு வட்டத்தில் வேகமான உதவி எதிர்பார்த்து பகிர்ந்து கொண்ட குறும்பதிவுகள் ஒரு பக்கம் வெளியாகி கொண்டிருக்க, இன்னொரு பக்கம், மருத்துவமனைகள் #sos எனும் ஹாஷ்டேகுடன் ஆக்சிஜன் தேவை தொடர்பான கோரிக்கைகளை வெளியிடத்துவங்கிய போது, அலையென வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் அடிப்படை மருத்துவ கட்டமைப்பு திணறத்துவங்கிய நிலையை உணர்த்தி திகைக்க வைத்தது.

இதனிடையே உதவி கிடைக்கப்பெற்றவர்கள் நன்றியை குறும்பதிவாக பகிர்ந்து கொண்ட நிலையில், இனி உதவியும் பயனில்லை என இழப்பு குறித்து வேதனை தகவல் தெரிவித்து வெளியான குறும்பதிவுகள் தேசத்தின் கையறு நிலையை இன்னும் தெளிவாக உணர்த்தியது.

ஆனால், செய்வதற்று நின்றுவிடாமல் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்யத்துவங்கியத்தையும், தொடர்ந்து வெளியான கொரோனா தொடர்பான குறும்பதிவுகள் உணர்த்தின. ஒரு சிலர் தங்களால் மருந்து பொருள் அல்லது ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்தனர். ஒரு சிலர், உதவி கோரிக்கைகளை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். ஒரு சிலர், உதவிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டுதலில் ஈடுபட்டனர்.

தேசத்தின் அவல நிலையை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டிய இந்த குறும்பதிவுகளை மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கியிருக்க முடியாது. ஏனெனில், உதவி கேட்டு குவிந்த குறும்பதிவுகள் திக்குமுக்காட வைப்பதாக இருந்தது.

இந்த பின்னணியில் தான், டிவிட்டரில் வெளியாகும் கொரோனா குறும்பதிவுகளை ஒருங்கிணைக்கும் தேவை உண்டானது. டிவிட்டர் நிர்வாகம், தங் பங்கிற்கு கொரோனா குறும்பதிவுகளை எளிதாக தேடும் வகையில் தனது மேம்பட்ட தேடல் வசதியை அடையாளம் காட்டு, இதற்கான தனி பக்கத்தையும் அமைத்தது.

இன்னொரு பக்கம், டிவிட்ட பயனாளிகள் தாங்களே களத்தில் இறங்கி கொரோனா உதவி ஒருங்கிணைப்பு தளத்தை அமைத்தனர். இப்படி உருவாகப்பட்ட தளங்களில் ஒன்று தான், ’கோவிட்19-டிவிட்டர்.இன்’.

இந்த தளத்தை உருவாக்கிய பெங்களூரு மென்பொருளாளர் உமாங் காலியா (@umanghome ) தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல இந்த தளம், கொரோனா உதவி தொடர்பான டிவிட்டர் தேடலுக்கான இணைப்புகளை கண்டறிவதற்கான எளிமையான தளமாக இது அமைந்தது: https://twitter.com/umanghome/status/1383759182495588355

அடிப்படையில் இந்த தளம், டிவிட்டரில் வெளியாகும் கொரோனா உதவி கோரிக்கைகளையும், நிவாரண அறிவிப்புகளையும் தொகுத்தளிக்கும் தளமாக அமைந்தது. இதை காலத்தினால் செய்த உதவி என்று சொல்ல வேண்டும்.

மருத்துவ உதவியை நாடும் கொரோனா நோயாளிகளைப்பொருத்தவரை, உடனடி உதவி என்பது மிகவும் அவசியம். மருத்துவமனை படுக்கை வேண்டுவோர் அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் கோருபவர்களுக்கு சில மணி நேரங்களில் அந்த உதவி கிடைத்தாக வேண்டும் அல்லவா?

டிவிட்டர் குறும்பதிவுகள் இந்த அவசரத்தை புரிய வைத்து, பதற வைத்தாலும், அதற்கேற்ப உதவுவது எப்படி? எங்கோ தில்லியில் பகிரப்படும் உதவி கதறல்களை மற்ற நகரங்களில் இருப்பவர்கள் பார்த்து பரிதவிக்கும் போது வேறு என்ன செய்ய முடியும்?

எனவே, பொதுவாக உதவி கோரிக்கைகளை பார்ப்பதை விட, தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை கவனித்து இயன்ற உதவியை செய்வது முக்கியமானது.

இதை தான் இந்த தளம் கச்சிதமாக செய்கிறது. உதவ தயாராக இருப்பவர்கள், இந்த தளத்தின் மூலம் தங்கள் தேடலை இரண்டு விதமாக வடிகட்டிக்கொள்ளலாம். ஒன்று, படுக்கை வசதி, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவி, மருந்து ஆகியவற்றின் அடிப்படையில் யாருக்கு எங்கு உதவி தேவை என தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.

இரண்டாவதாக, குறிப்பிட்ட நகரம் அடிப்படையில் தேடலாம். உதாரணத்திற்கு தில்லி அல்லது பெங்களூரு நகரில் உதவி கேட்டுள்ளவர்களின் குறும்பதிவுகளை கண்டறிந்து செயல்படலாம்.

சரி பார்க்கப்பட்ட கோரிக்கைகளை வடிகட்டுவதற்கான வசதியும் அளிக்கப்பட்டிருந்தது.  உதவியின் தன்மை அடிப்படையிலும் தேடலை வடிகட்டிக்கொள்ளலாம்.

இது தவிர, அதிகம் தேடப்படும் நகரங்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மூலம் எந்த நகரத்தில் என்ன நிலை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், நன்கொடை அளிக்க விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் வகையில், கொரோனா தொடர்பான நேசக்கரம் நீட்டி வரும் அமைப்புகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் உதவி செய்பவர்கள் சுட்டிக்காட்டும் இணைப்பும் இந்த தளத்தில் விளம்பரமாக வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த தளம் தொடர்ந்து புதிய அம்சங்களோடு அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா கோரத்தாண்டவத்தின் நடுவே, பரஸ்பர உதவி என்பது எத்தனை முக்கியம் என்பதற்கான உதாரணமாக அமையும் இது போன்ற உதவும் தளங்கள் தான் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் தேசத்திற்கு ஆசுவாசம் அளிக்கும் அம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

நன்றி: புதிய தலைமுறை.காம் தளத்தில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *