சோவியத் விஞ்ஞானி உருவாக்கிய தண்ணீர் கம்ப்யூட்டர்

lukyanov-water-integrator-4கம்ப்யூட்டர் என்றதும் டிஜிட்டல் கம்ப்யூட்டரையே நினைக்கத்தோன்றும். கம்ப்யூட்டர் வரலாற்றில் ஆர்வம் இருந்தால், பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு முந்திய மைக்ரோ கம்ப்யூட்டர் மற்றும் அதற்கு முந்தைய மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள் நினைவுக்கு வரலாம்.

டிஜிட்டல் கம்ப்யூட்டர்களுக்கு முன் அனலாக் கம்ப்யூட்டர்கள் இருந்தன. அனலாக் கம்ப்யூட்டர் என்பவை அடிப்படையில் இயந்திரங்கள் தான். அவற்றில் இருந்த சக்கரங்களும் அவற்றின் சுழற்சியும் எண்களை குறிக்க, அவற்றுக்கு இடையிலான செயல்பாடுகள் கூட்டல், பெருக்கல், கழித்தல்களாக கொள்ளப்பட்டன. இந்த சக்கரங்கள் மற்றும் அவற்றுக்கு இடையிலான செயல்பாடுகளை மாற்றி அமைப்பதன் மூலம் கணக்கிடுவது சாத்தியமானது.

இந்த முறையில் எளிய கணக்குகளை கையாள்வது மட்டும் அல்லாமல், சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளை கையாள்வதும் சாத்தியமானது.

பலவகையான அனலாக் கம்ப்யூட்டர் இருந்திருக்கின்றன. ஒரு விதத்தில் பார்த்தால், பாதரச அளவு மூலம் வெப்ப நிலையை குறிக்கும் தெர்மாமீட்டர் கூட மிக எளிய வகையான அனலாக் கம்ப்யூட்டரே.

சிப் மூலம் செயல்படும் நவீன கம்ப்யூட்டர்களுக்கு பழகியவகளுக்கு அந்த கால அனலாக் கம்ப்யூட்டரே ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இயந்திரவியல் அடிப்படையில் இயங்கிய அனலாக் கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள், தண்ணீரை அடிப்படையாக கொண்டு இயங்கிய தண்ணீர் கம்ப்யூட்டர்கள் இருந்துள்ளன என்பதை நம்ப முடிகிறதா?

ஆம், சோவியத் யூனியனைச்சேர்ந்த விலாதிமீர் லூகானோவ் (Vladimir Lukianov ) எனும் விஞ்ஞானி 1936 ல் உலகின் முதல் தண்ணீர் கம்ப்யூட்டரை உருவாக்கி, நீரின் தன்மை கொண்டே சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டார்.

தண்ணீரில் எப்படி கம்ப்யூட்டர் இயங்கும் என்று பார்ப்பதற்கு முன், லூகானோவ் தண்ணீர் கம்ப்யூட்டர் வடிவமைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். மாஸ்கோவில் காப்பீடு முகவருக்கு மகனாக பிறந்து வளர்ந்த லூகானோவ், ரெயில்வே பொறியியலுக்கான மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு ரெயில்வே துறையில் பணியாற்றினார். ரெயில்வே வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய நிலையில், 1930 ல் மாஸ்கோ ரெயில்வே பொறியாளர்கள் மத்திய கழகத்தின் பணியாற்றினார்.

இந்த பணியின் போது, கான்கிரீட் அமைப்புகளில் அவர் கவனம் செலுத்தினார். அந்த கால கட்டத்தில் கான்கிரீட் அமைப்புகளில் விரிசல் விழுவதை தவிர்க்க, இந்த பணிகள் குளிர் காலத்தில் மேற்கொள்ளப்படாமல், கோடை காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்படியிருந்தும் கூட, கான்கிரீட்களில் விரிசல் உண்டானது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண லூகானோவ், கான்கிரீட் அமைப்புகளின் வெப்ப நிலை செயல்பாட்டை ஆய்வு செய்ய விரும்பினார். ஆனால் அப்போது இருந்த வழிமுறைகள் மூலம் இதற்கான கணக்குகளை அவரால் வேகமாக போட முடியவில்லை. எனவே, இதற்கான வழிமுறையை தானே உருவாக்க முயன்று அவர் வடிவமைத்தது தான் தண்ணீர் கம்ப்யூட்டர்.

வெப்ப இயக்கம் போலவே, தண்ணீரின் செயல்பாடும் அமைந்திருப்பதை கவனித்தவர் இந்த இரண்டுக்கும் இடையிலான ஒப்புமையை கொண்டு, கணக்கு போடுவது சாத்தியம் என நினைத்தார். இதை செயலாக்குவதற்காக தண்ணீர் கம்ப்யூட்டரை உருவாக்கினார்.

லூகானோவ் வடிவமைத்த, தண்ணீர் கம்ப்யூட்டர், தண்ணீர் குழாய்கள், தண்ணீர் கொள்கலன்கள் மற்றும் அவற்றை இணைக்கும் அம்சங்களை கொண்டிருந்தன. குழாய்களில் உள்ள தண்ணீரின் அளவை பல்வேறு எண்களாக எடுத்துகொண்டால், அவற்றுக்கு இடையிலான இணைப்புகளை கணிதவியல் இயக்கங்களாக கொள்ளலாம். குழாய்களில் தண்ணீர் மட்டத்தை மாற்றுவதன் மூலம் மற்றும் களன்களின் உள்ள தண்ணீர் அழுத்ததை வேறுபடுத்துவதன் மூலம், கிடைக்கும் பலனை வரைபடத்தில் இடம்பெறச்செய்து அதன் வாயிலாக விடைகளை அறியலாம்.

இந்த முறையில் வெப்பத்தின் தாக்கத்தை ,லூகானோவால் கணக்கிட முடிந்தது. தண்ணீர் மட்டத்தை பார்த்து உயரத்தை எளிதாக கணக்கிடலாம் என்பது போல, குழாய் அமைப்புகளில் தண்ணீரின் செயல்பாட்டை வைத்து பெரிய கணக்குகளை போடலாம் என்பதாக லூகானோவ் கம்ப்யூட்டரை புரிந்து கொள்ளலாம். அவர் உருவாக்கிய முதல் தண்ணீர் கம்ப்யூட்டர் கூரை இரும்புகள், தகர டின்கள், குழாய்களை கொண்ட கொச்சையான வடிவமாக இருந்தாலும், இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் வடிவமைத்த இரண்டாவது தண்ணீர் கம்ப்யூட்டர் சிக்காலான செயல்பாடுகளை எளிதாக கையாளக்கூடிய நேர்த்தியுடன் அமைந்திருந்தது.

Lukianovஇந்த வகை கம்ப்யூட்டரை கொண்டு, டிபரன்ஷியல் ஈக்வேஷன் எனப்படும் சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளுக்கு அவர் தீர்வு கண்டார். அந்த காலத்தில் இத்தகைய திறன் கொண்ட ஒரே இயந்திரமான இந்த தண்ணீர் கம்ப்யூட்டர் ஒரு கட்டத்தில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஆய்வு அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டன. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

நவீன கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்ட நிலையில் 1980 கள் வரை தண்ணீர் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருந்தது இன்னொரு ஆச்சர்யம்.

தண்ணீர் கம்ப்யூட்டர் என்பது வியக்க வைக்க கூடிய கருத்தாக்கம் மட்டும் அல்ல, கம்ப்யூட்டர் என்பது அடிப்படையில் கணக்கிடும் இயந்திரம் என்று சொல்லப்படுவதால், இந்த இயந்திரத்தின் அடிப்படை செயல்பாடு தொடர்பான நமது புரிதலையும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

விலாதிமீர் லூகானோவ் பற்றி அமேசிங் பிளேனட் இணையதளத்தில் சுவாரஸ்யமான கட்டுரை வந்துள்ளது. இதற்கான இணைப்பு ஹேக்க நியூஸ் தளத்தில் பகிரப்பட்டதன் மூலம் அருமையான தண்ணீர் கம்ப்யூட்டர் பற்றி அறிய முடிந்தது. கம்ப்யூட்டர் வரலாற்றுக்கான ஹிஸ்டரி-கம்ப்யூட்டர் தளத்தின் அறிமுக கட்டுரையும் இது தொடர்பான விரிவான தகவல்களை அளிக்கிறது.

தண்ணீர் கம்ப்யூட்டர் என்று குறிப்பிடப்பட்டாலும், அந்த காலத்தில் இந்த இயந்திரம் தண்ணீர் இண்டக்ரேட்டர் என்றே அழைக்கபப்ட்டது. அதன் பிறகு ஹைட்ராலிக் இண்டக்ரேட்டர் என குறிப்பிடப்பட்டது.

தண்ணீர் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டே கணக்கிடும் முறை பிளுயிடிக்ஸ் எனும் தனித்துறை கீழ் வருவதை விக்கிபீடியா மூலம் அறிய முடிகிறது.

https://www.amusingplanet.com/2019/12/vladimir-lukyanovs-water-computer.html

Vladimir Lukianov

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.