இந்தியாவுக்கு இணையத்தை கொண்டு வந்த முன்னோடிகள்

maxresdefaultஒரு தேசமாக இந்தியா தொழில் புரட்சி துவங்கி மின்னணு புரட்சி வரை பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பேருந்துகளை தவறவிட்டதாக கூறப்படுவதுண்டு. பல்வேறு காரணங்களினால் இந்த போக்குகளில் இந்தியா தாமதமாகவே இணைய வேண்டியிருந்தது. ஆனால், இணையம் எனும் தொழில்நுட்ப விஷயத்தில் அவ்வாறு நிகழவில்லை. உலக அளவில் இணையம் எனும் வலைப்பின்னல் விரியத்துவங்கிய போதே இந்தியா அதில் இணைந்து விட்டது. அதன் பயனை தான் இந்தியர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

டிஜிட்டல் உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு உரிய இடம் இருக்கிறது. இணைய பயனாளிகளை பொருத்தவரை இந்தியா முக்கிய சந்தையாக கருதப்படுகிறது. பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் என எந்த ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப ஜாம்பவானும் இந்தியாவை தங்கள் வளர்ச்சி திட்டத்தில் பிரதானமாக கருதுகின்றன. அதே நேரத்தில் இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட யூனிகார்ன்களை கொண்ட ஸ்டார்ட் அப் தேசமாகவும் விளங்குகிறது.

இவற்றுக்கு எல்லாம் அடிப்படை இந்தியாவும், இந்தியர்களும் இணைய வசதியை திறம்பட பெற்றிருப்பது தான். இணைய விநியோகத்தில் இன்னமும் போதாமைகள் இருக்கின்றன என்றாலும், நாடு தழுவிய அளவில் இணைய வசதியும், மொபைல் சேவையும் சாத்தியமாகி இருப்பது நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான பின்புலமாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஒப்பீட்டளவில் இணைய கட்டணமும் கைக்கு எட்டக்கூடியதாகவே இருக்கிறது.

விரல் நுனியில் பண பரிவர்த்தனையை சாத்தியமாக்கும் டிஜிட்டல் இந்தியாவாக தேசம் உருவாகியிருப்பதற்கும் இணையமே காரணம். 75 வது சுதந்திர தினத்தை நாடு கோலாகலமாக கொண்டாடும் தருணத்தில், இதை சாத்தியமாக்கிய முன்னோடிகளை நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 1995 ல் சுதந்திர தினத்தன்று தான் இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையம் வந்தது என்பதையும் நினைவில் கொள்வது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

1995 ம் ஆண்டு தான் இணையம் வர்த்தகமயமான ஆண்டு என்பது மட்டும் அல்ல, இணையத்தை எல்லோரும் அணுகுவதை சாத்தியமாக்கிய வைய விரிவு வலை ( world wide web) பொது பயன்பாட்டிற்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் இணையம் அறிமுகமாகி விட்டது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல, அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே, ’எர்நெட்’ எனப்படும் கல்வி ஆய்வு வலைப்பின்னல் (Educational Research Network (ERNET)) மூலம் இந்தியா இணையம் எனும் வலைப்பின்னலில் இணைந்திருந்தது.

1969 ல் அமெரிக்காவில் அர்பாநெட்டாக உதயமான இணையம், அதன் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கி கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் பெரும்பாலும், ஆய்வு அமைப்புகளாலும், கல்வி நிறுவனங்களாலும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட வந்தது. இந்த சூழலில் இந்தியாவும் இந்த வலைப்பின்னணில் இணைந்ததை இப்போதும் வியப்பாகவே திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த கல்வி வலைப்பின்னல் இந்தியாவில் உருவாக காரணமான ஸ்ரீனிவாசன் ரமணி இந்திய இணைய முன்னோடிகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். இந்த பங்களிப்பிற்காக அவர் இணைய புகழரங்கிலும் இடம் பெற்றிருக்கிறார்.

இந்தியா கிரிக்கெட்டில் உலக கோப்பையை வென்று சாதனை படைத்த 1983 ம் ஆண்டில் ஸ்ரீனிவாசன் ரமணி, இந்திய கல்வியியல் வலைப்பின்னலை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இந்த வலைப்பின்னலே எர்நெட்டுக்கான அடிப்படை. பொறியியல் பட்டதாரியான ரமணி அமெரிக்கா சென்று பணியாற்றிய பிறகு 1973 ல் இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்த போது இமெயில் பயன்பாடு உள்ளிட்டவற்றை பார்த்து அவற்றின் பின்னே இருந்த கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னலால் ஈர்க்கப்பட்டவர், நாடு திரும்பியதும், மென்பொருள் வளர்ச்சி மற்றும் கணிணியியல் நுட்பங்கள் மையத்தின் உருவாக்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டருக்கான தகவல் தொடர்பு மென்பொருளை உருவாக்கிய குழுவுக்கு தலைமை வகித்த ரமணி, 1981 ல் மூன்று நகரங்களை செயற்கைகோள் வாயிலாக இணையத்தின் அடிநாதமான பாக்கெட் ஸ்விட்ச் முறையில் இணைத்தார். இவற்றின் தொடர்ச்சியாக எர்நெட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இதன் மைய மின்னஞ்சல் ஸ்விட்ச் மற்றும் சர்வதேச கேட்வே ஆகியவற்றை அமைத்துக்கொடுத்தார். இந்தியாவில் இருந்து சர்வதேச வலைப்பின்னலுக்கான முதல் தொடர்பாக இது அமைந்தது.

ரமணி இந்த சாதனையை நிகழ்த்துவதற்கான அடிப்படையாக இந்தியாவில் கம்ப்யூட்டர் ஆய்வு மற்றும் பயன்பாட்டிற்கான அடித்தளத்தை இந்தியாவின் முதல் கம்ப்யூட்டரை உருவாக்கிய கம்ப்யூடர் விஞ்ஞானி ரங்கசாமி நரசிம்மன் உள்ளிட்டோர் அமைத்திருந்தனர்.

கல்வி நிறுவனங்களில் ஆய்வு பணிகளுக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் இணையமும், இமெயிலும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்களுக்கு இந்த சேவையை அறிமுகம் செய்ததில் அப்போது வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பில் இருந்த பி.கே.சிங்கால் முக்கிய பங்காற்றியிருக்கிறார். 1995 ல் இணைய வசதி இந்தியாவுக்கு வந்தது இரண்டாவது சுதந்திர தினம் என வர்ணிக்கப்பட்டது.

இந்திய மக்களுக்கு இணைய வசதி தேவை என்பதை உணர்ந்து இது தொடர்பாக வாதிட்டு அரசை சம்மதிக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல், அறிமுகத்தின் போது இந்திய இணைய வசதியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு எல்லாம் பொறுப்பேற்று, தனிக்குழு அமைத்து அடுத்த பத்து வாரங்களை இவற்றை சரி செய்த காரியவாதியாகவும் அவர் அறியப்படுகிறார். அப்போது ஆபாச தளங்களை பார்வையிடும் வசதியை சுட்டிக்காட்டி மக்கள் பிரதிநிதிகள் சிலர் இத்தகைய ஆபத்தான வலையை இந்தியாவுக்கு கொண்டு வந்தது அவசியமா என கேள்வி எழுப்பிய போது, இந்தியாவுக்கு இணைப்பை அளிப்பது தான் என் வேலை என்றும் அதை பொறுப்பாக பயன்படுத்த வைப்பது இல்லை என்றும் தெளிவாக பதில் அளித்திருக்கிறார். 3 சதவீத மக்கள் ஆபாச தளங்களை பார்ப்பதில் எனக்கு அக்கறை இல்லை, எஞ்சிய 97 சதவீதம் பேர் என்ன செய்கின்றனர் என்பதே முக்கியம் என்றும் கூறி இணைய பயன்பாட்டை புரிய வைத்திருக்கிறார்.

இணையத்தை பொது பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்ததற்காக சிங்கால் இந்திய இணைய தந்தை என போற்றப்படுகிறார். இந்த இடத்தில், சின்ன கிளைக்கதையாக மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூரையும், அவரது இணைய நண்பர்களையும் நினைத்துப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஷம்மி கபூர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்ததோடு, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக இணையம் வருவதற்கு முன்பாகவே தொலைபேசியில் சின்னதாக செய்த உத்தி காரணமாக ஆப்பிள் வேர்ல்டு சேவை மூலம் இணையத்தை பயன்படுத்தியிருந்தார். ஷம்மியும், அவரது நண்பர்களும் இணையத்தை பயன்படுத்துவதை ஒரு சந்திப்பில் தற்செயலாக தெரிந்த கொண்ட நிலையிலேயே சிங்கால் இது எப்படி சாத்தியம் என குழம்பினாலும், இந்தியாவுக்கு இணைய வசதி தேவை என்பதையும் உணர்த்தியது. பின்னர் கபூரும் நண்பர்களும் அவரை நேரில் சந்தித்தும் இது பற்றி வலியுறுத்தியிருக்கின்றனர். அந்த காலகட்டத்திலேயே ஷம்மி கபூர், ஜங்லி எனும் சொந்த இணையதளத்தையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இணையம் அறிமுகம் ஆன அடுத்த ஆண்டு, இந்தியரான சபீர் பாட்டியா அமெரிக்காவில் ஹாட்மெயில் சேவையை அறிமுகம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். இமெயில் சேவையை எல்லோரும் எளிதாக அணுக வழி செய்த வலை மெயிலான ஹாட்மெயில் வெற்றிக்கதை ஒருவிதத்தில் இந்திய ஸ்டார்ட் அப் கதைக்கான ஊக்கம் என்றும் சொல்லலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.