ஜிமெயில் சாட் ஜிபிடி வசதி

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் பலவித மேடைகளில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவது பற்றியும் பேசப்படுகிறது.

ஆனால், ஜிமெயிலில் இதற்கு நிகரான வசதி ஏற்கனவே இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கலாம். ஸ்மார்ட் கம்போஸ் என குறிப்பிடப்படும் இந்த வசதியை நீங்கள் கூட கவனித்திருக்கலாம் அல்லது கவனிக்காமலேயே பயன்படுத்தியிருக்கலாம்.

அதாவது, ஜிமெயிலில் வாசகங்களை டைப் செய்யும் போது, அடுத்து வர வேண்டிய வார்த்தை அருகே மெல்லிய நிழல் போல பரிந்துரைக்கப்படும். அந்த வார்த்தை சரியாக இருந்தால் அதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். அந்த வார்த்தையை டைப் செய்யாமலே பயன்படுத்தலாம்.

கணிப்பு பிரதி எனும் நுட்பத்தின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு உதவியோடு, ஜிமெயிலில் அடுத்து டைப் செய்யப்படும் வார்த்தை பரிந்துரைக்கப்படுகிறது.

பயனாளிகள் டைப் செய்யும் தேவையை குறைக்கும் நோக்கத்துடன் ஸ்மார்ட் கம்போஸ் முறையில் கணிப்பு வெளியிடப்படுகிறது. இது முற்றிலும் துல்லியமாக இருக்கும் என சொல்ல முடியாது என்றாலும் பல நேரங்களில் சரியான வார்த்தையாக அமைந்து ஒரு மாயம் போலவும் தோன்றலாம்.

ஜிமெயிலில் கோடிக்கணக்கான பயனாளிகள் டைப் செய்வதை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் இந்த வார்த்தை கணிப்பு செயல்படுகிறது. மேலும் பயனாளிகள் தேர்வில் இருந்தும் இந்த மென்பொருள் புரிந்து கொண்டு செயல்படும். உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமை டைப் செய்யப்படும் மெயில்கள், வார இறுதி எனும் கணிப்பு மேற்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம்.

இந்த வசதியை தேர்வு செய்யலாம் அல்லது மூடி விடலாம்.

கூகுள் தேடலின் போது, பயனாளிகள் டைப் செய்யும் குறிச்சொல் இன்னதாக இருக்கும் என பரிந்துரைக்கப்படும் ஆட்டோ கம்ப்ளீட் வசதியின் இன்னொரு நீட்சியாக இதை கருதலாம். இந்த உத்தியின் மிக மேம்பட்ட வடிவமே சாட் ஜிபிடி என கொள்ளலாம். விஷயம் என்னவெனில் ஜிமெயிலில் 2018 ல் இந்த வசதி அறிமுகமானது என்பது தான். அப்படியிருக்க கூகுள், தேடலில் அரட்டை மென்பொருளை இணைப்பதில் எப்படி கோட்டை விட்டது?

  •  https://www.newyorker.com/magazine/2019/10/14/can-a-machine-learn-to-write-for-the-new-yorker

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.